இணைய தளங்களில் நடிகர் விஜய் சர்தார்ஜி போல கிண்டலடிக்கப்படுவதற்கு அவரது ரசிகர்களே காரணம் என்று சொன்னால் மிகையாகாது. சமீபத்தில் #WeLoveVijayAnna என்ற டிவிட்டர் ஹேஷ் டேகில் அவரது ரசிகர்கள் விஜயின் புகழ் பாடும் டிவீட்டுகளை ஆயிரக்கணக்கில் இட்டுத்தள்ள சிலமணி நேரம் இந்த வாக்கியம் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது.