BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 5 October 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

செக்ஸ் உறவில் எந்த நாட்டினர் கில்லாடிகள்? அதில் இந்தியர்கள் எப்படி? சர்வே முடிவுகள்
http://www.satrumun.net/2014/10/blog-post_5.html

ஆம்னி பஸ் உரிமையாளர்களும், திரை உலகமும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஸ்ட்ரைக் செய்வது ஏன்? வெளிவராக தகவல்கள்
http://www.satrumun.net/2014/10/why-omni-bus-and-tamil-film-industry.html

நேற்றைய போட்டியில் புதிய உலக சாதனை செய்த ரெய்னா மற்றும் அஷ்வின் !!
http://www.satrumun.net/2014/10/raina-ashwin-creates-new-record.html

$100 மில்லியன் அபராதத்திற்கு பயந்து ஹேக்கர் வெளியிட்ட நிர்வாண படங்களை நீக்கியது கூகுள் !!
http://www.satrumun.net/2014/10/google-deletes-thousands-of-photo-released-by-hacker.html

கலக்கிட்டே கண்ணா... : 'மெட்ராஸ்' டைரக்டரை பாராட்டித் தள்ளிய ரஜினி!
http://goo.gl/Vdxc7B

இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து சுனில் நரேன் அதிரடி நீக்கம்
http://www.satrumun.net/2014/10/narine-got-removed-from-squad.html

கேட்ட உடனே பாடினார்... : புதுமுக இயக்குநரை உற்சாகப்படுத்திய கமல்ஹாசன்!
http://goo.gl/c8ZoV3

மோடியின் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ள சூர்யா
http://www.satrumun.net/2014/10/surya-joins-with-modi.html

பால் தாக்கரேவுக்காக சிவசேனாவை விமர்சிக்க மாட்டேன் - மோடி
http://www.satrumun.net/2014/10/wont-utter-word-against-sena-as-mark-of.html

ஜெயலலிதாவின் தண்டனையை எதிர்த்து தனியார் பள்ளிகள் 7 ஆம் தேதி போராட்டம்
http://www.satrumun.net/2014/10/private-schools-on-strike-on-7th.html

சாவு வீட்டுக்கு போய் வந்தவுடன் ஏன் கட்டாயம் குளிக்க வேண்டும்
http://www.satrumun.net/2014/10/why-we-should-take-bath-after-coming.html

வாட்ஸ்அப் பிற்கு போட்டியாக கூகுள் தயாரித்து வரும் புதிய அப்ளிகேஷன் !!
 http://www.satrumun.net/2014/10/google-planning-to-make-a-free-messaging-app.html

விளையாட்டில் இந்தியாவை விட சீனா சிறந்து விளங்குவதற்கு என்ன காரணம்
http://www.satrumun.net/2014/10/china-performs-better-than-india-whats.html

எய்ட்ஸ் நோய் முதன் முதலில் எங்கு தொடங்கியது ?? 30 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடித்த ஆய்வாளர்கள் !!
http://www.satrumun.net/2014/10/how-and-where-first-aids-emerged.html

ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக ஆண் ஓரின ஆபாச படங்களை பார்க்கின்றனர் - ஆய்வில் தகவல் !!
http://www.satrumun.net/2014/10/what-woman-prefer-to-watch.html

செக்ஸ் உறவில் எந்த நாட்டினர் கில்லாடிகள்? அதில் இந்தியர்கள் எப்படி? சர்வே முடிவுகள்

உலகம் முழுவதும் செக்ஸ் ஈடுபாடு குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 37 நாடுகளைச்சேர்ந்த 30000 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அதில் பல சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.

உலக அளவில் கொலம்பியர்கள்தான் செக்ஸ் உறவில் கில்லாடிகளாக உள்ளனர். உலகிலேயே சராசரியாக அதிக அளவில் செக்ஸ் உறவு கொள்வது இந்த நாட்டினர் தாம் என்று சமீபத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. கொலம்பியாவில் 89 சதவீதம் பேர் வாரத்திற்கு ஒரு முறை கட்டாயம் உறவு கொள்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. இதில் இரண்டாவது இடத்தில் இந்தோனேசியாவும், மூன்றாவதாக ரஷ்யாவும் உள்ளன

செக்ஸ் உறவின் போது எட்டப்படும் உச்சகட்டமான ஆர்கஸத்தை அடைவதில் ஹங்கேரியர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர்.75 சதவீதம் பேர் திருப்தியான ஆர்கஸம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்கள். 2வது இடத்தில் கிரேக்கர்கள் உள்ளனர். 3வது  இடம் ஸ்பெயின் நாட்டவருக்கு கிடைத்துள்ளது.

உறவின்போது செய்யும் முன் ஃபோர் பிளே எனப்படும் விளையாட்டுக்களுக்கு நேரம் செலவிடும் விஷயத்தில் இந்தியர்கள் உலக அளவில் 5வது இடத்தில் உள்ளனர். அதாவது 19.3 நிமிடங்கள் அளவுக்கு முன்விளையாட்டுக்களில் இந்தியர்கள் ஈடுபடுகின்றனராம். அதேசமயம் செக்ஸ் உறவுக்கு இந்தியர்கள் எடுத்துக் கொள்ளம் நேரம் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக குறைவாக உள்ளதாம். சராசரியாக 15.1 நிமிடங்களே இந்தியர்கள் இதற்காக எடுத்துக் கொள்கின்றனராம்.

உலக அளவில் பாதுகாப்பான உறவைக் கடைப்பிடிப்பதில் முதலிடத்தில் சீனா உள்ளது. அங்கு 77 சதவீதம் பேர் ஆணுறைகளைப் பயன்படுத்துகின்றனர். ஹாங்காங் 73 சதவீதத்துடன் 2வது இடத்தில் இருக்கிறது. ஆணுறைகள் பயன்பாட்டில் உலக நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் 71 சதவீதம் பேர் உடல் உறவின்போது ஆணுறைகளைப் பயன்படுத்துகிறார்கள்

பால் தாக்கரேவுக்காக சிவசேனாவை விமர்சிக்க மாட்டேன் - மோடி

பாஜக வின் நீண்ட நாள் கூட்டாளியான சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான கூட்டணி முறிந்து மகாராஷ்டிராவில் தற்போது இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகின்றன, மராட்டிய மாநிலத்தில் பால்தாக்ரே கட்சிகளை கடந்த தனிப்பெரும் தலைவராக விளங்குகிறார், அவர் இறந்து போனாலும் அவர் மீதான விமர்சனத்தை மராட்டியர்களால் தாங்க முடியாது.

இன்று பாஜகவுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டார், சாங்லி மாவட்டத்தின் டாஸ்கான் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது,  சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே காலமான பின்பு மகாராஷ்டிரத்தில் நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இது. அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சிவசேனாவை விமர்சித்து ஒரு வார்த்தைக் கூட பேசக்கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன். இது, அவருக்கு நான் செலுத்தும் அஞ்சலியாகவே கருதுகிறேன் என்றார்.

மோடியின் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ள சூர்யா


மோடி கடந்த வாரம் தூய்மையான இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்காக அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டு இருந்தார். இந்நிலையில் சூர்யா இதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

நம்மையும், நமது இல்லத்தையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வது முக்கியமானதாகும். இது ஒவ்வொரு வரும் ஆரோக்கியமாக இருக்க உதவும். நமது குழந்தைகளுக்கு செல்வத்தை அளிப்பது எவ்வளவு முக்கியமோ, தூய்மையான சுற்றுச்சூழலை அவர்களுக்கு அளிப்பது அதைவிட முக்கியமானது. ஆரோக்கியமான இந்தியாவுக்கு சுத்தமான இந்தியாவை உருவாக்குவோம் என சூர்யா தெரிவித்து உள்ளார்.



ஜெயலலிதாவின் தண்டனையை எதிர்த்து தனியார் பள்ளிகள் 7 ஆம் தேதி போராட்டம்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கி 4 வருட சிறை தண்டனையுடன் சிறையில் அடைத்து உள்ளார்கள். இதனை எதிர்த்து தமிழ்நாட்டில் ஒவ்வொரு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று கேபிள் டிவி நிறுவனம் போராட்டம் நடத்தியது. இன்று தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகள் ஒடவில்லை. இந்நிலையில் 7 ஆம் தேதி  போராட்டத்தில் இறங்குவதாக தனியார் பள்ளிகள் அறிவித்து உள்ளன.

இதற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்பு வந்துள்ளது. போராட்டத்தில் இறங்குவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. அவர்கள் நலனுக்காக போராட்டத்தில் இறங்கலாம், ஒரு பொது நலனுக்காக போராட்டத்தில் இறங்கலாம். ஆனால் எந்த நலனும் இல்லாமல் ஒரு ஊழல் குற்றவாளியை தண்டித்ததற்காக போராட்டத்தில் இறங்குவது என்பது முட்டாள்தனமான செயல் ஆகும். இது ஊழல் தொடர்பான கண்ணோட்டத்தில் மாணவர்களின் மனதை பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும். ஊழல் செய்வது தவறில்லை என்று கூட அவர்கள் எண்ணுவார்கள்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அமைப்பினரையும் மிரட்டி போராட்டத்தில் ஈடுபட சொல்லி ஆளும் கட்சியினர் கட்டாயப்படுத்துவதாக தகவல்கள் வருகின்றன. இதனை தடுக்க மத்திய அரசு உடனடியாக இந்த் விவகாரத்தில் தலையிட வேண்டும்.


இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து சுனில் நரேன் அதிரடி நீக்கம்

நேற்று நடந்த சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கொல்கத்தா அணியில் சுனில் நரேன் இல்லாதது அந்த அணியின் பவுலிங்கில் நன்றாகவே தெரிந்தது. அதனால் சென்னை அணியால் எளிதில் வெற்றி பெற முடிந்தது. அவரது பந்துவீசும் முறை தவறாக உள்ளது என அவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததால் அவர் பந்து வீச அனுமதிக்கப்படவில்லை.



இந்திய அணி அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் வரும் 8 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்து சுனில் நரேன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவரது பந்துவீச்சு முறையை சரி செய்து கொள்வதற்காக நேரம் கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் கூறியுள்ளது.

இதனால் அவர் மேற்கிந்திய தீவுகளுக்கு கிளம்பினார். அடுத்து தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட உள்ளார். அதற்கு அடுத்து தனது பந்துவீசும் முறை குறித்து ஆய்வு செய்ய உள்ளார். இந்தியாவுக்கு எதிரான தொடரில் நரேன் இல்லாதது அந்த அணிக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும்.

சாவு வீட்டுக்கு போய் வந்தவுடன் ஏன் கட்டாயம் குளிக்க வேண்டும்




நமது உறவினர்களோ அல்லது நண்பர்களோ தெரிந்தவர்களோ என யாராவது இறந்து விட்டால் அவர்கள் இறுதி சடங்குக்கு சென்று விட்டு குளித்து விட்டு தான் வீட்டுக்குள் வருவோம் . இது பண்டைய கால பழக்கம். வெளியில் ஆறு ஏரி போன்றவை இருந்ததால் அங்கு குளித்து விட்டு வருவார்கள். பெண்கள் வீட்டின் பின்பக்கமாக உள்ளே வந்து அங்கே குளித்து விட்டு உள்ளே வருவார்கள். இது இன்றைய காலத்தில் சாத்தியம் இல்லாமல் போனது. ஆனால் யாரும் சாவு வீட்டுக்கு போய் விட்டு குளிப்பதை நிறுத்திவிட வில்லை. வீட்டுக்குள் வந்தவுடன் யாரையும் தொடாமல் முதல் வேலையாக குளிக்க தான் செல்கிறார்கள். இந்த வழக்கத்தை ஏன் கடைப்பிடிக்கிறார்கள். உண்மையான காரணத்தை தெரிந்து கொள்வோம்.

ஒருவர் இறந்தவுடன் அவரது உடலில் இருந்து பல ஆயிரம் விஷ கிருமிகள் வெளியேறும். இது அங்கு சென்று இருக்கும் நம்மை தாக்கும் . இதனை உடனடியாக அப்புறபடுத்த வேண்டும். இல்லையெனில் அது பாதிப்பை ஏற்படுத்தும். அதற்காக தான் சாவு வீட்டில் இருந்து வந்தவுடன் குளிக்கிறார்கள். இதற்கு இன்னொரு காரணமும் இருக்கு. நமக்கு நெருங்கியவர்கள் இறந்துவிட்டால் நாம் மனதளவில் பாதிக்கப்பட்டு உடலளவில் சோர்வு அடைவோம். அப்போது குளிர்ந்த நீரில் குளிக்கும் போது நாம் புத்துணர்ச்சி பெறுவோம். அதற்காகவும் குளிக்க சொல்கிறார்கள்.

இதனை வெளிப்படையாக சொன்னால் யாரும் குளிக்க மாட்டார்கள். அதனால் தான் நம் முன்னோர்கள் , பேய்கள் பிடித்து கொள்ளும் என நம்மை பயமுறுத்தி நம்மை குளிக்க வைத்தார்கள். நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயல்களிளும் பல காரணங்கள் உள்ளது. நாம் தான் அதனை சரியாக புரிந்து கொள்வது இல்லை. 

நேற்றைய போட்டியில் புதிய உலக சாதனை செய்த ரெய்னா மற்றும் அஷ்வின் !!



நேற்று நடந்த சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் சென்னை அணி கொல்கத்தா அணியை வீழ்த்தி கோப்பை வென்றது . இந்தப் போட்டியில் சதம் அடித்த ரெய்னா புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தினார் .

நேற்றையப் போட்டியில் சதமடித்த ரெய்னா இதன் மூலம் உலககோப்பை டி-20 , ஐ.பி.எல் , சி.எல்.டி என அனைத்து விதமான டி-20 போட்டிகளிலும் சதமடித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்தார் . மேலும் டி-20 இல் 200 சிக்சர்கள் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்றார் . இந்த பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் 459 சிக்சர்களுடன் முதல் இடத்தில் உள்ளார் .

அஷ்வின் நேற்றையைப் போட்டியில் பெரிய அளவில் சோபிக்காவிட்டாலும் , நேற்றையப் போட்டியில் ஆடுவதின் மூலம் சி.எஸ்.கே அணிக்காக தொடர்ந்து 100 போட்டிகளில் ஆடிய பெருமைப் பெற்றார் . இவ்வாறு ஒரு கிளப் அணிக்காக தொடர்ந்து 100 போட்டிகளில் இதுவரை 5 வீரர்கள் ஆடி உள்ளனர் .

$100 மில்லியன் அபராதத்திற்கு பயந்து ஹேக்கர் வெளியிட்ட நிர்வாண படங்களை நீக்கியது கூகுள் !!



ஹேக்கர்கள் வெளியிட்ட நிர்வாண படங்களை கூகுள் தனது தளத்தில் வைத்து இருந்ததற்காக தொடரப்பட்ட வழக்கின் அச்சுறுத்தல் காரணமாக கூகுள் தனது தளத்தில் இருந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட படங்களை நீக்கியது .

மார்டின் சிங்கர் என்னும் வழக்கறிஞர் பல நடிகைகளின் சார்பாக கூகுள் நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார் . அந்த கடிதத்தில் கூகுள் நிறுவனம் நடிகைகளின் நிர்வாண படங்களை நீக்க கூகுள் தகுந்த முயற்சிகள் எடுக்கவில்லை என்றும் அந்த படங்களின் மூலம் கூகுள் வருமானம் சம்பாதித்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார் .

இது குறித்து கூகுள் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் , " நாங்கள் அந்த கடிதத்தைப் பெற்ற சில நிமிடங்களில் தங்கள் தளத்தில் இருந்த ஆயிரக்கணக்கான போட்டோக்களை நீக்கி விட்டோம் . இணையம் பல நல்ல விடயங்களுக்கு பயன்படுகிறது . அதில் மற்றவர்களின் தனி நபர் போட்டோக்களை திருடுவது நல்ல விடயம் அல்ல " என்றார் .

ஆம்னி பஸ் உரிமையாளர்களும், திரை உலகமும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஸ்ட்ரைக் செய்வது ஏன்? வெளிவராக தகவல்கள்

திரை உலகமும் ஆம்னி பஸ் உரிமையாளர்களும் ஏன் ஜெயலலிதா சிறையில் இருப்பதற்கு எதிராக போராடுகிறார்கள் என்பது குறித்து விசாரித்ததில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

ஊழலுக்கு எதிராக பல நூறு படம் எடுத்த தமிழ் திரையுலகம் ஊழல் வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை விடுதலை செய்ய கோரி போராட்டம் செய்வது சரியா என்ற கேள்வி எழுந்தது, இதற்கு திரை உலகில் அளிக்கப்படும் பதிலானது.

கடந்த திமுக ஆட்சியில் தமிழ் திரையுலகமே திமுக தலைமை குடும்பத்தின் கட்டுப்பாடின் கீழ் வந்தது அவர்களை கேட்காமல் எந்த நடிகரும் கால்ஷீட் தரமுடியாது, எந்த தயாரிப்பாளரும் படம் எடுக்க முடியாது, எந்த இயக்குனரும் இயக்க முடியாது மீறினால் திரையிடுவதற்கு தியேட்டர் கிடைக்காது, அடிமாட்டு ரேட்டில் இவர்கள் சேனலுக்கு தான் படத்தை விற்க வேண்டும், மீறி எந்த சேனலுக்கும் படத்தை விற்கமுடியாது, இந்த கொடுமையெல்லாம் அதிமுகவின் ஆட்சியில் தான் முடிவிற்கு வந்தது என்பதால் தாங்கள் செய்வது தவறு என்று தெரிந்தாலும் போராட்டங்கள் மேற்கொள்கிறோம் என்கிறார்கள்

திரை உலகம் குறித்த செய்திகள் புதிதல்ல, நாம் ஏற்கனவே அறிந்தது தான், ஆனால் ஆம்னி பஸ்காரர்கள் ஏன் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக போராடுகிறார்கள் என்று விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின, கேபிள் டிவி புழக்கத்துக்கு வந்த காலங்களில் ஏரியாவுக்கு ஏரியா கொஞ்சம் முதலீட்டில் டிஷ்கள் வைத்து வீடுகளுக்கு கேபிள் டிவி கனெக்சன் கொடுத்து சுதந்திரமாக செயல்பட்டு வந்த நிலையில் சுமங்கலி கேபிள் விஷன் என்ற நிறுவனத்தை மாறன் உருவாக்கி அனைத்து ஏரியாக்களின் கேபிள் கனெக்சனும் சுமங்கலி கேபிள் விஷன் வழியாகத்தான் நடைபெற வேண்டும் என்று மிரட்டி சாதித்தனர், இதனால் கேபிள் உரிமையாளர்கள் எல்லாம் மாறன் கம்பெனியின் கலெக்சன் ஏஜென்டாக மாற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இது போன்றே ஆம்னி பஸ் தொழிலில் இறங்கும் ஒரு திட்டத்துடன் திமுக தலைமையின் இன்னொரு பெரிய குடும்பம் செயல்பட திட்டமிட்டது, 2011 தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கு முன் அந்த பெரிய குடும்பத்தின் ஓகே ஓகே போடும் தளபதி தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் ஆம்னி பஸ்களையும் தங்கள் ஆம்னி நிறுவனம் ஆரம்பித்து அதன் கீழ் இணைக்க திட்டமிட்டிருந்தார், இதன் மூலம் தற்போது ஆம்னி பஸ் வைத்திருக்கும் ஓனர்கள் இந்த குடும்பத்தின் கலெக்சன் ஏஜெண்ட்டுகளாக மட்டுமே மாறும் நிலை வந்திருக்கும், இதனால் ஆம்னி பஸ் ஓனர்கள் கடந்த தேர்தலின் போது அதிமுகவுக்கு தாராளமாக நிதியுதவி அளித்தார்கள்.

இப்படி திரை உலகமும், ஆம்னி பஸ் உரிமையாளார்களும் தங்களுடைய தொழிலை காப்பாற்றியதற்கு  செஞ்சோற்று கடன் தீர்க்கவே இந்த போராட்டங்களை நடத்துகிறார்கள்

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

பெண்களுக்கு செக்ஸ் மூட் வர 237 காரணங்கள் இருக்கின்றதாம், சில காரணங்கள் இங்கே
http://www.satrumun.net/2014/09/women-get-romance-mood-for-237-reasons.html

விஜய்டிவி ஜோடி நெ.1 சிம்பு பிருத்வி சண்டை, டிஆர்பிக்காக நடந்த பொய் சண்டை, 7 ஆண்டுகள் கழித்து விஜய் டிவியின் பித்தலாட்டம் வெளிவந்துள்ளது
http://www.satrumun.net/2014/10/will-anything-can-be-done-for-trp.html

கோப்பையை வென்றது சென்னை சிஎஸ்கே அணி, அதற்காக இப்படியா கலாய்ப்பது
http://www.satrumun.net/2014/10/trolls-in-favour-of-csk.html

ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற போகிறார்களா - ஏன் ??
http://www.satrumun.net/2014/10/jayalalitha-to-be-shifted-to-tamilnadu.html

அரசியலுக்கு வர போகிறார் ரஜினி ? ரசிகர் மன்றங்களில் கணக்கெடுப்பு தொடங்கி விட்டது
http://www.satrumun.net/2014/10/rajni-to-give-entry-in-politics.html

விளையாட்டில் இந்தியாவை விட சீனா சிறந்து விளங்குவதற்கு என்ன காரணம்
http://www.satrumun.net/2014/10/china-performs-better-than-india-whats.html

ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை தனியார் பேருந்துகள் ஒடாது
http://www.satrumun.net/2014/10/private-buses-strike-tommorow.html

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் அணி அறிவிப்பு, அஷ்வினுக்கு இடம் இல்லை - காரணம் என்ன ??
http://www.satrumun.net/2014/10/india-vs-west-indies-team-announced.html

கவனமாக இருங்கள் !! இணையத்தில் மிகவும் ஆபத்தான பெயர் செரில் கோல் - ஏன் தெரியுமா ??
http://www.satrumun.net/2014/10/cheryl-cole-the-most-dangerous-celebrity-in-web.html

மோடி பயணம் செய்ய தயாரக இருந்த கூடுதல் விமானத்தில் இருந்து செயலிழந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு !!
http://www.satrumun.net/2014/10/defused-grenade-found-in-modi-standny-flight.html

வாட்ஸ்அப் பிற்கு போட்டியாக கூகுள் தயாரித்து வரும் புதிய அப்ளிகேஷன் !!
http://www.satrumun.net/2014/10/google-planning-to-make-a-free-messaging-app.html

உத்தரப் பிரதேசத்தில் இஞ்சின் இல்லாமல் பின்புறமாக சென்ற இரயில் - பயணிகள் அதிர்ச்சி !!
http://www.satrumun.net/2014/10/train-moved-backwards-in-up.html

பிரிட்டிஷ் பிணைக்கைதி தலையை துண்டித்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு வெறிச் செயல் !! இன்னும் தொடரும் என்று மிரட்டல் !!
http://www.satrumun.net/2014/10/isis-beheaded-another-british-hostage.html

புல்லிலிருந்து பெட்ரோல், இதென்ன புது கதை
http://www.satrumun.net/2014/10/blog-post_15.html

பிளிப்கார்ட்டில் வந்துவிட்டது மோட்டோரோலா 360 வாட்ச் !! விலை - 17,999 ரூபாய் !!
http://www.satrumun.net/2014/10/moto-360-watch-launched-in-flipkart.html

சிரியா பள்ளியில் வெடித்த குண்டு: 41 குழந்தைகள் பலி
http://www.satrumun.net/2014/10/41.html

ஜப்பான் எரிமலைச் சீற்றம்: 47 உடல்கள் மீட்பு
http://www.satrumun.net/2014/10/47.html

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் லேப்டாப் திருட்டு
http://www.satrumun.net/2014/10/blog-post_66.html

ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக ஆண் ஓரின ஆபாச படங்களை பார்க்கின்றனர் - ஆய்வில் தகவல் !!
http://www.satrumun.net/2014/10/what-woman-prefer-to-watch.html

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media