BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 22 September 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

பெண்களுக்கு பிடிக்க‌வே பிடிக்காத ஆண்கள் யார் யார் தெரியுமா?
http://www.satrumun.net/2014/08/which-types-of-men-hate-by-women.html

பேஸ்புக்கில் கழுவி கழுவி ஊற்றப்பட்டு வரும் அஞ்சான் இயக்குனர் லிங்குசாமி
http://www.satrumun.net/2014/09/linguswamy-trolls-and-memes.html

உள்ளாட்சி தேர்தல் தோல்வி, அமைச்சர்கள் பழனியப்பன், எம்.சி.சம்பத் பதவிகள் பறிபோகுமா?
http://www.satrumun.net/2014/09/blog-post_317.html

கணவர் செக்ஸ் டார்ச்சர் செய்வதாக மனைவி போலீசில் புகார், கணவனை தேடும் போலிஸ்
http://www.satrumun.net/2014/09/lady-complaint-to-police-about-her.html

8 வயதில் யுடியுப் வழியாக வருடத்திற்கு 1.3 மில்லியன் டாலர் சம்பாதிக்கும் குழந்தை !!
http://www.satrumun.net/2014/09/8-year-old-kid-earns-1.3million-as-profit.html

இணையதளங்களுக்கு திரைப்பட விழாக்களுக்கு அனுமதி இல்லை என்று கூறிய திரைப்பட சங்க‌ வெட்டி கும்பலுக்கு தமிழ் ஊடகத்தினர் கடும் எதிர்ப்பு!
http://goo.gl/cV95EN

உலகக்கோப்பை கால்பந்தால் கத்தாரில் தினமும் ஒரு மரணம் -  அதிர்ச்சி ரிப்போர்ட்
http://www.satrumun.net/2014/09/blog-post_107.html

லைக்கா – சிறீலங்கா தொடர்புகள்: மேலும் ஆதாரம்
http://www.satrumun.net/2014/09/blog-post_465.html

வேந்தர் டி.சிவாவின் ‘சின்னத்தனம்’  திரைவிழாக்களுக்கு பத்திரிக்கைகள் அனுமதி ஏன் இல்லை என்று போட்டு உடைக்கிறார்- தேனி கண்ணன்!
http://goo.gl/a19u8n

இந்தியாவில் தொலைந்து போன நாணயங்கள் சில, நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
http://www.satrumun.net/2014/09/blog-post_967.html

அதிமுகவின் வெற்றி உண்மையானது அல்ல, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
http://www.satrumun.net/2014/09/admk-winning-is-not-true-bjp-tamilnadu.html

வீட்டில் உருவாக்கிய நீர்மூழ்கிக் கப்பல்: ரூ. 59 லட்சத்துக்கு விற்பனை
http://www.satrumun.net/2014/09/59.html

அணுகுண்டு தாக்குதல் நடத்தினால் பதிலடி: பாகிஸ்தான் புதிய திட்டம்
http://www.satrumun.net/2014/09/blog-post_403.html

உலகப் பொது மொழி வேண்டும்: குமரி அனந்தன் வலியுறுத்தல்
http://www.satrumun.net/2014/09/blog-post_164.html

தென்மேற்குப் பருவமழை 12 சதவீதம் குறைவு
http://www.satrumun.net/2014/09/blog-post_638.html

காஷ்மீர் வெள்ளம் எதிரொலி: ஆப்பிள் விலை கடுமையாக உயர வாய்ப்பு
http://www.satrumun.net/2014/09/blog-post_32.html

உலக மொழிகளில் தாய் - தமிழே - ஜார்ஜ் ஹார்ட் சமஸ்கிரத பட்டதாரி
http://www.satrumun.net/2014/09/blog-post_32.html

இந்திய அணியில் காயம் காரணமாக விலகிய நாடாலுக்கு பதிலாக பெடரர் இணைய உள்ளார் !!



இந்தியாவின் மகேஷ் பூபதியின் உழைப்பினால் உருவான ஐ.பி.டி.எல் என்னும் டென்னிஸ் லீக் போட்டியில் , இந்திய அணிக்கு வலு சேர்க்கும் விதமாக பெடரர் இணைந்துள்ளார் .

இந்தியன் பிரிமியர் டென்னிஸ் லீக் என்னும் போட்டியில் இந்தியா , யுஎஇ , சிங்கப்பூர் , பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து அணிகள் கலந்து கொள்ள உள்ளனர் . இதில் இந்திய அணியில் நட்சத்திர வீரர் ராபேல் நாடால் இடம் பெற்று இருந்தார் . இவர் காயம் காரணமாக விலகினார் . இவருக்கு பதிலாக பெடரர் இடம் பெறுவார் என மகேஷ் பூபதி தெரிவித்தார் . இந்திய அணியில் பிட் சாம்பிராஸ் , அனா இவனாவிக் , கேய்ல் மொன்பிஸ் , சானியா மிர்சா மற்றும் ரோகன் போபண்ணா இடம் பெற்றுள்ளனர் .

ரஷ்யாவின் மரியா ஷரபோவா பிலிப்பைன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார் . இந்த அணியில் தான் அசரென்காவும் உள்ளார் .

இந்த லீக் நவம்பர் 28 ஆம் தேதி பிலிப்பைன்ஸ் மனிலாவில் தொடங்கி டிசம்பர் 13 ஆம் தேதி துபாயில் நிறைவு பெற உள்ளது .

உள்ளாட்சி தேர்தல் தோல்வி, அமைச்சர்கள் பழனியப்பன், எம்.சி.சம்பத் பதவிகள் பறிபோகுமா?

தங்களுக்கு பிடிக்காதவர்களை வேட்பாளராக நிறுத்தினால் அந்த சொந்த கட்சி வேட்பாளர்களையே தோற்கடிப்பதில் வல்லவர்கள் திமுகவினர், பல திமுக வேட்பாளர்கள் பல காலங்களாக இம்மாதிரி சொந்த கட்சிக்காரர்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள். ஆனாலும் திமுக தலைமை தோற்கடித்த கட்சிக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கூட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி, சில இடங்களில் 3வது இடம் பிடித்தும் கூட முக்கியமான பிரமுகர்கள் மீது திமுக பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதிமுகவில் கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்தால் மந்திரியாகவே இருந்தாலும் அவர்கள் பதவி பிடுங்கப்படும், டாக்டர் அன்புமணி தருமபுரியில் வென்றதை அடுத்து அந்த தொகுதி பொறுப்பாளரும் அமைச்சராக இருந்த முனுசாமி அவகளின் பதவி பிடுங்கப்பட்டது, அதிமுக தோல்வி அடைந்த இடங்கள், மிகக்குறைந்த வாக்குவீதத்தில் வெற்றி பெற்ற இடங்களின் பொறுப்பாளர்களின் பதவிகள் கூட பிடுங்கப்பட்டன.

தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் த‌மிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனின் தொகுதியான பாப்பிரெட்டிபட்டிக்கு உட்பட்ட மொரப்பூர் ஒன்றியத்தில், கேத்திரெட்டிபட்டி கவுன்சிலர் இடைத்தேர்தலில் பாமக ஆதரவு பெற்ற சுயேட்சை ராதா என்பவர் வெற்றி பெற்றார். த‌மிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனின் தொகுதியில் ஒரு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக தோல்வியுற்றது அவரது பதவியை பறிக்குமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

கடலூர் மாவட்டத்தில் அதிமுக உட்கட்சி மோதலுக்கு பஞ்சமே இல்லை, கடலூர் சேர்மேனாக இருந்தவர் சுப்பிரமணியன். கடலூர் தொகுதி எம்.எல்.ஏ அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும் அவருக்கும்ஏழாம் பொறுத்தம், இந்நிலையில் சேர்மேன் பதவியை ராஜினாமா செய்தார் சுப்பிரமணியன், இதற்கு காரணம் அமைச்சருடன் இவருக்கு இருந்த உட்கட்சி சண்டைதான் என்றும் இரண்டு தரப்பும் அடுத்தவர் செய்யும் தவறுகளை மாறி மாறி மேலிடத்தில் போட்டுக்கொடுத்துக்கொண்டுள்ளார்கள் என்றும் பேச்சு நிலவுகிறது.

முக்கிய எதிர்கட்சியான திமுக போட்டியிடாத நிலையில் இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் சேர்மேன் தேர்தலில்
அதிமுக வெற்றிபெற்றது, ஆனால் கடலூரில் 42வது வார்டு சுயேட்சை வேட்பாளர் விஜயலட்சுமி அதிமுக வேட்பாளாரை எதிர்த்து 400 வாக்குகளுக்கும் மேல் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த வார்டில் அதிமுகவினர் கூட்டம் போட்டு அதிமுகவை எதிர்த்து யாரும் வாக்களிக்க கூடாது என்று தீர்மாணமே போட்டிருந்தார்கள், ஆனாலும் பாமகவின் முன்னாள் கவுன்சிலர் செந்திலின் மனைவி சுயேட்சையாக போட்டியிட்டு வென்றுள்ளார்.

இரண்டு அமைச்சர்களின் சொந்த தொகுதிகளில் அதிமுக தோல்வி அடைந்ததை அடுத்து இந்த அமைச்சர்களின் பதவி பறிபோகுமா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்

சோனியின் புதிய மொபைல் எஸ்பிரியா இ-3 11,990 ரூபாயில் !!



சோனி தனது புதிய மொபைலை இந்திய சந்தையில் வெளியிட்டுள்ளது . தனது புதிய மொபைலுக்கு எஸ்பிரியா இ-3 என்று பெயரிட்டுள்ளது . இந்த மொபைல் வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் வெளியிட்டுள்ளனர் . இந்த மொபைல் டுயல் சிம் 12,990 ரூபாயில் ஒற்றை சிம் உபயோகிக்கும் மொபைல் 11,990 ரூபாயிலும் விற்கப்படுகிறது .

இந்த மொபைலை சில வாரங்களுக்கு முன் ஜெர்மனியின் பெர்லினில் வெளியிடப்பட்டது . இப்போது தான் இந்தியாவுக்கு வந்து இருக்கிறது .

இந்த மொபைலின் தொடுதிரை 4.5 இன்ச் ஆகும் . 1.2ஜிஹெர்ட்ஸ் குவால்கம் ஸ்னாப்டிராகன் 400 பிராசசர் கொண்டது . மேலும் 1 ஜிபி ராம் மற்றும் 4 ஜிபி இண்டர்நெல் ஸ்டோரெஜ் .


8 வயதில் யுடியுப் வழியாக வருடத்திற்கு 1.3 மில்லியன் டாலர் சம்பாதிக்கும் குழந்தை !!



நாமெல்லாம் 8 வயதில் குச்சி மிட்டாய் சாப்பிட்டுக் கொண்டு இருந்தோம் . ஆனால் எவான் என்னும் 8 வயது குழந்தை இணையம் வழியாக 1.3 மில்லியன் டாலர்கள் சம்பாதித்துள்ளது .

யுடியுபில் எவான் டியுப் எச்.டி என்னும் சேனலில் வருபவர் தான் அந்த எட்டு வயது குழந்தை எவான் . அந்த சேனலில் எவான் பொம்மைகள் பற்றியும் வீடியோ கேம்ஸ் பற்றியும் விமர்சனம் செய்வார் . சில நேரங்களில் அவரது சகோதரி அல்லது அவரது அம்மா சேனலில் விமர்சனம் செய்தார் . இவ்வாறு பொம்மைகளின் விமர்சனம் செய்து 1.3 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார் எவான் .

இது குறித்து எவானின் தந்தை ஜாரெட் கூறுகையில் , " எங்களுக்கு என விளம்பரங்களை கவனிக்க தனியே ஒரு அணி உள்ளது . அவர்கள் விளம்பரம்களை விற்பது குறித்தும் , மற்ற நிறுவனங்களிடம் பேரம் பேசுவது உள்ளீட்ட வேலைகளை கவனித்துக் கொள்வர் . எங்களின் முக்கிய வருமானமே அந்த வீடியோக்களில் வரும் விளம்பரம் மூலம் தான் . மேலும் கூகுள் மற்றும் யு டியுப் மூலமும் விளம்பரம் வருகிறது . " என்றார் .

மோடியை பாராட்டிய நடிகர் மோகன்லால்




ஆசிரியர் தினத்தை யொட்டி கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் உள்ள சிறுவர்களூடன் மோடி கலந்துரையாடினார். இதில் சிறுவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மோடி சிறப்பாக பதில் அளித்தார். மோடியின் இந்த செயலை மலையாள நடிகர் மோகன்லால் வெகுவாக பாராட்டி உள்ளார். அவர் மோடியை பாராட்டி டிவிட்டர் இணையதளத்தில் தனது கருத்தை வெளியிட்டு இருந்தார்.

மோடியின் பதில்கள் பல கோணங்களை கொண்டவையாக உள்ளது. இது தான் எதிர்கால சங்கதியினருக்கு தேவையான ஒன்று என்று கூறியுள்ளார்.

தினம் ஒரு மரணம்

பிரேசிலில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அடுத்த உலகக்கோப்பை 2018-ம் ஆண்டு ரஷ்யாவிலும், அதற்கு அடுத்து 2022-ம் ஆண்டு கத்தாரிலும் நடைபெற இருக்கின்றன. கத்தார் போட்டிக்கு இன்னும் எட்டு ஆண்டுகள் இருக்கின்றன என்றபோதிலும், அதற்கான கட்டுமான வேலைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. உலகம் முழுவதும் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் இதற்காகக் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கொத்தடிமைகளைப்போல நடத்தப்படுகிறார்கள் என்ற விமர்சனங்களும், இதுவரை 900-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மரணம் அடைந்திருக்கிறார்கள் என்ற செய்தியும் அதிரவைக்கின்றன.

‘கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து’ என்ற செய்தியே பலருக்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்தச் செய்தியின் பின்னாலேயே ‘உலகக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா-வுக்கு லஞ்சம் கொடுத்துதான் உலகக்கோப்பை நடத்தும் வாய்ப்பை கத்தார் பெற்றது’ என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து, அதன்மீதான விசாரணைகளும் இப்போது நடைபெற்று வருகின்றன.

இது ஒருபக்கம் இருக்க… தொழிலாளர்களை கத்தார் நடத்தும்விதம்தான் குலைநடுங்க வைக்கிறது. இதுகுறித்து லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி கார்டியன்’ பத்திரிகை நடத்திய புலனாய்வில், தொழிலாளர்கள் கொத்தடிமைகள்போல நடத்தப்படுவதும், மிகச் சிறிய அறைகளில் 12-க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டிருப்பதும், கழிவறையைவிட மோசமான நிலையில் அவர்களின் வசிப்பிடம் இருப்பதும் அதிரவைக்கின்றன.

 தொழிலாளர்களில் 90 சதவிகிதத்தினர், இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்தே சென்றுள்ளனர். இவர்களால் கத்தார் நாட்டின் கொடுமையான வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 105 முதல் 110 டிகிரி வரை வெயில் அங்கு சர்வசாதாரணம். நேபாளம் போன்ற குளிர்நாட்டுத் தொழிலாளி ஒருவர், இந்தக் கொடிய வெயிலை எப்படித் தாங்குவார்? விளைவு… விதவிதமான நோய்கள் தொழிலாளிகளைத் தாக்கி, அவர்கள் செத்து வீழ்கின்றனர். 2012-13ம் ஆண்டில் நேபாளம், இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 964 தொழிலாளர்கள் கத்தாரில் இறந்துள்ளனர். இவர்களில் 246 பேர் திடீர் மாரடைப்பில் மரணம் அடைந்துள்ளனர். 35 பேர் கட்டுமான தளங்களில் இருந்து விழுந்தும், 28 பேர் தற்கொலை செய்துகொண்டும் இறந்துள்ளனர். 2014-ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையில் மட்டும் நேபாளத் தொழிலாளர்கள் 87 பேர் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கைகள் அனைத்தும் அதிகாரபூர்வமானவை. இதே நிலை நீடித்தால், மொத்தமாக உலகக்கோப்பை கட்டுமான வேலைகள் முடிவடையும்போது சுமார் 4,000 தொழிலாளர்கள் இறந்திருப்பார்கள் என்கின்றன அதிர்ச்சி புள்ளிவிவரங்கள். இப்போது, கிட்டத்தட்ட தினசரி ஒருவர் என்ற விகிதத்தில் மரணம் நிகழ்கிறது. இந்தக் கொடுமை ஒரு பக்கம் இருக்க… கடந்த 13 மாதங்களாக தொழிலாளர்களுக்கு ஒரு ரூபாய்கூட சம்பளம் வழங்கப்படவில்லை என்பது இன்னும் பெரிய அதிர்ச்சி.
”கத்தாருக்குப் போனால் வாழ்க்கையின் துயரங்கள் முடிவுக்கு வந்துவிடும் என்று நினைத்து இங்கு வந்தேன். எனக்கு இரண்டு குழந்தைகள். போன் செய்யும்போது எல்லாம் ‘அப்பா, எப்போ ஊருக்கு வருவீங்க?’ என்று கேட்கிறார்கள். ‘பணம் அனுப்பி ஆறு மாசம் ஆச்சு…’ என்று மனைவி தயங்கித் தயங்கிச் சொல்கிறாள். அவளிடம் எனக்குச் சம்பளமே தரப்படவில்லை என்பதையும் நான் பட்டினி கிடப்பதையும் எப்படிச் சொல்வது? நான் கத்தார் வருவதற்காக வாங்கிய கடனுக்கான வட்டி அதிகரிக்கிறது. குடும்பத்தை ஓட்ட என் மனைவி மேலும் கடன்களை வாங்குகிறாள். எனக்கோ ஊருக்குப் போக டிக்கெட் எடுக்கக்கூட காசு இல்லை. ஒன்றுமே புரியவில்லை. நான் ஊருக்குத் திரும்பிப் போவேனா என்பது சந்தேகமாக இருக்கிறது. அனேகமாக இவர்கள் உலகக்கோப்பை நடத்தும்போது என் பிள்ளைகளைக்கூட பார்க்காமல் நான் இங்கேயே இறந்திருப்பேன் என்று நினைக்கிறேன்” என்று பாகிஸ்தானைச் சேர்ந்த யாசின் முகமது பேசுவதைக் கேட்கையில் மனது பிசைகிறது.

சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட பலர் இந்தப் போக்கைக் கண்டித்துள்ள நிலையில், இந்த ஆண்டு வெயில் காலத்தில் பணிபுரிவதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், நடந்த மரணங்களுக்கு நீதியும் இல்லை; தரப்படாத சம்பளம் குறித்த உறுதியும் இல்லை. அரசு, ஒப்பந்த நிறுவனம், அவர்களின் துணை ஒப்பந்த நிறுவனங்கள், அவர்களின் கீழ் வேலைக்கு ஆட்களைச் சேர்க்கும் நிறுவனங்கள் என்று இது ஒரு சங்கிலிபோல நீண்டு செல்வதால், ஒருவரை ஒருவர் கை காட்டி தப்பித்துக்கொள்கின்றனர். 2022-ம் ஆண்டு கத்தாரில் உலகக்கோப்பை நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ள ஜூன், ஜூலை மாதங்களில் அங்கு கடுமையான வெயில் நிலவும். இந்த வெப்பம் விளையாட்டு வீரர்களின் திறனைப் பாதிக்கும், வருகை தரும் ரசிகர்களைப் பாதிக்கும் என்பதால், அதைச் சமாளிக்க என்ன செய்யலாம் என்ற யோசனைகள் பேசப்படுகின்றன. ஆனால், மிகக் கொடுமையான வெயிலில் நேரடியாக நின்று பணிபுரியும் தொழிலாளர்களின் நலன்கள் எந்த வகையிலும் பொருட்படுத்தப்படவில்லை.

உலகக்கோப்பை கால்பந்தால்… ரசிகர்களுக்கு உற்சாகம்; நடத்தும் நிறுவனங்களுக்குப் பணம்; தொழிலாளர்களுக்கு… மரணம்!

லைக்கா – சிறீலங்கா தொடர்புகள்: மேலும் ஆதாரம்

சிறீலங்கா இராணுவ உலங்குவானூர்தியில் சொகுசாகச் சென்று இனப்படுபொலை சிங்கள இராணுவத்துடன் கைகுலுக்க இலங்கைக்குச் சென்ற லைக்கா அதிபர் சுபாஸ்கரன் தனியார் நிறுவனத்திடம் வாடகைக்கு எடுத்துக்கொண்ட ஹெலிக்கொபடரில் பயணம் செய்தார் என்றும், அத் தனியார் நிறுவனம் சிறீலங்கா அரசின் ஹெலிகொப்டர்களை வியாபார நோக்கில் பயன்படுத்தி வருவதாகவும் அதனைச் சிலர் தவறாகப் பிரச்சரம் செய்வதாகவும் கட்டுக்கதை ஒன்றை உலாவ விட்டிருக்கிறார்கள். இதற்கு கட்டாக்காலி இணையமும் வக்காலத்து வாங்கியுள்ளது. முதலில் சிறீலங்காவுக்குச் சென்ற லைக்கா உரிமையாளர் தனியார் நிறுவனத்தின் ஹெலிகொப்டரில் சென்றார் என்பதை அவர்கள் முழுப்பூசணிக்காயை சோற்றுப் பருக்கைக்குள் மறைக்கப்பார்க்கின்றார். அவர்கள் சிறீலங்கா இராணுவத்தின் ஹெலிகொப்டரில் இராணுவத்துடனேயே சென்றார்கள் என்பதற்கான புகைப்பட ஆதரங்கள் மேலும் வெளியாகியுள்ளன. புதிய படத்தில் லைக்கா நிறுவனத்தின் இயக்குனர் சுபாஸ் ஹெலிகொப்டரிலிருந்து இறங்கி நடந்து செல்வதையும், பின்னணியில் புலம்பெயர் நாடுகளில் தென்னிந்திய சினிமாவை வைத்து பணம் சம்பாதிக்கும் ‘கத்தி’ இணைத் தயாரிப்பாளர் ஐங்கரன் பிலிம்ஸ் கருணாகரமூர்த்தியையும், லைக்கா நிறுவனத்தின் முக்கியஸ்தர் பிரேம் சிவச்சாமி சிறீலங்கா இராணுவத்தின் உயர் அதிகாரியால் வரவேற்கப்படுவதையும் காணலாம். 

புலம்பெயர் நாடுகளில் தமிழர்களிடம் பெற்ற இலாபத்தை இலங்கையில் ராஜபக்சவைப் புனிதப்படுத்த முதலிட்ட லைக்கா அதிபர் தனக்கும் ராஜபக்சவிற்கும் தொடர்பில்லை என்று கூறுவது மக்களின் தலையில் மிளாகாய் அரைக்கும் முயற்சி. லைக்கா தொடர்பான பல்வேறு செய்திகள் ஆதாரத்துடன் வந்தபின்னரும் அவற்றை மறைப்பதற்கு பெரும்பாடுபடுகின்றன லைக்கா குழுமமும் அதன் அடிவருடி ஊடகங்களும். இனப்படுகொலை நடத்திய சிறீலங்கா இராணுவத்தோடு கைகுலுக்கிய அதே முகங்கள் தமிழ் நாட்டில் உலவுகின்றனர். ஐங்கரன் வீடியோ நிறுவனத்தின் கருணாகரமூர்த்தியும், சுபாஸ்கரனும் அவர்களது இரத்தக்கறை படிந்த்த கரங்களோடு தென்னிந்திய சினிமா வியாபாரத்திலும் நுழைந்துள்ளார்கள். இலங்கையில் அப்பாவி மக்களின் வரிப்பணத்தை ராஜபக்ச குடும்பத்தோடு இணைந்து கொள்ளையடித்துவிட்டு சமூக சேவை செய்வதாக நாடகமாடுகிறார்கள்.

கணவர் செக்ஸ் டார்ச்சர் செய்வதாக மனைவி போலீசில் புகார், கணவனை தேடும் போலிஸ்

கோயம்புத்தூர் சரவணம்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் கீர்த்தனா (24) என்பவர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தனது கணவர் செக்ஸ் டார்ச்சர் தருவதாக புகார்அளித்துள்ளார்.

 கணவர் மீது அளித்துள்ள புகாரில் கீர்த்தனா கூறியுள்ளதாவது: பி.எஸ்சி படித்திருக்கும் எனக்கும், சத்தியமங்கலத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. சுரேஷ்குமார் மெக்கானிக்கல் எஞ்சினியராக பணியாற்றி வருகிறார், திருமணத்தின் போது என் பெற்றோர் 30 பவுன் நகை மற்றும் 75 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவைகளை வரதட்சணையாக வழங்கினர்.

மேலும் திருமணத்திற்கு 4 லட்ச ரூபாய் வரை செலவு செய்தார்கள். எனது தந்தை சமீபத்தில் இறந்து விட்டார். அவர் இறப்பதற்கு முன் என் தந்தையின் சொத்துக்களை என் பெயருக்கு மாற்றி எழுதி தந்தார். என் தந்தை இறந்த பின் என் பெயரில் உள்ள சொத்துக்களை கணவர் பெயருக்கு மாற்றி  தரவேண்டும் என கணவர் கேட்டார். இதற்கு நான் சம்மதிக்காதலா கோபமடைந்த சுரேஷ்குமார், என் குடும்பத்தினரிடமிருந்து நகை, பணம் வாங்கி தருமாறு கொடுமை படுத்தினார், மேலும் விதவிதமாக என்னை செக்ஸ் டார்ச்சர் செய்தார். அவரின் செக்ஸ் டார்ச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்தற்காக என்னை அடித்து உதைத்தார்.

என் குடும்பத்தினர் சத்திமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். என் கணவர் மீது போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதையடுத்து அனைத்து மகளிர் காவல்நிலையத்தின்  ஆய்வாளர்  பிரியா மாலினி விசாரணை நடத்தி, சுரேஷ்குமார் மீது வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல், மற்றும் தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்.

தொலைந்து போன நாணயங்கள் சில

இந்தியாவில் புழக்கத்திலிருந்த நாணயங்கள் சிலவற்றை இங்கே காணலாம்.

அதிமுகவின் வெற்றி உண்மையானது அல்ல, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் பெரும்பாலான இடங்களில் அதிமுக பெரும்பாண்மை ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் தேர்தலே நடக்காமல் எந்த எதிர்ப்புமின்றி வெற்றி பெற்றுள்ளார்கள், திமுக, தேர்தலை புறக்கணிக்க, தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் போட்டியிடுவதில் ஆர்வம் காட்டாமல் இருந்த நிலையில் பாஜக மட்டும் பல இடங்களில் போட்டியிட்டது.

நெல்லை மேயர் வேட்பாளார் உட்பட பல பாஜக வேட்பாளர்கள் வேட்புமனுவை வாபஸ் வாங்கிக்கொண்டு அதிமுகவில் சேர்ந்தனர், இன்று வெளிவந்த தேர்தல் முடிவுகளில் ஒரு சில இடங்கள் தவிர அனைத்து இடங்களையும் அதிமுக வென்றது, இது குறித்து பாஜக‌ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது உள்ளாட்சி இடைத்தேர்தலை சந்தித்ததை நாங்கள் மகிழ்ச்சியாக நினைக்கிறோம். மிரட்டலுக்கு அஞ்சி சிலர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றிருக்கலாம். ஆனால், ஆளுங்கட்சியினரின் தாக்குதல், மிரட்டலுக்கு அஞ்சாமல் பலர் கடைசி வரை களத்தில் நின்றனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பல இடங்களில் பாஜக வினர் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளனர். சில இடங்களில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

இந்த தேர்தல் மூலம், ஆளுங்கட்சிக்கு எதிராக வளர்ந்து வரும் கட்சியாக பாஜ உருவாகியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் தனிப்பெரும் கட்சியாக பாஜ உருவெடுக்கும் என்றார்

பேஸ்புக்கில் கழுவி கழுவி ஊற்றப்பட்டு வரும் அஞ்சான் இயக்குனர் லிங்குசாமி

இயக்குனர் லிங்குசாமி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது மொத்த வித்தையையும் அஞ்சான் படத்தில் இறக்கி இருப்பதாக ஒரு பேட்டி அளீத்தார். ஆனால் அஞ்சான் படம் தோல்வியடைந்தது. அதனால் லிங்குசாமியின் மொத்த வித்தையை எல்லாரும் கலாய்த்து வருகிறார்கள். பேஸ்புக்கில் அவரை கலாய்த்து பல பக்கங்கள் தொடங்கப்பட்டு விட்டது.






























வீட்டில் உருவாக்கிய நீர்மூழ்கிக் கப்பல்: ரூ. 59 லட்சத்துக்கு விற்பனை

ஸ்வீடனில் இளைஞர் ஒருவர் தன் வீட்டில் உருவாக்கிய நீர்மூழ்கிக் கப்பல் இணையதளம் மூலம் 98,500 டாலருக்கு (சுமார் ரூ. 59 லட்சம்) ஏலம் முறையில் விற்பனையானது.

ஸ்வீடனைச் சேர்ந்த எரிக் வெஸ்டர்பர்க் என்பவர், இரண்டு ஆண்டு காலமாக சிறிது, சிறிதாக பொருள்களைச் சேர்த்து இதனை உருவாக்கினார். ஆறு மீட்டர் நீளம், 8,500 கிலோ எடை கொண்ட இந்த நீர்மூழ்கியை 2007-ஆம் ஆண்டே இவர் உருவாக்கிவிட்டார். "இஸபெல்' எனப் பெயரிடப்பட்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல், ஸ்வீடனின் பல பகுதிகளில் காட்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதனை விற்பனை செய்வது எனத் தீர்மானித்து இணையதளத்தில் விளம்பரம் செய்தார். உலகின் பல பகுதிகளிலிருந்தும் இதனை வாங்க ஆர்வம் எழுந்ததைத் தொடர்ந்து, ஏலம் முறையில் இது விற்பனை செய்யப்பட்டது. சொந்தமாக ஒரு நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்க நினைத்து அதற்கான தொழில்நுட்ப வரைபடங்களை இணையதளத்தில் தேடினேன். அது கிடைக்காததால், நானே பொது அறிவைக் கொண்டு இதனை உருவாக்கினேன். 3,500 மணி நேர உழைப்பு இதன் பின்னுள்ளது'' என்று எரிக் வெஸ்டர்பர்க் குறிப்பிட்டார்.

அணுகுண்டு தாக்குதல் நடத்தினால் பதிலடி: பாகிஸ்தான் புதிய திட்டம்

அணுகுண்டு தாக்குதலுக்கு ஆளாகினால், கடல் பகுதியில் இருந்து அணுகுண்டுகள் தாங்கிய சிறிய ரக ஏவுகணைகள் மூலம் பதில் தாக்குதல் நடத்தும் வகையில் புதிய திட்டத்தை பாகிஸ்தான் உருவாக்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அமெரிக்காவின் "தி வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழில் ஞாயிற்றுக்கிழமை வெளியான செய்தி விவரம்:  பாகிஸ்தானின் நிலப்பரப்பில் அந்நாட்டு அரசால் அமைக்கப்பட்டுள்ள ராணுவ மையங்கள் அனைத்தும் அணுகுண்டு தாக்குதலுக்கு ஆளாகி முற்றிலும் அழிய நேரிட்டாலும், அதற்கு பதிலடி தரும்வகையில் புதிய திட்டத்தை அந்நாட்டு அரசு உருவாக்கியுள்ளது.

அந்தத் திட்டத்தின்படி, அந்நாட்டு போர்க்கப்பல்கள் அல்லது நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து அணுகுண்டுகளை ஏந்திச் சென்று குறுகிய தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கக்கூடிய "க்ரூஸ்' ஏவுகணைகளைத் தயாரிக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. அநேகமாக இந்தத் திட்டம் அடுத்த ஆண்டுக்குக்குள் தயாராகிவிடும் என்று இஸ்லாமாபாதில் உள்ள பாதுகாப்பு உயர்கல்வித் துறை நிறுவன முன்னாள் இயக்குநரும், அணுசக்தி விஞ்ஞானியுமான ஷிரீன் எம்.மாஸாரி கூறியுள்ளார் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உலகப் பொது மொழி வேண்டும்: குமரி அனந்தன் வலியுறுத்தல்

உலகைத் தொடர்பு கொள்ள ஆங்கிலம் அல்லாத உலகப் பொது மொழி வேண்டும் என்று காங்கிரஸின் மூத்தத் தலைவர் குமரி அனந்தன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து குமரி அனந்தன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:- ஐ.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் அழிவின் விளிம்பில் நிற்கும் நூறு மொழிகளில் 8-ஆவது இடத்தில் தமிழ் மொழி உள்ளது. இது வருந்தத்தக்க விஷயமாகும்.

தமிழ் வழிக் கல்வியின் மூலம் தமிழ் என்றும் நின்று நிலைக்கும். தாய்மொழி மூலம் அறிவை வளர்த்துக் கொள்ளலாம். ஆனால் உலகத்தோடுத் தொடர்பு கொள்ள உலகப் பொது மொழி தேவை. பிரான்ஸ், ஜெர்மனி, சோவியத் யூனியன், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் அவரவர் மொழியிலேயே விளக்கங்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளைச் சேர்ந்த எவருமே ஆங்கிலத்தை உலகப் பொது மொழி என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஐ.நா. சபையின் கல்வி, அறிவியல் பண்பாட்டு அமைப்புக்கு உலகப் பொது மொழியை உருவாக்க முன்வர வேண்டும் என 1992-ஆம் ஆண்டு கடிதம் எழுதினேன். இதற்கு பதிலளித்த அந்த அமைப்பு, "பொது மொழி குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையே முடிவு செய்ய முடியும். இதனை ஐ.நா. சபையின் உறுப்பு நாடு வரைவுத் தீர்மானமாக அனுப்பி வைத்தால் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அதை ஆராய்ந்து முடிவெடுக்கும்' என பதிலளித்தது. இதுகுறித்து இந்தியா ஒரு வரைவுத் தீர்மானத்தை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாய்மொழியையும், உலகப் பொது மொழியையும் மக்கள் அனைவரும் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்று குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்.

தென்மேற்குப் பருவமழை 12 சதவீதம் குறைவு

இந்தியாவில் நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை 12 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது. நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை காலத்தில் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் மழை பெய்யும். ஆனால், நிகழாண்டு வெப்பச்சலனம், பருவமழையின் தாக்கம் ஆகியவற்றின் காரணமாக தமிழகத்திலும் மழை பெய்தது. கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் செப். 17-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, நாட்டில் 12 சதவீதம் குறைவாக மழை பெய்தது. இந்த காலகட்டத்தில் நாட்டில் 824.3 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 729.2 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது.

தென்னிந்திய தீபகற்பத்தில் 4 சதவீதம் குறைவான மழையும், மத்திய இந்தியாவில் 6 சதவீத குறைவான மழையும் பெய்துள்ளது. வடமேற்கு இந்தியாவில் 20 சதவீதமும், வடகிழக்கு இந்தியாவில் 16 சதவீதமும் குறைவான மழை பெய்துள்ளது. கோவையில் கூடுதல்: நிகழாண்டு வெப்பச்சலனம், பருவமழையின் தாக்கம் ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் அதிகளவு மழை பெய்தது. ஜூன் 1-ஆம் தேதி முதல் செப். 17-ஆம் தேதி வரை தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில் வழக்கத்தை விட 329 சதவீதம் கூடுதலாக மழை பெய்தது. இந்தக் காலத்தில் கோவையில் 150.3 மி.மீ. மழை பெய்யும். ஆனால் 645.1 மி.மீ. மழை பெய்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் 32 சதவீதமும், நீலகிரியில் 25 சதவீதமும் கூடுதல் மழை பெய்துள்ளது. தேனியில் 122 சதவீத கூடுதல் மழை பெய்துள்ளது. 14 மாவட்டங்களில் சராசரி மழையும், 14 மாவட்டங்களில் குறைவான மழையும் பெய்துள்ளது. மொத்தமாக தமிழகத்தில் சராசரி மழை பெய்துள்ளது. முடியும் தருவாயில் பருவமழை காலம்: தென்மேற்குப் பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதத்தில் முடியும். 

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை முடியும் தருவாயில் உள்ளது. ஓரிரு நாள்களில் தென்மேற்கு பருவமழை நிறைவு பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்குப் பருவமழை காலம் முடிந்தவுடன், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கும்

காஷ்மீர் வெள்ளம் எதிரொலி: ஆப்பிள் விலை கடுமையாக உயர வாய்ப்பு

நீலகிரி ஆப்பிள் அறுவடை முடிவடைந்ததாலும், காஷ்மீரில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆப்பிள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாலும் ஆப்பிள் விலை கடுமையாக உயரத் துவங்கியுள்ளது. நீலகிரிக்கு பெரும்பாலும் காஷ்மீரில் இருந்துதான் ஆப்பிள்கள் விற்பனைக்கு வருகின்றன. இங்கு சிம்லா ஆப்பிள்களும் கணிசமான அளவு விற்கப்படுவதுண்டு.

இந் நிலையில், குன்னூரில் உள்ள சிம்ஸ்பார்க் பழவியல் பண்ணையில் உள்ள மரங்களில் ஆப்பிள் அறுவடை முடிந்ததாலும், காஷ்மீரில் வெள்ளப்பெருக்கு
ஏற்பட்டுள்ள காரணமாகவும் சிம்லாவில் இருந்து வரும் ஆப்பிள்களை நம்பியே தற்போது பழ வியாபாரிகள் உள்ளனர். சில வாரங்களுக்கு முன் ஒரு கிலோ ஆப்பிள் ரூ.120 முதல் ரூ. 130 வரை விற்கப்பட்டது.
தற்போது கிலோ ரூ.140 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது. இன்னும் சில நாள்களில் ரூ.200 வரை விலை உயர வாய்ப்பு இருப்பதாக பழ வியாபாரிகள் தெரிவித்தனர்.

உலக மொழிகளில் தாய் - தமிழே

வணக்கம் தமிழ் நெஞ்சங்களே, நான் ஜார்ஜ் ஹார்ட் பேசுகிறேன். என்னைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம் தருகிறேன்.

நான் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் சம்ஸ்கிருத மொழியில் பட்டம் பெற்றேன். நான் முதன் முதலாக சம்ஸ்கிருத பேராசிரியராக விஸ்கான்சின் பல்கலைகழகத்தில் பணியாற்றினேன். பின்னர் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் ஆண்டு முதல் நான் தமிழ் பேராசிரியாராக பணிபுரிந்து வருகிறேன். அதோடு மட்டுமில்லாமல் தமிழ் தலைமைபீடத்தின் பொறுப்பாளராக அந்த பல்கலைகழகத்தில் இருந்து வருகிறேன்.

எனக்கு ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் மட்டுமல்லாது தொன்மை வாய்ந்த லத்தீன், கிரேக்கம் போன்றவைகள் நன்றாக தெரியும், அந்த மொழிகளில் எழுதபட்டிருக்கும் இலக்கியங்களை அதன் மூல மொழியில் நன்றாக அலசி ஆராய்ந்து இருக்கிறேன். இது தவிர ஐரோப்பா மொழிகளில் ரஷ்யா, ஜெர்மன், பிரெஞ்ச் போன்ற மொழிகளில் படித்து இருக்கிறேன். அதோடு மட்டுமில்லாமல் தமிழ், சமஸ்கிருதம் மற்றும் மலையாளம் அல்லாத இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களை மொழிபெயர்ப்பில் படித்து இருக்கிறேன். தெலுங்கு மொழியில் உள்ள இலக்கியங்கள் குறித்து அதிகம் தெலுங்கில் புலமை பெற்ற நாராயண ராவ் அவர்களிடம் விவாதம் செய்து இருக்கிறேன். இந்தி இலக்கியங்களை அதிகம் படித்து இருக்கிறேன், குறிப்பாக மகாதேவி வர்மா, துளசி மற்றும் கபீர் போன்றவர்களின் படைப்பை வாசித்து இருக்கிறேன்.

எனது மொத்த வாழ்நாள் காலங்களை சமஸ்கிருதம் படிப்பதில் அதிகமாக செலவழித்து இருக்கிறேன். காளிதாசர், மகா, பைரவி, ஹர்சா, ரிக் வேதங்கள், உபநிடதங்கள், மகாபாரதம், கதாசரிதசாகரா, ஆதிசங்கரரின் எழுத்துகள் என எல்லாம் சமஸ்கிருதத்தில் படித்து இருக்கிறேன். இதை எல்லாம் நான் சொல்வதற்கு காரணம் என்னவெனில் எனது பல மொழிகளின் புலமையை வெளிப்படுத்த அல்ல, தமிழ் செம்மொழி என்பதை சொல்வதற்கு நான் தகுதியானவன் என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்டவே இதை சொல்கிறேன்.

பாரதியார் குறிப்பிடுவதை போல 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்பது நூற்றுக்கு நூறு உண்மை. அதே வாக்கியங்களை சொல்வதற்கு எனக்கும் அருகதை இருப்பதாக கருதுகிறேன். எந்த ஒரு அடிப்படை காரணம் எடுத்தாலும், தமிழ் மொழி மிகவும் தொன்மையான, மரபு சார்ந்த ஒரு அழகிய மொழி என்பதை ஆணித்தரமாக என்னால் அடித்து சொல்ல முடியும்.

இதற்கான காரணங்கள் பல உண்டு எனினும் நான்கு காரணங்கள் மட்டும் குறிப்பிட விழைகிறேன். முதலில் தமிழ் தொன்று தொட்டு பேசப்பட்டு வரும் மொழியாகும். குறிப்பாக தொல்காப்பியம் தனை சொல்லலாம். பிற இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களை விட தமிழ் இலக்கியங்கள் ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்தது. மிகவும் பழமை வாய்ந்த சங்கம் வளர்த்த தொகை நூல்கள் பல. தமிழில் பத்துப்பாட்டு போன்ற கவிதை இலக்கியங்கள் காளிதாசரின் எழுத்துகளை விட குறைந்தது இரு நூறு வருடங்கள் முன்னர் இருந்தது ஆகும்.

இரண்டாவதாக தமிழ் மொழி மட்டுமே சமஸ்கிருதத்தில் இருந்து எந்த ஒரு கலாச்சாரத்தையும் தன்னில் எடுத்த செல்லாத மொழியாகும். சமஸ்கிருதத்தின் ஆதிக்கம் வருவதற்கு முன்னரே தமிழ் தன்னில் ஒரு பெரிய இலக்கியத்தை தன்னளவில் படைத்து வளர்த்து கொண்டிருந்தது அதோடு மட்டுமில்லாமல் தமிழ் மொழி மட்டுமே பிற இந்திய மொழிகளில் இருந்து தனித்தன்மை பெற்று இருந்தது. தமிழின் சொந்த இலக்கணங்கள், கவிதை விதிமுறைகள், அழகியல் கோட்பாடு என தமிழ் தனித்துவம் பெற்று விளங்கியதை எவரும் மறுக்க இயலாது. மிகவும் பழைய, மிகவும் பெரிய பாரம்பரியத்தை தமிழ் பெற்று இருந்தது என்பதே சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் தனித்து இருந்தது எனலாம்.

மூன்றாவதாக தமிழ் இலக்கியங்களில் தரமானது பத்தரை மாத்து தங்கமானது. இதுவே தமிழ் இலக்கியங்களை பிற மொழிகளின் இலக்கியங்கள், சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், சைனீஸ், பெர்சியன், அராபிக், இருந்து வேறுபடுத்தி காட்டி கொண்டிருந்தது. திருக்குறள் பற்றி நான் சொல்லித்தான் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டுமா? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல பல தரம், திறம் வாய்ந்த இலக்கியங்கள் கொண்ட தமிழ் மொழிக்கு அழகு சேர்ப்பது திருக்குறள். இந்த தமிழ் இலக்கியம் எல்லாவிதமான மனித இருப்புதனை பட்டைதீட்டி கூர் பார்த்துவிட்டது எனலாம், மனித இருப்புதனை தொடாத இடமே இல்லை என சொல்லலாம்.

இறுதியாக தமிழ் மொழிதான் இந்திய மொழிகளின் மூல காரணி என்பதை குறித்து நிறையவே எழுதி இருக்கிறேன். தென்னிந்திய கலாச்சாரம் எப்படியெல்லாம் சமஸ்கிருதத்தை பாதித்து உள்ளது என்பது சம்ஸ்கிருத இலக்கியங்களில் தென்படும். தமிழ் இந்து மத கோட்பாடுகள், சங்க தொகை நூல்கள், எல்லாமே பகவத் புராணம் போன்றவைகள் மட்டுமல்ல, கன்னடம், பிற மொழி இலக்கியங்களில் கையாளப்பட்டு இருக்கிறது. தமிழ் மொழியின் புனித தன்மையால் அவை வேதங்களுக்கு நிகரானவை, அதன் காரணமாகவே திருப்பதி போன்ற பெரிய தலங்கள் முதற்கொண்டு பல தென்னிந்திய தலங்களில் வேந்தங்களுக்கு நிகராக தமிழ் மொழி ஓதப்பட்டு வருகிறது. எப்படி சமஸ்கிருதம் இந்திய-ஆரியர்களின் மூல மொழியாக இருக்கிறதோ அதைப்போல தமிழ் மொழி பல தென்னிந்திய மொழிகளின் மூலம் என சொல்லலாம்.

தமிழை செம்மொழி இல்லை என மறுப்பவர்கள் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என சொல்லக்கூடிய வகையை சேர்ந்தவர்கள். செம்மொழி எனும் தகுதி எந்த ஒரு மொழிக்கும் இந்த உலகில் இடம் இல்லை, தமிழை தவிர. ஒரு செம்மொழி என அதற்கு பழமையானது, தனித்துவம் பெற்று தனக்கே உரிய மரபு கொண்டது, பழமையான இலக்கியங்கள் கொண்டது என பல காரணிகள் பார்க்கும்போது தமிழ் ஒன்றே அதற்கு தகுதியானது ஆகும்.

இதை எல்லாம் உங்களிடம் சொல்வதற்கு நான் மிகவும் விந்தையாக, அதிசயமாக உணர்கிறேன். ஏனெனில் இந்தியா மாபெரும் தேசம், இந்து மதம் உலகின் மிக சிறந்த மதம் என எவரும் சொல்லியா தெரிய வேண்டும். தமிழ் மொழி பற்றி தெரிந்தவர்கள் ஒருபோதும் தமிழ் செம்மொழி என்பதை மறுக்க மாட்டார்கள்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media