BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 13 September 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

தினமும் செக்ஸ் உறவு கொள்ள 10 நல்ல காரணங்கள்
http://www.satrumun.net/2014/07/10-reasons-to-have-daily.html

எங்கள் உறவு புனிதமானது என கடிதம் எழுதி ஒன்றாக தற்கொலை செய்துகொண்ட கள்ளக்காதல் ஜோடி
http://www.satrumun.net/2014/09/suicide-pair-in-well-near-salem.html

மதுரை திருமங்கலத்தில் 2 கல்லூரி பெண்கள் மீது ஆசிட் வீச்சு - மீண்டும் கொடூரம்
http://www.satrumun.net/2014/09/madurai-college-girls-acid-attack.html

நித்யானந்தாவுக்கு வலுக்கட்டாய ஆண்மை பரிசோதனை - கர்நாடக சிஐடி போலீஸார் முடிவு
http://www.satrumun.net/2014/09/karnataka-police-decided-to-go-for.html

இன்டர்நெட்டை கட் செய்ததால் தனது தாயை கத்தியை வைத்து தாக்கிய மகன் !!
http://www.satrumun.net/2014/09/student-tried-to-attack-his-mom-for-taking-his-mobile.html

ஊர்ல நாலைஞ்சு இல்ல, இப்போ ஒருத்தர் கூட கெடையாதாம்… : திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்ட சந்தானம்!
http://goo.gl/MGqkRE

அடேங்கப்பா 2 படங்கள் ரிலீசாம்! : சிம்புவெல்லாம் திருந்திட்டா தமிழ்சினிமா என்னாவுறது..?
http://goo.gl/UzF0WG

மோடியின் பிறந்த நாள் பரிசாக இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது சீனா !!
http://www.satrumun.net/2014/09/china-to-invest-100-billion-dollars-in-india.html

வினாயகர் சதுர்த்தி விடுமுறையின் போது அதிக வீட்டுப்பாடம், வெடிகுண்டு புரளி கிளப்பிய மாணவன்
http://www.satrumun.net/2014/09/school-students-did-fake-bomb-threat.html

சென்னையில் வெட்டப்படும் மரங்களுக்கு அஞ்சலி செலுத்திய பசுமை தாயகத்தினர் [படங்களுடன்]
http://www.satrumun.net/2014/09/save-chennai-trees-pasumai-thayagam.html

மலாலாவை சுட்ட தீவிரவாதிகளை இரண்டு வருடங்களுக்கு பின் கைது செய்தது பாகிஸ்தான் அரசு !!
http://www.satrumun.net/2014/09/malala-attackers-arrested-by-pakistan.html

சாம்பியன்ஸ் லீக் தொடரில் கொல்கத்தா அணிக்கு அடி மேல் அடி !!
http://www.satrumun.net/2014/09/kkr-going-to-miss-morne-morkel.html

சென்னையில் வெட்டப்படும் மரங்களுக்கு அஞ்சலி செலுத்திய பசுமை தாயகத்தினர் [படங்களுடன்]



நேற்று தி.நகரில் சாலை விரிவு படுத்துவதற்காக என்று கூறி சாலையோரத்தில் இருந்த பெரிய பெரிய மரங்களை மாநகராட்சியினர் வெட்டினர், தகவல் அறிந்த பசுமை தாயகம் அமைப்பின் செயலாளர் இர.அருள் உட்பட பலர் வந்து மரங்களை சுற்றி நின்று தடுத்தனர், அப்போது வேலை நிறுத்தப்பட்டாலும் பின்னர் மரங்களை வெட்டித்தள்ளினார்கள்.

சென்னை நகரில் வெட்டப்பட்ட மற்றும் வெட்டப்பட உள்ள சாலையோர மரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பசுமைத் தாயகம் சார்பில் 13.09.2014 சனிக்கிழமை,காலை, சென்னை - தி.நகர், அபிபுல்லா சாலை, கோடம்பாக்கம் ரெயில் நிலையம் எதிரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பசுமைத் தாயகம் மாநிலச் செயலாளர் இர. அருள், துணைச் செயலாளர் ச.க. சங்கர், இரா. செ. வெங்கடேசன், சாணக்கிய பாபு, சந்தானம், வழக்கறிஞர் ரவி, சாஜா குணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இது குறித்த பசுமை தாயகத்தின் அறிக்கையில் கூறப்பட்டதாவது.

• சென்னை அபிபுல்லா சாலையில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் வளர்க்கப்பட்டிருந்த நாவல் மரத்தை 28.08.2014 அன்று சென்னை மாநகராட்சி அலுவலர்கள் சட்டவிரோதமாக வெட்டியுள்ளனர்.

• அதற்கு அருகில் பசுமைத் தாயகம் சார்பில் வளர்க்கப்பட்டிருக்கும் ஏழிலைப்பாலை மரத்தையும் வெட்டும் முயற்சி 12.09.2014 அன்று தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது.

• ஒரு மரத்தை வெட்டினால் 10 மரம் நட்டு அதனை ஐந்தாண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும் என்கிற உயர்நீதி மன்ற உத்தரவை சென்னை மாநகராட்சி மதிக்கவில்லை.

• சென்னை மாநகரில் ஆண்டுக்கு 1500 மரங்கள் வெட்டப்படுகின்றன. ஒரு மரத்துக்கு பதில் 10 மரம் வளர்க்க வேண்டும் என்கிற உத்தரவை பின்பற்றினால் - ஆண்டுக்கு 15000 மரங்கள் வளர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

• சென்னை மாநகரின் மரங்களைக் காக்கவும், பசுமைச் சூழலை ஏற்படுத்தவும் 'மரங்கள் ஆணையம்' (Tree Authority) என்கிற அதிகார அமைப்பை, போதுமான அதிகாரம், பணம், ஆட்கள் சக்தியுடன் சென்னை மாநகராட்சி ஏற்படுத்த வேண்டும். மரம் வெட்டும் தேவை ஏற்பட்டால் அதனை ஆராய்ந்து இந்த ஆணையத்தின் மூலம் செயல்படுத்த வேண்டும்.

• தமிழ் நாட்டில் மரங்கள் ஆணையத்தை அமைக்க வேண்டும் என 2007 ஆம் ஆண்டிலேயே சென்னை உயர்நீதி மனறம் தெரிவித்தது. எட்டு வாரங்களில் அமைக்க வேண்டும் என உயர்நீதி மன்றம் கூறியும், எட்டு ஆண்டுகளாகிக் கூட இன்னமும் இந்த ஆணையத்தை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தவில்லை.

• கர்நாடகம், ஆந்திரா, மராட்டியம், தில்லி ஆகிய மாநிலங்களில் மர ஆணையங்கள் உள்ளன. தமிழ்நாடு அரசும் மரங்கள் ஆணையத்தை (Tree Authority) உடனடியாக அமைக்க வேண்டும். குறிப்பாக சென்னை மாநகரில் மரங்கள் ஆணையம் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கான சிறப்பு சட்டத்தை (Urban Areas Preservation of Trees Act) உடனடியாக இயற்ற வேண்டும்.

Save chennai Trees இன் ஃபேஸ்புக் பக்கம்
https://www.facebook.com/SAVEChennaiTREES

இன்டர்நெட்டை கட் செய்ததால் தனது தாயை கத்தியை வைத்து தாக்கிய மகன் !!



பூனேவில் 15 வயது பையன் ஒருவன் தனது தாயை கத்தி வைத்து தாக்க முயன்றுள்ளான் . தனது அம்மா தன்னுடைய மொபைலை  எடுத்துச்சென்றதால் இந்த சம்பவத்தில் ஈடுபட்டான்   .

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை . ஆனால் இந்த சம்பவம் அந்த சிறுவனின் பெற்றோர்க்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . அந்த சிறுவனை மன நிலை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர் . ஆனால் பெற்றோர்களின் இந்த முடிவை எதிர்த்து தனது ஆடைகளை கழைந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார் .


இந்த சிறுவன் தனது 12 வயதில் முதல் முறையாக மொபைல் பயன்படுத்த தொடங்கினான் . வாட்ஸ்அப் , வைபர் , வீசாட் , லைன் போன்ற பல அப்ளிகேஷன் மூலம் இவனுக்கு 500 நண்பர்கள் கிடைத்துள்ளன . ஆனால் இதில் ஒருவரவையும் அவன் நேரில் சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது . 

மோடியின் பிறந்த நாள் பரிசாக இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது சீனா !!



அடுத்த வாரம் சீனாவின் குடியரசு தலைவர் ஷி ஜின்பிங் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் . அவர் அந்த சுற்றுப் பயணத்தில் இந்தியாவிற்கு 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதை அதிகாரப் பூர்வமாக அறிவிக்க உள்ளார் . அவர் இந்த அறிவிப்பை மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அறிவிக்க இருக்கிறார் .

டஜிகிஸ்தான் , இலங்கை , மால்தீவ்ஸ் சுற்றுப்பயணம் முடிந்த பின் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார் . மோடி ஜப்பானிற்கு சென்று 35 மில்லியன் டாலர் முதலீடு செய்வதற்கு ஏற்பாடு செய்தார் . ஆனால் இப்போது சீனா இதை விட மூன்று மடங்கு இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளது .

இந்த முதலீட்டை அவர்கள் நிறுவனமயமாக்கல் , இரயில்வே, ரோடுகள் , துறைமுகங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவது ஆகிய பல துறைகளில் முதலீடு செய்ய உள்ளனர் .

வினாயகர் சதுர்த்தி விடுமுறையின் போது அதிக வீட்டுப்பாடம், வெடிகுண்டு புரளி கிளப்பிய மாணவன்


செப்டம்பர் 8-சென்னையில் ஆழ்வார் திருநகர் பகுதியில் செயின்ட் ஜான்ஸ் பள்ளி மற்றும் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிகுலேசன் பள்ளியிலும் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த தகவலையடுத்து மாணவர்கள் அனைவரும் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டு சோதனைகள் நடத்தினர்.

பின்னர் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது, இந்த வெடிகுண்டு புரளியை கிளப்பியது செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. வினாயகர் சதுர்த்தி விடுமுறையில் அதிக அளவிலான வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்பட்டு, அதை சரியாக செய்து முடிக்காததாலும், அன்று நடைபெறவிருந்த மாததேர்வுக்கு படிக்காததாலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அம்மாணவன் தெரிவித்துள்ளான்.

போலீசார் அவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பியுள்ளனர், அவனது பெற்றோர்கள் மிகுந்த வேதனையில் இருக்கிறார்கள். விடுமுறை நாட்களிலும் அதிக அளவு வீட்டு பாடங்களை தந்து அழுத்தத்தை உருவாக்குவது குறித்தும் மாணவர்களுக்கு அளவுக்கு மீறி தரப்படும் பிரஷர் குறித்தும் எந்த விவாதங்களும் நடைபெறாமல் இருப்பது வருந்தத்தக்கது.

மலாலாவை சுட்ட தீவிரவாதிகளை இரண்டு வருடங்களுக்கு பின் கைது செய்தது பாகிஸ்தான் அரசு !!



இளம் வயது சமூக ஆர்லரான மலாலா யுசப்சாய் 2012 ஆம் ஆண்டு தாலிபான்  தீவிரவாதிகளால் தாக்கப்பட்டார் . அவரை தாக்கிய 10 தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர் .

மலாலா தாலிபான் ராணுவத்தின் கீழ் தன்னுடைய வாழ்க்கைப் பற்றி பிபிசிக்கு ஒரு டைரி எழுதினார் . இதன் மூலம் பொது மக்கள் கவனத்திற்கு வந்தார் மலாலா . இவர் 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார் . உலகை உலுக்கிய இந்த தாக்குதலில் இருந்து மெதுவாக குணமாகி வந்தார் . இதன் பின்னர் இவர் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக போராட துவங்கினார் .

இதனால் இவர் உலக அமைதி நோபல் பரிசிற்காக நாமினேட் செய்யப்பட்டார் .


எங்கள் உறவு புனிதமானது என கடிதம் எழுதி ஒன்றாக தற்கொலை செய்துகொண்ட கள்ளக்காதல் ஜோடி


சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள பெரிய கொல்லப்பட்டி கிராமத்தில் ஜெயச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டக்கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. அதைத்தொடர்ந்து கிணற்றை எட்டிப்பார்த்த போது அதில் ஒரு ஆணும், பெண்ணும் பிணமாக மிதந்தனர். இதையடுத்து போலிசுக்கு தகவல் தெரிவித்தார், போலிஸ் விசாரணையில் இறந்து  போன இவர்கள் கள்ளக்காதல் ஜோடி என்று தெரிய வந்தது.

சேலத்தை சேர்ந்த மாது(வயது35) என்பவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயா(25) என்ற பெண்னை திருமணம் செய்தார். இவர்களுக்கு திருமூர்த்தி(7). அம்பிகா(5) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் ஜெயாவிற்கும், கடந்த 5 மாதத்திற்கு முன்பு சேலம் டவுன் பகுதியில் இருந்து இவர்கள் வசித்த அய்யந்திருமாளிகைக்கு குடியேறிய கட்டிட தொழிலாளியான வினோத்(23) என்ற திருமணம் ஆகாத இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.

இவர்கள் கள்ளக்காதல் விவகாரம் உறவினர்களுக்கு தெரியவந்த போது அவர்கள் இருவரையும் கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் தொடர்ந்து கணவன் வீட்டில் இருக்கும் போது, அவரது மனைவி ஜெயா கள்ளக்காதலன் வினோத்திடம் செல்போனில் சிரித்து பேசியதாகவும் இதனால் ஆத்திரம் அடைந்த கணவன் ஜெயாவை கண்டித்துள்ளார், இதனால் கணவனிடம் கோபித்துக்கொண்டு ஜெயா வினோத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார். இரண்டு தரப்பினரும் இருவரையும் தேடினார்கள், ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை, வினோத்தும், ஜெயாவும் பல இடங்களில் சுற்றித்திரிந்து விட்டு, இரவு கன்னங்குறிச்சியிலிருந்து கோரிமேடு செல்லும் வழியில் உள்ள ஜெயச்சந்திரனின்  விவசாயக்கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

வினோத்தும் ஜெயாவும் தற்கொலை செய்துக்கொண்ட கிணற்றின் அருகில் உள்ள மோட்டார் அறை பக்கத்தில் செருப்புகள் கிடந்தன. அவற்றின் அடியில் ஒரு கடிதம் எழுதி மடித்து வைக்கப்பட்டிருந்தது. அதில் "எங்கள் உறவு புனிதமானது. எங்களை எந்த சக்தியாலும் பிரிக்கமுடியாது. நாங்கள் 5 மாதம் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை எங்களுக்கு முழுதிருப்தி அளிப்பதினால் நாங்கள் தற்கொலை செய்துகொள்கிறோம். இதனால் நாங்கள் ஒன்றாகவே சாகிறோம். எங்கள் உடல்களை ஒன்றாகவே அடக்கம் செய்யுங்கள்" என்று எழுதப்பட்டிருந்தது. 

சாம்பியன்ஸ் லீக் தொடரில் கொல்கத்தா அணிக்கு அடி மேல் அடி !!



சாம்பியன்ஸ் லீக் தொடர் இன்று துவங்க உள்ள நிலையில் கொல்கத்தா அணியில் இருந்து தென் ஆப்ரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் காயம் காரணமாக விலகி உள்ளார் .

ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் கிரிஸ் லைன் காயம் காரணமாக விலகி இருந்தார் . மேலும் வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹாசன் ஒழுங்கீனம் காரணமாக வங்கதேச கிரிக்கெட் அமைப்பால் போட்டிகளில் விளையட தடை செய்யப்பட்டுள்ளார் .

மோர்னே மோர்கலுக்கு பதிலாக இந்தியாவின் மவிந்தர் பிஸ்லா அணியில் இணைந்துள்ளார் .

நித்யானந்தாவுக்கு வலுக்கட்டாய ஆண்மை பரிசோதனை - கர்நாடக சிஐடி போலீஸார் முடிவு


நித்யானந்தா அவரது சிஷ்யை ஆர்த்தி ராவை  40முறை கற்பழிப்பு செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் அவரை ஆண்மை பரிசோதனைக்கு உட்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, கடந்த திங்கள் அன்று ஆண்மை பரிசோதனைக்கு வந்த நித்யானந்தா டாக்டர்கள் பரிசோதனை செய்ய ஒத்துழைக்கவில்லை, மேலும் குரல் பரிசோதனையின் போது வாயில் மாத்திரை வைத்து குரலை மாற்றி மிமிக்ரி காட்டியுள்ளார்.

இதனால் ஆண்மை பரிசோதனை சான்றிதழ்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியவில்லை, இதையடுத்து மீண்டும் நித்யானந்தா விற்கு ஆண்மை பரிசோதனை நடத்த போலிசார் திட்டமிட்டுள்ளனர்,  இது வலுக்கட்டாய பரிசோதனையாகும், இந்த ஆண்மை பரிசோதனை அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை மயக்கத்தில் ஆழ்த்தி நடை பெறும் இந்த சோதனையில் ஆழ்ந்த தூக்கத்தின் போதும், விழித்த நிலையிலும் நித்யானந்தாவிடம் சில முக்கிய சோதனைகளை நடத்துவார்கள்.

# நித்தியானந்தா சாமி பேஸ்ட்டை பிதுக்காமல் விடமாட்டார்கள்

மதுரை திருமங்கலத்தில் 2 கல்லூரி பெண்கள் மீது ஆசிட் வீச்சு - மீண்டும் கொடூரம்


மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) நடந்து சென்ற கல்லூரி மாணவிகள் மீது 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஆசிட் வீசியதில் 2 மாணவிகள் காயமடைந்தனர்.  மீனா (17) மற்றும் அங்காளஈஸ்வரி (18) இருவரும் திருமங்கலத்தில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் படித்து வருகிறார்கள், நேற்று  மேலும் இரண்டு மாணவிகளுடன் கல்லூரி முடிந்து திரும்பி வரும்போது 40 வயது மதிக்கத்தக்க ஒரு மர்ம நபர் இருவர் மீதும் மறைத்து வைத்திருந்த மதுபாட்டிலில் இருந்த ஆசிட்டை எடுத்து ஊற்றி விட்டு தப்பியோடினார்.

இதில் மீனாவுக்கு முகத்தின் வலதுபுறம், தோள்பட்டை, வயிறு உள்ளிட்ட உறுப்புகள் கருகின. மேலும், ஆசிட் சிதறி தெறித்ததில் அருகில் சென்ற அங்காள ஈஸ்வரிக்கும் தோள்பட்டை, கைகள் வெந்தன. ப்ரவுன் சட்டை போட்டுக்கொண்டிருந்த ஒரு ஆள் தான் ஆசிட் வீசியுள்ளார் அவரை தேடும் பணியில் போலிசார் ஈடுபட்டுள்ளனர்.

மீனாவின் தந்தை உதயசூரியன் என்பவர் 20 நாட்களுக்கு முன் தான் இதயநோயால் இறந்து போன நிலையில் இம்மாதிரி கொடூர சம்பவம் மீனாவுக்கு நடந்துள்ளது.

ஆசிட் வீச்சு நடந்த உடன் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தும் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பாதிக்கப்பட்ட இருவரும்  மோட்டார் சைக்கிளில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

ஆசிட் விற்பனையில் கட்டுப்பாடு இருந்தும் எப்படி இவர்களுக்கு ஆசிட் கிடைத்தது? ஆசிட் விற்பனை கட்டுப்பாடு வெறும் ஏட்டளவில் தானா?
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media