கடந்த ஆண்டு ஜுலை மாதம் அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் இளவரசன் - திவ்யா காதல் விவகாரம். இந்த இருவரின் காதல் விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது, ஒரு தரப்பு இது நாடகக்காதல் என்றும் மற்றொரு தரப்பு இதை சாதிவெறி என்றும் கூறியது.
திவ்யா இளவரசனை விட்டு பிரிந்து தனது தாயுடன் வாழப்போவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியதை அடுத்து இளவரசனை விட்டு பிரிந்து சென்றார், தந்தை தற்கொலை செய்து கொண்டதால் அனாதையாகி உள்ள தாயையும் தம்பியையும் காப்பாற்றவே தான் வீட்டிற்கு திரும்புவதாக தெரிவித்தார். இது தொடர்பாகவும் வழக்குகள் நடந்தன, இந்நிலையில் கடந்த ஜுலை 4 ஆம் தேதி அன்று இளவரசன் தருமபுரியில் உள்ள ரயில்வே லைனில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார், அது கொலை என்றும் இல்லை தற்கொலை என்றும் இரு தரப்பாலும் மாறி மாறி கூறப்பட்டது. பலமுறை இளவரசனின் உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது, டில்லியிலிருந்து எய்ம்ஸ் மருத்துவர்கள் போர்ட்மார்ட்டம் செய்தனர், அதனை அடுத்து இளவரசன் தற்கொலை செய்து கொண்டார் என்று அரசும் மருத்துவர்களும் அறிவித்தனர், ஆனால் இது கொலை என்றும் அது அது தொடர்பான வழக்கு இன்னும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தரும்புரியில் ஜூலை 4 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இளவரசனுக்கு அஞ்சலி செலுத்த போவதாக அறிவித்ததை அடுத்து பரபரப்பு கிளம்பியது, தருமபுரி வட்டம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது,
இன்று அவர் இறந்து ஒரு ஆண்டு ஆவதால் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அவரது தந்தை மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டு இருந்தார். ஆனால் அவர்கள் அனுமதி வழங்கவில்லை. எனவே இந்த வழக்கும் நீதிமன்றம் சென்றது.
இப்போது சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதில் அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் ,நலம் விரும்பிகள் என 50 பேருக்கு மிகாமல் செல்ல வேண்டும். அவர்கள் ஓரே வரிசையில் அனுமதிக்க படுவார்கள். அரசியல் தலைவர்களுக்கு அனுமதி இல்லை. அவர்கள் எந்த பொதுகூட்டங்களும் நடத்த கூடாது.