BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 19 August 2014

கத்தி படத்தின் பாடல் தொகுப்பு வெளிவந்தது




விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் கத்தி படத்தின் பாடல்கள் செப்டம்பர் மாதம் வெளிவர உள்ளது. அந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் அந்த படத்தின் பாடல் தொகுப்பு, அதாவது என்னென்ன பாடல்கள் உள்ளன என்னும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மொத்தம் 5 பாடல்கள் உள்ளன.




1. தமிழன் செல்பி (ஹிப் ஹாப் தமிழன்)

2. வாழ்க்கையில் பெருமை

3. ஸ்வார்டு ஆப் டெஸ்டினி (கதிரேசன் தீம்)

4. பேட் ஐஸ் (ஜீவானந்தம் தீம்)

5. அது அப்படிதான்

6. சென்னையின் பூ

7. ஏமாந்தீங்களா (விஜய்,தனுஷ்,சிவகார்த்திகேயன்)

8. கொல்கத்தா ஸ்ட்ரிட் (தீம்)

மக்களுக்காக மக்களிடமே உதவி கேட்டு உள்ள மோடி




டெல்லி செங்கோட்டையில் 68-வது சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, திட்டக் குழுவைக் கலைக்கப்போவதாக அறிவித்தார். 21-ம் நூற்றாண்டின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில்  புதிய அமைப்பு உருவாக்கப்படும் என அவர் கூறியிருந்தார். இந்நிலையில் அந்த திட்டம் குறித்து மக்களின் கருத்தை பதிவு செய்யுமாறு கேட்டுள்ளார். மக்கள் தங்கள் கருத்துகளை இந்த     http://www.mygov.nic.in/      தளத்தில் பதிவு செய்யலாம்.

எபோலா பற்றி தவறான செய்தி வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது




எபோலாவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீஜித் என்ற மங்களூரைச் சேர்ந்த எம்.டெக் மாணவர் ஒருவர் இன்று பலியானார். இதன் மூலம் கர்நாடகத்தினுள் எபோலா எதிர்ப்பாராத விதமாக நுழைந்துவிட்டது. அனைவரும் தேவையான முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். நண்பர்களே, உங்கள் உணவில் அன்றாடம், துளசியை சேர்த்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், எபோலா தாக்குவதிலிருந்து தப்பிக்களாம்" என்பது தான் வாட்ஸ் ஆப்-இல் இந்திய நகரங்கள் முழுவதும் பரவிய வதந்தி.

ஆனால் இது முற்றிலும் தவறான தகவல் , யாரும் இதனை நம்ப வேண்டாம் என அரசு கூறியுள்ளது. இறந்த வாலிபர் ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைபாடு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு எபோலா தொற்று ஏற்படவில்லை. எனவே இந்த வதந்தி பிற நகரங்களில் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஏம்பா இது மொபைலா இல்ல வேற எதோவா ??





சியோமியின் எம்.ஐ.3 மொபைலுக்கு இருக்கும் மவுசு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனை வாங்குவதற்காக ஒரு போரே நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த மாதம் விற்பனைக்கு வந்த மொபைல் நொடிகளில் விற்று தீர்ந்து விடுகிறது. முதல் 3 ரவுண்டில் 35 ஆயிரம் மொபைல்கள் விற்று தீர்ந்து இருந்தன. 4 வது ரவுண்டு 12 ஆம் தேதி அன்று நடந்தது. அதில் 20 ஆயிரம் மொபைல்கள் விற்பனைக்கு வந்தன. அவை அனைத்தும் 2.4 செகன்டுகளில் விற்று தீர்ந்து விட்டன.இன்று விற்பனைக்கு வந்த 20 ஆயிரம் மொபைல்கள் 2.3 செகண்டுகளில் விற்று தீர்ந்தது.  6 வது ரவுண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடக்க உள்ளது. இதில் பதிவு செய்வதற்கான நேரம் இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

இந்த மொபைல் பிளிப்கார்ட் இணையதளத்தில் மட்டும் தான் கிடைக்கும். இதனை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என சிலர் தவம் இருந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்திய அணியில் புதிய மாற்றங்கள், தோனி கேப்டன் பதவியில் நீடிக்கிறாரா ??




இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. தோனி கேப்டன் பதவியில் தொடருவாரா இல்லையா என்னும் சந்தேகத்தில் இருந்த போது தோனி தான் கேப்டன் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரவி சாஸ்திரிக்கு புதிய பதவி தரப்பட்டுள்ளது. கோச்சாக பிளட்சர் செயல்பட்டாலும், ரவி சாஸ்திரிக்கு அதிக பொறுப்பு தரப்பட்டுள்ளது. முன்னாள் வீரர்கள் சஞ்சய் பங்காரும், பரத் அருணும் துணை பயிற்சியாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளார்கள். ஸ்ரீதர் பீல்டிங் கோச்சாக பதவி ஏற்க உள்ளார். 

அஞ்சான் படத்தில் ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க புதிய மாற்றம்




ஆகஸ்ட் 15 ஆம் தேதி சூர்யா சம்ந்தா நடிப்பில் அஞ்சான் படம் வெளிவந்தது. இந்த படம் தமிழகம் முழுவதும் ரசிகர்கள் பலராலும் கலாய்க்கப்பட்டு வந்தது. படம் படு ஃப்ளாப் என பலரும் கூறி வந்தார்கள். படம்  ரொம்ப நீளமாக இருப்பதாகவும் கூறி வந்தார்கள். இதனால் ரசிகர்கள் வேண்டுகோலுக்கு இணங்க படத்தில் இருந்து 6 நிமிட காட்சி நீக்க பட்டுள்ளது. பிரமானந்தம் வரும் காட்சி படத்துக்கு சம்மந்தம் இல்லாமல் இருப்பதால் அந்த காட்சி நீக்கப்பட்டுள்ளது.

தற்போது மீண்டும் எடிட் செய்யப் பட்டு 21 நிமிடம் குறைக்கப் பட்டுள்ளது.

இங்கிலாந்து வீரரின் நிர்வாண படம் டிவிட்டரில் வெளிவந்தது




இங்கிலாந்து அணியின் முன்னால் ஆல் ரவுண்டர் இயன் போத்தமின் நிர்வாண படம் டிவிட்டரில் வெளியாகி உள்ளது. யாரோ ஒருவர் அவரது அக்கவுண்டை ஹேக் செய்து உள்ளார்கள். இப்போது அவர் பாஸ்வேர்டை மாற்றி விட்டார். அந்த போட்டோ மூலம் தனது பக்கத்தை பார்க்க அதிக நபர்கள் வந்து உள்ளார்கள். எனவே அந்த போட்டோவை பதிவு செய்தவருக்கு நன்றி கூறி உள்ளார்.

3 வாட்ஸ் அப் அட்மின்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்




காஷ்மீரில் 3  வாட்ஸ் அப்  குரூப்களின் அட்மின்களை போலீஸார் கைது செய்து உள்ளார்கள். அந்த குரூப்களில் தவறான செய்திகளை வெளியிட்டதற்காகவும், அமைதி கலைக்கும் செய்திகளை வெளியிட்டதாலும் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எனவே அனைத்து வாட்ஸ் அப் அட்மின்களும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்.

பெற்றோர் போன் செய்தால் குழந்தைகள் போனை கட்டாயம் எடுக்க வேண்டும் - புதிய அப் வந்துள்ளது





இன்றைய உலகில் எல்லா குழந்தைகளிடம் விளையாட்டு பொருட்கள் இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவர்களிடத்தில் ஒரு ஸ்மார்ட்போன் கட்டாயம் இருக்கிறது. இதனை தான் அவர்கள் எப்பொழுதும் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் செல்லும் எல்லா இடத்துக்கும் அதனை எடுத்து செல்கிறார்கள். ஆனால் அவர்கள் பெற்றோர் போன் செய்தால் மட்டும் அதனை எடுக்க தவறுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் இருக்கும் இடம் அவர்கள் பெற்றோருக்கு தெரிந்து விடும் என்கிற பயம், இல்லையெனில் நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்று தெரிந்து விடும்.

இந்த பிரச்சனையை போக்க புதிய அப் வந்து விட்டது. இந்த அப் உங்களிடம் இருந்தால் போதும், உங்கள் குழந்தைகள் உங்கள் காலை கட்டாயம் எடுத்து தான ஆக வேண்டும். பெற்றோர் மற்றும் குழந்தையின் மொபைலில் இந்த அப் இருக்க வேண்டும். பெற்றோரின் போன் காலை அவர்கள் எடுத்த மறுத்தால் அவர்கள் மொபைலில் இன்டெர்னெட், கேம்ஸ் ,மற்றவர்களுக்கு கால் செய்வது என எதுவுமே வொர்க் ஆகாது . இதனால் பெற்றோரின் போன் காலை கட்டாயம் அட்டன்ட் செய்து தான் ஆக வேண்டும். அந்த அப் அழிக்க நினைத்தால் குழந்தைகளின் போன் லாக் ஆகி விடும். இந்த அப்பின் பெயர்  Ignore no more.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media