2014-15 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார் . அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்னவென்று பார்ப்போம்.
* 2022 க்குள் அனைவருக்கும் சொந்த வீடு இருக்கும்.
* விவசாயிகளுக்கு என தனி தொலைகாட்சி தொடங்க்பட உள்ளது.
* பிரான்ட்பேண்ட் மூலம் அனைத்து கிராம்ங்களும் இணைக்கப்படும்.
* 2019 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதி.
* பெண்கள் பாதுகாப்பிற்கு 150 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
* புதிதாக 5 ஐஐடி மற்றும் 5 ஐஐஎம் கள் தொடங்கப்பட உள்ளது.
* அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ளது.
* சிகரெட் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயருகிறது. இதனால் அதன் பயன்பாடு குறையும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு ஆகும்
* சோடா பாகனங்கள், எவர்சில்வர் பொருட்களின் வரி உயருகிறது.
* சோப்பு,வைரம்,நவரத்தின கற்கள் மற்றும் டிவிக்களின் விலை குறைய உள்ளது.
* சூரிய ஒளி, காற்றாலை மின்சார உற்பத்தி பொருட்களின் விலை குறைக்கப்பட உள்ளது.
* ஃபிரிட்ஜ், செல்போன், கம்யூட்டர்,லேப்டாப்,கேட்ஜட் , தீப்பெட்டிகளின் வரி குறைக்கப்பட உள்ளது.
* கங்கை நதியை தூய்மைபடுத்த ரூ.2307 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
* டெல்லியில் குடிநீர், மின்சாரம் பிரச்சனையை தீர்க்க 800 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
*. காவல் துறையின் தரத்தை உயர்த்துவதற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
* ஆந்திரா, தெலுங்கானாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.
* வருமான வரி உச்ச வரம்பு 2 இலட்சத்தில் இருந்து 2.5 இலட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
* வீட்டு கடன் வட்டிக்கு வழங்கப்படும் வரிசலுகை 1.5 இலட்சத்தில் இருந்து 2 இலட்சமாக உயருகிறது.
* காஷ்மீரில் விளையாட்டு கழகம் அமைக்கப்பட உள்ளது.
* தேசிய விளையாட்டு அகாடெமி தொடங்கப்பட உள்ளது.
* நதிகளை இணைக்க தீவிர முயற்சி எடுக்கப்படும். அது பற்றி ஆய்வு செய்வதற்கு 100 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
* சாலையோரத்தில் உள்ள கிராமங்களை மேம்படுத்த 900 கோடிஒதுக்கப்பட்டு உள்ளது.
* பெண் குழந்தைகளின் கல்வி, திருமணத்திற்காக சிறப்பு சேமிப்பு திட்டம் தொடங்கபட உள்ளது.
* புதிதாக 16 துறைமுகங்கள் வர உள்ளது.
* வங்கிகளுக்கு 2.4 இலட்சம் கோடி நிதியுதவி வழங்கப்பட உள்ளது.
* தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் ஜவுளி மண்டலம் அமைக்க 200 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
* இந்த ஆண்டு 8 இலட்சம் கோடி விவசாய கடன் வழங்கப்பட உள்ளது.
* தமிழகம், ராஜஸ்தானில் சூரிய மின் சக்தி திட்டம் தொடங்க 500 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
ரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் மூலம் மோடி தேர்வுக்கு நன்றாக தேர்வாகியுள்ளார். ஆனால் அவர் தேர்வை எப்படி எழுத போகிறார் என்பதை அவர் இந்த ஆண்டு எப்படி ஆட்சி செய்கிறார் என்பதை வைத்து தான் முடிவு செய்ய முடியும்.
உங்ககிட்ட ஸ்டார்டிங்க் நல்லா தான் இருக்கு , பினிஷிங் எப்படி இருக்கு என்று பார்ப்போம்.