BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 24 September 2014

கொஞ்சம் ப்ரூட் ஜூஸையும் தயாரியுங்கள் - பெப்ஸி , கோக் கம்பேனிக்கு மோடி அறிவுரை !! ஏன் அப்படி சொன்னார் ??



மோடி புதன்கிழமை பெரிய குடிபானங்கள் தயாரிக்கும் பெப்ஸி , கோக் நிறுவனங்களிடம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க தங்கள் பானங்களில் ப்ருட் ஜூஸையும் சேர்த்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்தார் .

மோடி அளித்த பேட்டியில் , " இலட்சக்கணக்கான மக்கள் பெப்ஸி மற்றும் கோக்கோ கோலா வாங்குகின்றனர் . நான் இந்த நிறுவனங்களிடம் 5 சதவீதம் இயற்கை பழங்களின் சாறுகளை உபயோகிக்க கோரிக்கை வைத்து உள்ளேன் . அவர்கள் அவ்வாறு செய்தால் நமது விவசாயிகளுக்கு இலாபம் அதிகமாக கிடைக்கும் . அவர்கள் தங்கள் பழங்களை தூக்கிப் போட வேண்டிய அவசியம் இல்லை " என்றார் .

இது போன்று மோடியின் உணவு அமைச்சகமும் இது போன்று கோரிக்கை ஒன்றை வைத்து இருந்தது . இவர்கள் கடந்த மாதம் பெப்ஸிகோ நிறுவனத்தை தங்களின் பானங்களில் சக்கரையின் அளவை குறைக்கும் படி கேட்டுக் கொண்டனர் .


உலகில் பழங்கள் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா , போதுமான சேமிப்பு வசதி இல்லாததால் பல பழங்கள் தூக்கி வீசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

பெண்களுக்கு மிஸ்ட் கால் கொடுத்தால் ஜெயில் தான் !! பீகாரில் புது உத்தரவு !!



பெண்களுக்கு அடிக்கடி மிஸ்ட் கால் கொடுத்து தேவை இல்லாமல் தொல்லை கொடுத்தால் , அந்த செயலில் ஈடுபடும் நபருக்கு சிறை தண்டனை கொடுக்கப்படும் என பீகாரில் புது உத்தரவு போடப்பட்டுள்ளது .

போலிஸ் தலைமை அதிகாரி அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் , இது போன்று மிஸ்ட் கால் குறித்த பூகார்களை காவல் அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் எடுத்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் .

பெண்களுக்கு தொடர்ந்து மிஸ்ட் கால் கொடுப்பது ஒரு பயங்கரமான குற்றம் . இது அவர்களின் மன அமைதியைக் கெடுக்கிறது . எனவே நாங்கள் அதை ஒரு குற்றமாக எடுத்து செக்சன் 354இன் கீழ் வழக்கு பதிவு செய்ய திட்டமிட்டு இருக்கிறோம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .

ஒன்று இரண்டு முறை மிஸ்ட் கால் கொடுத்தால் விட்டுவிடும் படியும் தொடர்ந்து மிஸ்ட் கால் கொடுத்து தொல்லை கொடுத்தால் பூகாராக எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது .

கற்பழிக்கப்பட்ட சிறுமியிடம் 2 லட்ச ரூபாய் வாங்கி கொண்டு கருவை கலைக்கச் சொன்ன பஞ்சாயத்து தீர்ப்பு !!



பீகாரில் உள்ள பஞ்சாயத்து ஒன்றில் கற்பழிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணை 2 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக பெற்றுக் கொண்டு கருவை கலைக்கச் சொல்லி பஞ்சாயத்து நடுவர் தீர்ப்பளித்துள்ளார் .

பீகாரின் சுபன்கார்ப்பூர் கிராமத்தில் இருக்கும் பஞ்சாயத்து சார்பாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது . இந்த கிராமம் க்ண்டி காவல் நிலையத்திற்கு கீழ் வரும் . இந்த காவல் நிலையத்தில் அந்த சிறுமியின் பெற்றோர் பூகார் அளித்துள்ளனர் .

இது குறித்து போலிஸ் அதிகாரி கூறுகையில் , " நாங்கள் அவர்கள் அளித்த பூகாரின் பேரில் குற்றவாளியை தேடிக் கொண்டு இருக்கிறோம் . மேலும் அந்த ப்ஞ்சாயத்துக்கு எதிரான நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்வோம் " என்றார் .

சிறுமியின் பெற்றோர் கூறுகையில் , " பஞ்சாயத்து எங்களிடம் 2 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு செல்லும்படி கூறினர் . ஆனால் நாங்கள் அதற்கு இணங்கவில்லை . எங்களுக்கு குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று கூறினர் .

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

பெண்கள் செக்ஸ் உறவில் ஃபெயில் ஆவது எப்போது? ஆய்வு முடிவுகள்

தீபிகா படுகோன் கிளிவேஜ் பிரச்சினை உலகப்பிரச்சினையானது

நாங்க கலாய்ச்சா என்ன ஆகும் தெரியுமா? வெங்கட்பிரபு சவால், ஃபேஸ்புக்கில் லிங்குசாமி கலாய்த்தவர்களுக்கு   எதிராக பொங்கினார்

புது ஆப்பிள் ஐபோன்வாங்கியவர்களுக்கு ஆப்பு வளைந்து,  போகும் ஐ-போன் 6, 6எஸ்!!  ஆப்பிளின் தவறு !!

உக்ரேன் அரசியல்வாதியின் நிர்வாண போட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஹேக்கர் !!

ஆந்திரா அரசு விடுதியில் இருந்த மாணவிகளை விபச்சாரத்தில் தள்ள முயன்றவர்கள் கைது !!

தாம்பத்திய உறவுக்கு கணவன் அல்லது மனைவி மறுத்தால் விவாகரத்து தர முடியும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பெண்கள் ஆண்களிடம் இந்த கேள்விகளை கேட்க கூடாது என ஆண்கள் நினைக்கிறார்கள்

விஜய் சேதுபதி மாதிரி ஒரு ஹீரோ சான்ஸே இல்ல…. : மனம் திறந்து பாராட்டிய கார்த்தி!
http://goo.gl/pH7dz7

உங்களை அம்மா என்று மக்கள் அழைப்பதில் தவறே இல்லை - ஜெயலலிதாவுக்கு அர்னால்ட் பாராட்டு !!

புலி மீது எந்த தவறும் இல்லை, எல்லா தவறும் மாணவன் மீது தான் என ஜூ அறிக்கை

பிரிட்டனின் ஸ்டைலிஷ் ஸ்டார்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெக்காம் மற்றும் செரில் கோல் !!

மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்போகும் கோழி: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இன்று இந்திய அணிக்கும் தோனிக்கும் மிக முக்கியமான நாள்

இன்று பேஸ்புக் டிரண்டிங்கில் முதல் இடத்தில் இருக்கும் மங்கள்யான் பற்றிய சில அரிய தகவல்கள்

ரிலீஸ் ஆவதற்கு முன்பே சாதனை படைக்க போகும் ஐ படம்

நவம்பருக்குள் எபோலாவால் தாக்கப்படுவோரின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிக்கும்: பகீர் எச்சரிக்கை

ஜொல்லா மொபைல் போனில் உள்ள சிறப்பம்சங்கள் !!

மின்சார துறையில் ரூ.6,854 கோடி பற்றாக்குறை

ATM பற்றிய மிக முக்கியச் செய்தி

இஸ்ரேலிய சிறார்கள் படுகொலை: தேடப்பட்ட 2 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொலை

பாஜகவுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காத வாக்குச் சாவடிகள்

அழகு குறிப்புகள்:தலைமுடி செழித்து வளர

ஆந்திரா அரசு விடுதியில் இருந்த மாணவிகளை விபச்சாரத்தில் தள்ள முயன்றவர்கள் கைது !!



ஆந்திர பிரதேசம் மேற்கு கோதவரி மாவட்டத்தில் உள்ள அரசு விடுதியில் தங்கி இருந்த மாணவிகளை விபச்சாரத்தில் தள்ள முயற்சித்த 5 பேர் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர் . கைது செய்ய்ப்பட்ட ஐவரில் ஒருவர் பெண் .

ஹாஸ்டல் வார்டன் மீது சாட்சியங்களை அழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது . காப்பாற்றப்பட்ட மாணவிகள் அனைவரும் மாவட்ட தலைமை குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளின் கீழ் பாதுகாப்பாக உள்ளனர் .

கலெக்டருக்கு  ஒரு மொட்டைக் கடுதாசி இந்த பிரச்சனை குறித்து வந்ததால் அவர் போலிஸை எஸ்.சி/எஸ்.டி மாணவிகள் விடுதிக்கு ரேய்ட் போக உத்தரவிட்டார் . அப்போது அந்த ஐந்து நபர்களும் மாட்டிக் கொண்டனர் .

மாணவிகள் அனைவரும் எட்டாம் வகுப்பு படிப்பவர்களும் 14 வயதுக்கு கீழே இருப்பவர்களாக தான் இருந்தனர் . குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நிர்பயா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் .

பெண்கள் செக்ஸ் உறவில் ஃபெயில் ஆவது எப்போது? ஆய்வு முடிவுகள்

 
செக்ஸ் உறவின் போது பெண்களுக்கு சில சிக்கல்கள் எழுகின்றன. உடல்ரீதியான, மனரீதியாக பிரச்சினைகள் இருந்தாலும் பெண்கள் செக்ஸ் உறவில் பெயிலாகிவிடுவார்கள் என்கின்றனர் நிபுணர்கள். எந்த சமயத்தில் பெண்கள் செக்ஸில் திருப்தி அடையாமல் தோற்றுப்போகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போதோ, அல்லது பாலியல் ரீதியான நோய் எதுவும் தாக்கியுள்ள போதோ அவர்களுக்கு மனரீதியான ஒரு அழுத்தம் ஏற்படுகிறதாம். இதனால் அவர்களுக்கு செக்ஸ் உறவில் திருப்தி ஏற்படுவதில் சிக்கல்கள் எழுகின்றன என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

கணவர் வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தனக்கு துரோகம் செய்கிறார் என்பதை அறிந்த பெண்கள் செக்ஸ் உறவில் முழுதிருப்தியாக ஈடுபடமுடியாது, அதைப்போலவே கணவருக்கு துரோகம் செய்து வேறு ஆண்களுடன் செக்ஸ் தொடர்பில் உள்ள பெண்களாலும் முழு திருப்தி அடையமுடியாது. இரண்டுக்குமே அவர்கள் மனதில் உள்ள அழுத்தமே காரணம், இந்த அழுத்தமே அவர்களின் உடலில் இறுக்கமாக வெளிப்பட்டு செக்ஸ் உறவை திருப்தியாக அடைய முடியாத படி செய்கிறது.

செக்ஸ் உறவில் உச்சக்கட்ட திருப்தி அடைவது என்பது பெண்கள் எல்லோராலும் எளிதில் முடியாது. உடல் ரீதியான கோளாறுகள், நோய் பாதிப்புகள் இருந்தாலும் பெண்களால் திருப்தி அடைய முடியாது. எனவே தகுந்த மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

பெண்களுக்கு "Female Sexual Arousal Disorder (FSAD) எனப்படும் குறைபாடுகள் இருந்தாலும் பாலுணர்வு தூண்டுதல் ஏற்படுவதில்லை. உறுப்புகளில் வலி, வறட்சி போன்றவை ஏற்படும். இதுபோன்ற காரணங்களினாலும் உடலுறவினால் அவர்களுக்கு திருப்தி ஏற்படாத நிலை ஏற்படுகிறது.

சிறுநீர் தொற்றுப் பிரச்சினையினால் மர்ம உறுப்புகளில் ஏற்படும் புண்களும் உடலுறவில் ஆர்வமின்மையை ஏற்படுத்துகிறது. எனவே உடல் உறவில் திருப்தி இன்மையும், உச்சக்கட்டம் ஏற்படுவதில் சிக்கல் உள்ள பெண்கள் சரியான உளவியல் நிபுணர்களையோ, செக்ஸாலஜிஸ்ட்களையோ சந்தித்து ஆலோசனை பெறலாம்.

உங்களை அம்மா என்று மக்கள் அழைப்பதில் தவறே இல்லை - ஜெயலலிதாவுக்கு அர்னால்ட் பாராட்டு !!



" ஐ " பட இசை வெளியிட்டு விழாவிற்கு தமிழகம் வந்தார் பிரபல ஹாலிவுட் நடிகர் மற்றும் அரசியல்வாதி அர்னால்ட் . அவர் தமிழகத்திற்கு வரும் போது தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை சந்தித்து பேசினார் . இந்த சந்திப்பு முடிந்து ஒரு வாரம் ஆன நிலையில் முதல்வர் அவர்களை பாராட்டி அர்னால்ட் மெயில் அனுப்பியுள்ளார் .

அந்த கடிதத்தில் அவர் முதல்வருடன் அமர்ந்து அவர் செய்த சாதனைகள் பற்றியும் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தது நன்றாக இருந்ததாக கூறினார் .

மேலும் அவர் கடிதத்தில் , " நீங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு செய்லபடுகிறீர்கள் . அதனால் மக்கள் உங்களை அம்மா என்று அழைப்பதில் எந்த தவறும் இல்லை . பெண்கள் காவல் நிலையம் என்பது இது வரை நான் எங்கும் கேட்டிராத ஒரு அருமையான திட்டம் " என்று எழுதி இருந்தார் .

மேலும் அவர் ஜெயலலிதா அவர்கள் தமிழகம் முழுவதும் துய்மையான மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திகளை பயன்படுத்த முயற்சிப்பதை பாராட்டினார் . அவரும் துய்மையான சக்திகள் தொடர்பாக இயக்கம் ஒன்றை வைத்து இருப்பதால் , தமிழகத்துடன் இணைந்து பணியாற்ற தயாரக இருப்பதாக தெரிவித்தார் .

புலி மீது எந்த தவறும் இல்லை, எல்லா தவறும் மாணவன் மீது தான் என ஜூ அறிக்கை





+2 படிக்கும் 17 வயது மாணவர் டெல்லியில் உள்ளா "ஜூ"வில் வெள்ளைப்புலி இருந்த ஆழமான கிணறு போன்ற பகுதியில் தவறி விழுந்துவிட்டார், அங்கிருந்த வெள்ளைப்புலி அவரை அடித்து கொன்றது முழுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது, ஜூ ஊழியர்களால் அந்த மாணவர் இறந்த பின்பு தான் அந்த புலியை பயமுறுத்தி கூண்டில் அடைக்க முடிந்தது. மாணவர் எப்படி அதில் விழுந்தார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன, கிணறு போன்ற அந்த கூண்டு தடுப்பு சுவர் சிறியதாக இருந்ததால் தவறி விழுந்ததாகவும், மாணவர் ஆர்வத்தில் மேலே ஏறி பார்த்த போது தவறி விழுந்ததாகவும் கூறுகிறார்கள். அந்த மாணவர் பெயர் மஸ்கூத் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 


இந்நிலையில் இது தொடர்பாக அந்த ஜூ இன்று ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் அந்த மாணவர் தடுக்கி விழவில்லை, அவன் வேண்டுமென்றே தான் உள்ளே குதித்து உள்ளான். ஜூ வில் உள்ள பாதுகாப்பு வேலிகள் எல்லாம் மிகவும் பாதுகாப்பானவை. சிக்கி கொண்ட மாணவனை மீட்க எங்கள் ஊழியர்கள் பாடுபட்டனர். ஆனால் எந்த பயனும் இல்லை. 

பிரிட்டனின் ஸ்டைலிஷ் ஸ்டார்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெக்காம் மற்றும் செரில் கோல் !!



பிரிட்டனின் மிகவும் ஸ்டைலாகவும் அழகாகவும் இருக்கும் பெண்களின் பட்டியலில் பிரிட்டன் இளவரசி கேத் மித்தல்டனை முந்தி முதல் இடம் பிடித்தார் செரில் கோல் . ஆண்கள் பட்டியலில் கால்பந்து நட்சத்திரம் முதல் இடம் பிடித்தார் .

செரில் கோல் எஸ்-பேக்டர் நிகழ்ச்சியில் நடுவராக வருவார் . இவர் தனது ஆடைகளை கவனமாக தேர்ந்தெடுத்து மிடுக்காக இருந்ததால் இவர் முதல் இடம் பிடித்துள்ளார் . இவரை தொடர்ந்து ஜென்னிபர் ஆனிஸ்டன் , ஹெலன் மிரன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர் .



ஆண்கள் பட்டியலில் டேவிட் பெக்காமை தொடர்ந்து பேரல் வில்லியம்ஸ் , பிராட் பிட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் .


வளைத்தால் வளைந்து போகும் ஆப்பிள் ஐ-போன் !! இது டிசைன் இல்ல ஆப்பிளின் தவறு !!



ஆப்பிள் தன்னுடைய புதிய தயாரிப்பான ஐ-போன் 6 பிளஸ் மொபைலை சில தினங்களுக்கு முன் விற்பனைக்கு விட்டது . பலர் ஆர்வத்துடன் இந்த மொபைலை வாங்கினர் . அவர்களுக்கு இப்போது பெரு அதிர்ச்சி காத்து இருக்கிறது .

அந்த மொபைலை பயன்படுத்திய சிலர் அந்த மொபைலை பாக்கெட்டில் வைத்து எடுத்த பிறகு வளைந்து இருப்பதை பார்த்துள்ளனர் . இதனை பலர் புகைப்படம் எடுத்து டிவிட்டர் மற்றும் பல இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர் . டவுசரில் வைத்து விட்டு எடுத்ததால் இப்படி வளைந்துள்ளது என சிலர் கூறுகின்றனர் .

இந்த வருட தொடக்கத்தில் ஐ-போனில் வளையும் தன்மை இருக்கும் என வதந்திகள் பரவின . ஆனால் அப்படி எந்த தன்மையும் ஆப்பிள் நிறுவனம் அந்த மொபைலுக்கு கொடுக்கவில்லை இது ஆப்பிளின் தவறாகவே இருக்கிறது . ஆனால் இவ்வாறு வளைந்த பின்னரும் மொபைல் நன்றாக இயங்கி வருவதாக தெரிவித்துள்ளனர் .

அவ்வாறு வளைந்த மொபைல்களின் படங்கள் :


பெண்கள் ஆண்களிடம் இந்த கேள்விகளை கேட்க கூடாது என ஆண்கள் நினைக்கிறார்கள்




* இரவு அதிகமாக சரக்கு அடித்தாயா, இனி குடித்தால் என்னுடன் பேசுவதையே நிறுத்தி விடு.

* உன்னுடைய பழைய காதலி எதற்கு உனக்கு போன் செய்தால், அவளுடன் இன்னும் பேசி கொண்டு இருக்கிறாயா.

* நான் இந்த உடையில் குண்டாக இருக்கிறேனா ??

* நேற்று இரவு இருவரும் படத்துக்கு சென்றோம். படம் முடிந்தவுடன் டின்னர் போகலாமா என நீ அழைத்தாய் நான் வேண்டாம் என்றேன் , அதன் பிறகு நீ ஏன் மீண்டும் என்னை அழைக்கவில்லை.

* நான் உனது தோழியை விட அழகாக இருக்கிறேனா.

* உனது முன்னாள் காதலி உனது கனவில் வருகிறாளா.

* எனது அழகு குறைந்து வருகிறது என நீ நினைக்கிறாயா. 

மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்போகும் கோழி: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கறிக்கோழி சாப்பிடுவோருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் வேலை செய்யாது, இது மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும் என்று எச்சரிக்கிறது இந்திய விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ) நடத்திய ஆய்வு. இதற்கு காரணம் கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பதுதானாம்.
இயற்கை விவசாயம் எங்கே ? 
 
இயற்கைக்கு முரணாக மனிதன் எதை செய்தாலும் அது மனிதனுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பதற்கு பல உதாரணங்கள் கொட்டி கிடக்கின்றன. இயற்கை விவசாயத்தை விடுத்து, பூச்சிக்கொல்லி, உரம் என செயற்கையை திணிக்க தொடங்கியதால்தான் புற்றுநோய் பெருகியது என ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன.
வாரந்தோறும் சிக்கன் அவசியமா ? 
 
அதேபோலத்தான் கறிக்கோழியும். முன்பெல்லாம் கிராமங்களில் கோயில் கொடை விழாக்களிலும், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற அந்தந்த மதத்தாரின் கொண்டாட்ட தினங்களில்தான் மட்டன், சிக்கன் சாப்பிடுவார்கள். ஆனால் நகரமயமாதல், விளம்பரமயமாதல் தாக்கத்தால் வாரம்தோறும் வீட்டில் சிக்கன் சாப்பிடுவதை வழக்கமாக்கியதன் விளைவு, நாட்டு கோழிகள் பற்றாக்குறையானது. இதனால், கோழியின் உற்பத்தியை பெருக்க பிராய்லருக்கு நகர்ந்தது சமூகம்.
ஆன்ட்டி பயாட்டிக் ஆபத்து 
 
பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த  முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மனிதர்களுக்கு மருந்து வேலை செய்யாது 
 
கறிக்கோழிக்கு அதிகம் ஆன்ட்டி பயாடிக் செலுத்தப்படுவதால், அதனை உட்கொள்ளும் மனிதர்களுக்கு ஆன்ட்டி பயாடிக் உடலில் கலந்துவிடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பலவற்றுக்கு பல்வேறு ஆன்ட்டி பயாடிக்குகள் மருத்துவர்களால் அளிக்கப்படுகின்றன. ஆனால் பிராய்லர் கோழி சாப்பிடுவோருக்கு டாக்டர்கள் அளிக்கும் சாதா
ரண ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வேலை செய்யாது. இதனால் டாக்டர்கள் மருந்தின் வீரியத்தை அதிகப்படுத்துவார்கள். மருந்தின் வீரியம் அதிகமானால் உடல் சோர்வுறும், பல பக்க விளைவுகள் ஏற்படும்.
பரிசோதனை கூடத்தில் ஆய்வு 
 
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தம் 70 கோழிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டன. விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் மாசுக் கண்காணிப்பு பரிசோதனைச் சாலையில் அவை ஆய்வு செய்யப்பட்டன. அந்த கோழிகளினர் ஈரல், தசை, கிட்னி ஆகியவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 40 சதவீத கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்டி பயாட்டிக் கொடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அளவுக்கு அதிகம் 
 
விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் மாசுக் கண்காணிப்பு பரிசோதனைச் சாலையின் தலைமை இயக்குனர் சுனிதா நரைன் கூறும்போது, "ஆன்ட்டி பயாடிக் பயன்பாடுகள் மனித, மருத்துவப் பயன்பாடுகளையும் மீறிச் சென்றுள்ளது, கால்நடை வளர்ப்பு தொழிற்துறையினர் கோழிகள் எடை கூடுவதற்கும், வேகமாக வளர்வதற்கும் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை அதிகம் பயனபடுத்துகின்றனர். இது தவறான அணுகுமுறை" என்றார்.
கோழி உடலில் பல வகை மருந்துகள் 
 
பொதுவாக கோழிவளர்ப்பில் 6 ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது: ஆக்சிடெட்ரா சைக்ளின், குளோர்டெட்ராசைக்ளின், டெட்ராசைகிளின் வகையறாவான டாக்சிசைக்ளின், என்ரோபிளாக்சசின், சிப்ரோபிளாக்சசின், நியோமைசின் ஆகியவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் 5 வகை மருந்துகள் சோதனைக்கு எடுக்கப்பட்டன அனைத்து கோழிகளிலும் காணப்பட்டன. அதிகமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் முறையற்று பயன்படுத்தப்படுகிறது இதன் மூலம் உறுதியாகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மனிதன் மாறிவிட்டான் 
 
சிக்கனால், மனிதர்கள் பாதிக்கப்படுவதை சிஎஸ்இ ஆய்வாளர்கள் ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். 2002ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டுவரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பெரும்பாலான நோயாளிகளுக்கு சிப்ரோபிளாக்சசின், ஆக்சிடெட்ரா சைக்ளின், டாக்சிசைக்ளின் போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் வேலை செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டது.
டைபாய்டு ஏற்பட வாய்ப்பு 
 
சிப்ரோபிளாக்சசின் என்ற ஆன்ட்டி பயாடிக் மூக்கு முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களையும் எதிர்க்கும் மருந்தாகும். இதன் பலனை மனித உடல் இழக்கும்போது டைபாய்டு உள்ளிட்ட பிற கிருமித் தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக மாறிவிடும், உண்மையில் இந்தியாவில் இது அதிகரித்திருப்பதாக சிஎஸ்இ எச்சரித்துள்ளது. இறைச்சி உற்பத்தித் தொழிற்துறையில் அதிகமாக ஆன்ட்டி பயாடிக் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அரசு கடும் சட்டங்களையும் கண்காணிப்பு முறையையும் கொண்டு வரவேண்டும் என்று சி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. இனியாவது இயற்கைக்கு எதிராக மனித குலம் திரும்பாமல் இருக்க வேண்டும்.

இன்று இந்திய அணிக்கும் தோனிக்கும் மிக முக்கியமான நாள்







கிரிக்கெட் போட்டிகள் ஆரம்ப காலத்தில் டெஸ்ட் போட்டிகளாக தான் தொடங்கின , அதன் பின்பு அதில் முடிவு கிடைக்கவில்லை என்பதால் ஒரு நாள் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. முதலில் 60 ஒவர்கள் கொண்டதாகவும் அதன் பின்பு 50 ஒவர்கள் கொண்டதாகவும் குறைக்கப்பட்டது. அதன் பின்பு டி20 என 20 ஒவர் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் எந்த அணிக்கும் அதில் அனுபவம் இல்லை.

இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பை தென் ஆப்பிரிக்காவில். இந்தியா அணியோ மிக மோசமான நிலையில் இருந்தது. அனுபவ வீரர்களான சச்சின், திராவிட், கங்குலி ஆகியோர் இதில் கலந்து கொள்ளவில்லை என முடிவு செய்தனர். அதனால் புதிய கேப்டனாக விக்கெட் கீப்பர் தோனி அறிவிக்கப்பட்டார். சேவாக், யுவராஜ், ஹர்பஜன் தான் இந்திய அணியில் இருந்த அனுபவ வீரர்கள்.

ஒவ்வொரு போட்டியிளும் பல சவால்களை சந்தித்து இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இறுதி போட்டி பரம் எதிரி பாகிஸ்தானுடன். எப்படியாவது வென்றாக வேண்டும் என்னும் கட்டாயம். முதலில் பேட் செய்த இந்திய அணீ 157 ரன்கள் எடுத்தது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் எளிதான இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. அந்த அணியின் பேட்டிங் எதிர்ப்பார்த்ததை போல் செயல்படவில்லை. இதனால் கடைசி ஒவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் நிலை வந்தது.

அனைவரும் ஹர்பஜன் பந்து வீச வருவார் என எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத படி ஜோகிந்தர் ஷர்மா வந்தார். முதல் பந்தே வைட் ஆனது. அதன் பிறகு டாட் பந்து. 2 வது பந்து சிக்ஸூக்கு பறந்தது. தோனியின் முடிவு தவறாகி விடுமோ என பலரும் எதிர்ப்பார்த்தனர். 3 வது பந்தில் இந்தியா வெற்றி பெற்றது. மிஸ்பா ஹுல் ஹக் கேட்ச் ஆகி அவுட் ஆனார். இதே செப்டம்பர் 24 ஆம் தேதி இந்திய அணி முதல் டி20 உலக கோப்பையை கைப்பற்றியது.

இன்று பேஸ்புக் டிரண்டிங்கில் முதல் இடத்தில் இருக்கும் மங்கள்யான் பற்றிய சில அரிய தகவல்கள்





இன்று மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பபட்டது. இது உலகின் முக்கிய சாதனை ஆகும். இதனை இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். அப்படிப்பட்ட மங்கள்யானை பற்றிய சில அரிய தகவல்களை நாம் தெரிந்து கொள்வோம்.

* செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிப்பதற்காக தான் மங்கள்யான் செலுத்தப்பட்டுள்ளது.

* இன்னும் 6 மாதங்களுக்கு செயல்படும்  மங்கள்யானின் செயல்களை பெங்களூரில் இருந்து கண்கானித்து வருகிறார்கள்.

* மங்கள்யானுக்கு மொத்தம் 250 கிலோ எரிபொருள் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

* விண்வெளியில் இந்தியாவால் சிறப்பாக செயல்பட முடியுமா என்பதை உறுதிபடுத்துவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.

* மங்கள்யான் விண்கலத்தின் எடை 15 கிலோ ஆகும்.

* மங்கள்யானில் மொத்தம் 5 ஆராய்ச்சி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

* செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பும் நாலாவது நாடு இந்தியா ஆகும்.

* முதல் முயற்சியிலையே வெற்றி பெற்ற முதல் நாடு இந்தியா ஆகும்.

* இந்த திட்டத்துக்கு ஆன செலவு ஹாலிவுட் படமான கிராவிட்டி எடுக்க ஆன செலவை விட குறைவு ஆகும்.

ரிலீஸ் ஆவதற்கு முன்பே சாதனை படைக்க போகும் ஐ படம்




இயக்குனர் ஷங்கர் 2 வருடமாக எடுத்து வரும் படம் 'ஐ'. இந்த படத்தை இந்தியா முழுவதும் எதிர்பார்த்து வருகிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று நடைபெற்றது. அதில் ஹாலிவுட் நாயகன் அர்னால்டு, நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். அதனால் இந்த விழாவே பெரிய ஹிட்டானது. இதில் படத்தின் டீசரையும் வெளியிட்டார்கள்.

அர்னால்டு கலந்து கொண்ட விழா, ஷங்கரின் படம் என்பதால் இந்த டீசர் உலகம் முழுவதும் பிரபலமானது. இதனால் இதனை பலரும் யூடுயூபில் பார்த்து வந்தார்கள். இப்போது வரை அதனை 60 லட்சம் பேர் பார்த்து உள்ளார்கள். ஒரு தமிழ் படத்தின் டீசரை இத்தனை பேர் பார்ப்பது இது தான் முதல் முறையாகும். டீசர் வந்து இப்போது தான் 10 நாட்கள் ஆகி உள்ளது. இன்னும் படம் வருவதற்கு ஒரு மாதத்துக்கு மேல் ஆகும். அதற்குள் இதனை ஒரு லட்சம் பேர் பார்த்து புது சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நவம்பருக்குள் எபோலாவால் தாக்கப்படுவோரின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிக்கும்: பகீர் எச்சரிக்கை

எபோலா வைரஸை கட்டுப்படுத்தாவிட்டால் அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நவம்பர் மாதத்திற்குள் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, கினியா, சியர்ரா லியோனில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 5 ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் வைரஸால் தாக்கப்பட்டுள்ளனர். அதில் 2 ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில்,

எபோலா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் மாதங்களில் வைரஸால் தாக்கப்படுவோர் மற்றும் பலியாவோரின் எண்ணிக்கை வாரத்திற்கு மட்டும் நூறில் இருந்து ஆயிரங்களாக அதிகரிக்கும்.
போதிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் வரும் நவம்பருக்குள் எபோலாவால் தாக்கப்படுவோரின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வைரஸால் பாதிக்கப்படுவார்கள்.
 
தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தாவிட்டால் வரும் நவம்ரில் கினியாவில் 5 ஆயிரத்து 925 பேரும், லைபீரியாவில் 9 ஆயிரத்து 939 பேரும், சியர்ரா லியோனில் 5 ஆயிரத்து 63 பேரும் எபோலா வைரஸால் தாக்கப்படுவார்கள். இந்த மூன்று நாடுகளில் மட்டுமே 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்படுவார்கள். எபோலா காய்ச்சல் ஏற்பட்டால் அந்த நபர் சில நாட்களிலேயே இறந்துவிடுவார். எபோலா காய்ச்சல் ஏற்பட்டால் உடம்பு வலி, வாந்தி, பேதி, ரத்தப் போக்கு உள்ளிட்டவை ஏற்படும்  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தெற்கு கினியாவில் பரவத் துவங்கிய எபோலா வைரஸ் ஆயிரக்கணக்கானோரை தாக்கியுள்ளது

தாம்பத்திய உறவுக்கு கணவன் அல்லது மனைவி மறுத்தால் விவாகரத்து தர முடியும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு


தாம்பத்திய உறவுக்கு கணவனோ அல்லது மனைவியோ மறுத்தால் அவர்கள் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்ற சென்னை ஹைகோர்ட்டின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணும், அவருடைய கணவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அவருடைய கணவர், லண்டனில் வசித்து வருகிறார். அவர் மனைவியிடம் விவாகரத்து கோரி, சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், தாம்பத்திய உறவுக்கு உடன்பட மறுப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகளில், தன் மனைவி தன்னை மனரீதியாக கொடுமைப்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

அதற்கு அப்பெண் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தனக்கு குழந்தை பெற விருப்பம் இல்லாததால், தாம்பத்திய உறவுக்கு உடன்பட மறுத்ததாக கூறி இருந்தார். ஆனால் அதை ஹைகோர்ட்டு ஏற்றுக்கொள்ளவில்லை. எத்தனையோ கருத்தடை முறைகள் உள்ளன.

நீங்கள் விரும்பினால், அதை பயன்படுத்தி, கர்ப்பத்தை தடுத்து விடலாமே என்று கூறிய நீதிபதிகள், இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பு அளித்தனர். அதை எதிர்த்து, அப்பெண் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அம்மனு, நீதிபதி எஸ்.ஜே.முகோபாத்யாயா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரிக்கப்பட்டது. சென்னை ஹைகோர்ட்டு அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்திய நீதிபதிகள், பெண்ணின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தனர். “கணவனோ அல்லது மனைவியோ, போதிய காரணம் இல்லாமல், ஒருவர் மற்றவருடன் நீண்ட காலமாக தாம்பத்திய உறவுக்கு உடன்பட மறுத்து வருவது மனரீதியாக கொடுமைப்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கும். 
 
இதன் அடிப்படையில், விவாகரத்து வழங்க முடியும். தாம்பத்திய உறவுக்கு உடன்பட மறுத்ததற்கு அந்த பெண் கூறிய காரணத்தை ஏற்க முடியாது. இருப்பினும், இந்த வழக்கின் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும், இருதரப்பின் பொருளாதார சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, அந்த பெண்ணுக்கு அவருடைய கணவர் ஒரே முறை ஜீவனாம்சமாக ரூ.40 லட்சம் வழங்குமாறு உத்தரவிடுகிறோம்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

பேஸ்புக்கில் மரணமாக கலாய்க்கப்பட்டு வரும் லிங்குசாமிக்கு ஆதரவாக களமிறங்கி உள்ள வெங்கட் பிரபு




இயக்குனர் லிங்குசாமி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது மொத்த வித்தையையும் அஞ்சான் படத்தில் இறக்கி இருப்பதாக ஒரு பேட்டி அளீத்தார். ஆனால் அஞ்சான் படம் தோல்வியடைந்தது. அதனால் லிங்குசாமியின் மொத்த வித்தையை எல்லாரும் கலாய்த்து வருகிறார்கள். பேஸ்புக்கில் அவரை கலாய்த்து பல பக்கங்கள் தொடங்கப்பட்டு விட்டது. தினமும் அவரை கலாய்த்து பல ட்ரோல்கள் வந்து கொண்டே இருக்கிறது. லிங்குசாமிக்கு ஆதரவாக யாரும் பேசாத நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு லிங்குசாமிக்கு ஆதரவாக உள்ளார்.

படம் இயக்குவது என்பது சாதாரண செயல் அல்ல. அது மிக கடினமான வேலை. அது சில சமயம் வெற்றி பெறும், சில சமயம் தோல்வியடையும். அதற்காக இயக்குனரை கலாய்ப்பது என்பது தவறான செயல். நீங்கள் நல்ல ரசிகராக இருந்தால் தங்கமீன்கள் படத்தை வெற்றி படமாக்கி இருக்க வேண்டும் அதனை நீங்கள் செய்யவில்லை. நாங்கள் உங்களை கலாய்க்க ஆரம்பித்தால் நீங்கள் என்ன ஆவிர்கள் என யோசித்து பாருங்கள். 

ஜொல்லா மொபைல் போனில் உள்ள சிறப்பம்சங்கள் !!



ஆண்ட்ராய்ட் , விண்டோஸ் , ஐ-ஓஎஸ் ஆகிய மொபைல்களுக்கு போட்டியாக ஜொல்லா சேய்ல்பிஷ் என்னும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட மொபைல் இந்தியாவில் வெளிவந்துள்ளது . இதன் விலை 16,999 ரூபாய் . இந்த மொபைலின் சிறப்பம்சங்களைக் காணலாம் .


1 ) பயனர் இடைமுகம்

இந்த செய்ல்பிஷ் ஓ.எஸ் ஆண்ட்ராய்ட் மற்றும் பிளாக்பெரி பயன்படுத்துபவர்களுக்கு பரிச்சயமானதாக இருக்கும்  . இதன் இண்டர்பேஸ் 9 விண்டோக்களை கொண்டது . இந்த 9 விண்டோக்கள் மல்டி டாஸ்கிங்கிற்கு பயனாக இருக்கும் . இதன் மூலம் பல செயல்களை வேகமாக மேற்கொள்ளலாம் . இந்த விண்டோக்களில் நாம் ஒவ்வொரு இடத்தில் ஸ்வைப் செய்வதன் மூலம் ஒவ்வொரு செயலை மேற்கொள்ளலாம் .

2 ) பட்டன் இல்லாமல் மல்டி டாஸ்கிங் :

ஆண்ட்ராய்டில் இருப்பது போல தனி பட்டன் இந்த செய்ல்பிஷ் ஓ.எஸ்ஸில் இல்லை . மேலே குறிப்பிடப்பட்ட 9 விண்டோக்களின் மூலம் 9 அப்ளிகேஷன்களை இயக்கலாம் . மேலும் கை அசைவுகள் மூலம் பல வேலைகளை மேற்கொள்ளலாம் . போன் லாக் செய்வது முதல் ஹோம் ஸ்கிரின் செல்வது வரை என அனைத்தையும் கை அசைவுகள் மூலமே செய்து விடலாம் .

3 ) ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் இதிலும் இயங்கும் :

இந்த செய்ல்பிஷ் ஓ.எஸ்ஸில் ஆண்ட்ராய்ட்டில் எடுக்கும் அனைத்து அப்ளிகேஷன்களும் இயங்கும் வகையில் வடிவமைத்து இருக்கின்றனர் .

4 ) அனைத்து மெசெஜ்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் :

உங்களின் பேஸ்புக் , வாட்ஸ்அப் , எஸ்.எம்.எஸ் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் . இதன் மூலம் நீங்கள் எளிதாகவும் வேகமாக மெசெஜ் அனுப்பிட முடியும் .

தீபிகா படுகோன் கிளிவேஜ் பிரச்சினை உலகப்பிரச்சினையானது

தீபிகா படுகோன் மார்பக பிளவு(கிளிவேஜ்) காண்பிக்கப்பட்ட வீடியோ குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா டிவிட்டருக்கும் ஆமா கிளிவேஜ் இருக்கு காமிக்கிறேன் என்று தீபிகா படுகோன்  டிவிட்டரில் குறிப்பிட்டார், இதை அடுத்து பல தரப்பினரும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவை திட்டி தீர்த்தனர், இந்நிலையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா தீபிகா படுகோன் திரைப்படங்கள் மட்டுமின்றி பல படங்களில் தாங்கள் வெளியிட்ட படங்களை விட மோசமாக கிளிவேஜ் காண்பித்து அட்டைப்படங்களிலே வந்துள்ளது, தற்போது மட்டும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவை திட்ட பப்ளிசிட்டி தான் காரணம் என்றும் வெளியாகப்போகும் தனது படத்திற்காக தான் இப்படி பப்ளிசிட்டி கிளப்புகிறார், இது அவரின் ஹிப்போக்கிரசி என்று ஒரு கட்டுரை வெளியிட்டது.

தி ஹிந்து பத்திரிக்கை சந்தில் சிந்து பாடுவது போல டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு ஒரு கடிதம் என்று ஒரு கட்டுரையை வெளியிட்டது, இதையடுத்து தீபிகா படுகோன் கிளிவேஜ் பிரச்சினை உலகப்பிரச்சினையானது, பிரிட்டனில் இருந்து வெளியாகும் பிரிட்டிஷ் கார்டியன் பத்திரிக்கை இந்த பிரச்சினை குறித்து நேற்று கட்டுரை வெளியிட்டது, மேலும் அமெரிக்க பத்திரிக்கைகளும் தீபிகா கிளிவேஜ் பிரச்சினை குறித்து கட்டுரை எழுதியுள்ளன. 

மின்சார துறையில் ரூ.6,854 கோடி பற்றாக்குறை


மின்சார துறையில் ஏற்பட்டுள்ள ரூ.6,854 கோடி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, மின்சார கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:-

மின்சார கட்டணம் நிர்ணயம்


நிதி மறுசீரமைப்பு திட்டத்தின் தேவைக்கேற்ப, மின்கட்டண வீதத்தினை ஒவ்வொரு ஆண்டும், ஆண்டு வருவாய்த் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் மறுநிர்ணயம் செய்ய வேண்டும்.

இந்தசூழ்நிலையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2014-2015-ம் ஆண்டுக்கு மின்கட்டண வீதத்தினை மற்றும் ஆண்டு வருவாய்த் தேவையினை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆணையத்திற்கு சமர்ப்பித்த தகவல்களின் அடிப்படையில் நிர்ணயம் செய்துள்ளது.

ரூ.6,854 கோடி பற்றாக்குறை

ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் மொத்த வருவாய் தேவையாக ரூ.39 ஆயிரத்து 818 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 2014-2015-ம் நிதி ஆண்டுக்கான வருவாயாக ரூ.32 ஆயிரத்து 964 கோடி என தற்போது உள்ள மின்கட்டண வீதத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்துள்ளது.

2014-2015-ம் நிதி ஆண்டுக்கு வருவாய் பற்றாக்குறையாக ரூ.6,854 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறையை சரிசெய்யும் நோக்கில் பிரிவு வாரியாக அனைத்து மின்நுகர்வோருக்கும் மின்கட்டண வீதத்தினை உயர்த்த ஆணையம் முடிவெடுத்துள்ளது. மின்கட்டணம் உயர்த்தப்பட்டு ரூ.6,854 கோடி வருவாய் வந்தாலும், திருத்தப்பட்ட வருவாய் பற்றாக்குறை ரூ.49 கோடி ஏற்படும்.

வீடுகளுக்கு 40 காசு உயர்வு

அந்தவகையில் வீடுகளுக்கு 2 மாதத்திற்கு 50 முதல் 100 யூனிட்டுக்கு ஒரு யூனிட் ரூ.2.60 லிருந்து ரூ.3 ஆகவும், 200 யூனிட்டுக்கு ரூ.2.80 லிருந்து ரூ.3.25ம், 201 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.4 லிருந்து ரூ.4.60ம், சராசரியாக 501 யூனிட்டும் அதற்கு மேலும் பயன்படுத்தினால் ஒரு யூனிட் ரூ.5.75 லிருந்து ரூ.6.60 என்ற கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அதன்படி வீடுகளுக்கு முதல் 100 யூனிட் பயன்படுத்துவதாக இருந்தால் ஒரு யூனிட் 40 காசு வீதம் உயர உள்ளது.

உயர் அழுத்த நுகர்வோர்களுக்கான மின்கட்டணம் 2014-2015-ம் ஆண்டுக்கான தொகை விவரம் வருமாறு:- ஒரு கிலோ வாட்டுக்கான தொகை தொழிற்சாலைகளுக்கு ரூ.300 லிருந்து ரூ.350 ஆகவும், ரெயில்வே துறைக்கு ரூ.250 லிருந்து 300 ஆகவும், அரசு மற்றும் உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.300 லிருந்து 350 ஆகவும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.300 லிருந்து ரூ.350 ஆகவும், வணிக நிறுவனங்களுக்கு ரூ.300லிருந்து ரூ.350 ஆகவும், தற்காலிக வினியோகத்துக்கு ரூ.300 லிருந்து ரூ.350 ஆகவும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

குடிசைகளுக்கு மானியம்

குடிசைகளுக்கு 2 மாதங்களுக்கு அரசு மானியமாக ரூ.250 வழங்குகிறது. மின்கட்டணம் உயர்த்தப்பட்டால் அரசு ரூ.290 ஆக உயர்த்தி வழங்கும். பொதுவழிப்பாட்டுத் தலங்களுக்கு 2 மாதத்திற்கு 120 யூனிட் வரை பயன்படுத்தினாலும், அதற்கு மேல் பயன்படுத்தினாலும் கிலோ வாட்டுக்கு ரூ.100 லிருந்து ரூ.120 ஆக நிலையான கட்டணம் உயர்த்தப்படுகிறது. மின்திறன் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ. 5 லிருந்து ரூ.5.75 ஆக உயர்த்தப்படுகிறது.

2 மாதத்திற்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் குறுந்தொழில்களுக்கு கிலோ வாட்டுக்கு நிலையான கட்டணம் ரூ.30 லிருந்து ரூ.50 ஆக உயர்த்தப்படுகிறது. 500 யூனிட் வரை பயன்படுத்தினால் யூனிட்டுக்கு மின்கட்டணம் ரூ.3.50 லிருந்து ரூ.4 ஆக உயர்த்தப்படுகிறது.

ஆணையம் பரிந்துரை


501 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் மின்திறன் கட்டணம் ரூ.4 லிருந்து ரூ.4.60 ஆக உயர்த்தப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு நிலையான கட்டணம் கிலோ வாட்டுக்கு ரூ.60 லிருந்து ரூ.70 ஆக உயர்த்தப்படுகிறது. மின்திறன் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.5.50 லிருந்து ரூ.7.22 ஆக உயர்த்தப்படுகிறது. 2 மாதத்திற்கு 100 யூனிட் அல்லது அதற்கு மேல் பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு கிலோ வாட்டுக்கு ரூ.120 ஆக உள்ள நிலையான கட்டணம் ரூ.140 ஆக உயர்த்தப்படுகிறது. 100 யூனிட் வரை பயன்படுத்தினால் மின்திறன் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.4.30 லிருந்து ரூ.4.95 ஆக உயர்த்தப்படுகிறது.

100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் மின்திறன் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.7 லிருந்து ரூ.8.05 ஆக உயருகிறது. தற்காலிக செயல்பாடுகளுக்காக வழங்கப்படும் மின்சாரத்திற்கு மாதம் ஒன்றுக்கு கிலோ வாட்டுக்கு வசூலிக்கப்படும். நிலையான கட்டணம் ரூ.300 லிருந்து ரூ.345 ஆக உயர்த்தப்படுகிறது. மின்திறன் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.10.50 லிருந்து ரூ.12.10 ஆக உயர்த்தப்படுகிறது. 2 மாதத்திற்கு 500 யூனிட் வரை நுகர்வோருக்கு கிலோ வாட்டுக்கு ரூ.100 ஆக உள்ள நிலையான கட்டணம் ரூ.120 ஆக உயர்த்தப்படுகிறது. மின்திறன் கட்டணம் யூனிட்டுக்கு ரு.4.50 லிருந்து ரூ.5.20 ஆக உயர்த்தப்படுகிறது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ஆட்சேபனை


இதுபற்றிய கருத்துரைகளை தாக்கல் செய்ய விரும்பும் நபர்கள், அவரது கருத்துரைகளை, செயலாளர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், எண் 19-ஏ, ருக்மினி லட்சுமிபதி சாலை, எழும்பூர், சென்னை-8 என்ற முகவரிக்கு வரும் அக்டோபர் 23-ந்தேதி அன்றோ அல்லது அதற்கு முன்போ நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தாக்கல் செய்யலாம்.

இந்த மதிப்புரைகளை ஆய்வு செய்த பின்பு, ஆணையத்தினால் தீர்மானிக்கப்படும் மதிப்புரையாளர்களை ஆணையத்தினால் அறிவிக்கப்படும் நாட்களில் நடைபெறும் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு அழைக்கப்படுவார்கள். கருத்து கூட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

இவ்வாறு அதிகாரிகள் கூறி உள்ளனர்.

ATM பற்றிய மிக முக்கியச் செய்தி

ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு பகிரவும் இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.

அப்படியொரு சுவாரசியமான செய்தி தான் நேற்று சென்னையில் நடந்தது. xxxxxxxxxxx(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார். அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது. உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார். வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர். இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.

சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி,மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார். அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த X தனது நண்பர் திரு Y (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார். அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார். அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக
https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
ஆதங்கமாக தெரிவித்துள்ளார். மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது. பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர். அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர். மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது . இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman }
"https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள். நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது. மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது. இதை பார்கையில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது.

எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும் இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை

இஸ்ரேலிய சிறார்கள் படுகொலை: தேடப்பட்ட 2 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொலை

காஸா போருக்குத் தூண்டுகோலாக அமைந்த 3 இஸ்ரேல் சிறார்களின் படுகொலைக்குக் காரணமானவர்கள் எனக் கூறப்படும் இருவரை இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் (ஐ.டி.எஃப்.) சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து ஐ.டி.எஃப். செய்தித் தொடர்பாளர் பீட்டர் லெர்னர் கூறுகையில், ""சிறுவர்கள் கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட அந்த இருவரும் மேற்குக் கரைப் பகுதியில் பதுங்கியிருந்தனர். அவர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்ய முயன்றபோது நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில், இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்'' என்று தெரிவித்தார். சுட்டுக் கொல்லப்பட்ட மர்வான் கவாஸ்மே (29), அமர் அபு ஆஸ்ஷா (32) ஆகிய அந்த இருவரும், மேற்குக் கரையின் ஹீப்ரான் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்ததாக இஸ்ரேல் உளவுத்துறை "ஷின் பெட்' தெரிவித்தது.

சிறார்கள் படுகொலையில் சந்தேகிக்கப்படும் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை, ஹமாஸ் அமைப்பும் உறுதி செய்துள்ளது. இஸ்ரேலிய சிறார்கள் படுகொலையில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று தொடக்கத்தில் ஹமாஸ் மறுத்து வந்தது. எனினும், அந்தச் சிறார்களைக் கடத்துவதற்கு நிதியுதவி அளித்ததையும், அவர்களைப் படுகொலை செய்ததையும் அந்த அமைப்பு பிறகு ஒப்புக் கொண்டது.

அந்தப் படுகொலையின் தொடர்ச்சியாக, 50 நாள்களாக நிகழ்ந்த இஸ்ரேல் - ஹமாஸ் சண்டையில், 2,100-க்கும் மேற்பட்டேர் உயிரிழந்தனர். எகிப்து தலைநகர் கெய்ரோவில் இஸ்ரேல் - ஹமாஸ் பிரதிநிதிகளிடையே நடைபெற்ற மிக நீண்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, முக்கிய பிரச்னைகளுக்குத் தீர்வு எட்டப்படாமலேயே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
தற்போது இஸ்ரேல் சிறார்கள் படுகொலை தொடர்பாகத் தேடப்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதால், காஸா பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் வாய்ப்பு அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பாஜகவுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காத வாக்குச் சாவடிகள்

கோவை மாநகராட்சி மேயர் இடைத்தேர்தலில் 2 வாக்குச் சாவடிகளில் பாஜகவுக்கு ஒரு வாக்கு கூடக் கிடைக்கவில்லை. அதேசமயம், 10 வாக்குச் சாவடிகளில் அதிமுகவை விட பாஜக கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது. கோவை மாநகராட்சி மேயர் இடைத்தேர்தல் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகின. மொத்தம் 16 பேர் போட்டியிட்ட இத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ப.ராஜ்குமார் 4.20 லட்சம் வாக்குகளைப் பெற்று, 2.91 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் ஆர்.நந்தகுமார் 1.29 லட்சம் வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பெற்றார்.

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.பத்மநாபன், காந்திய மக்கள் இயக்க வேட்பாளர் டென்னிஸ் கோவில்பிள்ளை உள்ளிட்ட 14 வேட்பாளர்கள் குறைந்த வாக்குகளைப் பெற்று டெபாசிட் தொகையை இழந்தனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இரண்டாமிடத்துடன் டெபாசிட் திரும்பப் பெற்ற பாஜக வேட்பாளர் ஆர்.நந்தகுமார், கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட 86-ஆவது வார்டில் 2 வாக்குச் சாவடிகளில் ஒரு வாக்கு கூடப் பெறவில்லை.

இதே பகுதியில் உள்ள சில வாக்குச் சாவடிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே பாஜக வேட்பாளர் வாக்குகளைப் பெற்றுள்ளார். பாஜக முன்னிலை: மாநகராட்சியின் 56-ஆவது வார்டில் 2 வாக்குச் சாவடிகளில் அதிமுக வேட்பாளர் ப.ராஜ்குமார் பெற்றதை விடக் கூடுதல் வாக்குகளை பாஜக வேட்பாளர் பெற்றுள்ளார்.  இதேபோல மொத்தம் 8 வாக்குச் சாவடிகளில் பாஜக வேட்பாளர் ஆர்.நந்தகுமார், அதிமுக வேட்பாளர் ப.ராஜ்குமாரை விடக் கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  ஒருசில அதிமுக கவுன்சிலர்களின் வார்டுகளில் பாஜக வேட்பாளர் கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளதால், சம்பந்தப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

அழகு குறிப்புகள்:தலைமுடி செழித்து வளர

தலை முடி நன்கு வளர...தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்(தொடர்ந்து 3 மாதங்கள்)இது அனுபவத்தில் கண்டது.

முருங்கைகீரை சூப் செய்யும் முறை:

முருங்கைகீரை - 2 கப்
வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்
உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு

முதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கி விட்டிருக்கும்.

அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீ­ரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.(வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.

உக்ரேன் அரசியல்வாதியின் நிர்வாண போட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஹேக்கர் !!



ஹேக்கர்களுக்கு பல நடிகைகள் மாட்டிக் கொண்ட நிலையில் , இப்போது உக்ரேனின் அரசியல்வாதி ஒருவரும் மாட்டிக் கொண்டுள்ளார் . வருகிற பாராளுமன்ற தேர்தலில் நிற்க போகும் நபர்களில் ஒருவரான ஒல்கா லுயில்சாக் என்பவரின் நிர்வாண போட்டோவை இணையத்தில் வெளியிட்டார் ஹேக்கர் .

இந்த போட்டோ உக்ரேனில் பரபரப்பை ஏற்படுத்தினாலும் , அவர் அமைதியாக இருக்கிறார் . அவர் கூறுகையில் , " இந்த உலகம் வன் காங் , டிடியான் ஆகியோரின் படங்களை போற்றுகிறது . அவர்கள் வரைந்த நிர்வாண அழகை நாம் போற்றினோம் . எனக்கு இந்த படம் குறித்து எந்த கவலையும் இல்லை " என்றார் .

இவரது நெருங்கிய உறவினரும் இந்த ஹேக்கரின் லீக்கில் இடம் பெற்று இருந்தார் .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media