BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 29 July 2013

தீவிரமாகும் கூர்க்காலேண்ட் போராட்டம், வாய்தா மேல் வாய்தா நீதிமன்றத்தில் கழுத்தை அறுத்துக்கொண்டவர், மேலும் செய்திகள்

தெலுங்கானாவை அடுத்து கூர்க்காலாந்து தனி மாநிலம் அமைக்க முழு அடைப்புப் போராட்டம் 

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா உருவாக்குவது போல மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியை கூர்க்காலாந்து தனி மாநிலமாக அமைக்க வலியுறுத்தி 72 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

மேற்கு வங்க மாநிலத்தில் டார்ஜிலிங்கை சுற்றிய மலைப் பகுதிகளை ஒருங்கிணைத்து கூர்க்காலாந்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்பது 20 ஆண்டு கால கோரிக்கை. இக்கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்களில் முன்பு பலர் உயிரிழந்துள்ளனர், ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கான உருவாகப்போவது உறுதியான கட்டத்தில் கூர்க்காலாந்து கோரிக்கை வலுத்துள்ளது.
-----------------
வாய்தா மேல் வாய்தா , சென்னை உயர்நீதிமன்றத்தில் தொண்டையை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்ய முயன்ற இளைஞர்

எம்.பாலசுப்ரணமியம் என்ற 30 வயது இளைஞர் 4 ஆண்டுகளுக்கு முன் மோட்டார் சைக்கிளில் ஒருவரை மோதி விபத்துக்குள்ளான வழக்கு இழுத்துக்கொண்டே சென்றதால் சம்பவ தினத்தன்றும் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டதால் தன் தொண்டையை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிப்பறையில் மேற்கொண்டுள்ளார், மயங்கி விழுந்தவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். இவர் தாம்பரம் அருகில் உள்ள முடிச்சூரில் உள்ள தனியார் மனநல மருத்துவமனையில் மனநல பிரச்சினைக்காக சிகிச்சை எடுத்துவருவதாகவும் மனநிலை சரியில்லாமல் இருந்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

# இவரென்ன அரசியல்வாதியா? வாய்தா மேல் வாய்தா வாங்க?

தீவிரவாதிகளை சுட வக்கில்லாத போலிஸ் சிறுவனை சுட்டு கொன்றுள்ளது - கரண் பாண்டேவின் தாய்

தீவிரவாதிகளை சுட வக்கில்லாத போலிஸ் சிறுவனை சுட்டு கொன்றுள்ளது - கரண் பாண்டேவின் தாய்

பாராளுமன்ற கட்டிடத்தின் அருகில் உள்ள சாலையில் பைக் ரேஸ் மேற்கொண்ட 30 இளைஞர்களை நிறுத்தும் பொறுட்டு போலிஸ் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் கரண் பாண்டே என்ற இருவது வயது இளைஞர் கொல்லப்பட்டார், இதை விமர்சித்த அவரது தாய் மஞ்சு தீவிரவாதிகளையும் கிரிமினல்களையும் சுட வக்கில்லாத போலிஸ் இந்த சிறுவனை சுட்டு கொன்றுள்ளது என்றும் இதற்கு காரணமான போலிஸ்காரரை சட்டத்தின் முன் நிறுத்தி தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார்

மணல் மாஃபியாவை எதிர்த்த ஐஏஎஸ் அதிகாரி பொய்குற்றச்சாட்டில் சஸ்பெண்ட்

மணல் மாஃபியாவை எதிர்த்த ஐஏஎஸ் அதிகாரி பொய்குற்றச்சாட்டில் சஸ்பெண்ட்

துர்கா சக்தி நாக்பல் என்ற சப்-டிவிஷனல் மேஜிஸ்ட்ரேட்டை சஸ்பெண்ட் செய்துள்ளது அகிலேஷ் யாதவின் உத்திர பிரதேச அரசு. சட்டத்துக்கு புறம்பாக அனுமதியின்றி அரசு நிலத்தில் கட்டப்பட்ட மசூதியின் கட்டடப்பணியை நிறுத்த சொன்னதும் அதை இடிக்க சொன்னதும் ரம்ஜான் மாதத்தில் சமூக அமைதியை குலைக்கும் செயல் என்று கூறி அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது.

ஆனால் துர்கா சக்தி நாக்பல் என்ற இந்த ஐஏஎஸ் பெண் அதிகாரி கிரேட்டர் நொய்டா பகுதியில் இயங்கி வந்த சட்டத்துக்கு புறம்பான மணல் கொள்ளைகளை தடுத்து வந்துள்ளார், 300க்கும் மேற்பட்ட மணல் லாரிகளை மடக்கி பிடித்துள்ளார். இதனால் கோபமடைந்த மணல் மாஃபியா தான் இதை செய்துள்ளது என்று கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

எதிர்கட்சி பாஜகவினர் மற்றும் மேலும் பலர் நல்ல அதிகாரிகளை அவமானப்படுத்தும் செயல் என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

# இருக்கிற ஒன்றிரண்டு நேர்மையான அதிகாரிகளையும் இம்மாதிரி தண்டிக்கிறார்கள்.

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றி

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றி, தொடரை வென்றது இந்தியா, இந்த ஆண்டின் 4 வது தொடர் வெற்றி

ஏற்கனவே ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் 2 ஒரு நாள் போட்டிகளில் வென்றிருந்த இந்திய அணி ஹராரேயில் நேற்று நடந்த 3வது ஒருநாள் போட்டியிலும் வென்றது. இதன் மூலம் 5 போட்டிகளில் முதல் மூன்று போட்டிகளையும் வென்றும் 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி ஜிம்பாப்வேயை முதலில் பேட் செய்ய அழைத்தார். ஜிம்பாப்வே அணி 46 ஓவர்களில் 183 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 35.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 187 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

இந்திய அணிக்கு இது வெற்றி ஆண்டாக உள்ளது இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர், சாம்பியன்ஸ் கோப்பை, மேற்கிந்திய தீவுகளில் நடந்த முத்தரப்பு தொடர் ஆகியவற்றிலும் இந்தியா வென்றுள்ளது, இது நான்காவது வெற்றியாகும்.

# ஆல் தி பெஸ் டீம் இந்தியா

India won the series against Zimbabwe cricket team 
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media