BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 20 November 2014

உணவே மருந்து : கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


ஒரு கேரட்டில், நாள் ஒன்றுக்கு தேவைப்படும் சத்துக்கள் எவ்வளவு இருக்கிறது தெரியுமா?


விட்டமின் - A சத்துக்கள் 21% உள்ளது.

விட்டமின் கே 10% உள்ளது.

விட்டமின் சி 6% உள்ளது.

கால்சியம் 2% உள்ளது.

கேரட்டின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள் :

  •  கண் பார்வையை மேம்படுத்தும்.
  • புற்றுநோய் வராமல் தடுக்கும் குணம் கேரட்டுக்கு உள்ளது.
  •  உடல் செல்களை இளமையாக வைத்துக்கொள்ள உதவும்.
  • தோலை பளபளப்பாக வைத்துக்கொள்ள கேரட் உதவும்.
  • நோய் தொற்றுக்களில் இருந்து உடலை காப்பாற்றும் ஆன்டிசெப்டிக்காகவும் கேரட் பயன்படுகிறது.
  • இதயம் தொடர்பான நோய்களில் இருந்தும் கேரட் காப்பாற்றக்கூடியது என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
  • உடலில் சேரும் நச்சு பொருட்களை அகற்றும் வல்லமை கேரட்டுக்கு உண்டு.
  • சொத்தை பல் வரவிடாமல் தடுக்கும் தன்மையும் கேரட்டுக்கு உள்ளது.
  • வாரத்துக்கு ஆறு கேரட்டாவது சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவு என்கிறது ஹார்வார்ட் பல்கலைக்கழக ஆய்வு.

காதுகளின் திறன்


55அடிக்குக் குறைவான எந்த அறையிலும் எதிரொலி கேட்காது. காரணம்: காற்றில் ஒலி பயணம் செய்யும் வேகம் வினாடிக்கு 1100அடி. இதில் பத்தில் ஒரு வினாடி தூரத்தில் உள்ள ஒலிகளை மட்டும் நம் காது இனம் பிரித்துக் கேட்கும் இயல்புடையது.வினாடியில் பத்தில் ஒரு பங்கு நேரத்தில் ஒலி செல்வது 110அடி. எதிரொலிக்க வேண்டும் என்றால் ஒலி அதில் பாதியில் மோதித் திரும்ப வேண்டும்.110ல் பாதி 55அடி.ஆகவேதான் அதற்குக் குறைவான நீளமுள்ள அறையில் எதிரொலி கேட்பதில்லை.

5 தமிழக மீனவர்கள் விடுதலை



சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 5 மீனவர்களையும், இந்தியத் தூதர் ஒய்.கே. சின்ஹா சந்தித்துப் பேசினார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "5 பேரையும் விரைவில் தாயகத்துக்கு பத்திரமாக திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கையை இந்தியத் தூதரகம் எடுத்து வருகிறது' என்றார். குடியேற்றத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட 5 பேரையும், இந்தியத் தூதரகம் தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டுவிட்டதாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தியாவுக்கு திரும்புவதற்குத் தேவையான ஆவணங்கள் கொடுக்கப்பட்ட பிறகு, 5 பேரும் வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை நாடு திரும்புவார்கள் என்றும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தியா, இலங்கை உள்ளிட்ட 8 நாடுகள் அங்கம் வகிக்கும், சார்க் எனப்படும் தெற்காசிய ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, நேபாளத்தில் விரைவில் தொடங்க இருக்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடியும், ராஜபட்சவும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், 5 தமிழக மீனவர்களையும் இலங்கை விடுதலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று பாமக செயற்குழு கூட்டம்



பாமகவின் செயற்குழு கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை (நவ.20) நடைபெற உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக அமைக்கப் போகும் கூட்டணி தொடர்பாக இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.
பாமக தலைமை நிலையம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:- பாமகவின் தலைமை சிறப்பு செயற்குழு கூட்டம் சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் வியாழக்கிழமை (நவ.20) பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. பொதுக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.21) காலை 11 மணியளவில் நடைபெறும். கூட்டத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை வகிக்க உள்ளார் என அதில் கூறப்பட்டுள்ளது. திராவிடக் கட்சிகளோடு கூட்டணி அமைக்க மாட்டோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி வருகிறார். மக்களவைத் தேர்தலில் பாஜக அணியிலேயே பாமக இடம்பெற்றது. தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் வெற்றிபெற்றார். இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற ராமதாஸ் இல்லத் திருமண விழாவில் கருணாநிதி பங்கேற்றார்.

அதனால், திமுக - பாமக இடையே கூட்டணி ஏற்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாகப் பேசப்பட்டது. ஆனால், திமுக - அதிமுகவோடு கூட்டணி அமைக்க மாட்டோம் என்று ராமதாஸ் மறுத்துவிட்டார். பாமக தலைமையில் கூட்டணி: இந்நிலையில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களின் வாயிலாக, 2016 சட்டப்பேரவை தேர்தலில் பாமக தலைமையில் புதிய அணி அமைப்பது தொடர்பான அறிவிப்பையே ராமதாஸ் வெளியிட உள்ளதாக அக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பினர்


மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி ஆகிய மூன்று நாடுகளுக்கு 10 நாள் சுற்றுப்பயணம் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை நாடு திரும்பினார். அவரை தில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மற்றும் மூத்த தலைவர்கள் வரவேற்றனர்.

சாமியார் ராம்பால் கைது



ஹரியாணா மாநிலத்தில் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பாலை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர். ஹரியாணாவின் ஹிஸார் மாவட்டத்தில் உள்ள பர்வாலா நகரில் ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் ராம்பால் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் பதிவாகியிருந்தன. இந்த வழக்குகளில் அவரைக் கைது செய்வதற்காக போலீஸார் செவ்வாய்க்கிழமை அந்த ஆசிரமத்துக்குச் சென்றனர். எனினும், ராம்பாலின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் சாமியாரைக் கைது செய்ய இயலவில்லை.

இந்நிலையில், ஆசிரமத்துக்குள் இருந்த 15,000 பேரை போலீஸார் புதன்கிழமை வெளியேற்றினர். அதன் பிறகு, சாமியார் ராம்பாலைக் கைது செய்தனர். அவரை வியாழக்கிழமை, ஹிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பானிபட் காவல்துறைக் கண்காணிப்பாளர் சதீஷ் பாலன் தெரிவித்தார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media