BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 21 October 2014

கத்தி படம் நாளை ரீலிஸ் !! லைக்கா பெயர் நீக்கியதால் பிரச்சனை தீர்ந்தது ..



நடிகர் விஜய் நடித்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவர உள்ள திரைப்படம் கத்தி !! படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்பதால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் இருந்து வந்தது .

இந்நிலையில் நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் . அந்த அறிக்கையில் தயாரிப்பாளர்கள் தங்களது பெயரை எடுக்க ஒப்புக் கொண்டதால் , பிரச்சனை சுமூகமாக முடிந்தது . மேலும் கத்தி படம் எதிர்பார்த்தப்படி நாளை ரீலிஸ் ஆகும் என்று தெரிவித்து இருந்தார் . மேலும் அந்தா அறிக்கையில் , அதிமுக தலைவர் அம்மா அவர்களுக்கும் நன்றி தெரிவித்து இருந்தார் . மேலும் ரசிகர்களை படத்தை சந்தோஷமாக கண்டுகளிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன் என்று கூறி இருந்தார் .


மேலும் பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு முன்வந்துள்ளதால் திரையரங்க உரிமையாளர்கள் நாளைப் படத்தை வெளியிட முன்வந்துள்ளனர் . இதனால் டிக்கெட் புக்கிங்க் தொடங்கிவிட்டது . 

தமிழர்களாகிய கமல், விஜய் படங்களுக்கு மட்டும் ஏன் தமிழகத்தில் பிரச்சனை ???


தமிழர்களாகிய கமல், விஜய் படங்களுக்கு மட்டும் தமிழகத்தில் பிரச்சனையா  ???



இளையதளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடித்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கத்தி. இந்த படம் தமிழகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் விஜய் - முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த துப்பாக்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் கத்தி படத்துக்கு ஆரம்பத்தில் இருந்து பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது. எல்லாத்துக்கும் முக்கிய காரணம் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தான். அந்த நிறுவனம் பல இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷேவுக்கு சொந்தகாரர்களின் நிறுவனம் என்பதால் தான்.

இதற்காக தான் ஆரம்பத்தில் இருந்து பிரச்சனை செய்து வருகிறது. அதனால் படத்தை தீபாவளிக்கு வெளிவர விடாமல் தடுத்து வருகிறது. அவர்களது பிரச்சனை லைகா தான் என்றால் இதற்கு முன்னர் அவர்கள் இசைஞானி இளையராஜாவின் இசை கச்சேரியை தயாரித்து உள்ளார்கள். லைகா நிறுவனத்தின் முதல் படமே சேரன் நடித்த 'பிரிவோம் சந்திப்போம்' தான். அப்போது எந்த பிரச்சனையும் வரவில்லை.  மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஒரு ஸ்பான்சராக இருந்து உள்ளார்கள். அப்போது எல்லாம் ஏன் அமைதியாக இருந்தார்கள். இதில் இருந்தே தெரிகிறது அவர்கள் பிரச்சனை விஜய் தான் என்று. பல இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த போது அமைதியாக வேடிக்கை பார்த்து விட்டு இப்போது வந்து அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திருமாவளவன் சொல்கிறார், லைகா நிறுவனம் தயாரித்து இருப்பதால் கத்தி படத்தை தடை செய்ய வேண்டும் என்று . தமிழர்களுக்கு ஆதரவாக இவர் இருக்கிறார் என்பதை காட்டுவதற்காக இப்படி செய்கிறார்

. இலங்கை சென்று ராஜபக்ஷேவுடன் கை குலுக்கி கட்டிபிடித்த போது இவரது தமிழர் பாசம் எங்கே போன்து. லைகா என்னும் ஒரு வார்த்தையை போடுவதால் எந்த பிரச்சனையும் வரபோவது இல்லை. லைகா என்னும் வார்த்தையை யாரும் பார்க்க போவது கூட இல்லை. இவர்கள் தான் வீணாக அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

விஜய்யின் படத்துக்கு பிரச்சனை வருவது இது முதல் முறையல்ல . காவலன் படத்தின் போது திமுக அரசு பிரச்சனை செய்தது. துப்பாக்கி படத்தின் போது , கள்ள துப்பாக்கி என்னும் படத்தின் மூலமாக படத்தின் தலைப்புக்கு பிரச்சனை கொடுத்தார்கள். தலைவா படம் தான் பெரிய பிரச்சனையை சந்தித்தது. விஜய்யின் வளர்ச்சியை பார்த்து பயந்த அதிமுக அரசு படத்தை தடை செய்ய நினைத்தது. விஜய் அரசியலுக்கு வந்து விடுவாரோ என்பது இதற்கு காரணம். இவர்கள் தான் ரஜினியின் வளர்ச்சியை பார்த்து பயந்து "பாபா" படத்துக்கு பிரச்சனை செய்தார்கள்.  தலைவா படம் தமிழகத்தில் மட்டும் வெளிவராததால் பெரிய நஷ்டத்தை சந்தித்தது. அதே நிலை கத்தி படத்துக்கு வந்து விட்டால் அவ்வளவு தான். வெளி மாநிலங்களில் வந்து இங்கே வராவிட்டால், இன்டெர்னெட்டில் எளிதாக வந்துவிடும். இதே போல் தான் கமலின் விஸ்வரூபம் பட்டத்தின் போதும் பிரச்சனை செய்தார்கள். இதனால் கமல் மிகவும் மனம் நொந்து போனார். விருமாண்டி , தசாவதாரம் என கமலின் ஒவ்வொரு படங்களின் போது இப்படி தான் பிரச்சனை செய்கிறார்கள்.

கர்நாடகாவை சேர்ந்த ரஜினியின் படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் ஆகிறது, ஆந்திராவை சேர்ந்த அஜித்தின் படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் ஆகிறது. ஆனால் தமிழர்களாகிய கமல்ஹாசன் மற்றும் விஜய்யின் படங்களுக்கு மட்டும் ஏன் இத்தனை பிரச்சனைகள். இதன் மூலம் நாங்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கும், தல அஜித்துக்கும் எதிரானவர்கள் அல்ல. அவர்கள் படங்களை போல் இவர்கள் படங்களும் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளிவந்தால் நன்றாக இருக்கும் என எண்ணும் ஒரு சாதாரண சினிமா ரசிகன். இந்த கத்தி பட போராட்டத்தில் தல அஜித்தின் ரசிகர்கள் விஜய்க்கு ஆதரவாக இருப்பது வரவேற்கத்தக்கது. டிவிட்டர் , பேஸ்புக் முழுவதும்  #IsupportKaththi, #ThalaThalapathi என்னும் வாசகங்கள் பிரபலமாகி வருகிறது.

எந்த பிரச்சனையும் இல்லாமல் கத்தி படம் தீபாவளிக்கு வெளிவர வேண்டும். இதற்கு நாம் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இதற்கு நாம் விஜய் ரசிகனாக இருக்க தேவையில்லை, ஒரு சாதாரண தமிழ் சினிமாவின் ரசிகனாக இருந்தால் போதும்.

             பத்து மாதம் ஒரு குழந்தையை பெற்று எடுக்கும் தாய் கூட இத்தனை துன்பங்களை சந்தித்து இருக்க மாட்டாள் ஆனால் ஒரு படத்திற்காக  ........  !!!!  #ISupportKaththi

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தடுக்கும் உணவுகள்



அடிக்கடி வைரல் காய்ச்சலால் நீங்கள் தாக்கப்பட்டு, அது உங்களையும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பையும், மேலும் பலவீனமடையச் செய்யும். நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு இயற்கையாகவே பலவீனமடைகிறதா அல்லது ஏதேனும் சில வழியில் அப்படி நடக்கிறதா? பல நேரங்களில், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு இருப்பது இயற்கையே. ஆனால் சிலருக்கோ அவர்கள் உண்ணும் உணவுகள் மற்றும் வாழும் சுற்றுச் சூழலால் இது ஏற்படுகிறது. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை முழுமையாக அழிக்கும் உணவுகளும் கூட இருக்கிறது.

அவைகள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை பலவீனமடைய செய்வதோடு மட்டுமல்லாது, மெதுவாக அதனை அழித்திடவும் செய்யும். அத்தகைய உணவுகளை பார்க்கலாம். மதுபானம் அதிகளவில் எடுத்துக் கொண்டால், அதனால் ஏற்பட போகும் விளைவுகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் உடலையும், அதன் அமைப்புகளையும் மட்டும் தொந்தரவு செய்யாமல், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பிற்கும் சேர்த்தே தொந்தரவு கொடுக்கிறீர்கள். இவைகளை குறைவாக பருகினால் உடலை எவ்வகையிலும் பாதிக்காது. சோடா மற்றும் சர்க்கரை கலந்த எதுவாக இருந்தாலும் அது நம் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பிற்கு ஆபத்தானது.

சோடா பாப்ஸ், சோடா கலந்த குளிர் பானங்கள் மற்றும் இதர சோடா பானங்கள் இதில் அடக்கம். இது உங்கள் குடல் பாதையை பாதித்து உடலுக்குள் கிருமிகள் நுழைய வழிவகுக்கும். உருளைக்கிழங்கு சிப்ஸ் மூலமாக சில வருடங்களுக்கு முன்பு தான் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இது கொழுப்பு உணவிற்கு மாற்றாக இருந்தாலும் கூட பலரும் நினைப்பதை போல் ஆரோக்கியமானது அல்ல. சொல்லப்போனால், இந்த ஆரோக்கியமற்ற மாற்று உணவு உங்கள் செரிமான அமைப்பில் சில பிரச்சனைகளை உருவாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பிற்கு தீங்கை விளைவிக்கும் இவ்வகை உணவுகளை தவிர்த்து விடுங்கள். இவைகளால் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, டி மற்றும் கே தடுக்கப்படுகிறது.

மழை காரணமாக மீட்பு குழுவினருக்கு இந்த தீபாவளிக்கு விடுமுறை இல்லை !!



இந்தியா முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களும் கொண்டாடும் ஒரு கோலாகலமான பண்டிகை எதுவென்றால் அது தீபாவளி பண்டிகையாகத்தான் இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட தீபாவளி பண்டிகைக்கே விடுமுறை இல்லையென்றால் எப்படி இருக்கும். இது எல்லாத்துக்கும் காரணம் மழை தான் காரணம் . மழை தான் அவர்களது விடுமுறையை கெடுத்து விட்டது. ஒருபக்கம் மழையால் பள்ளி குழந்தைகள் விடுமுறை கிடைத்து சந்தோஷமாக இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் மீட்பு பணியாளர்கள் தங்களது விடுமுறையை இழந்து விட்டு சோகத்தில் இருக்கிறார்கள். தீபாவளி அன்று மழை இருக்கலாம் என்பதால் மீட்பு குழுவினருக்கு விடுமுறை இல்லை என கூறி விட்டார்கள்.


கோல் அடித்ததால் உயிரை இழந்த இந்திய கால்பந்து வீரர்



மிஸோரம் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் மிஸோரமில் நடைபெற்று வருகிறது. இதில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பெத்லஹாஎம் வெங்த்லங் அணி மற்றும் சன்மாரி வெஸ்ட் அணிகள் மோதின. இதில் பெத்லஹேம் அணியை சேர்ந்த 23 வயது பீட்டர் என்னும் வீரர் அந்த அணிக்காக கோல் அடித்தார்.

இந்த கோல் அடித்த சந்தோஷத்தை கொண்டாடுவதற்காக அந்தரத்தில் பறந்து பல்டி அடித்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதில் அவரது முதுகுதண்டு உடைந்து அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அந்த இடம் பரபரப்பு ஆனது. உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். ஆனால் அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெற்றியை கொண்டாடிய போது உயிர் போனதா என பலரும் திகைப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

எல்லா கால்பந்து வீரர்களும் கோல் அடித்து விட்டு வெற்றியை ஒவ்வொரு விதமாக கொண்டாடுவார்கள். அதிலும் ஆபத்து இருக்கிறது என இந்த சம்பவம் விளக்கி உள்ளது. எனவே நீங்களும் கால்பந்து அல்ல எந்த விளையாட்டு விளையாடும் போதும் கவனமாக விளையாடுங்கள்.

தரவரிசைப் பட்டியலில் சாதனைப் படைத்த இந்திய வீரர்கள் !!


ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய வீரர் புவனேஷ் குமார் தனது கணக்கில் புதிய சாதனை படைத்து உள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அவர் 2 விக்கெட் மட்டும் தான் வீழ்த்தினார். ஆனால் மிக சிறப்பாக ரன்களை கட்டுபடுத்தினார். அதற்கு பயனாக முதல் முதலாக பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் பத்து இடத்துக்குள் வந்து விட்டார். தற்போது 7 வது இடத்தில் உள்ளார். ஜடேஜா 5 வது இடத்தில் இருந்து 6 வது இடத்துக்கு சென்றார். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் கோலி 2 வது இடத்துக்கு முன்னேறினார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடித்தது அவரது முன்னேற்றத்துக்கு காரணம் ஆகும்.  இந்திய கேப்டன் தோனி தனது 6 வது இடத்தை தக்க வைத்து கொண்டார். சுரேஷ் ரெய்னா 3 இடங்கள் முன்னேறி 15 வது இடத்துக்கு வந்தார். அணி தரவரிசையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் இணைந்து 2 வது இடத்தில் உள்ளது.

சென்னையில் பரபரப்பு : கத்தி ரிலீசாக இருந்த தியேட்டர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு




சென்னையில் நடிகர் விஜயின் ‘கத்தி' திரைப்படம் வெளியாக இருந்த திரையரங்குகள் மீது மர்மநபர்கள் சிலர் நேற்றிரவு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் கத்தி. இப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உறவினருடையது எனக் கூறப்படுகிறது. எனவே, இப்படத்தை வெளியிட தமிழ் ஆர்வலர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், தீபாவளியன்று கத்தி படம் நிச்சயமாக ரிலீஸ் செய்யப்படும் என லைகா நிறுவனம் அறிவித்தது. அதன்படி, நாளை அப்படத்தை ரிலீஸ் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னையில் கத்தி படம் வெளியாக இருந்த இரு திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
சென்னை : சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் தியேட்டரில் கத்தி படத்திற்காக டிக்கெட் முன்பதிவு நேற்றிரவு 11.30 மணியளவில் தொடங்கியது. 

பெட்ரோல் குண்டுகள் : அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் தியேட்டர் வாயிலில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்தெறிந்து, திரைப்படத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் தியேட்டர் மீது 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு ஓடினர். 

சேதம் : இதில் தியேட்டர் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. தியேட்டர் ஊழியர்கள் போராடித் தீயை அணைத்தனர். விசாரணை... தாக்குதல் சம்பவத்தில் 30க்கும் மேற்பட்ட மர்மநபர்கள் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியவர்களை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

தாக்குதல்:
 இதே போல், கத்தி படம் வெளியாக உள்ள சென்னை உட்லேண்ட்ஸ் தியேட்டரிலும் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தகைய தாக்குதல் சம்பவங்களால் கத்தி படம் வெளியாவதில் மேலும் சிக்கல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் பேச உள்ள முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையைப் பெற இருக்கிறார் மோடி !!



அமெரிக்காவில் பலத்த வரவேற்பை பெற்ற மோடி அடுத்த மாதம் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் .  அடுத்த மாதம் ஜி-20 மாநாட்டில் கலந்த கொண்ட பின் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் கூட உள்ள  சிறப்பு  கூட்டத்தில் உரையாற்ற உள்ளார் .

ஜி-20 மாநாடு நவம்பர் 15-16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது . மேலும் அமைச்சர்கள் கூடும் அந்த சிறப்பு கூட்டத்தில் பிரிட்டென் பிரதமர் டேவிட் கேமரூன் மற்றூம் சீன குடியரசுத் தலைவர் ஷி ஜின்பிங்க் கலந்து கொள்ள உள்ளனர் . 

கத்தி படம் வெளியாக இருந்த சத்யம் தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு !!



சென்னை சத்யம் தியேட்டரில் கத்தி படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது .

நடிகர் விஜய் நடித்து , ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம் " கத்தி " . இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லைகா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்பதால் கத்தி படத்திற்கு சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் .

பின்னர் தமிழ் அமைப்புகளும் , தயாரிப்பு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது . பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால் படம் திட்டமிட்டபடியே தீபாவளி அன்று ரீலிஸ் செய்யப்படும் என்றனர் . சில தியேட்டர்களில் புக்கிங்கும் தொடங்கியது .

ஆனால் நேற்று இரவு 11.45 மணி அளவில் சென்னை சத்யம் தியேட்டரை மர்ம் நபர்கள் தாக்கியுள்ளனர் . மூன்று பெட்ரோல் குண்டுகளையும் வீசியுள்ளனர் . தியேட்டரின் முன் பகுதி பலத்த சேதமடைந்துள்ளது .


இது குறித்து போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர் .

இயற்கை மருத்துவம் : மரு அகற்றலாம்



இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது "மரு" (Skin Tag) ஆகும்.இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம். அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை. அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும். இதனை மரு மீது பூசவும். மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும். இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media