செய்வதோ ஆஸ்பத்திரி கம்பவுண்டர் வேலை, சொத்தோ 100 கோடிக்கும் மேல், எல்லாம் லஞ்சம் வாங்கியது தான்.
அரசியல்வாதிகள், பெரிய அதிகாரிகளை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு ராஜஸ்தானில் லஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்ட கம்பவுண்டரிடம் 100 கோடிகும் மேல் சொத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மான் சிங் என்ற மருத்துவமனையில் கம்பவுண்டராக பணியாற்றுபவர் மகேஸ் சந்த் சர்மா(வயது 52) லஞ்சம் வாங்கி வாங்கியும் நர்சிங் கவுன்சில் தலைவர் சர்மாவுக்கு பல விசயங்களில் தரகரகாவும் இருந்து இத்தனை கோடிகளை சுருட்டியுள்ளார்.
ஆரம்ப காலத்திலிருந்து இவர் வாங்கிய லஞ்சம், நாளடைவில் பெரிய அளவில் மாறியது.இதனையடுத்து தனது மனைவி மீனா தேவி பெயரில் சொத்துக்களை வாங்கி குவிக்க ஆரம்பித்தார். ராஜஸ்தானில் உள்ள 25 நர்சிங் கல்லூரிகளில் இவர் பங்குதாரராக உள்ளார்.
இந்நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றின் உரிமையாளர் ரமேஷ் சந்த் என்பவர் தனது கல்லூரிக்கு கூடுதல் இடங்கள் பெற்றுத் தர மகேஸ் சந்த் சர்மாவை அணுகினார். அதற்காக 5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்டார்.
# 4 நாள் திகாரில் காய்ந்த ரொட்டி தின்றுவிட்டு வெளியே வந்தால் முடிந்து போகும், லஞ்சம் வாங்கியவர்கள் சொத்தை எப்பவாவது பறிமுதல் செய்திருக்கிறோமா என்ன கவலைப்பட?
அவ்ளோ சொத்தோட அவன் பொண்டாட்டி இன்னொருத்தன் கூட ஓடிட்டா அந்த கம்பௌண்டர் என்ன பண்ணூவான்......
ReplyDelete