Wednesday, 7 August 2013
வெடிகுண்டு மிரட்டல் உண்மையா? விஜய்யின் தலைவா படம் வெளியாவதில் அரசியல் நெருக்கடி
வெடிகுண்டு மிரட்டல் உண்மையா? விஜய்யின் தலைவா படம் வெளியாவதில் நெருக்கடி - எஸ்.ஏ.சந்திரசேகரின் அரசியல் ஆசை கிளப்பிவிடும் எதிர்ப்புகள்.
காவலன் திரைப்படத்தின் பின்னணியில் இருந்த அரசியலை போலவே விஜய்யின் தலைவா படம் வெளியாவதற்கு விழும் தடைகளின் பின்னாலும் அரசியல் உள்ளது என தெரிய வந்துள்ளது. அப்போது பின்னணியில் தடை போட்டது திமுகவும் மாறன் பிரதர்ஸ்ம் என்றால் இப்போது தடை போடுவது அதிமுக.
விஜய்க்கு இருக்கும் அரசியல் ஆசையை விட அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அரசியல் ஆசை கொடி கட்டி பறக்கிறது, சென்ற தேர்தலிலேயே விஜய் ரசிகர் மன்றம் சார்பில் அதிமுகவில் கூட்டணி என்று கூறி போய் சீட்டெல்லாம் கேட்டார், கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக போயஸ் கார்டனிலிருந்து விரட்டப்பட்டார்.
கொழுந்து விட்டெறிந்த எஸ்.ஏ.சியின் அரசியல் ஆசை அடங்காமல் தொடர்கிறது, இந்நிலையில் தலைவா படம் முழுக்க அரசியல் படமாகவும் ஏகப்பட்ட பஞ்ச் களுடன் கடைசியில் ஆட்சியை பிடிப்பது போன்று உள்ளதாம், படமும் கரண்ட் அரசியல் வைத்து நன்றாக வந்துள்ளதால் கடுப்பு ஏறிய ஆளும் வட்டாரம் சென்ற முறை திமுக வை போலவே ஒரு நெருக்குதலை கொடுக்க முன்வந்துள்ளது.
தியேட்டர்களின் மொத்த வசூலுமே முதல் வாரம் மட்டுமே என்பதும், படம் எப்படி இருந்தாலும் முதல் மூன்று நாள் புக்கிங்கை நம்பியே தியேட்டர்களும் பெரும்பணம் கொடுத்து படத்தை வெளியிடுகின்றன, இதை காலிசெய்யும் நோக்கிலேயே ஐநாக்ஸ் தியேட்டடுக்கு தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப் படை என்ற பெயரில் இந்த தியேட்டருக்கு ஒரு கடிதம் வந்தது.அந்த கடிதத்தில், தலைவா படத்தை திரையிட்டால் ஐநாக்ஸ் தியேட்டரில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது, இது குறித்து போலிஸில் புகார் அளிக்கப்பட்டது, இதே போன்று மேலும் பல தியேட்டர்களுக்கு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள 9 தியேட்டர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி தலைவா படத்தின் புக்கிங்கும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதில் அரசு ஒத்துழைப்பும் பாதுகாப்பும் இல்லையென்றால் கலெக்சன் நாசமாக போகும் என்பதை உணர்ந்து அரசின் ஒத்துழைப்பின்றி தலைவா படத்தைத் தமிழகத்தில் திரையிட முடியாது என சென்னை - செங்கல்பட்டு மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.
இதனால் தமிழகமெங்கும் தலைவா படம் வெளியிடுவதில் சிக்கல் நிலவுகிறது. திமுக மற்றும் மாறன் சகோதரர்களை எதிர்த்து காவலன் படம் வெளியிட முனைந்த போது தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்ட போது அதிமுகவினர் கட்டுப்பாட்டில் உள்ள 100 தியேட்டர்களை தர முன் வந்தார்கள், தற்போது ஆளுங்கட்சியும் எதிர்க்கிறது, ஏற்கனவே திமுகவையும் பகைத்துக்கொண்டாகிவிட்ட நிலையில் தலைவா படமும் விஸ்வரூபம் படம் போல என்ன சமரசத்துக்கும் எத்தனை வெட்டுகளுக்கும் பலியாகப்போகிறதோ?

# விஸ்வரூபம் போல படத்தை ஹிட் ஆக்காம விடமாட்டிங்க போல
பிடித்திருந்தால் இந்த செய்தியை உங்கள் ஃபேஸ்புக், டிவிட்டர் கூகிள் ப்ளஸ்சில் ஷேர் செய்யுங்கள்

"தலைவா" விஜய் படம் வெளியாகும் 9 சினிமா தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னயில் பிரபல ஐநாக்ஸ் தியேட்டர் உட்பட 9 தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
ஐநாக்ஸ் தியேட்டடுக்கு தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப் படை என்ற பெயரில் இந்த தியேட்டருக்கு ஒரு கடிதம் வந்தது.அந்த கடிதத்தில், தலைவா படத்தை திரையிட்டால் ஐநாக்ஸ் தியேட்டரில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது, இது குறித்து போலிஸில் புகார் அளிக்கப்பட்டது, இதே போன்று மேலும் பல தியேட்டர்களுக்கு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள 9 தியேட்டர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
# மிரட்டல் விட்டது, தற்கொலை தடுப்பு படையாக இருக்குமோ?
# பப்புளிசிட்டி கிரியேட் பண்றாங்களாம்!!!

விவி மினரல்ஸ்... கலெக்டரை தூக்கி அடித்த இந்த காலில் செருப்பு அணியாத பவர்ஃபுல் அண்ணாச்சி யார் ?

விக்ரம் நடித்த சாமி படத்தில் ஒரு சீன் வரும், 8 மாவட்டத்துல் யாரு எம்பி, யாரு எம்.எல்.ஏ, யாரு மந்திரி, யாரு ஆபிசருன்னு கண்ட்ரோல் பண்றோம், ஆனா ஒரு பேப்பர்ல கூட பெருமாள் பிச்சைங்கற பெயர் வெளியில வராது, அப்படித்தான் இந்த அண்ணாச்சி வைகுண்டராஜன் பெயர் பேப்பரில் வந்ததில்லை, கூகிள் சர்ச்சில் அடித்து பாருங்கள், அவர் படங்கள் கூட அதிகமாக கிடைக்காது.
செருப்பு கூட போடாமல் நடக்கும் இந்த அண்ணாச்சி பெயர் முதல் முறையாக சென்ற திமுக ஆட்சியில் தான் பேப்பரில் வந்தது. அதிமுக ஆட்சிக்கு வரும் போது வைகுண்டராஜனுக்கு சுக்கிரன் உச்சத்துக்கு போவதும் திமுக ஆட்சி வந்தால் சனி வக்ரத்துக்கு போவதும் நடைபெறுவது வாடிக்கை...
அண்ணாச்சி முதலில் கார்ணெட் மணலை மூட்டையில் அடைத்து அதை தூக்கி சுமந்து லோடு ஏற்றும் கூலி வேலையை தான் செய்தார், கார்னெட் மணல் என்பது வெறும் மணல் அல்ல அது பொன் முட்டையிடும் வாத்து என்று கண்டு கொண்ட அண்ணாச்சி அந்த காண்ட்ராக்ட்டை தானே எடுத்து தன் தம்பிகளை கொண்டு தானே மூட்டை சுமந்து ஆரம்பித்த நிறுவனம் தான் வீவீ மினரல்ஸ், தன்னுடைய அனைத்து ஜெகஜ்ஜால வித்தைகளையும் காண்பித்து நிறுவனத்தையும் உயர்த்த ஆரம்பித்தார், நேர்மையாக ஏற்றுமதி செய்து பெரிய ஆளாகிவிடமுடியுமா என்ன? கிராணைட் கல்லில் என்றால் கார்ணெட் மணலில் அத்தனை முறைகேடுகள்.
அதிமுக பெரிய தலை தொடர்புகள் அவரை உச்சத்துக்கு கொண்டு போயின, ஜேஜே டிவி ஆரம்பித்த போது அதற்கு பெரிய அளவில் நிதி உதவி செய்து அதன் முதலீட்டாளர்களில் ஒருவராகவும் கூட இருந்தார். ஆனால் எங்கேயும் தன்னை முன்னிறுத்தி பேப்பரில் பேர் வரும் அலப்பறைகளை செய்ததில்லை.
எத்தனையோ கார்கள் அணி வகுத்தாலும் காலில் செருப்பு கூட அணியாதவர் இந்த அண்ணாச்சி, கேட்டால் நான் செருப்பு கூட இல்லாமல் கஷ்டப்பட்டவன் அதனால் தான் அதை மறக்க கூடாது என்பதால் செருப்பு அணிவதில்லை என்றார். அண்ணாச்சி அதிமுகவின் கேஷ் பாக்ஸ் என்றால் திமுக சும்மா இருக்குமா? சென்ற முறை ஆட்சிக்கு வந்த திமுக முதலில் விரட்டியது வீவீ மினரலஸ் அண்ணாச்சியை தான், ஓடி ஒளிந்த அண்ணாச்சியை ஒசாமா ரேஞ்சுக்கு என்கவுண்டர் போட்டுவிடுவோம் என்று மிரட்டியது, அவரது சொத்துக்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்படும் என்று அலற வைத்தது, கடைசியாக சரணடைந்த அண்ணாச்சி அதன் பிறகு அமைதியாக இருந்தார், அப்போது தான் முதன் முறையாக அண்ணாச்சி பெயர் வெளி உலகில் பத்திரிக்கைகளில் வந்தது. கைதுக்கு பிறகு என்ன நடந்ததோ திமுகவும் அண்ணாச்சியை அமைதியாக விட்டது.
மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தது அண்ணாச்சியும் பவர் ஆனார். சிவந்தி ஆதித்தன் குடும்பத்தின் கண்ட்ரோலில் இருந்த தெஷ்ணமாற நாடார் சங்கத்தை ஆளுங்கட்சியின் ஆசியுடன் தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்தார், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், தொழில் பேட்டைகள், சமுதாயக் கூடங்கள் எனக் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துக்கள் இந்த அமைப்புக்கு உள்ளன.
தற்போது சட்டவிரோதமாக கார்ணெட் மணல் அள்ளியதாக வீவீ மினரல்ஸ் மீது ரெய்டு நடத்திய 24 மணி நேரத்தில் தூத்துக்குடி கலெக்டர் ஆஷிஸ்குமார் வேறு பதவிக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.

தற்கொலையில் முதலிடம் - தமிழகம்
தேசிய குற்ற தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ள தகவலில் தமிழகத்தில் தான் தற்கொலைகள் அதிகமாக நடக்கின்றன என அறிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே பருவமழை பொய்த்தும், தொடர் விலைவாசி உயர்வாளும் மக்கள் பெரும் அவதிகுள்ளாகினர், மேலும் பலரை இது மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
தமிழக அரசு டாஸ்மாக் திறந்திருக்கும் நேரம் காலை பத்திலிருந்து இரவு பத்து வரை என்று அறிவித்திருந்தாலும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் காலை ஆறு மணிக்கே பார் திறக்கப்பட்டு ப்ளாக்கில் சரக்கு விற்பனை அமோகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.
சம்பாரிக்கும் அம்பது, நூறையும் மக்கள் டாஸ்மாக்கிற்கே அழுது விடுவதால் அவர்களது குடும்பம் நடுத்தெருவிற்கு வரும் சூழ்நிலை உருவாகி பலர் குடும்பம், குடும்பமாக தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவாகி வருகிறது
சமீபத்தில் ஒருவர் குடும்பத்துடன் அடையாற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார், சிலரது உதவியால் குழந்தைகள் உயிர் தப்பினாலும் குடும்பதலைவர் இறந்து விட்டார் என்பது அந்த குடும்பத்திற்கு பேரழிப்பு தான்.
மேலும் தொடர் குடியும் ஒரு மனநோய் தான் என்று பல மருத்துவர்கள் சொல்லி வருகிறார்கள், மதுக்கடைகளை மூடச்சொல்லி தமிழகத்தின் மதுரையில் உண்ணாவிரதம் இருந்த நந்தினி காவல்துறையினரால் கைது செய்யபட்டு பின் குடும்பத்தாரின் வற்புறுத்தல் காரணமாக உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.
வைகோ, டாக்டர் ராமதாஸ் போன்ற அரசியல் தலைவர்கள் தொடர்ந்து மதுகடைகளை மூடச்சொல்லி குரல் கொடுத்து வந்தாலும் அதை தமிழக அரசு காதில் போட்டுக்கொள்வதாக தெரியவில்லை.
# மொத்த தமிழகமும் சுடுகாடாகும் நாள் என்றோ!

அமெரிக்கா படிக்க போக சிறுமிக்கு பாஸ்போர்ட் மறுக்கும் அரசு, காஷ்மீர் பெண்ணின் மாமா முன்னாள் தீவிரவாதியாம்
இரட்டை வேட மத்திய அரசு
காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சுஃபைரா கான் என்ற சிறுமி அமெரிக்க சென்று படிக்க அதற்கான கடினமான தேர்வு ஒன்று எழுதி அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்
ஆனால் மத்திய அரசு அவருக்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்து விட்டது, அதற்கு மத்திய அரசு சொல்லும் காரணம் தான் மிக கேவலமானது
அந்த சிறுமியின் மாமா முன்னர் தீவிரவாதியாக இருந்து பின்னர் திருந்தி தண்டனை பெற்றவராம், அதுனால் அந்த சிறுமிக்கு பாஸ்போர்ட் தர முடியாது என சொல்லியிருக்கிறது.
ஆந்திரா, அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் நக்ஸ்லைட்டாக இருப்பவர்களிடம் திருந்தி உங்கள் ஆயுதத்தை ஒப்படைத்து சரணடைந்தால் உங்களது மறுவாழ்விற்கும் உங்களது குடும்பத்தின் வாழ்விற்கும் உத்திரவாதம் அளிக்கும் மத்திய அரசு என்று ஒரு பக்கம் சொல்லி கொண்டு மறுபக்கம் மாமா முன்னாள் தீவிரவாதி என்பதால் ஒன்றும் அறியா சிறுமிக்கு பாஸ்போர்ட் மறுத்தது எவ்வகையில் நியாயம் என சில சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டிருந்தாலும் இந்த தகவல் பெரிதாக ஊடகத்தில் வராமல் இருப்பதும் இந்த சிறுமிக்கு நியாயம் கிடைப்பதை தடுக்கும் செயல் தான் என்பதே உண்மை.
அச்சிறுமியின் பேட்டி ஒன்றை கண்டு புலனாய்வு துறை அளித்த தகவலை அடுத்து அந்த பெண்ணுக்கு பாஸ்போர்ட் அளிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டாலும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கல்வியை தொடங்க வேண்டிய அந்த பெண் இனி எப்பொழுது போவார், அங்கே தாமதத்திற்கு என்ன காரணம் சொல்வார்!
ஊடகங்கள் தயவு செய்து செலிபிரட்டிகளின் செய்திகளுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து வருவது சாதரண மக்களின் பிரச்சனைகள் மக்களுக்கு தெரியாமல் மறைத்து விடும், இனியாவது திருந்துமா சினிமா நடிகர்கள் பின்னால் மட்டுமே சுற்றும் ஊடகம்........

Subscribe to:
Posts
(
Atom
)