Sunday, 4 May 2014
மோடி கூட்டத்தில் வெடித்ததும் சென்னையில் வெடித்ததும் ஒரே ரக குண்டு
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தினுள் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடித்த இரட்டை குண்டுக்கான இணைப்பு ‘குவார்ட்ஸ்’ கடிகாரத்தில் அவசரக் கோலத்தில் பொருத்தப்பட்டிருந்ததால், அந்த குண்டு வெடிப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று புலனாய்வு அதிகாரிகள் கருதுகின்றனர்.
எனினும், சென்னை சென்ட்ரலில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கும், பீகாரில் மோடி பிரசாரம் செய்தபோது பாட்னா ரெயில் நிலையத்தில் வெடித்த குண்டுக்கும் இடையே சில ஒற்றுமைகள் உள்ளதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட இந்திய முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த யாசீன் பத்கல் மற்றும் அக்தர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் பெங்களூரு நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இந்திய முஜாகிதீன் அமைப்பினர் தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து தந்தவர்கள் என்பதால் விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு வங்கியில் என் பெயரில் ஒரு ரூபாயோ/டாலரோ இருப்பதாக சிபிஐ கண்டுபிடித்தால், ஆயுள் தண்டனை அனுபவிக்க தயார்- ஆ.ராசா சவால்
முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் நீலகிரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா, தன் மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ நிரூபித்துக் காட்டினால், வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கத் தயார் என்று கூறியுள்ளார்.
டெல்லியில் தனியார் செய்தித் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, "கடந்த 2011 ஆம் ஆண்டு ஆங்கில நாளிதழ் ஒன்றில், நான் ரூ.3,000 கோடியை வெளிநாட்டு வங்கியில் பதுக்கிவைத்திருப்பதாக செய்தி வெளியாகியிருந்தது. அன்றே நான் நீதிபதியிடம் சென்று அந்தச் செய்தியை காட்டினேன்.
வெளிநாட்டு வங்கியில் எங்காவது எனக்கு ஒரு ரூபாயோ அல்லது ஒரு டாலரோ எனது பெயரில் இருப்பதாக சி.பி.ஐ கண்டுபிடித்தால், என் மீதான வழக்குகளை நடத்துவதை நிறுத்திவிடுகிறேன்.
சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு நான் சவால் விடுக்கிறேன். அவர்கள் இந்தக் குற்றச்சாட்டை நிரூபித்துக் காட்டினால், வாழ்நாள் முழுவதும்கூட சிறை செல்லத் தயாராக உள்ளேன்" என்று கூறினார் ஆ.ராசா.
தேசத்திற்காக செக்கிழுத்த வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பேரன் பெயின்ட் அடித்து கொண்டிருக்கிறார்.. பலனை யார் யாரோ அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்- சகாயம் ஐ.ஏ.எஸ்
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சகாயம் ஐ.ஏ.எஸ். :
''மதுரையில் நான் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது திங்கள்கிழமை மனுநாளில் மனு வாங்கி முடித்துவிட்டு வெளியில் வந்தேன். கைலி, அழுக்கு சடையோடு 45 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் என் எதிரே வந்தார். 'ஏன் முன்னாடியே வரக் கூடாதா? கிளம்பும்போது வருகிறீர்களே... நீங்கள் யார்?’ என்று அவரிடம் கேட்டேன். 'அய்யா... நான் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் பேரன். நானும் என் தம்பியும் கட்டடங்களுக்கு பெயின்ட் அடிக்கும் வேலை செய்துவருகிறோம். சமீபத்தில் ஒரு உயரமான கட்டடத்துக்கு பெயின்ட் அடிக்கும்போது என் தம்பி தவறி விழுந்துவிட்டான். இப்போது உடம்பு சரியில்லாமல் இருக்கிறான். அவனுக்காக உதவி கேட்டு இங்கே வந்தேன். வெளியில் இருக்கும் காவலாளி என்னை உள்ளே விடாமல் துரத்தி அடித்தார். அவரை சமாளித்துவிட்டு வர இவ்வளவு நேரம் ஆகிவிட்டது’ என்று பரிதாபமாகச் சொன்னார். நான் அதிர்ந்துபோனேன். 'உனக்கு இங்கே நிற்கும் உரிமையை வாங்கிக்கொடுத்ததே என் பாட்டன்தானடா என்று முகத்தில் அடித்ததுபோல சொல்ல வேண்டியதுதானே?’ என்று சொல்லி அவரை ஆசுவாசப்படுத்தினேன்.
அதன் பிறகு அவருக்கு 50 ஆயிரம் பணம் கடன் ஏற்பாடு செய்துகொடுத்து உழவர் உணவகம் தொடங்கச் செய்தேன். வ.உ.சி-யின் குடும்பமே வக்கீல் குடும்பம். வெள்ளைக்காரனுக்கு எதிராக சுதேசி கப்பல்விட்ட கம்பீரமான வ.உ.சி-க்கு ஆங்கிலேய அரசு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. உடம்பு முழுவதும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவரைச் செக்கிழுக்கச் சொல்லி உத்தரவிட்டது. தேசத்துக்காக செக்கிழுத்தவரின் பேரன்கள் பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். சம்பந்தமே இல்லாத யார் யாரோ பலனை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.''
என் மீது இன்னொரு வழக்கும் பதிவு செய்யுங்கள் - மோடி ஆவேசம் !!
கடந்த 30 ஆம் தேதி வாக்களித்து விட்டு வந்த மோடி தனது கட்சி சின்னமான தாமரையுடன் பேட்டி அளித்தார் . மேலும் மோடியின் பேச்சு வழக்கில் அரசியல் பிரச்சாரம் செய்வது போல் இருந்தது என தேர்தல் விதிமுறைகள் மீறியதால் தேர்தல் ஆணையம் அவர் மீது வழக்கு பதிவு செய்தது .
இது குறித்து மோடி இன்று தேர்தல் ஆணையம் குறித்து அளித்த பேட்டியில் , பீகாரிலும் , மேற்கு வங்காளத்திலும் தேர்தல் சரியாக நடக்கவில்லை . உங்களிடம் அதிகாரம் இருக்கிறது , நீங்கள் உங்கள் கடைமையை செய்ய வேண்டும் . நான் சொல்வது பிடிக்கவில்லை என்றால் , என் மீது இன்னொரு வழக்கு பதிவு செய்து கொள்ளுங்கள் என்று ஆவேசமாக கூறினார் .

மஹாராஷ்டிராவில் ரயில் தடம் புரண்டது !!
இன்று காலை 9.40 மணி அளவில் திவா- சவந்தாவடி ரோடு பயணிகள் ரயில் தடம் புரண்டது . இதுவரை 9 பயணிகள் இறந்துள்ளனர் . 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் .
இரயில்வே அமைச்சகம் இறந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக 2 லட்சமும் , படு காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக 50 ஆயிரமும் வழங்குவதாக தெரிவித்துள்ளனர் .

சென்ட்ரலில் குண்டு வெடித்த போது ஓடிய மர்ம நபரின் உருவம் பெங்களூர் சி.சி.டி.வி.யிலும் பதிவு
கடந்த வியாக்கிழமை அன்று, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் 9–ம் நம்பர் நடைமேடையில் பெங்களூர்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்ற போது, குண்டுகள் வெடித்த ‘எஸ்-4 மற்றும் எஸ்-5’ பெட்டிகளுக்கு அடுத்த பெட்டியான ‘எஸ்-3’ம் எண் கொண்ட பெட்டியில் இருந்து இறங்கிய உயரமான ஒரு நபர் அவசரம் அவசரமாக ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறும் காட்சி பதிவாகி இருந்தது.
கைக்குட்டையை கட்டி முகத்தை மறைத்தபடி பதற்றத்துடன் அவர் வேக வேகமாக ஓடும் காட்சியும் பதிவாகி இருந்தது. கேமராவில் சிக்கிய வாலிபரின் தலை வழுக்கையாக இருந்தது. அவரை கண்டுபிடித்து விசாரணை நடத்துவதற்காக சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.
ஒருவேளை, அந்த நபர் குண்டு வைத்தவராக இருந்திருந்தால், பெங்களூரில் இருந்தே அவர் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்து வந்திருக்கலாம் என்று தமிழக போலீசார் கருதினர். காலை 7.15 மணி அளவில் வெடிக்கும் வகையில் குண்டை தயார் செய்து வைத்து விட்டு சென்ட்ரலில் இறங்கிச் செல்ல அவர் திட்டமிட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
ஆனால், அவர் எதிர்பார்த்தபடி நடக்காமல், காலை 6.20 மணிக்கு சென்னைக்கு வர வேண்டிய ரெயில், தாமதமாக 7.05–க்கு வந்ததால், குண்டு வெடிக்கப்போவதை அறிந்து கொண்டு சரியாக 7.08–க்கு (குண்டு வெடிப்பதற்கு 7 நிமிடத்துக்கு முன்பு) அவர் தப்பித்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது. சென்னை சென்ட்ரலில் குண்டு வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அவசரமாக வெளியே ஓடிய அதே வழுக்கை தலை மர்ம நபர், பெங்களூர் ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளிலும் காணப்படுகிறான். தமிழக போலீசாரின் சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் கிடைத்துள்ள இந்த ஆதாரம், சென்னை செண்ட்ரல் இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில் புதிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவு; 300 வீடுகள் புதைந்தன; 2000 பேர் மாயம்; 350 பேர்பலி
ஆப்கானிஸ்தானின் பதக்சான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 300 வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில் 350 பேர் வரை உயிரிழந்தனர். மேலும் அங்கு வசித்து வந்த 2000 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து பதக்சான் மாகாண கவர்னர் ஷா வலியுல்லா அதீப் கூறுகையில், கடுமையான மழை காரணமாக மலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. மலை அடிவாரத்தில் இருந்த 300 க்கும் மேற்பட்ட வீடுகள் இந்த நிலச்சரிவில் மண்ணில் புதைந்துள்ளன. இதில் வசித்த சுமார் 2000க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. இதில் மொத்தம் உள்ள வீடுகளில் 75 சதவீத வீடுகள் புதைந்துள்ளன என்றார். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று முழுவீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் போதுமான கருவி மற்றும் மண் தோண்டும் கருவிகள் இல்லாததால் அவர்களால் வேகமாக பணியைச் செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ரஜினியின் உருவ பொம்மை கன்னட அமைப்பினரால் எரிப்பு; லிங்கா பட ஷுட்டிங் நடத்த கர்நாடகாவில் எதிர்ப்பு
காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தின் பட ஷூட்டிங்கை கர்நாடகாவில் நடத்தக்கூடாது என கன்னட அமைப்பினர் ராம்நகரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஷூட்டிங்கை நிறுத்தாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தில் குதிக்கப்போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படமான 'லிங்கா' படத்தின் பூஜை மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அடுத்த 40 நாட்கள் மைசூர், மண்டியா, ராம்நகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் ஷூட்டிங் நடைபெற உள்ளது.
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி பட ஷூட்டிங் கர்நாடகாவில் நடைபெறுவது மகிழ்ச்சியளிப்பதாக கன்னட திரையுலகினர் கூறியிருந்த நிலையில், கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கஸ்தூரி கர்நாடக ஜனபிரவேதிகே என்ற அமைப்பினர் ரஜினிக்கு எதிராக சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரஜினிக்கு எதிராக கடுமையான கோஷங்களை எழுப்பியும் அவரின் உருவ பொம்மையை எரித்தும் தங்களுடைய எதிர்ப்பைக் காட்டினர்.
அந்த அமைப்பின் தலைவர் ரமேஷ் கவுடா பேசு கையில், “தன்னை கன்னடராக சொல்லிக்கொள்ளும் ரஜினி, இதுவரை கர்நாடக மக்களுக்காக ஒன்றுமே செய்ததில்லை. அவர் எங்களுக்கு நன்மை செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவையும் ஆறு கோடி கன்னடர்களையும் கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார். அதுமட்டு மில்லாமல் காவிரி, ஒகேனேக்கல் விவகாரங்களின் போதெல்லாம் கர்நாடகாவிற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் கலந்துகொண்டு தமிழகத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
கன்னட மக்களுக்கும் கர்நாடகாவிற்கும் எதிராக கருத்து தெரிவித்த ரஜினியை கடுமையாகக் கண்டிக்கிறோம். அவர் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் மைசூர், மண்டியாவில் மட்டுமல்ல, கர்நாடகாவில் எங்கும் நடக்கக்கூடாது. மீறி நடத்தினால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம்'' என்றார்.
கர்நாடகாவில் ரஜினி பட ஷூட்டிங்கிற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்த போதும் மைசூர் அருகே சனிக்கிழமை ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்றது. எக்காரணம் கொண்டும் ஷூட்டிங்கை கர்நாடகாவில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றும் எண்ணமில்லை என்கின்றனர் படக்குழுவினர். இதனிடையே கன்னட அமைப்பினரை சமாதானப் படுத்தும் முயற்சியில் ரஜினியின் நெருங்கிய நண்பரும் கர்நாடக மாநில வீட்டுவசதித் துறை அமைச்சருமான அம்பரீஷ் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நான் அரசியலில் ஒரு டெஸ்ட் மேட்ச் ஆடுவேன் - முகமது கைப்
முன்னாள் கிரிக்கெட் வீரர் கைப் தனது முதல் தேர்தலை உத்தர பிரதேசத்தில் பூல்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சந்திக்கிறார் . கிரிக்கெட் அதிக போட்டிகளில் ஆடவில்லை என்றாலும் தனது பேட்டிங் மூலம் சில போட்டிகளில் வென்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் .
கைப் அளித்த பேட்டியில் , நான் அரசியலில் டெஸ்ட் போட்டி விளையாட உள்ளேன் . காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவது பெருமையாக கருதுகிறேன் . இந்த தொகுதி மக்கள் வளர்ச்சி இல்லாமல் அதிருப்தி அடைந்துள்ளனர் . காங்கிரஸ் இந்திய கிரிக்கெட் அணியைப் போன்று மதசார்பற்றது . இங்கு அனைத்து மதத்தினரும் உள்ளனர் என்றார் .
காங்கிரஸ் பூல்பூர் தொகுதியில் 1984க்குப்பின் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

மோடி தான் ஒரு அரக்கரா மனிதனா என்பதை அவர் தெரிவிக்க வேண்டும்- வேணி பிரசாத் வர்மா
மஸ்கன்வா நகரில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் வேணி பிரசாத் வர்மா பேசும்போது, இந்த நாட்டில் இந்துவையும் முஸ்லிமையும் பேதப்படுத்தி அவர்களுக்கு இடையே குரோதத்தை வளர்க்கும் ஒருவர் மனிதனே அல்ல அவர் அரக்கன் என்று குறிப்பிட்டுப் பேசினார். அவர் மேலும் பேசுகையில், தான் மனிதனா அல்லது அரக்கனா என்பதை மோடி கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
குஜராத் படுகொலை சம்பவம் பற்றி பேசும்போது நீங்கள் (மோடி) அதை எதிர் விளைவு என கூறுகிறார்கள். தனது வாகனத்தின் கீழ் தானாக ஓடி வந்து ஒரு நாய்க்குட்டி இறந்தால் அது வேதனையானதுதான். என்று கூறி முஸ்லிம்களை கிண்டலடித்துள்ளீர்கள் .
மோடி போன்ற நபர்கள் இந்த நாட்டுக்கும் ஜனநாயகத்துக்கும் விரோதிகள்.,
இது போன்ற நபர் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் வாழும் சுமார் 85 சதவீத ஏழை மக்களின் சுயமரியாதை போய்விடும். இந்த சமூகத்தில் விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரின் ஆதிக்கமே நிலவும்.
காங்கிரஸ் இல்லாத இந்தியா வரவேண்டும் என்று எக்காளம் போடுகிறார் மோடி. இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ்காரர்களே காங்கி ரஸை ஒழிக்கமுடியாமல் தோல்வி கிண்டனர். பாஜக எப்படி இதை செய்ய முடியும். நாடு முழுவதும் உள்ள கட்சி காங்கிரஸ். பாஜகவோ நாட்டின் கால்வாசி பகுதியில் மட்டுமே உள்ள கட்சி.
சிறுவயதில் டீ விற்பதற்காக 18 வயதில் வீட்டை வீட்டு ஓடியவர் மோடி. அவர் பட்டம் பெற்றுவதாக காட்டுவது போலி சான்றாகும். நான் லக்னோ பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞர் பட்டம் பெற்றவன்.
இவ்வாறு வேணி பிரசாத் வர்மா பேசினார்.
அதிர்ச்சி ரிப்போர்ட்: பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் கெடுதல்கள்
பிறந்து 55 நாட்களில் கல்லீரல், தமனி, நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் நாம் முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம் … இந்த விசயத்தில்... கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே …
இன்னும் கொஞ்ச நாட்களில்
கோழி கறியினால் வரப்போகும் பிரச்சனை களால் Rs.120/-இல் இருந்து Rs.40/- நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இவர்களின் திட்டத்தின்படி Rs.180/- என்று விலையை உயர்த்தி, பிறகு Rs.120/- என்ற சமநிலையை கொண்டு வரும் நோக்கத்தில் தான் இப்படி செய்கின்றனர் மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது, மஞ்சள் காமாலை, இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம். ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது. அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல் வாதிகள் வியாபார நோக்கத்துடன் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

நாமக்கலின் HEALTH CARE ORGANIZATION எவ்வளவோ முயற்சி எடுத்தும் அவர்களால் இந்த உண்மையை ஆனந்த விகடன் புத்தகத்தில் ஆறாம் திணை என்ற தொகுப்பில் மட்டும் தான் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தது . உடலின் ஏழு வைகளையும் வளர்க்க ஆறு சுவைகளி ல் காய் கனிகளும் ஏராளமாகப் புலால் உணவும் அன்றைய ஐந்து திணைகளிலும் இருந்தன. ஆடு, மாடு, கோழி, காடை, கௌதாரி என அன்றைய தமிழர் புசிக்காத புலால் இல்லை. பச்சை ஊனைப் புசித்து, புறங்கையில் வழியும் குருதியையும் புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்ற போர் வீரன் குறித்து சங்க இலக்கியங்கள் பல இடங்களில் பேசுகின்றன. இன்றைக்கு அசைவம் சாப்பிடுவது பற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று… அசைவம் சாப்பிட்டால், உடம்பு வளரும்; மூளை வளராது; சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது… அசைவம் சாப் பிடுவோருக்குக் காய், கனிகள்
ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டில் எது சரி?
உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி! அசைவம் சாப்பிட்டால், மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கிய வர்களில் 99 சதவிகிதத்தினரும்,
உலகை உலுக்கி மாற்றிய ‘மைக்ரோசாஃப்ட்’, ‘ஆப்பிள்’ முதலாளிகளும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண் சத்து க்களும் பொதுவாகக் காய், கனிகளில் குறைவு. உதாரணத்துக்கு, 100 கிராம் ஈரலில், 6,000
மைக்ரோ கிராம் இரும்புச் சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில் 300 மைக்ரோ கிராம் தான் இரும்புச்சத்து இருக்கிற து. ஆகையால், அசைவத்தின் ஆற்ற லைக் கேள்விக்
குறியாக்க வேண்டியது இல்லை. ஆனால், அசைவம் மட்டுமே போதுமா? அசை வத்தை எப்படிச் சாப்பிட வேண்டும்?
எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பது தான், முக்கியமான
ஒரு கேள்வி! ஏனென்றால், போருக்குப் போகும் வீரன்
சாப்பிட்டது, காரில் போகும் சுகவாசிக்கு அப்படியே சரிப்படாது.
அன்றுமுதல் இன்று வரை கட்டு மரத்தில் நெடுஞ்சாணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு, நோஞ்சானாக
கேண்டில் லைட் டின்னரில் ‘ஃபிஷ் ஃப்ரை’ ஆர்டர் செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீ யருக்குச் சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் உண்ணும் அளவைத்
தீர்மானிப்பதில் எப்போ துமே முக்கிய மான பங்குண்டு. அசை வம் சாப்பி டலாம். ஆனால், அள வாகச் சாப்பிடுங்கள். ஐந்து பேர்கொ ண்ட ஒருகுடும்ப ம் வாரத்துக்கு ஒரு நாள்
அரை கிலோ ஆட்டு இறைச்சி யோ, ஒரு கிலோ கோழிக் கறியோ, ஒரு கிலோ மீனோ சாப்பிட்டால் போதுமா னது. அதையும்கூட இரண்டு நாட்களாகப்பிரித்து எடுத்துக்
கொண்டால், இன்னும் சிறப் பானது. ஏனைய நாட்களில் காய்,
கனிகளுக்கு இடம் கொடுங்கள். வாரத்தில் ஒரு நாள்
குறைந்தது ஒரு வேளையே னும் வயிற்றுக்கு ஓய்வு கொடு த்து விரதம் இருங்கள். எல்லாமே விருந்து தான். ல்லாவற்றுக்குமே ஒரு புரிதல் தேவைப்படுகிறது! அட்டகாசமான கறி விருந்து சாப்பிட் டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளி மையாக அன்றைய சாப்பாட்டை முடி த்துக்கொள்ளும் வழக்கம் நம் முன் னோர்களிடம் உண்டு.
ஆட்டின் இறைச்சி உடலுக்குத் தேவை யான வலுவைத் தரும் என்றால், கொள்ளும் இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும்
என்பதை அறிந்து வைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள். நாம்
எதை அறிந்து வைத்திருக்கிறோம்? மாமிசம் சாப்பிடும்போது, நிச்சயம் இஞ்சி, பூண்டு, சீரகம், மல்லி, பெருங்காயம் இருக்க வேண்டும் என்கிறது தமிழ் மருத்துவம். இது வரை எந்தத்
தமிழர் வீட்டு அடுப்பங்கரையிலும் இந்தக் கறி மசாலா இல்லாமல் கிடாக் கறி சமை க்கப்பட்டது கிடையாது. ஆனால், புதி தாக வெளிநாட்டில் இருந்து இங்கு மூலைக்கு மூலை முளைத்து உள்ள பன்னாட்டு கறிக் கடைகள் பொரித்தும்
அவித்தும் தரும் கறி பக்கோடாக்களில் கறி மசாலாவை நீங்கள் பார்க்க முடியாது தெரியுமா? சரி, கண்ணாடிக் குளிர் அறைகளில், நண்பர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுகிறீர்களே அந்தக் கறியில் என்னென்ன எல்லாம் கலந்து இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்து கொள்ளுங் கள்…
நூற்றுக்கணக்கான ரசாயனக் காரணிகள் அவற்றில் உண்டு. ஏகப்பட்ட ரசாயன உப்புகள் உண்டு. குறிப்பாக, புற்றுநோய்க்கு வரவேற்பு வளைவுகள் வைக்கும் சோடியம் நைட்ரேட், மோனோ சோடியம் க்ளூட்ட மேட் உப்புகள் உண்டு.
கோழி நல்ல உணவு. ஆனால், அது தானாக இரை தேடி வளர்ந்த
கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது. கோழிக் கறி பொதுவாக உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக் கூடியது. சாதாரண சளி, இருமல், மந்தம் போக்கக் கூடிய து; உடல் தாதுவை வலுப்படுத்தி ஆண் மையைப் பெருக்கக் கூடியது என்கிறது சித்த மருத்துவம். கோழியில் நார்ச் சத்து அதிகம்; வைட்டமின் பி 12 சத்தும் அதிகம். உடல் எடை அதிகரிக்காது, வலுவுடன்
ஆரோக் கியத்துடன் இருக்க சிக்கனுக்கு இணை எதுவும் இல்
லை என்கிறது நவீன உணவியல். நம் ஊரில் கருங்கோழி எனும் நாட்டு இனக் கோழி இன்றும் இருக்கிறது. காலில் அதிக மயிருடன் ஷூ போட்டதுபோல் மிடுக்காக இருக்கும். அந்தக் கோழியின் சதைப்பகுதியும் கூட கருஞ்சிவப்பு நிறமாக
இருக்கும். தமிழ் மருத்துவம் தசை சூம்பி வலுவிழந்து இருக்கும்
பக்கவாத நோயினருக்கும், பிற தசை நோயினருக்கும் இந்தக்
கோழி யைத்தான் உணவாக, மருந்தாகப் பன்னெடுங் காலமாக உரக்கச் சொல்லிவருகிறது. நாம் இப்போது சாப்பிடும்
கோழி இறைச்சி யின், பின்னணி குறித்து, ‘கூவாத கோழி யும், குடைசாயும் இறையாண்மையும்’ என்ற புத்தகத்தில் அதன்
ஆசிரியர் சுந்தரராசன் கூறும் தகவல்கள் அதிர வைப்பவை.
‘பிராய்லர் கோழிகளின் செழுமை யான தோற்றத்துக்காக அளிக்கப் படும் ‘ரோக் ஸார்சோன்’ (Roxar- sone) என்ற
மருந்து மனிதர்களு க்குப் புற்றுநோயை உருவாக்கவல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள
டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள். குழந்தைப்
பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக்
குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும், இந்த பிராய்லர்
கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும்
தொடர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள்
இருப்பதாகப் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன!” என்று புத்தகத்தில் தந்து இருக்கும் எச்சரிக்கைப் பட்டியல்
அபாய கரமானது...

Subscribe to:
Posts
(
Atom
)