BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 21 September 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

செக்ஸ் உறவு கொள்ளும் நேரத்தில் நம்ம ஊர் பெண்கள் என்ன நினைக்கிறார்கள்.
http://www.satrumun.net/2014/07/blog-post_36.html

ஃபேஸ்புக்கில் போக்(POKE) செய்வது ஏன் தெரியுமா?
http://www.satrumun.net/2014/09/poke-poke-facebook.html

மீண்டும் நடிகைகளின் நிர்வாண படங்கள் ஹேக்கரால் வெளியிடப்பட்டது !!
http://www.satrumun.net/2014/09/second-hacking-scandal.html

இது தான் இந்தியாவின் நெம்பர் 1 இயற்கை வயகரா
http://www.satrumun.net/2014/09/1_21.html

‘ஐ’ படத்தோட கதை என்னோட நாட் : சர்ச்சையைக் கிளப்பும் ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ இயக்குநர்!, ஆரம்பிச்சாச்சா?
http://goo.gl/8bZOQy

சரித்திர படத்தில் இரு வேடங்களில் நடிக்க இருக்கும் விஜய், சும்மாவே கழுவி ஊத்துவாங்க, இது வேறயா?
http://www.satrumun.net/2014/09/vijays-new-movie-from-november.html

ஆசியா - பசிபிக் இடங்களில் உள்ள டாப் 25 சக்தி வாய்ந்த பெண்களில் 8 இந்தியர்கள் !! என்னது அம்மா இல்லையா?
http://www.satrumun.net/2014/09/8-indian-women-in-top-25-powerfuk-women.html

ஃபார்மின்றி தவிக்கும் கோஹ்லியை காப்பாற்ற வந்துவிட்டார் சச்சின் !!
http://www.satrumun.net/2014/09/sachin-in-for-kohli-form-rescue.html

வீட்டு பிரியானி சாப்பிட அனுமதிக்காததால் ஹோட்டலை விட்டு வெளியேறிய தோனி மற்றும் சி.எஸ்.கே அணியினர் !!
http://www.satrumun.net/2014/09/denied-home-made-biriyani-dhoni-and-co-shifted-hotel-rooms.html

நமக்கு பேஸ்புக்கில் இருக்கும் 7 வகையான நண்பர்கள்
http://www.satrumun.net/2014/09/7-types-of-friends-in-fb.html

யூடியுபில் புதிய சாதனை படைத்த ஐ டீசர்
http://www.satrumun.net/2014/09/ai-movie-makes-record-in-youtube.html

ஆவின் பாலில் கலப்படம், தினமும் 1.5 லட்சம் லிட்டர் பால் திருட்டு , அதிமுக பிரமுகர் கைது - அதிர்ச்சி தரும் தகவல்கள்
http://www.satrumun.net/2014/09/big-fraud-got-caught-in-aavin.html

சிரியாவில் தாக்குதல்: தயார் நிலையில் அமெரிக்கா
http://www.satrumun.net/2014/09/blog-post_297.html

காஷ்மீரை கைப்பற்றி பாக்கிஸ்தானோடு சேர்க்க போகிறாராம் பெனாசிர் புட்டோ மகன்
http://www.satrumun.net/2014/09/blog-post_110.html

சுப்பிரமணியன் சுவாமி மீது நடவடிக்கை கோரி மீனவர் புகார் !!
http://www.satrumun.net/2014/09/blog-post_922.html

உணவே மருந்து
http://www.satrumun.net/2014/09/blog-post_146.html

மங்குஸ்தான் பழத்தின் மருத்துவ குணம்
http://www.satrumun.net/2014/09/blog-post_977.html

ஓரு கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது
http://www.satrumun.net/2014/09/blog-post_31.html

சென்னை மெட்ரோ ரயிலின் சிறப்பு போட்டோக்கள்
http://www.satrumun.net/2014/09/photos-of-chennai-metro.html

டிவிட்டரில் ஹிட் ஆன மோடியின் பிறந்தநாள் ! வாழ்த்தியவர்களின் மனதை கவர்ந்தார் மோடி !!
http://www.satrumun.net/2014/09/modi-a-hit-in-twitter-on-his-birthday.html

இனி இரயிலில் போகும் போது உங்களுக்கு பிடித்த உணவை எஸ்.எம்.எஸ் மூலம் ஆர்டர் செய்யலாம் !!
http://www.satrumun.net/2014/09/now-you-can-order-food-through-sms-in-train.html

ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு !!
http://www.satrumun.net/2014/09/aap-mayank-gandhi-in-abetting-sexual-harassement-case.html

மங்குஸ்தான் பழத்தின் மருத்துவ குணம்


மங்குஸ்தான் பழம் இது மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. இந்தியாவில் தென்னிந்தியாவில் மலைப்பகுதியில் தோட்டப்பயிராக இது விளைகிறது. தென் அமெரிக்க நாடுகள், பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளிலும் இது விளைகிறது.

மங்குஸ்தான் பழம் மலைப் பகுதியில் விளையக்கூடியவை, இந்தப்பழத்தின் தோல் தடிப்பாக இருக்கும். பழம் நீலம் கலந்த சிவப்பு கலரில் இருக்கும். இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் நுங்கு போன்று நான்கு அல்லது ஐந்து, ஆறு சுளைகள் சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்திலும் இருக்கும். 
 
 மங்குஸ்தான் பழம் பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது.  இருமலை தடுக்கும் சூதக வலியை குணமாக்கும் தலைவலியை போக்கும் நாவறட்சியை தணிக்கும்.
 
மங்குஸ்தான் பழத்தில்
நீர் (ஈரப்பதம்) - 83.9 கிராம்
கொழுப்பு - 0.1 கிராம்
புரதம் - 0.4 கிராம்
மாவுப் பொருள் - 14.8 கிராம்
பாஸ்பரஸ் - 15 மி.கி.
இரும்புச் சத்து - 0.2 மி.கி
 
 உடலுக்குத்தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட இப்பழத்தை உண்டு பயனடைவோம். இது கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு பயனடையவும். மே, ஏப்ரல், ஜீன், ஜீலை மாதங்களில் கிடைக்கும். இது குற்றால சீசன் மாதங்களில் அங்கு அதிகமா விற்பனையாகும்.
 
இயற்கை நமக்கு அளித்த மகத்துவங்கள் ஏராளம்.  ஒவ்வொரு பழத்திலும் நோய்களுக்கான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளன

நம்பர் 1 வயகரா

வயகரா இந்த வார்த்தை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும், உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த வார்த்தை. திடீரென்று உடனடி நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி, காமத்தை அனுபவிக்க உதவும் ஒரு மருந்தின் பெயர். இவ்வயகரா மாத்திரைக்கு எவ்வளவு அதிக வேகமும், அதிக சக்தியும் உள்ளதோ அவ்வளவு வேகமாக மனிதனின் ஆரோக்கி யத்தை அழிக்கும் சக்தியும் உண்டு என்பதும் உண்மை.

வருங்காலத்தில் மருத்துவ உலகம் ஆராய்ந்து, அனுபவித்த பின் வயகராவிற்குத் தடை விதிக்காமல் இருக்க முடியாது என்பதும் உண்மை. முருங்கையும், மூலிகையும் வயகராவை விட இரண்டல்ல பத்தல்ல. ஆயிரம் மடங்கு சிறந்தவை, உயர்ந்தவை, உகந்தவை. ஆயிரம் முறை போகம் (உடலுறவு) செய்தாலும், உடற்கட்டு சிறிதும் குறையாமல் இருந்ததால் பழனிசித்தருக்கு போகர் என்று பெயர் வந்தது. அவர் சீனா சென்று பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அந்நாட்டிலும் அவருக்குப் போகர் என்றே பெயர் இருந்ததாகக் கூறப்படுகிறது.இது என் நண்பன் மிதுன் கூற நான் தெரிந்த  உண்மை.

மூலிகைகள் உண்டு அதிக போகத்தில் (உடலுறவில்) ஈடுபட்டதால் போகர் என்றே பெயர் பெற்றார். அவர் சொன்ன மூலிகைகளில் முருங்கை எப்படி வயகரா போல் வேலை செய்கிறது என்பதைப் பார்ப்போம். முருங்கையின் அனைத்து உறுப்புகள் மற்ற மருந்துப் பொருளோடு சேர்ந்தால் வயகராவை விட பன்மடங்கு பயனளிக்கிறது. 64 கலைகளில் பாலுறவு என்னும் காமச்சூத்திரக் கலையும் ஒன்று. மிக உயர்ந்த உன்னதக் கலையை மிருகங்கள் ஒன்றோடொன்று இணைந்து தன் உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதுபோல், அனுபவிப்பதில் பயனில்லை. மனிதனும் வயகரா மருந்துண்டு 10 நிமிடம் மிருகவெறியுடன் புணர்ச்சியில் ஈடுபட்டால் மிருகத்திற்கும், மனிதனுக்கும் வேறுபாடில்லை. சிலை, சிற்பம், சித்திரங்களில் உள்ளது போன்று நூற்றுக்கும் மேற்பட்ட விதவிதமான வகைகளில் மாற்றி மாற்றி உடலுறவு சுகங்களை அனுபவிக்கும் போதுதான் மனிதனின் ஐம்பொறிகளின் உணர்வுக்கும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பவைகளால் ஈர்க்கப்பட்டு, உடலுக்கும், மனத்திற்கும் பலவிதமான சுவைகளைச் சுவைத்து, உள்மனம் என்ற உயிர் ஜீவன் ஏகாந்த நிலையையும், இன்பத்தையும் அடைய முடியும்.
 
ஆண்தன்மை அதிகரிக்க
முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, இவ்விரண்டும் சம அளவில் சேர்த்து, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்துண்ண ஆண்தன்மை அதிகரிக்கும்.. விறைப்பு நீடிக்கும், வேகமும் பெருகும், வானளவு இன்பத்தைப் பெண்ணுக்கு வாரி வழங்கிட ஆண்தன்மை வந்து துள்ளும்,

உணவே மருந்து

நம் உடலைப் பேணிப் பாதுகாக்க முதலில் நாம் செய்ய வேண்டியது நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வதேயாகும். அதுதான் நம் உடலைப் பாதுகாக்கும் கவசமாக, அரணாக உள்ளது. அடுத்தபடி தான் உணவும், மருந்தும். உணவு விஷயத்தில் நாம் கவனமாக இருந்தாலே பலவித நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். ஆகவேதான் உணவே மருந்து என்று சொல்லி இருக்கிறார்கள். நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களைப் போல, நம்மை நோய் நொடியிலிருந்து பாதுகாப்பது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்தான். இந்த வெள்ளை அணுக்கள் தாம், உடலில் நோய் தாக்கும்போது, அதற்குக் காரணமான கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல் மிக்கது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி எந்த ஒரு குறிப்பிட்ட உறுப்பிலும் தனியாகத் தோன்றுவதில் லை. நம் மூளை, ரத்தம், கல்லீரல், மண்ணீரல், எலும்பு, நிணநீர், ரத்தக் குழாய்கள், நாளமில்லா சுரப்பிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செயல்படும் போதுதான் நோய் எதிர்ப்பு நம் உடலில் வளருகிறது. இதில் ஏதாவது குறைபாடு ஏற்படும்போதுதான் நோய் உண்டாகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது உடலில் சாதாரண காய்ச்சல் முதல், தொற்றுநோய், புற்றுநோய், சளித்தொந்தரவு, ஆஸ்து மா என்றெல்லாம் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்போது, நோயிலிருந்து நமக்கு நிவாரணம் கிடைக்கிறது. அதற்கு ஆதாரமானது நல்ல, சமச்சீரான, எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவாகும்.

மூலிகைகள் பல, அத்தனையையும் நாம் பயன்படுத்த முடியாது. இயற்கை நமக்கு அளித்துள்ள வரப்பிரசாதமே இந்த மூலிகைகள்தான். சித்தர்கள் இதைக் கண்டறிந்து, நாம் நோய் நீங்கி நெடுங்காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ பலவித மூலிகைகளையும், அதன் பலன்களையும், அதனைப் பயன்படுத்தும் விதத்தையும் நமக்குக் கூறியுள்ளனர். இந்த மூலிகைகளில் சிலவற்றையாவது நாம் அன்றாடம் அருந்துவதால் நோய் நீங்கி நாம் நலமுடன் வாழலாம். இதனை ஆதாரமாகக் கொண்டே நம் ஆலயங்களில் பல தலவிருக்ஷங்கள் நமது ஆலய வழிபாட்டில் முக்கிய இடம் பெறுகிறது. இந்த மூலிகைப் பிரசாதங்களை அருந்தும் போது, மூலிகைகளின் மருத்துவ குணத்தாலும், இறையருளாலும் நமது நோய் நீங்குகிறது. இதனைத் தெய்வீக மூலிகைகள் என்கிறோம்.

தெய்வீக மூலிகைகளாக மாரியம்மன் கோயில்களில் பயன்படுத்தப்படும் வேப்பிலை, சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி, விநாயகருக்கு உரிய அறுகம்புல், பிரம்மாவுக்கு உரிய அத்தி இலை, கங்கைக்குரிய மாவிலை அடங்கும். மற்றும் அரசனிலை, ஆலயிலை கரிசலாங்கண்ணி, தூதுவளை, கண்டங்கத்திரி, நெல்லி, தும்பைப்பூ, குப்பைமேனி, கீழாநெல்லி, ஜாதிக்காய், தான்றிக்காய், அதிமதுரம் ஆகியவை. இவற்றை சிறிது, சிறிதாக பொடித்து வெயிலில் காயவைத்து,உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். தினமும் இரண்டு தேக்கரண்டி தண் ணீரில் கலந்து அருந்த நோய் குணமாகும்.

இந்த மூலிகைகளில் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது. மேலும் புற்றுநோய் எதிர்ப்பு பாக்டீரியாக்கள், ஆன்ட்டி ஆக்ஸிடெ ண்டுகள், ஆன்ட்டி வைரஸ், ஆன்ட்டி ஃபங்கஸ் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவன.சமச்சீரான, சத்துள்ள வைட்டமின்கள், தாது உப்புகள், கொழுப்பு, இரும்புச் சத்து, புரதம், கால்சியம், மாங்கனீசு, பாஸ்பரஸ் போன்ற உடல்நல ஊக்கிகள் கொண்ட உணவு வகைகள் நோயைக் குணப்படுத்தும். இவற்றை வகை அறிந்து உண்பதால் பலன் கிடைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் சில முக்கியமான உணவுகள்:
கேரட்: இது எல்லா நோய்களையும் குணப்படுத்தும். கேரட்டில் ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட், பீட்டா கரோடின் என்ற சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்திகள் காரணமாக வைரஸ், பாக்டீரியா கிருமிகளை ஒழித்து, நோய் எதிர்ப்புச் செல்களை உருவாக்கி, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்து, நோயிலிருந்து நாம் விடுதலை பெற உதவுகின்றன.

தினமும் 5 முதல் 10 கேரட்டுகளை பச்சையாகவே சாப்பிட்டு வர பலன் கிடைக்கும். இதனால் 30 மி.கி. முதல் 60 மி.கி. வரை நமக்கு கரோட்டின் சத்து கிடைக்கிறது. இவை நமது உடல் ஆரோக்கியத்துக்குப் போதுமானது.கேரட் சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் பீட்டா கரோட்டின் அளவு குறைந்து நோய் நம்மைத் தாக்குகிறது. கேரட் மற்றும் மாம்பழம், பப்பாளி, ஆரஞ்சு, வெண்பூசணி, தர்பூசணி, கீரை வகைகள், வெள்ளரிப்பிஞ்சு, தயிர் மற்றும் கொழுப்பு நீக்கப்படாத பால் எடுத்துக் கொள்ளலாம்.

சரித்திர படத்தில் இரு வேடங்களில் நடிக்க இருக்கும் விஜய்




விஜய் தற்போது நடித்து வெளிவர இருக்கும் படம் கத்தி. இந்த படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளது. இதில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் மற்றும் இதனை விஜய்யை வைத்து துப்பாக்கி என்னும் வெற்றி படத்தை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். எனவே இந்த ப்டத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்புகள் உள்ளது. இதனை அடுத்து விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இது ஒரு சரித்திர பின்னணி கொண்ட படமாக உருவாக உள்ளது. இதிலும் விஜய் இரு வேடங்களில் நடிக்கிறார். அப்பா விஜய்க்கு ஜோடியாக ஸ்ரீதேவியும், மகன் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்கள். நான் ஈ படத்தில் வில்லனாக நடித்த சுதீப் இதில் முக்கிய வேடத்தில்  நடிக்கிறார். கத்தி படத்துக்கு பிறகு சில நாட்களுக்கு விஜய் ஒய்வு எடுக்கவுள்ளார். அதன் பிறகு நவம்பர் 8 ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

டிவிட்டரில் ஹிட் ஆன மோடியின் பிறந்தநாள் ! வாழ்த்தியவர்களின் மனதை கவர்ந்தார் மோடி !!



மோடி தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் , காஷ்மீரில் வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு உதவுங்கள் என தனது நலனை விரும்புவர்களிடம் தெரிவித்து இருந்தாலும் , டிவிட்டரில் தனக்கு வாழ்த்தியவர்களுக்கு அவர் ஏமாற்றம் அளிக்க விரும்பவில்லை . அவர் தனக்கு வாழ்த்து தெரிவித்த சில சாதாரண குடி மகன்களுக்கு மீண்டும் நன்றி என டிவிட் செய்துள்ளார் . இதனைப் பெற்ற பலர் மகிழ்ச்சி மற்றும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .


செப்டம்பர் 17 ஆம் தேதி மோடியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது . அன்றைக்கு அவருக்கு பிஸியான நாளாக இருந்தது . பிரதமராக பதவியேற்ற பின் முதன் முதலாக குஜராத் சென்ற மோடி இரண்டு பெரிய திட்டங்களை அறிவித்தார் . பின்னர் சீனாவின் குடியரசு தலைவருடன் சந்திப்பு நடந்தது .

பின்னர் குஜராத்தில் இருந்து டில்லியில் வரும் வழியில் தனக்கு டிவிட்டரில் வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார் . மேலும் ஜப்பான் பிரதமரின் வாழ்த்தை ரீடிவிட் செய்து அவருக்கு நன்றி தெரிவித்தார் . அவர் தனக்கு வாழ்த்திய 50 நபர்களுக்கு ரீப்ளே செய்தார் . இதனால் அவரின் பக்கதிற்கு அப்போது டிராபிக் வேகமாக கூடியது .

விகடன் பத்திரிக்கையில் வெளிவந்த சென்னை மெட்ரோ ரயிலின் சிறப்பு போட்டோக்கள்











ஆசியா - பசிபிக் இடங்களில் உள்ள டாப் 25 சக்தி வாய்ந்த பெண்களில் 8 இந்தியர்கள் !!


பார்டியுன் ( fortune ) நாளிதழ் வெளியிட்ட ஆசிய பசிபிக் பகுதிகளில் உள்ள அதிக சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து 8 பெண்கள் இடம் பெற்றுள்ளனர் .

ஐ.சி.ஐ.சி வங்கியின் தலைவர் சந்தா கோச்சார் இந்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார் . இந்தியாவில் இவர் தான் முதலிடம் . எஸ்.பி.ஐ இன் அருந்ததி பட்டார்ச்சார்யா இந்த பட்டியலில் 4 ஆம் இடம் பிடித்தார் . ஐந்தாவது மற்றும் பத்தாவது இடத்தில் முறையே எச்.பி.சி.எல் இன் நிஷி வாசுதேவா மற்றும் ஆக்சிஸ் வங்கியின் ஷிகா ஷர்மா இடம் பிடித்தனர் . இவர்கள் டாப் 10 பட்டியலில் இடம் பெற்று இருந்தனர் .

இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் கெய்ல் கெல்லி முதல் இடம் பிடித்த்தார் .



பட்டியலில் இடம் பெற்ற மற்ற இந்தியர்கள்


கிரண் மஸ்முதர் ஷா      - 19
சித்ரா ராமகிருஷ்னா        -  22
நைனா லால் கித்வாய்     -  23
மல்லிகா ஸ்ரீனிவாசன்      - 25 

ஆவின் பாலில் கலப்படம், தினமும் 1.5 லட்சம் லிட்டர் பால் திருட்டு , அதிமுக பிரமுகர் கைது - அதிர்ச்சி தரும் தகவல்கள்




விழுப்புரம், வேலூர், திருவண் ணாமலை உள்ளிட்ட மாவட்டங் களில் இருந்து சென்னைக்கு வரும் ஆவின் டேங்கர் லாரிகளை திண்டிவனம் அருகே நிறுத்தி, பால் திருடியது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. பால் திருடப்பட்டது யாருக்கும் தெரியாமல் இருக்க அதே அளவுக்கு பாலில் தண்ணீரை கலந்து விடுகிறார்கள். இந்த வேலையை செய்ததற்காக போலீஸார் 5 பேரை கைது செய்து உள்ளார்கள்.  பாலில் அதிகமாக தண்ணீர் கலக்க கூடாது,

 அதனை தடுப்பதற்கு பாலில் தண்ணீர் தரம் சரியாக உள்ளது என்று ஆவின் ஊழியர்கள் ஒரு சான்றிதழ் அளிக்க வேண்டும். அவர்கள் பொய்யான சான்றிதழ் அளித்ததன் மூலம் அவர்களுக்கும் இதில் சம்மந்தம் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. எனவே அவர்கள் 3 பேர் சஸ்பென்ட் செய்ய பட்டுள்ளார்கள். ஒரு டேங்கர் லாரியில் இருந்து 1500 முதல் 2000 லிட்டர் வரை பால் திருடி உள்ளார்கள். இந்த வழியாக செல்லும் 83 லாரிகளீல் இந்த வேலையை செய்து உள்ளார்கள். இதன் மூலம் அவர்களுக்கு தினமும் சுமார் 1.5 லட்சம் லிட்டர் வரை பால் இலவசமாக கிடைத்துள்ளது. இதனை தனியாருக்கு விற்று அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்துள்ளார்கள்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சென்னையை சேர்ந்த வைத்தியநாதன் என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை அக்டோபர் 1 வரை சிறையில் அடைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அவரது வீட்டில் சோதனை செய்ததில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளது.

வைத்தியநாதன் ஆவின் நிறுவனத்தில் சில்லரை விற்பனையாளராக தனது பணியை தொடங்கி பல பிரிவுகளில் வேலை செய்துள்ளனர். இவரை விசாரிப்பதன் மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளீவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவர் அதிமுகவில்  தென் சென்னை தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராகவும் இருந்தார். இந்த வழக்கு தொடர்ப்பட்டதையடுத்து அதிமுக வில் இருந்து நீக்கப்பட்டார்.

யூடியுபில் புதிய சாதனை படைத்த ஐ டீசர்




இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்டமான இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஐ. இந்த படத்தை ஷங்கர் இரண்டு வருடமாக எடுத்து வருகிறார். இந்த படத்தில் விக்ரம் கடுமையாக உழைத்துள்ளார். இந்த படம் எப்போது வரும் என பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் திங்கள் கிழமை அன்று வெளிவந்தது. இந்த விழாவுக்கு ஹாலிவுட் நாயகன் அர்னால்டு சிறப்பு விருந்தினராக வந்து இருந்தார்.

படத்தின் டீசர் தமிழ் படத்தை போல் இல்லாமல் ஹாலிவுட் படத்தை போல் புதிய விதமாக இருந்தது. இதனால் படம் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து விட்டது. அதற்குள் டீசர் யூடியுபில் புதிய சாதனை படைத்து விட்டது. இந்த டீசரை இதுவரை 4 மில்லியன் பேர் பார்த்து உள்ளார்கள். ஒரு தமிழ் படத்தின் டீசரை அதிக நபர்கள் பார்த்து உள்ளார்கள் என்னும் சாதனையை ஐ படம் பெற்று உள்ளது. 

நமக்கு பேஸ்புக்கில் இருக்கும் 7 வகையான நண்பர்கள்




* இந்த நபரை நாம் நமது வாழ்நாளில் பார்க்கவே மாட்டோம், ஆனால் பேஸ்புக்கில் அவரால் கவரப்பட்டு அவருக்கு நண்பராக இருப்போம்.

* இவரை பற்றி நமக்கு எதுவும் தெரியாது, ஆனால் 100 மியூச்சுவல் நண்பர்கள் உள்ளார்கள் என்பதற்காக நண்பராக இருப்போம்.

* நமது பள்ளியிலோ அல்லது கல்லூரியில்லோ படித்தவராக இருப்பார் , ஆனால் நாம் அவர் கூட பேசியே இருக்க மாட்டோம்.

* ஒரு சிலரின் பேஸ்புக் டிபி பிடித்து விட்டால் அவரை நண்பராக்கி விடுவோம்.

* நமக்கு தெரிந்த நண்பர்கள் இவர்கள். பேஸ்புக்கில் நாம் ஏதாவது போட்டோ போட்டால் லைக் அல்லது கமென்ட்  செய்வார்கள்.

* நாம் போடும் போஸ்டுகளையோ அல்லது போட்டோக்களையோ ஒரு சில நண்பர்களிடம் இருந்து மறைப்போம் அவர்கள் தான் இவர்கள்.

* காலை பல் விலக்கினால் கூட நம்மை டேக் செய்து லைக் பெற விரும்பும் நண்பர்கள்.

இனி இரயிலில் போகும் போது உங்களுக்கு பிடித்த உணவை எஸ்.எம்.எஸ் மூலம் ஆர்டர் செய்யலாம் !!



இரயில் பயணத்தின் போது பலர் அங்கே கொடுக்கப்படும் உணவைப் பற்றி குறை கூறுவார்கள் . அதனால் மக்களுக்கு பிடித்த உணவை நல்ல சுவையில் பறிமாற இந்தியன் ரயில்வேஸ் புதிய சேவையை தொடங்க உள்ளது . இந்த சேவையின் மூலம் பயணிகள் தங்கள் மொபைல் மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்பி தங்களுக்கு வேண்டிய உணவை பெற்றுக் கொள்ளலாம் .

இந்த சேவையை குறிப்பிட்ட சில இரயில்களில் மட்டும் செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளனர் . இந்த இணைய சேவையை ஒருங்கிணைக்கும் ஐ.ஆர்.சி.டி.சி இந்த சேவைக்காக தனியே ஒரு நம்பரை பெற்று உள்ளது . சாப்பாடு தொடர்பாக நிறைய குறைகள் வருவதால் , இரயில்வேஸ் இந்த புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது .

பயணிகள் தங்கள் பி.என்.ஆர் நம்பரை தங்கள் மொபைல் மூலம் இதுக்கென ஒதுக்கப்பட்டு இருக்கும் எண்ணுக்கு அனுப்பினால்  அவர்களின் பி.என்.ஆர் ஆன்லைனில் செக் செய்யப்படும் . இந்த செக்கிங் முடிந்த பின் அவர்களுக்கு கால் வரும் . அந்த கால் மூலம் அவர்கள் தங்களுக்கு வேண்டியவற்றை ஆர்டர் செய்து கொள்ளலாம் . ஆனால் பழைய பேன்ட்ரி சேவைகள் தொடர்ந்து இயங்கி கொண்டு தான் இருக்கும் .

விரைவில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வதற்கான சேவையையும் தொடங்க இரயில்வேஸ் திட்டமிட்டு வருகிறது .

மத்திய அரசு டிவிட்டரில் போட்டால் மட்டும் தான் கண்டு கொள்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு !!



உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் , " மத்திய அரசு டிவிட்டரில் போடுவதை மட்டும் தான் பெரிதாக எடுத்துக் கொள்கிறது , மற்றவை பற்றி கவனம் செலுத்த மறுக்கின்றனர் " என மத்திய அரசை தாக்கி குற்ற்ஞ்சாட்டினார் .

அகிலேஷ் யாதவ் அளித்த பேட்டியில் , " டில்லியில் உள்ள மக்களுக்கு எங்களின் லேப்டாப் திட்டங்கள் பிடிக்கவில்லை . ஆனால் டிவிட்டர் பிடித்து இருக்கிறது . எனவே நாங்கள் எங்களின் சக்தி பற்றாக்குறை மற்றும் கரி பற்றாக்குறை குறித்து தினமும் டிவிட் செய்ய உள்ளோம் . அவர்கள் டிவிட்டரை தான் அதிகம் பயன்படுத்துவதால் , அவர்களிடம் எங்களின் டிவிட் மூலம் எல்லாவற்றையும் தெரிவிப்போம் " என்றார் .

அதைப் போல முதல்வரின் அலுவலகம் தினமும் டிவிட் செய்ய ஆரம்பித்து விட்டது .

வீட்டு பிரியானி சாப்பிட அனுமதிக்காததால் ஹோட்டலை விட்டு வெளியேறிய தோனி மற்றும் சி.எஸ்.கே அணியினர் !!



எப்போதும் அமைதியாக இருக்கும் தோனி அரிய நிகழ்ச்சியாக கோபம் அடைந்து தான் தங்கியிருந்த 5 - ஸ்டார் ஹோட்டலை விட்டு வெளியேறி வேறு ஹோட்டலில் தங்கினர் . அம்பாடி ராயுடு வீட்டில் செய்யப்பட்ட பிரியானியை ஹோட்டலில் சாப்பிட அனுமதிக்கப்படாததால் அவர்கள் வெளியேறியதாக கூறப்படுகிறது .

இந்த சம்பவம் சென்னை அணி கோல்கத்தா அணியுடன் தோற்றப் பின் நடந்தது . ஹைதராபாத்தில் ஹோட்டல் கிரான்ட் ககாடியா ஹோட்டலில் சென்னை அணியினருக்கு ரூம் புக் செய்யப்பட்டு இருந்தது . அப்போது ஹைதராபாத்தில் வசிக்கும் சக வீரரான அம்பாடி ராயுடு வீட்டில் செய்யப்பட்ட பிரியாணி அனுப்பப்பட்டது . ஆனால் அந்த ஹோட்டலில் வெளியில் இருந்து வரும் பொருட்களை சாப்பிட அனுமதி இல்லை . இதனால் ராயுடுவின் பிரியாணி அனுமதிக்கப்படவில்லை . இதனால் தோனி கோபமடைந்து தனது அணியுடன் தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் சென்று தங்கினார் .

ஆனால் ஹோட்டல் நிர்வாகத்தினர் பிரியானி தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்று இன்னும் தெரிவிக்கவில்லை . அவர்கள் அளித்த அறிக்கையின்படி அவர்கள் வீரர்களின் அறையில் வைத்து சாப்பிட்டுக் கொள்ள அனுமதி அளித்ததாகவும் , ஆனால் தோனி பெரிய பார்ட்டி அறை ஒன்றில் அனுமதி கேட்டதாகவும் தெரிவித்து உள்ளனர் ,


சுப்பிரமணியன் சுவாமி மீது நடவடிக்கை கோரி மீனவர் புகார்

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்கக் கூடாது என்று கூறியதுடன், மீனவர்களுக்கு எதிராக தொலைக்காட்சியில் பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ராமேசுவரம் டி.எஸ்.பி.யிடம் புகார் மனு கொடுத்தார்.இலங்கைக் கடற்படையினரிடம் படகுகளைப் பறிகொடுத்து வாழ்வாதாரங்களை இழந்துள்ள தமிழக மீனவர்களைப் பற்றி சுப்பிரமணியன் சுவாமி தொலைக்காட்சியில் விமர்சித்துள்ளார்.

ராமேசுவரம் மீனவர்கள் கடலில் மீன் வளத்தை அழித்து, அத்துமீறி இலங்கை கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்வதாகவும், அதனால் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து வைத்துள்ள படகுகளை விடுவிக்கக் கூடாது எனவும் பேட்டியில் தெரிவித்துள்ளார். இதனைக் கண்டித்து மீனவர்கள் அவரது உருவபொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், தாய்நாட்டுக்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் பேசிய சுப்பிரமணியன் சுவாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த சேவியர் மகன் மீனவர் நல்லதம்பி ராமேசுவரம் டி.எஸ்.பி.யிடம் வெள்ளிக்கிழமை புகார் மனு கொடுத்தார்.

ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு !!



ஆம் ஆத்மி கட்சி தலைவர் மயாங் அகர்வால் மற்றும் வேறு ஐந்து நபர் மீது பாலியல் துன்புறுத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக 21 வயது பெண் கட்சி தன்னார்வ ஊழியர் பூகார் கொடுத்துள்ளார் .

போலிஸ் அதிகாரி கூறுகையில் , " ஆம் ஆத்மியின் தருண் சிங் மீது இந்திய குற்றப் பிரிவு செக்சன் 354 , 506, 509 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்ய்ப்பட்டுள்ளது . மயாங் காந்தி மற்றும் நான்கு பேர் மீது பாலியல் துன்புறுத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது " என்றார் .

இது குறித்து காந்தி தெரிவிக்கையில் , " இந்த வழக்கு அரசியல் பார்வையில் உருவாக்கப்பட்டுள்ளது . அந்த பெண் என்னிடம் தருண் சிங் குறித்து பூகார் அளித்தவுடன் நான் விரைந்து செயல்பட்டு அவரை கட்சியில் இருந்து விலக்கி விட்டேன் . மேலும் அந்த பெண்ணிடம் வேண்டுமென்றால் போலிசில் பூகார் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டேன் ஆனால் அவர் மறுத்து விட்டார் " என்றார் .

பார்மின்றி தவிக்கும் கோஹ்லியை காப்பாற்ற வந்துவிட்டார் சச்சின் !!



இந்திய அணியின் ஒன்-டவுன் பேட்ஸ்மேனாக களம் இறங்குபவர் வீராட் கோஹ்லி . இவர் கடந்த சில போட்டிகளாக பார்ம் இன்றி தவித்து வருகிறார் . இங்கிலாந்தில் விளையாடிய பத்து இன்னிங்க்ஸ்களில் இவரால் வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது . இந்நிலையில் இந்திய அணியின் மற்ற வீரர்கள் சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாட சென்று விட்டனர் . இவரது பெங்களூரு அணி தகுதி பெறாததால் , இவர் "கிரிக்கெட் கடவுள்" என அழைக்கப்படும் சச்சினிடம் பயிற்சி பெற்று வருகிறார் .

 கோஹ்லி சச்சினால் தான் கிரிக்கெட் விளையாட வந்தார் என அடிக்கடி கூறுவார் . தன்னுடைய ரோல் மாடலை தனக்கு பயிற்சி அளிக்கும்படியும் தன்னுடைய தவறுகளை திருத்தவும் உதவுமாறு கேட்டுக் கொண்டார் . அதனை சச்சினும் ஏற்றுக் கொண்டு , மும்பை உள்ளரங்க மைதானத்தில் பயிற்சி அளித்து வ
ருகிறார் .

இங்கிலாந்து செல்லும் போது அனுஷ்கா ஷர்மா கூட வந்ததால் தான் கோஹ்லி பார்ம் இன்றி தவித்தார் என்று கூறினர் . இதனால் அனுஷ்கா ஷர்மா அவரை விட்டுச் சென்றாலும் , அவரது மோசமான பார்ம் அவரை விட்டுச் செல்லவில்லை . 

காஷ்மீருக்குச் சொந்தம் கொண்டாடும் பிலாவல் புட்டோ

காஷ்மீர் முழுவதும் பாகிஸ்தானுக்கே சொந்தம் என்றும், அதனை பாகிஸ்தானுடன் இணைக்காமல் ஓயப் போவதில்லை என்றும் அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரியின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் புட்டோ பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முல்தானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனது கட்சிக் கூட்டத்தில், பிலாவல் பேசியதாவது:காஷ்மீர் பகுதி முழுவதையும் திரும்பக் கைப்பற்றுவேன். காஷ்மீரின் ஓர் அங்குலப் பகுதியைக் கூட விட்டுத்தர மாட்டேன். ஏனெனில், (பாகிஸ்தானில் இருக்கும்) மற்ற மாகாணங்கள் போல, காஷ்மீரும் பாகிஸ்தானுடையதுதான் என்றார் அவர். இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்கள் யூசுப் ரஸா கிலானி, ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பிலாவல் புட்டோவின் தாயார் பேநஸீர் அலி புட்டோ, பாகிஸ்தானின் பிரதமராக 2 முறை பதவி வகித்துள்ளார். அவரது தாத்தா, ஜூல்ஃபிகர் அலி புட்டோ பாகிஸ்தானின் அதிபராக இருந்துள்ளார். தந்தை ஆசிஃப் அலி சர்தாரியும், பாகிஸ்தானின் அதிபராக 2008ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். தற்போது பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவராக இருக்கும் பிலாவல் புட்டோ, அந்நாட்டில் 2018ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இந்தியாவுடன் நல்லுறவு வைத்துக் கொள்வதையே பாகிஸ்தான் மக்கள் கட்சி பொதுவாக தனது கொள்கையாக வைத்துள்ளது. ஆனால், இதற்கு நேர்மாறாக பிலாவல் புட்டோ பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் தாக்குதல்: தயார் நிலையில் அமெரிக்கா

சிரியாவில் உள்ள இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தத் தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து, தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இராக்கில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில், இராக் ராணுவத்துக்கு அமெரிக்கா உதவி செய்தது. ஆனால், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது நேரடித் தாக்குதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் அமெரிக்க அதிபர் ஒபாமா தெளிவாக உள்ளார்.

சிரியாவில் உள்ள ஐ.எஸ். மீது எப்போது தாக்குதல் நடத்தப்படும் என்ற விவரத்தை இப்போது வெளியிட முடியாது. தாக்குதலுக்கு முன்பாக, எந்த மாதிரியான வியூகங்கள் தேவைப்படும் என்பதையும் தெரிவிக்க முடியாது. இராக், சிரியா ஆகிய நாடுகளில் பயங்கரவாதிகளை ஒடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். எங்களின் முயற்சிகளுக்கு சர்வதேச அளவிலான ஆதரவைத் திரட்டி வருகிறோம்.
எங்களுடைய முயற்சிக்கு நாற்பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.

இராக்கில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக எங்களுடன் இணைந்து, பிரான்ஸ் விமானப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதேபோன்று, அந்தப் பகுதியில் உள்ள வேறு சில நாடுகள், சிரியா மீதான தாக்குதலுக்கு உதவி செய்வதாக தெரிவித்துள்ளன. அந்தத் தாக்குதல் ஒரே தலைமையின் கீழ், ஒருங்கிணைந்த சர்வதேச அணியின் தாக்குதலாக இருக்கும். எங்களுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ள வேறு நாடுகளையும் வரவேற்கிறோம் என்று சூசன் ரைஸ் கூறினார்.

மீண்டும் நடிகைகளின் நிர்வாண படங்கள் ஹேக்கரால் வெளியிடப்பட்டது !!



சில வாரங்களுக்கு முன் ஹேக்கரால் பல நடிகைகளின் நிர்வாண படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டது . அந்த பிரச்சனை இன்னும் முடிவதற்குள் ஹேக்கர் மீண்டும் நடிகைகளின் நிர்வாண படங்களை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் .

சனிக்கிழமை காலை இந்த படங்கள் 4சான் இணையதளத்தில் வெளியிடப்பட்டு டிவிட்டரில் டெரண்டிங் ஆனது . போன தடவையும் இந்த இணையத்தில் தான் நடிகைகளின் நிர்வாண படங்கள் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த முறை கிம் கார்தர்ஷியன் , வனேசா ஹட்ஜென்ஸ் , ஹோப் சோலா ஆகியோரின் படங்கள் வெளிவந்துள்ளது .

ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்துள்ளன: ஒபாமா ஒன்றிணைந்துள்ளன: ஒபாமா

சிரியா, இராக் நாடுகளில் பெரும்பான்மையான பகுதிகளை கைப்பற்றியுள்ள இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்துள்ளது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இது குறித்து வாஷிங்டனில் அவர் கூறியது: இது அமெரிக்காவின் தனிப்பட்ட சண்டையல்ல. சிரியா, இராக் போன்ற நாடுகளில் எங்களது தரைப் படையினர் சண்டையிட நான் உறுதிபூணவில்லை. வரும் காலங்களில் கூட்டணி நாடுகள் பாதுகாப்புடன் இருப்பதற்காக உதவிகளை வழங்கத் தயாராக உள்ளோம்.

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக எங்களது விமானங்களை உபயோகப்படுத்த உள்ளோம். கூட்டணி நாடுகளின் வீரர்களை பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகத் தயார் படுத்தவும், ஆயுத உதவிகளையும் வழங்கவும் உள்ளோம்.

பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உலக நாடுகள் அடங்கிய குழுவை வழிநடத்தத் தயாராக உள்ளோம். இந்தக் குழுவில் இடம்பெறும் நாடுகள், அதிக அளவிலான தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்று ஒபாமா தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐ.நா.சபை கூட்டத்தில் இது குறித்து ஒபாமா வலியுறுத்தி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீவிரவாத ஊடுருவலைத் தடுக்க 490 மீனவக் கிராமங்களில் விழிப்புணர்வுக் குழு


தீவிரவாத ஊடுருவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் 490 மீனவக் கிராமங்களில் விழிப்புணர்வுக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக மாநில கடலோரப் பாதுகாப்பு குழும ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார். சர்வதேசக் கடற்கரை தூய்மை தினத்தையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியது: 

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஓர் ஆண்டாக மாநிலம் முழுவதும் கடலோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது 12 கடலோரக் காவல் நிலையங்கள் உள்ளன. கடலோரப் பாதுகாப்பின் முக்கியத்துவம் கருதி தமிழக அரசு கூடுதலாக 30 காவல் நிலையங்களைத் திறக்க அனுமதி அளித்துள்ளது. இதற்கான கட்டடங்கள் கட்டப்பட்டு நிறைவு நிலையில் உள்ளன.

இந்தக் காவல் நிலையங்கள் முழுமையாகச் செயல்படும்போது, மாநிலத்தில் கடலோரத்தில் 20 கிலோ மீட்டருக்கு ஒரு கடலோரக் காவல் நிலையம் செயல்படும். இதேபோல கடலோரத்தில் ரோந்து செல்வதற்கு தண்ணீரிலும், மணலிலும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட 24 வாகனங்களைத் தமிழக அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் இப்போது கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸார் தீவிர ரோந்து செல்கின்றனர். இது தவிர 38 அதிவிரைவுப் படகுகள் கடலில் ரோந்து சென்று வருகின்றன. இதில் சென்னையில் எத்தைகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், எப்போதும் ஓர் அதிவிரைவுப் படகு 20 போலீஸாருடன் தயார் நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளது.


கடலோரத்தில் மீனவர்கள் பங்களிப்புடன் ரோந்துப் பணியும், கண்காணிப்பு பணியும் நடைபெறுகிறது. இதற்காக 500 மீனவ இளைஞர்கள் ஊர்க்காவல் படை மூலம் கடலோரப் பாதுகாப்பு குழுமத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தவிர, கடலோரத்தில் அன்னியர்கள் ஊடுருவதைத் தடுக்கும் வகையில் 490 மீனவக் கிராமங்களில் விழிப்புணர்வுக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ரகசியக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றார் சைலேந்திரபாபு.
கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி: முன்னதாக, சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த தூய்மைப்படுத்தும் பணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், "ட்ரீ பவுண்டேசன் தன்னார்வத் தொண்டு நிறுவன உறுப்பினர்கள், கடலோரப் பாதுகாப்புப் படையினர் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னை மெரீனா கடற்கரை, எலியட் கடற்கரை ஆகியவற்றில் குப்பைகளையும் வேண்டாத கழிவுகளையும் அப்புறப்படுத்தினர். இதில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, கடலோரப் பாதுகாப்புப் படை கிழக்குப் பிராந்திய கமாண்டர் எஸ்.பி. சர்மா, டி.ஐ.ஜி. தாலா, டி.ஐ.ஜி. தியாகி, மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ராஜலெட்சுமி, "ட்ரீ பவுண்டேசன் அமைப்பைச் சேர்ந்த சுப்பராஜா தரணி ஆகியோர் பங்கேற்றனர். 

சர்வதேசக் கடற்கரை தூய்மை தினத்தையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடலோரப் பாதுகாப்புப் படை ஹெலிகாப்டர் சென்னை கடற்கரைகளில் வலம் வந்தது. கடற்கரையையொட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கடற்கரை தூய்மை, பாதுகாப்பு போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

ஓரு கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கத்தை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.துபையில் இருந்து சனிக்கிழமை காலை சென்னை வந்த விமானப் பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது முகமது யூசப், முகமது ஆகிய இருவரிடமும் தலா அரை கிலோ தங்கம் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

ஃபேஸ்புக்கில் போக்(POKE) செய்வது ஏன் தெரியுமா?

இது குறித்து நவீன மாற்றம் என்பவர் எழுதியது, ‘POKE' என்று முக நூலில் (Facebook) ஒரு ‘சொடுக்கி’ இருக்கிறது. அதன் பொருள் என்ன என்பதை முகநூலில் அநேக நண்பர்கள் புரியாமலேயே அதைச் ‘சொடுக்கி’ வருகிறார்களோ?’ என்று நினைக்கத் தோன்றுகிறது.

ஏனெனில், நண்பர்கள் சிலர் எனது Face Book பக்கத்தை POKE செய்தபோது அதற்குப் பதிலாக மரியாதைக்கு நானும்
ஒரு முறை Poke செய்தால் மறுபடியும் அவர்கள் அதையே திரும்ப Poke செய்கின்றார்கள். எனவே - ‘முகநூலில் 'Poke' என்ற சொடுக்கி இருப்பதன் பயன் என்ன என்பதை நண்பர்கள் அறிந்து கொள்ள வேண்டும்’ என்பதற்காக என் விளக்கத்தை இங்கே சொல்லி வைக்கின்றேன்:

நண்பர்களும் இதைப் புரிந்து கொள்வார்களாக!:
முதன் முதலில் ஒருவர் இன்னொருவர்பால் POKE செய்தால்: அது,
அவருடைய பதிவுகளைப் பார்த்து அவரைச் செல்லமாகக் கிள்ளும் நிலைக்குச் சமம். அவருடைய பதிவுகளுக்குத் தனது பார்வை பட்டுக் கொண்டிருக்கிறது எனக் காட்டிக்  கொள்வதாகவும் இந்த Poke பொருள் சொல்லும். முதன் முதலாக உங்களை ஒருவர் Poke செய்து,பதிலுக்கு நீங்கள் Poke செய்தால் அது அவருக்கு நீங்கள் ‘உங்கள் அன்பைப் புரிந்து கொண்டேன்’ என்று பதில் உணர்த்துவதாகும். ஆனால் - அதற்குப் பிறகு Pokeக்கு Poke என்று தொடரும்போது - Pokeக்கு அர்த்தங்கள் அவரவர் போக்குக்கேற்ப மாறுபடுகின்றன. அவை எவ்வாறு எனப் புரிந்து கொள்ள இதோ:

Poke என்றால்:
சிந்தனையில் நுழைவோரைக் ‘சுட்டுதல்’;
செறுக்கோடு எழுதுவோரை ‘தட்டுதல்’
மந்தமாயிருப்போரைக் ‘குட்டுதல்’;
மனதுக்கினியோரைக் ‘கட்டுதல்’
அன்புக்குரியோரை ‘ஒட்டுதல்’
அழைப்புக்குப் பதிலாக ’எட்டுதல்’
வம்புத்தனமாக ‘முட்டுதல்’
வரைமுறை இல்லாமல் ‘கொட்டுதல்’

என்று- எப்படி வேண்டுமானலும் பொருள் கொள்ளலாம். அது அவரவர் மனோ நிலையைப் பொறுத்த விஷயம்.
எனினும், Poke என்பதன் போக்கைப் புரிந்து நீங்கள் கொண்டால் சரி.

கட்டுரையாளர் நவீன மாற்றம்

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media