BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 31 October 2013

திருமதி அம்பானியின் 50வது பிறந்தநாள்..! ஆடம்பர கொண்டாட்டத்தில் இணையும் சச்சின்-அஞ்சலி தம்பதி..!!


இந்தியாவின் பெரும்பணக்காரார்களுள் மிக முக்கியமானவரான முகேஷ் அம்பானியின் மனைவி, நீதா அம்பானியின் 50வது பிறந்தநாளை, நவம்பர் 1ல் தடபுடலாக கொண்டாட முடிவு செய்த அம்பானி குடும்பம், ஜோத்பூர் அருகேயுள்ள பல்சமண்ட் சொகுசுமாளிகையில் ஏற்பாடுகளை செய்துள்ளது.
இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள, அம்பானி குடும்பத்துடன் இந்திய கிரிக்கெட் வீரரும், மும்பை இண்டியன்ஸ் அணியைச்சேர்ந்தவருமான சச்சின் டெண்டுல்கர் தனது மனைவியுடன் ஜோத்பூர் வந்தார்..!

# வேர் இஸ் த பார்ட்டி.. நம்ம அம்பானி வூட்ல பார்ட்டி..!
நம்ம

ICUவில் விக்னேஸ்வரன்..!

இலங்கையின் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக பதவி வகித்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த க.வி.விக்னேஸ்வரன் உடல் நலக் குறைவால் யாழ்பாணத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..!
இருதய நோய்க்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..!

# இப்பத்தான தலைவரே பதவிக்கு வந்தீங்க.. அதுக்குள்ள நெஞ்சுவலியா..?!!

அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் சஸ்பெண்ட்..!


விரைவில் ஓய்வு பெறவிருக்கும் அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவஹர், அளவுக்கு அதிகமாக மாணவர்களை சேர்த்த வழக்கில் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில காலமாக இவர் அண்ணா பல்கலை.,யில் பேராசிரியராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..!
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media