BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 16 August 2013

விஸ்வரூபத்துக்கு கிடைத்த அனுதாபம் தலைவாவுக்கு ஏன் கிடைக்கவில்லை?

வாயை திறந்து பேசுங்கள் விஜய்? உண்மையில் என்ன தான் பிரச்சினை?  விஸ்வரூபத்துக்கு கிடைத்த அனுதாபம் தலைவாவுக்கு ஏன் கிடைக்கவில்லை?

விஸ்வரூபம் படத்தில் முஸ்லீம்களை தவறாக காட்டியதாக பல முஸ்லீம் அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள், அதை தொடர்ந்து தமிழக அரசு சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி படத்தை தடை செய்தது என்றாலும்  உண்மையான பிரச்சினை அதன் டிவி ரைட்ஸ்சில் இருந்ததாக குற்றம் சாட்டினார்கள், கமல் தன் பிரச்சினைகளை வெளிப்படையாக மக்களிடம் மீடியாக்கள் மூலமாக பேசினார், தடையை நீக்க கோரி வழக்கு தொடுத்தார், முஸ்லீம்கள் அமைப்பினரின் செயல் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக இருந்ததாக முற்போக்கு சக்திகள் குரல் எழுப்பினர், அனைத்து அரசியல் கட்சியினரும் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவு என்ற பெயரில் விஸ்வரூபம் படத்தை வெளியிட அழுத்தம் கொடுத்தனர்.

கமல் தனது பிரச்சினையை வெளிப்படையாக எடுத்துரைத்து இந்த படம் வெளியாகவில்லை என்றால் என் வீட்டை விற்க வேண்டி வரும், தான் தமிழ்நாட்டை விட்டே வெளியேற வேண்டும் என்று தனது ஆற்றாமையை கோபத்தை வெளிப்படுத்தினார், கடைசியில் முதல்வரின் தனிப்பட்ட பகை இதில் எதுவும் இல்லை என்றும் ஜெயாடிவிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் முதல்வரே டிவி பேட்டி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. திருட்டு விசிடி தாராளமாக கிடைத்தும் விஸ்வரூபம் படம் சாதாரணமாக வெளியாகியிருந்தாலே 2 நாட்களில் சுருண்டிருக்க வேண்டிய படம் மக்கள் தியேட்டரில் தான் பார்ப்போம், பாவம் கமல் என்று அனுதாபம் பெற்று  வெளியாகி பெரும் வெற்றி பெற்றது

விஜய் நடித்த தலைவா படம் வெளியாகததற்கு உண்மையான காரணம் என்ன என்பதே குழப்பமாக உள்ளது.

1) தலைவா படத்திற்கு வரிவிலக்கு வாங்கி தருகிறோம் என்று விஜய் தரப்பு உறுதியளித்ததால் படத்தை பெரும் விலைக்கு வாங்கியதாகவும் படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காததால்  வருமான இழப்பு ஏற்படும் என்று தியேட்டர்காரர்கள் வெளியிட மறுக்கிறார்கள் என்று ஒரு காரணம் சொல்லப்படுகிறது. இது தான் உண்மையான காரணமென்றால் யாரேனும் பேராசையை விட்டு விட்டு வெளியாக உதவ வேண்டும்.

2) படத்தில் அரசியல் வசனங்கள் ஆளும் கட்சியை தாக்கும் வசனங்கள் இருப்பதால் தான் வெளியிட மறைமுக மறுப்பு உள்ளதாக கூறப்படுகிறது, அப்படியென்றால் அதை வெளிப்படையாக சொல்லி பேசலாமே. ஆனால் படத்தில் அப்படி எதுவும் சிறப்பான வசனங்கள் இருப்பதாக தெரியவில்லை, இருக்கும் மிச்ச சொச்ச வசனங்களையும் வெட்ட தயாரிப்பு தரப்பு தயாராக உள்ளது.

3) வெடிகுண்டு மிரட்டலால் பாதிப்பு என்றால் அரசிடம் பாதுகாப்பு கேட்கலாம், அதற்கு அரசும் போலிசும் மறுப்பு தெரிவித்துள்ளதால் கமலை போல நீதிமன்றத்தை அனுகி அரசு தியேட்டர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிட கோரலாம்.

4) உண்ணாவிரதம் இருக்க போகிறோம் என்றாரே? யாரை எதிர்த்து உண்ணாவிரதம்? அரசு படத்தை தடை செய்யவில்லை, படத்துக்கு யாரும் தடையும் கோரவில்லை பிறகு யாரை எதிர்த்து உண்ணாவிரதம் நடத்த போகிறீர்கள்? வரிவிலக்கு கோர உண்ணாவிரதமா?

டிவி ரைட்ஸ் பிரச்சினையா? அரசியல் பிரச்சினையா? கருத்து சுதந்திர பிரச்சினையா? எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசுங்கள் விஜய். அதை விடுத்து கையை கட்டிக்கொண்டு மறைமுகமாக மன்னிப்பு கோருவது போல அம்மாவுக்கு மெசேஜ் தருவது என்றும் உண்ணாவிரதம் அனுமதி கேட்பதுமாக காமெடி செய்யாதீர்கள் விஜய்.

உங்களுக்கும் அரசியல் ஆசை இருப்பதால் கமலுக்கு ஆதரவாக வந்தது போல உங்களுக்கு எந்த அரசியல்வாதியும் வரப்போவது இல்லை, உங்கள் பிரச்சினையை நீங்கள் வெளிப்படையாக பேசுங்கள் அல்லது ஏதாவது உள்ளுக்குள் சமரம் செய்து கொள்ளுங்கள், அதை விடுத்து கருணாநிதிக்கு போட்டியாக உண்ணாவிரத காமெடி செய்யாதீர்கள்.ஒரு பேச்சுக்கு கூட தலைவா படம் பற்றி வாயை திறக்காமல் உள்ளது திரை உலகம் என்பதையும் விஜய் கவனிக்க வேண்டும்

உங்களுடைய பிரச்சினை நியாயமாக இருக்கும் பட்சத்தில் விஸ்வரூபம் பிரச்சினையில் கமலுக்கு ஆதரவாக தமிழக மக்களே இருந்தது போல உங்களுக்கும் தமிழக மக்கள் ஆதரவாக இருப்பார்கள். அதற்கு நீங்கள் முதலில் வாயை திறந்து உண்மையை வெளிப்படையாக‌ பேச வேண்டும். பேசுவீர்களா விஜய்?

கோர்டுக்கு போகும் தலைவா!

தலைவா படம் வெளியிடுவதில் தொடர்ந்து இருந்து வரும் தடைகளை நீக்க கோரி தமிழக அரசிடம் பேச தலைவா பட தரப்பு பல முறை முயற்சித்தும் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆகவே ஒட்டமொத்த படக்குழுவினரும் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதாக முடிவு செய்த சென்னை ஆணையரிடம் மனு கொடுத்தனர்.

நாங்கள் உங்கள் பேச்சை மட்டுமே கேட்போம், கடைசி வாய்ப்பளியுங்கள் என்பதை சுட்டிக்காட்டும் வரியாக, தமிழக அரசு எங்கே இடம் ஒதுக்குகிறதோ அங்கேயே உண்ணாவிரதம் இருக்க தயார் என தலைவா படக்குழு அந்த மனுவில் எழுதியிருந்தது. ஆகினும் ஆணையர் உண்ணாவிரதத்திற்கு அனுமதி வழங்க மறுத்து விட்டார்.

வெடிகுண்டு மிரட்டிலினால் தியேட்டர் அதிபர்களே படத்தை வெளியிட தயங்குகின்றனர், முதலில் அவர்களிடம் பேசுங்கள் என்று தயாரிப்பாளர் தரப்பிடம் சொல்லி அனுப்பி விட்டதாக தெரிகிறது, மீறி பேசினால் தமிழகத்தில் மொத்தம் எத்தனை தியேட்டர், எத்தனை போலிஸ் என புள்ளிவிபரம் சொல்ல ஆரம்பித்து விடுவார் என தயாரிப்பு தரப்பு திரும்பிவிட்டது.

வேந்தர் மூவிஸ் ஒருபக்கம் பா.ஜ.கவுடன் பேச்சு வார்த்தை நடத்துவது குருடனிடம் வழி கேட்பது போல் தான் என்றாலும் எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்பது தான் இப்போதைய தலைவா படக்குழுவினரின் நிலை. நடிகர் விஜயின் தந்தையோ இது முழுக்க முழுக்க தமிழுக அரசின் சதிச்செயல் தான், வேண்டுமென்றே பழிவாங்குகிறார்கள் என சொல்லி வருகிறாராம்.

காலில் விழாத குறையாக கெஞ்சி பார்த்தும் வேலைக்காக விரக்தியில் நடிகர் விஜய் சட்ட நியுணர்களுடன் கலந்தாலோசித்து வருகிறார், இன்னும் தலைவா படம் வெளியாவது தடை பட்டால் தமிழக அரசின் மீது வழக்கு தொடரும் முடிவில் இருப்பதாக தெரிகிறது, மேலும் விஜய் ரசிகர்களுக்கு ஆங்காங்கே பஸ் மறியல், போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை கவருமாறு செய்தி சென்றுருக்கிறது.

# இன்று இரவு கலைஞர் தொலைகாட்சியில் விஜய் நடித்த வில்லு படம், (புள்ளபிடிக்கிற கோஷ்டி கிளம்பிருச்சு போலயே)


நீர்மூழ்கி கப்பல் வெடித்தது சதிவேலையா - கருணாநிதி

இரு தினங்களுக்கு முன் இந்திய கப்பற்படையை சேர்ந்து நீர்மூழ்கி கப்பல் ஒன்று வெடித்து விபத்துகுள்ளானது, அதில் மேல் தட்டில் இருந்த நான்கு பேர் மட்டும் நீரில் குதித்தி உயிர் தப்பினர், உள்ளே சிக்கியிருந்த 18 பேரின் நிலை என்னவென்று அறியமுடியா சூழலில் தீ அணையாமல் இருந்தது, 18 தீயணைப்பு வாகனங்கள் சேர்ந்து தீயை அணைத்தனர்.

நீர்மூழ்கி கப்பல் சேறு அதிகமாக இருந்த பகுதியில் மூழ்கியதால் மீட்பு பணிகள் மெதுவாகவே நடந்தது, இன்று மூன்று உடல்கள் மீட்கப்பட்டது, தீவிபத்தில் சிக்கி உடல் முழுவதும் கருகிய நிலையில் இருந்ததால் அவர்கள் யார் என்று அடையாளம் காணமுடியவில்லை, அவர்களது உடல்களை டி.என்.ஏ சோதனை செய்து அவர்கள் உறவினர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்று முன்னால் தமிழக முதல்வர் கருணாநிதி இந்த விபத்து இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தீவிரவாதிகளால் செய்யபட்ட சதியாக இருக்குமோ என சந்தேகம் வருகிறது, அரசு இதை தீர விசாரிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.


உயரும் செல்போன் கட்டணம்.

சென்ற திமுக ஆட்சியின் போது ஏக முறையில்லாமல் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற வகையில் அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து எதிர்கட்சிகள் செய்த ஆர்பாட்டத்தின் காரணமாக மத்திய தணிக்கை துறை ஆராய்ந்து ஏலம் விடப்படாததால் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி நட்டம் என அறிக்கை வெளியிட்டது.

தொடர்ந்து மத்திய அரசு மறுத்து வந்தாலும் இது குறித்து நடந்த சில பண பரிவர்த்தனைகள் ஆதாரமாக வைத்து திமுக எம்பிக்கள் ஆ.ராசா மற்றும் கனிமொழியை சிறையில் அடைக்க உத்தரவிட்டது நீதிமன்றம், மேலும் சில செல்போன் நிறுவங்களின் உரிமத்தை ரத்து செய்தது. ஏற்கனவே இருப்பவர்களிடன் கூடுதல் தொகையும் வசூலிக்கபட்டது.

சில நாட்களுக்கு முன்னர் பூஸ்டர் கார்டு எனப்படும் ரேட் கட்டர் கட்டணம் உயர்த்தபட்டாலும் மீண்டும் செல்போன் கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இது குறித்து நமது சிறப்பு செய்தியாளர் சில தொழில்நுட்ப வல்லுனர்களிடம் தொகுத்த கருத்துக்கள்.

இன்று ஸ்மார்ட்போன் கலாச்சாரம் உலகெங்கும் பரவிவிட்டது, இன்று பெரும்பான்மையான அழைப்புகள் செல்போனில் இருந்தாலும் அவை பெரும்பாலும் இண்டெர்நெட் அழைப்புகளே. viper, skype போன்ற ஸ்மார்ட்போன் அப்ளிகேசன்கள் இணையம் மூலமாக அதே அப்ளிகேசனை பயன்படுத்தும் நண்பர்களுடன் பேச வசதியாக இருக்கிறது.

3ஜி வசதியை தற்பொழுது பயன்படுத்தி வரும் நாம் மிக விரைவில் 4ஜி வசதியை பயன்படுத்த இருக்கிறோம். 4ஜி வசதியுடய செல்போன் மற்றும் இணைப்புடன் குறைந்தது 5,000 ரூபாயில் ஆரம்பித்து 50,000 வரை செல்போன்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன, இதுகுறித்து சாம்சங் மற்றும் ரிலையன்ஸ் பேச்சு வார்த்தை முடியும் கட்டத்தில் இருப்பதாகவும் இவ்வருட இறுதிக்குள் 4ஜி செல்போன் இந்தியாவில் வெகுவாக புழங்க ஆரம்பித்துவிடும் என்றும் கூறினர்.


நடிகர் விஜய் உண்ணாவிரதம் இருக்க முடிவு.

நடிகர் விஜய் நடித்து தமிழகத்தை தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் வெளியாகியுள்ள தலைவா படத்தை தமிழக அரசு வெளியிட முடியாமல் மறைமுக தடைசெய்து  வைத்திருக்கிறது, விஜய் தரப்பில் பேச்சு வார்த்தைக்கு அனுமதி கோரியும் முதல்வர் தரப்பிலிருந்து அனுமதி வழங்கப்படவில்லை

யாரையேனும் புண்படுத்தும் வகையில் தலைவா படத்தில் காட்சிகள் இருந்தால் அந்த காட்சியை நீக்கவும் தயாராக இருக்கிறோம் என தலைவா படக்குழு அறிவித்தது, படத்தின் தயாரிப்பாளர் இந்த படம் வெலியிடப்படவில்லை என்றால் கோடி கணக்கில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் பெரும் கடன் சுமைக்கு ஆளாகுவேன் ஆகவே ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தும் அரசு மறு பரிசீலனைக்கு உத்தரவிடவில்லை.

இப்படத்தின் திருட்டு டி.வி.டி மட்டும் தமிழகமெங்கும் ஆயிரகணக்கில் பறிமுதல் செய்யப்பட்டது, விசாரித்ததில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட டி.வி.டிக்கள் விற்பனை செய்யபட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று தமிழிக மக்களின் கவனத்தை கவரும் வகையில் நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினர் தலைவா படம் வெளியிடக்கோரி உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி மனு அளித்துள்ளது.

# அடிங்க, எதுக்குன்னு சொல்லிட்டு அடிங்கடா



தங்கத்தில் முதலீடு - அரசு வைத்த ஆப்பு!..

மிக எளிமையாக புரிந்து கொள்ளக்கூடிய வித்தியாசம் தான், சேமிப்பிற்கும், முதலீட்டிற்கும் உள்ள வித்தியாசம். சேமிப்பு என்பது நமது பணத்தை சில வருடங்களில் இரட்டிப்பாக்கி தராது. திருட்டு, எதிர்பாராத விபத்து தவிர நமது பணம் நம்மிடமே இருக்கும். ஆனால் முதலீடு என்பது சில நேரங்களில் காணாமல் போகலாம் சில நேரங்களில் பல மடங்கு அள்ளித்தரலாம்.

உலகெங்கும் மக்கள் முதலீட்டிற்கு பயன்படுத்துவது அவர்களது வயசை பொறுத்து மாறுகிறது, தங்கள் முதலீட்டிற்கு பாதுகாப்பு வேண்டும் என நினைப்பவர்கள் அதை அரசாங்க பாண்டுகளில் முதலீடு செய்கிறார்கள், சிலர் நல்ல நிறுவன பங்குகளில், சில வங்கி தரும் வட்டி விகிதமே போதும் என்று நிரந்தர வைப்பு நிதியில், சிலர் ரியல் எஸ்டேட்டில் ஆனால் அனைவரும் இதிலா, மாட்டோம் என்று சொல்லாத ஒன்று தங்கம்.

அதற்கான காரணமும் இருக்கிறது, நம் கண் முன்னே அதன் வளர்ச்சியை பார்த்து கொண்டு தானே இருக்கிறோம். நம் பாட்டி காலத்தில் சவரன் 300 ரூபாய்க்கு விற்றது, நம் அம்மா காலத்தில் சவரன் 3000 ரூபாய்க்கு விற்றது, நம் காலத்தில் 30000 க்கு அருகில் பார்த்து விட்டோம், இனி அடுத்த தலைமுறை காலத்தில் சவரன் மூன்று லட்சமாகும் என்பதே லாஜிக். இடையிடயே சின்ன சின்ன கரைக்‌ஷன் வந்தாலும் தங்கம் என்றும் ஏமாற்றாத முதலீடு என்று பெரும்பான்மை மக்கள் நம்புகிறார்கள்.

தங்கம் விலையின் அசுர வளர்ச்சிக்கு காரணமும் அதுவே, இந்தியாவை தவிர பிற நாடுகளில் தங்கத்தை ஆபரணமாக அணிவது குறைவு, உலகில் தங்கம் பயன்படுத்துவதில் முதலிடத்தில் இருக்கும் சீனா கூட பொம்மைகள், நினைவு பொருட்கள் செய்யவே தங்கத்தை அதிகம் பயன்படுத்துகிறது. ஆனால் எல்லா நாட்டிலும் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் வாங்கி வைப்பது தங்க காசுகள். அதிகமான செய்கூலி, சேதாரம் இல்லை. திரும்பி விற்கும் பொழுது அதிக இழப்பும் இல்லை என்பதால் தங்கம் சிறந்த முதலீடாக இருக்கிறது.

தொடர்ச்சியான பண வீக்கம் காரணமாக தங்கம் டாலர் மதிப்பில் இறங்கி வந்தாலும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் தங்கத்தின் விலை குறையாமல் இருக்கிறது, மேலும் கடந்த ஆறு மாதங்களில் இருமுறை தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 4% உயர்ந்துள்ளது. தொடந்து நமது பணம் அந்நியநாட்டில் முதலீடு செய்வது போல் தான் தங்கம் வாங்குவது. அதற்காக தான் அதன் மீது வரி உயர்த்தப்பட்டது.

என்ன தான் வரி விதித்தாலும் மக்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் மோகம் குறையப்போவதில்லை, அதனால் நிதி அமைச்சரே தங்க வாங்க வேண்டாம் என ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார், யாரும் கேட்பதாக தெரியவில்லை. தற்பொழுது அரசின் மறைமுக உத்தரவின் பெயரில் நகைக்கடைகளில் தங்ககாசுகள் விற்கப்பட மாட்டாது என அறிவிக்கபட்டுள்ளது.

# பண வீக்கத்துக்கு மருந்து கிடைக்கல போல அரசுக்கு


நடிகர் மணிவண்ணன் மனைவி மரணம்.


சில நாட்களுக்கு முன் மாரடைப்பால் காலமான நடிகர் மற்றும் இயக்குனரின் மனைவி செங்கமலம் இன்று மாரடைப்பால் காலமானார், அவரது உடல் சென்னையில் அஞ்சலிக்காக வைக்கபட்டுள்ளது.

அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்


பாதாளத்தில் பாயும் இந்திய பொருளாதாரம்...

இந்திய பொருளாதாரம் மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது மிக குறைந்த காலத்தில் அதிக வீழ்ச்சி கண்டுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மாதம் இரு முறை புதிய உச்சத்தை டாலர் அடைந்து மேலும் மேலும் இந்திய பொருளாதாரத்தை நிமிர விடாமல் செய்து கொண்டிருக்கிறது மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை.


சென்ற ஆண்டே இந்திய பணத்தின் மதிப்பு குறைவதை தடுக்க தங்கம் இறக்குமதியில் சில கட்டுபாடுகளை விதித்தது இந்திய அரசு, ஆகினும் இறக்குமதியில் எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை. இறக்குமதி வரியை அரசு எவ்வலவு உயர்த்தினாலும் வாழ்வாதார அத்யாவிசய பொருள்களை வாங்குவது போன்று மக்கள் தங்கத்தை வாங்கி குவித்து கொண்டு தான் இருந்தார்கள்.

சென்ற வருடம் மே மாதம் 53.70 பைசாவாக இருந்த டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த வருடம் 62 ரூபாயை தாண்டி வரலாறு காணாத வீழ்ச்சியை மக்களுக்கு காட்டியுள்ளது. இந்திய பண மதிப்பை உயர்த்த அரசு எந்த வித நடவடிக்கையும் முன்னெடுக்காமல் இருப்பது மேலும் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடையவே செய்யும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து வருகிறார்கள்.


நாங்களும் வழக்கு போடுவோம், அதிகாரிகளை காப்பாற்ற ஜெயலலிதா வரமாட்டார் - அன்புமணி அதிரடி மிரட்டல்



வந்தவாசியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், எங்கள் மீது வழக்குப் போடும் அதிகாரிகளை நாங்கள் சும்மா விட மாட்டோம். நாங்கள் அவர்கள் மீது வழக்குப் போடுவோம். அப்போது அவர்களைக் காப்பாற்ற ஜெயலலிதா வர மாட்டார் என்று பேசியுள்ளார்.

தருமபுரி இளவரசன் தற்கொலைக்கு நீதி விசாரணை நடத்துகின்றனர். ஆனால் மரக்காணத்தில் வன்னியர் இருவர் இறந்ததை யாரும் கண்டு கொள்ளவில்லை. நாங்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள் அல்ல. எங்கள் மீது வழக்கு போட்ட அதிகாரிகள் மீது நாங்கள் வழக்கு போடுவோம். அப்போது அதிகாரிகளை காப்பாற்ற ஜெயலலிதா வரப்போவதில்லை என்று அதிரடியாக பேசினார்.

மேலும் பேசிய அவர் பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்ற இந்த இரு கோரிக்கைகளை மக்களிடம் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் பாமக தொண்டர்களை கேட்டுக்கொண்டார்.

# சின்னடாக்டர், பார்த்து சூதானமா பேசுங்க, இப்போதான் புழலை பார்த்துவிட்டு வந்தீர்கள், இதுக்கும் ஏதும் வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடப்போகிறார்கள்.

மேலும் பல செய்திகளை படிக்க http://www.satrumun.net/லிங்கை அழுத்துங்கள்

பால் விலையும் உயர்வு.

சமீபத்தில் பெல்லாரி வெங்காய விலை உயர்ந்து உணவங்களில் ஆம்லெட் கேட்டால் வெங்காயத்திற்கு பதில் முட்டைகோஸ் போட்டு ஆம்லெட் போட்டு கொடுத்தார்கள், தற்பொழுது டீக்கடையில் டீ கேட்டால் டீயில் பாலுக்கு பதில் எதை ஊற்றி தருவார்களோ என்ற அச்சத்தை தருமளவுக்கு பால் விலையும் உயர்ந்து விட்டது.

பண வீக்கம் வெடிக்கும் அளவுக்கு வீக்கி கொண்டு போகிறது, அரசு அதை கட்டுப்படுத்த தவறி விட்டது என பல பொருளாதார வல்லுனர்கள் தொடர்ந்து கூறி வந்தாலும் மத்திய அரசிற்கு எதாவது ஒரு மசோதாவை நிறைவேற்றியாக வேண்டும் என்ற குறிக்கோளில் மற்றவை எதுவும் காதில் விழுவதில்லை, என்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தனியாரே நிர்ணயிக்கலாம் என தனியார் வசம் நாட்டை கொடுத்தார்களோ அன்றே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.

ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குறுதியாக பத்தாயிரம் மதிப்புள்ள இலவசங்களை நாம் பெறுகிறோம், மறுப்பதற்கில்லை மகிழ்ச்சி தான் ஆனால்  எத்தனை லட்சங்கள் உயர்த்தபட்ட பேருந்து கட்டணம், மின்சாரகட்டணம் வாயிலாக நாம் அரசுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை அறிவீர்களா? இதோ நாட்டு மக்களுக்கு அடுத்த ஆப்பு.

மக்கள் அன்றாடும் பயன்படுத்தும் உணவு பொருட்களில் மிக முக்கியமான பாலின் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் இன்றிலிருந்து உயர்த்தப்பட இருக்கிறது, அதுவும் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கும் தனியார் நிறுவனங்களான திருமலா, டோட்லா, ஹெரிடேஜ், ஜெர்சி ஆகியவற்றின் விலை, இதை தவிர ஆங்காங்கே இருக்கும் சிறு பால்பண்ணை உரிமையாளர்களுன் இன்றுமுதல் பால்விலையை உயர்த்தி விடுவார்கள்.

தற்பொழுது கொழுப்பு நீக்கப்பட்ட பால் 30 ரூபாய்க்கும், நிலைப்படுத்தப்பட்ட பால் 34 ரூபாய்க்கும், கொழுப்பு நீக்கப்படாத பால் 38 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. விலை உயர்த்தப்படும் என்ற அறிக்கை வந்தவுடன் பொதுமக்களை விட பால் விற்கும் சிறு வியாபார முகவர்களிடம் இருந்து முதல் எதிர்ப்பு கிளம்பிவிட்டது.

மாடு வளர்க்கும் விவசாயிகளிடம் பாலில் இருக்கும் கொழுப்பு அளவை வைத்து கொள்முதல் செய்யும் பண்ணைகள், அதை பதப்படுத்தி முகவர்கள் மூலமாக சில்லறை செய்து வருகிறது, பால் விலை ஏறும் அதே வேளையில் விவசாயிகளுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தப்பட்ட தகவல் இல்லை, சில்லறை வியாபார முகவர்களுக்கு கமிஷன் தொகை உயர்த்தபட்டதாக தகவல் இல்லை. அடுத்த பெட்ரோல் நிறுவனமா பால் பண்ணைகள் என்ற கேள்வி எழுகிறது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media