BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 12 August 2014

ஹரியான சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட வேண்டுமா ?? அப்போ முதலில் 10,000 ரூபாய் எடுத்து வைங்கள் !!



இன்னும் சிறிது மாதத்தில் மாவட்டத்தில் ஹரியானாவில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது . அந்த தேர்தலில் நீங்கள் காங்கிரஸ் சார்பாக  போட்டியிட விரும்பினால் , நீங்கள் முதலில் 10,000 ரூபாய் கட்டி விட வேண்டும் . அந்த ரூபாய் திருப்பி தரப்பட மாட்டாது .

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கூறுகையில் , " சும்மா தேர்தலில் விளையாட்டுக்காக போட்டியிடும் வேட்பாளர்களை நீக்குவதற்காக இந்த முறையை பின்பற்றுகிறோம் " என்றார் .

இவர்கள் எவ்வளவு காசு கொடுத்து முன்பதிவு செய்தாலும் பெரிய தலைவர்களின் தொகுதிகளில் இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா என்பது கேள்விக்குறியே .

இதை வைத்து பாஜக தலைவர் கூறுகையில் , " காங்கிரஸ் என்றாலே ஊழல் தான் . ஆட்சியில் லட்சக் கணக்கில் சேர்த்து வைத்தவர்களிடம் இருந்து இப்போது வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள் " என்றார் .

பேஸ்புக்கில் பதிவிடும் போட்டோவுக்கு அதிக லைக் வாங்க வேண்டும் என நினைப்பவரா நீங்கள் . அப்போ கண்டிப்பா படிங்க !!


இப்போலாம் பேஸ்புக்கில் லைக் வாங்க வேண்டும் என்று தான் பலர் சுற்றுகின்றனர் . நம் வாழ்வில் மறக்காமல் இருக்க போட்டோ எடுப்பதை விட்டு விட்டு இப்போது பல பேர் பேஸ்புக்கில் லைக் வாங்க தான் போட்டோ எடுக்கின்றனர் .

இவ்வாறு நீங்களும் பேஸ்புக்கில் அடிக்கடி போட்டோக்களை அப்லோட் செய்து லைக் வாங்க வேண்டும் என்று நினைப்பவரா , அப்படி என்றால் நீங்கள் மற்றவர்களைவிட அதிக உணர்ச்சி வசப்படுபவர்களா இருப்பீர்கள் . இதை நாங்கள் சொல்லவில்லை , ஒரு ஆய்வு கூறுகிறது .

இந்த ஆய்வில் 17 முதல் 55 வயது வரை உள்ள 100 நபர்களை தேர்ந்தெடுத்து சோதனை நடத்தினர் . இந்த ஆய்வின் படி அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்களும் , மற்றவர்கள் பற்றி அதிகம் நினைப்பவர்கள் இருவரும் தொடர்ந்து பேஸ்புக்கில் போட்டோக்களை அப்லோட் செய்தாலும் , அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்கள் தங்களுக்கு அதிக லைக் வர வேண்டும் என்று விரும்புகிறார்கள் . மற்றவர்கள் பற்றி அதிகம் நினைப்பவர்கள் போட்டோக்களை ஆல்பமாக பதிவிட விரும்புகிறார்கள் என்று முடிவை கண்டறிந்துள்ளனர் .


இந்தியக் கொடியை ப்ரோபைல் போட்டொவாக வைப்பது சட்டப்படி குற்றமா , இல்லையா ??



வாட்ஸ்அப் மற்றும் பல சமூக வலைதளங்களில் பிரபலமான நிகழ்ச்சி ஒன்று வரும்போது , அந்த நாளுக்கு ஏற்ற ப்ரோபைல் போட்டோ வைப்பது இப்போது ஒரு டிரண்டாக இருக்கிறது . அது போல சில நாட்களுக்கு முன் இந்திய மூவர்ணக் கொடியை ப்ரோபைல் போட்டோவாக சிலர் மாற்றினர் . ஆனால் சிறிது நேரத்திலே , அவ்வாறு வைப்பது சட்டத்தை மீறும் செயல் எனவும் , அது மூவர்ணக் கொடியை அவமதிக்கும் செயல் என்னும் செய்தி மிக வேகமாக பரவியது . இதனால் மூவர்ணக் கொடியை தன்னுடைய ப்ரோபைல் படமாக வைத்து இருந்தவர்கள் அதை நீக்கி விட்டனர் .

ஆனால் இந்திய சட்ட நிபுணர் கூறுகையில் , இந்தியர்கள் தங்கள் மூவர்ணக் கொடியை தடையில்லாமல் காட்சி செய்யலாம் என்றும் விருப்பப்பட்டால் ஆன்லைனில் கூட வெளியிடலாம் என்று கூறினார் .

சட்டப்படி நாம் நம் மூவர்ணக் கொடியை பயன்படுத்தலாம் . ஆனால் கொடியை அவமதிக்கும் விதமாகவும் , தவறாக ஏதாவது எழுதியிருந்தால் மட்டுமே அது சட்டத்தை மீறும் செயலாகும் .

இந்தியக் கொடி குறியீடு 2002 விதியின் படி , இந்தியர்களுக்கு கொடியின் கௌவரம் , கண்ணியம் ஆகியவற்றை காக்கும்படி இருந்தால் தடையற்ற காட்சிக்கு மூவர்ணக் கொடியை பயன்படுத்தலாம் .

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun Special news

 

தமிழ்நாட்டு குடிகாரர்களுக்கு ஜெயலலிதா தந்து உள்ள அதிர்ச்சி செய்தி
http://www.satrumun.net/2014/08/jeyalalitha-gave-shocking-news-for.html

காவல்துறையால் தாக்கப்பட்டார் ஃபேஸ்புக் அதிமுக ஆதரவாளர் கிஷோர் கே ஸ்வாமி...
http://www.satrumun.net/2014/08/facebook-popular-kishor-kswamy-attacked.html

செக்ஸ் வைப்பதற்கான புதுமையான 7 இடங்கள்
http://www.satrumun.net/2014/08/innovative-places-to-have-sex.html

இந்தியாவில் வர இருக்கிறது 15,000 ரூபாயில் ஆப்பிள் ஐ-போன் - 4 !!
http://www.satrumun.net/2014/08/iphone4-in-india-at-a-reduced-price.html

கவுண்டவுன் ஸ்டார்ட்........ : பெரிய அளவில் வெடிக்கப் போகும் 'கத்தி' எதிர்ப்பு போராட்டம்!
http://goo.gl/tc2TjB

இங்கிலாந்தில் நடந்த கார் விபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
http://www.satrumun.net/2014/08/sunil-gavaskar-lucky-to-escape-in-car.html

வீரம் vs விஜய் அவார்ட்ஸ், டி.ஆர்.பி. ரேட்டிங்கில் வென்றது யார் ??
http://www.satrumun.net/2014/08/veeram-vs-vijay-awards-who-won-trp.html

ஏ.டி.எம்.மில் இருந்து பணத்துக்கு பதில் பாம்பு வந்தது, அதிர்ச்சியடைந்த பெண்
http://www.satrumun.net/2014/08/money-in-atm-instead-of-cash.html

கோல்கேட் பேஸ்ட் 30 ஆண்டுகளாக செய்த‌ ஏமாற்றுத்தனம்
http://www.satrumun.net/2014/08/colgate-pastes-cheating-advertisement.html

இந்த முறை சியோமி எம்.ஐ. 3 மொபைல் எத்தனை நொடிகளில் விற்று தீர்ந்தது என்பதை பார்த்து அதிர்ச்சியடந்து விடாதீர்கள்
http://www.satrumun.net/2014/08/this-time-xiaomi-mi-3-got-sold-out-in.html

உண்மைய பேசிய முதலமைச்சர் மகள் மீது ஜாமீனில் வரமுடியாத வழக்கு
http://www.satrumun.net/2014/08/drramadoss-condemn-smoking-and-drinking.html

தன்னை கேலி செய்த ஆணை துரத்தி துரத்தி அடித்த ஒரு தைரியமான பெண்
http://www.satrumun.net/2014/08/woman-kicks-man-who-harassed-her.html

மகன் ஆபாச படம் பார்ப்பதை பார்த்து விட்டு போலீஸுக்கு போன் செய்த தாய்
http://www.satrumun.net/2014/08/mother-called-police-to-punish-her-son.html

இனி போலீஸ் லஞ்சம் வாங்கினால் , வாட்ஸ் அப் மூலம் புகார் கொடுக்கலாம்
http://www.satrumun.net/2014/08/now-whatsapp-can-be-used-to-give.html

5 வது டெஸ்டில் மாஸ்க் போட்டு கொண்டு விளையாட போகும் வீரர், எந்த மாஸ்க் அணிவது என உதவி கேட்டுள்ளார்
http://www.satrumun.net/2014/08/broad-to-play-5-th-test-by-wearing-mask.html

ஜிகர்தண்டா, வேலையில்லா பட்டதாரி புகைப்பிடிப்பதை ஊக்குவிக்கிறது என சாடும் மருத்துவர் இராமதாசு

சுதந்திர தின பரிசு !! பெட்ரோல் விலை 2.50 ரூபாய் குறைப்பு !!



வருகிற ஆகஸ்டு 15 ஆம் தேதி , மாநிலங்கள் வைத்து இருக்கும் எரிவாயு நிறுவனங்கள் அனைத்தும் எரிவாயுவின் விலையைக் குறைக்க திட்டமிட்டுள்ளனர் . பெட்ரோல் விலை 2.50 ரூபாய் வரை குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது .

அவ்வாறு குறைந்தால் அது இந்த மாதத்தின் இரண்டாவது விலை குறைப்பாக இருக்கும் . ஏற்கனவே ஆகஸ்டு 1 ஆம் தேதி பெட்ரோல் விலை 1.09 ரூபாய் குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த விலை குறைப்பு நடந்தால் இப்போது  72.51 ரூபாய்க்கு விற்கப்படும் பெட்ரோல் 70 ரூபாய்க்கு விற்கப்படும் .

இந்த விலை குறைப்பு நடந்தால் நமக்கு சுதந்திர தின பரிசு கிடைத்த மாதிரி தானே ??

இந்தியாவில் வர இருக்கிறது 15,000 ரூபாயில் ஆப்பிள் ஐ-போன் - 4 !!



இந்தியாவில் தன் விற்பனையை உயர்த்தும் விதமாக , ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய மொபைல்களை குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது . இந்த முயற்சியின் முதல் கட்டமாக தன்னுடைய 8-ஜிபி ஐ-போன் மொபைலை 15,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளனர் .

இந்த அதிரடி விலைக் குறைப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது . ஐ-போன் 4 இன் உண்மை விலை 26,000 ரூபாய் . 10,000 ரூபாய் குறைந்த விலையில் விற்பனை செய்துள்ளனர் .

இதன் மூலம் சியோமி , சாம்சங் போன்ற நிறுவனங்களுக்கு சவால் கொடுக்கலாம் என ஆப்பிள் நிறுவனம் நம்புகிறது .

கோல்கேட் பேஸ்ட் 30 ஆண்டுகளாக செய்த‌ ஏமாற்றுத்தனம்


கறுப்புநிறக் குச்சிகள் கொண்ட பல்துலக்கும் பிரஷ்ஷை அறிமுகப்படுத்தியிருக்கிறது கோல்கேட் நிறுவனம். அதில் கரித்தூள் (charcoal) இருக்கும் என்றும் அதனால் வெள்ளைக்குச்சிகள் கொண்ட பிரஷ்ஷைவிட இது நன்றாக ஊடுருவி பற்களைத் துலக்கும் என்றும் விளம்பரம் செய்யப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட கோல்கேட் உப்பு (salt) பேஸ்ட்டும் சந்தையில் விற்பனையாகி வருகிறது.

இதே கோல்கேட் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று 30 ஆண்டுகளுக்கு முன் திரையரங்குகளில் படம் போடுவதற்கு முன் திரையிடப்பட்டு வந்தது.

ஒரு பயில்வான் அதிக எடையைத் தூக்கி பலத்த கைதட்டலுடன் பரிசு வாங்குவார். அவ்வளவு எடையைத் தூக்கிய அந்த பயில்வான் ஒரு சாதாரண சோளக்கதிரைக் கடிக்கும்போது பல்வலியால் துடிப்பார். அதிலிருந்து மீள்வதற்கு, கரித்தூளும் உப்பும் கலந்த கலவையால் பல்துலக்கத் தயாராவார் பயில்வான். அப்போது ஒரு குரல் ஒலிக்கும்.

“உடம்புக்கு பாலும் பாதாமும். பல்விளக்க உப்பும் கரித்தூளுமா?” எனக் கேட்டு, கோல்கேட் டூத்பவுடரை பயன்படுத்தும்படி அந்தக் குரல் பரிந்துரைக்கும். உப்பும் கரித்தூளும் வேஸ்ட். கோல்கேட் டூத்பவுடரும் டூத்பேஸ்ட்டும் சிறந்தவை என்றும் நல்ல பலன்தரக்கூடியவை என்றும் விளம்பரம் செய்து, சந்தையை ஆக்கிரமித்து, வியாபாரத்தைப் பெருக்கிய அதே கோல்கேட் நிறுவனம்தான், உப்பு பேஸ்ட்டையும் கரித்தூள் பிரஷ்ஷையும் இப்போது வியாபார நோக்கத்துடன் விளம்பரம் செய்கிறது.

30 ஆண்டுகளுக்கு முன் உப்பையும் கரித்தூளையும் தவிர்க்கச் சொன்ன கோல்கேட், இப்போது அந்த இரண்டையும் வைத்து பல் துலக்கச் சொல்கிறது. இதைத்தானே அந்த பயில்வானும் செய்தார்?

பெருநிறுவனப் பயில்வான்களிடம் உண்மையான பயில்வான்களே ஏமாறும்போது விளம்பரங்களைப் பார்த்துப் பொருட்களை வாங்கும் சாதாரணமானவர்களான நாமெல்லாம் எம்மாத்திரம்?
---
பிரபல பத்திரிக்கையாளர் கோவி.லெனின் அவர்கள் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதி கோல்கேட்டின் ஏமாற்றுத்தன விளம்பர‌த்தை அம்பலப்படுத்தியுள்ளார்

https://www.facebook.com/govi.lenin/posts/822238987795152

30 years back colgate paste advertised that using charcoal and salt to brush the tooth is unhealthy for tooth, but now colgate introduced charcoal brush and salt in paste.

இனி போலீஸ் லஞ்சம் வாங்கினால் , வாட்ஸ் அப் மூலம் புகார் கொடுக்கலாம்




இனி வாட்ஸ் அப் மூலம் போலீஸ் மீது புகார் அனுப்ப புதிய திட்டத்தை அறிவித்து உள்ளது டெல்லி போலீஸ். டெல்லி போலீஸில் புகார் தெரிவிக்க தற்போது, ‘1064’ மற்றும் ‘1800111064’ ஆகிய இரண்டு எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில 20 போலீஸார் 24 மணி நேரமும் இந்த எண்களில் வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இப்போது இதே நம்பருக்கு வாட்ஸ் அப் மூலமும் புகார் அளிக்கும் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

இது டெல்லி போலீஸை பற்றி புகார் தெரிவிப்பதற்கு தொடங்கப்பட்டு உள்ளது. டெல்லி போலீஸார் எங்காவது லஞ்சம் வாங்கினாலோ அல்லது பொது மக்களிடம் தவறாக நடந்து கொண்டாலோ, அது குறித்து தகுந்த ஆதாரங்களுடன் போலீஸுக்கு வாட்ஸ் அப்பில் அந்த தகவல்களை அனுப்பலாம். அந்த ஆதாரம் போட்டோவாகவோ, ஆடியோவாகவோ, வீடியோவாகவோ இருக்கலாம். அந்த ஆதாரங்கள் உண்மைத்தன்மை தடயவியல் அறிவியல் துறை உதவியுடன் சரிபார்க்கப்படும். அவை உண்மை என தெரிய வந்தால் அந்த போலீஸ் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்போது இந்த வசதி குறித்து பொது மக்களிடம் விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இதில் என்ன குறை என்றால் சிலர் இது தவறான ஆதாரங்களை அனுப்பி போலீஸுக்கு தேவை இல்லாத வேலைகளை தர நேரிடும். மற்றபடி இது வரவேற்கப்பட வேண்டிய திட்டம் தான் எனபதில் ஐயம் இல்லை.

இங்கிலாந்தில் நடந்த கார் விபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்





இந்திய கிரிக்கெட் அணி யின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர். இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே இங்கிலாந்தில் தற்போது நடை பெற்று வரும் டெஸ்ட் தொடரில் தொலைக்காட்சி வர்ணனையாளராக பணி புரிந்து வருகிறார். 4 வது டெஸ்ட் முடிந்த பிறகு கவாஸ்கர் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார். அவர் காரில் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தார்.

திடீரென அவர்  சென்று கொண்டு இருந்த கார் எதிரே வந்த கார் மீது மோதும் நிலைக்கு உள்ளானது. இதனை தடுக்க டிரைவர் நினைத்தார். எதிர்பாராத விதமாக வேறு கார் மீது மோதியது. இதில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது அதிர்ஷ்ட வசமாக கவாஸ்கர் உயிர் தப்பினார். கடவுளின் அருளால் தான் உயிர் தப்பியதாக கவாஸ்கர் கூறி இருந்தார். 

செக்ஸ் வைப்பதற்கான புதுமையான 7 இடங்கள்


* தண்ணீர் தொட்டி அருகில்




 * லைப்ரரியில் செக்ஸ்



* துணி துவைக்கும் இயந்திரம் அருகில்




* சமையல் அறையில்





* ஒரு டேபிள் மீது




* நாற்காலியில் அமர்ந்து இருக்கும் போது




* ரோலர் கோஸ்டில்



மகன் ஆபாச படம் பார்ப்பதை பார்த்து விட்டு போலீஸுக்கு போன் செய்த தாய்




அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் சவோன்டா கேல்மேன். இவர் அங்கு ரியல் எஸ்டேட் ஏஜென்டாக உள்ளார். இவர் அன்று வேலை முடிந்து வழக்கம் போல் வீட்டுக்கு வந்தார். அங்கு அவருக்கு ஒரு அதிர்ச்சி காட்சி . அவரது  15 வயது மகன் அவனது 2 வயது தங்கச்சியை மடியில் வைத்துக்கொண்டு ஆபாச படம் பார்த்துக் கொண்டு இருந்தான். இதனை பார்த்த அந்த தாய் அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அவசர உதவியான 911 க்கு கால் செய்தார். அவர்கள் வந்த போது, தனது மகன் ஆபாச படம் பார்கிறான் அதனால் அவனை கைது செய்து சிறையில் அடையுங்கள் என்றார். அமெரிக்க சட்டப்படி வீட்டில் தனியாக உட்கார்ந்து ஆபாச படம் பார்ப்பது குற்றமாகாது என்றும் அதனால் அந்த சிறுவனை கைது செய்ய முடியாது என்று கூறி, அமைதியான முறையில் மகனுக்கு அறிவுரை சொல்லுமாறு அந்த தாய்க்கு அறிவுரை சொல்லிவிட்டு கிளம்பினார்கள். 

தோனியின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது - காரணம் என்ன ??




இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு இசட் பிரிவில் இருந்து ஒய் பிரிவுக்கு குறைக்கப்பட்டு உள்ளது. இசட் பிரிவில் ஒருவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டால் அவருடன் 9 போலீஸார் உடன் இருப்பர், இப்போது ஒய் பிரிவுக்கு குறைக்கப்பட்டதால் அவருடன் 7 போலீஸார் தான் இருப்பர். இந்த தகவலை ஜார்க்கண்ட் அரசு அறிவித்தது.

தோனிக்கு முன்னர் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தது. இப்போது அது குறைந்து விட்டதால் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பும் குறைக்கப்படுகிறது என்றார் ஜார்க்கண்ட் மாநில டிஜிபி ராஜீவ் குமார். ஆனால் தோனி ஜார்க்கண்ட் வரும் போது அவருக்கு இசட் பிரிவை விட கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார்.

தமிழ்நாட்டு குடிகாரர்களுக்கு ஜெயலலிதா தந்து உள்ள அதிர்ச்சி செய்தி




தமிழக சட்டப்பேரவையில் நேற்று 6 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் முக்கியமான ஒன்று தமிழகத்தில் விற்கப்படும் வெளிநாட்டு சரக்குகளின் கட்டணம் உயருகிறது. அவை 5 ரூபாயில் இருந்து 60 ரூபாய் வரை உயரவுள்ளது. இதற்கு காரணம் இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களுக்கு விதிக்கப்படும் ஆயத்தீர்வையை உயர்த்துவதாகும். இதன் பல சரக்குகளில் விலை உயர்வு உள்ளது. இந்த விலை உயர்வு தமிழக குடிகாரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண ரகம் :

குவார்டர் 180 மிலி :
          முந்தைய விலை : ரூ.70
           இப்போதைய விலை : ரூ.75

ஹாஃப் 375 மிலி :
          முந்தைய விலை : ரூ.140
           இப்போதைய விலை : ரூ.150

புல் 750 மிலி :
           முந்தைய விலை : ரூ.280
           இப்போதைய விலை : ரூ.300

பிராந்தி (நடுத்தர ரகம்) :

குவார்டர் 180 மிலி :
          முந்தைய விலை : ரூ.80
           இப்போதைய விலை : ரூ.90

ஹாஃப் 375 மிலி :
          முந்தைய விலை : ரூ.160
           இப்போதைய விலை : ரூ.185

புல் 750 மிலி :
           முந்தைய விலை : ரூ.320
           இப்போதைய விலை : ரூ.365

பிராந்தி (நடுத்தர ரகம்) :

குவார்டர் 180 மிலி :
          முந்தைய விலை : ரூ.90
           இப்போதைய விலை : ரூ.105

ஹாஃப் 375 மிலி :
          முந்தைய விலை : ரூ.180
           இப்போதைய விலை : ரூ.210

புல் 750 மிலி :
           முந்தைய விலை : ரூ.360
           இப்போதைய விலை : ரூ.420

காவல்துறையால் தாக்கப்பட்டார் ஃபேஸ்புக் அதிமுக ஆதரவாளர் கிஷோர் கே ஸ்வாமி...


ஒடிசலான தேகத்துடன் வெட வெட வென்று இருக்கு கிஷோர் கே ஸ்வாமி ஃபேஸ்புக்கில் அதிமுகவின் தீவிர விசுவாசியாக வலம் வருபவர், திமுக தலைவர் கருணாநிதி மீது சமீபத்தில் வழக்கு தொடுத்துள்ளார், மேலும் கனிமொழி உட்பட திமுகவின் பெரிய குடும்பத்தினர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் அதிமுக ஆதரவாளராக வலம் வரும் கிஷோர் கே ஸ்வாமி மீதே நேற்று காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர், இது குறித்து கிஷோர் கே ஸ்வாமி ஃபேஸ்புக்கில் எழுதிய தாவது...

இன்று நடந்த சம்பவம் ,,,

இரவு 9.45 ... பில்லர் உதயம் தியேட்டர் அருகில் , ஒரு நண்பர் இருசக்கர வாகனத்தில் , என்னை அருகில் இருக்கும் இடத்திற்கு விடுவதற்கு அழைத்துச் சென்றுக் கொண்டிருக்கிறார் .

சாலை பாதுகாப்பு காவல் துறையினர் நிறுத்தினார்கள் . மிதமான அளவு அந்த நண்பர் மது அருந்தியுள்ளார் . நான் மது அருந்தியிருக்கிறேனா என்று கேட்டார் ... அருந்தியிருக்கலாம் , அது உங்களுக்கு அவசியமில்லாத விஷயம் என்று சொன்னேன் , நான் வாகனம் ஓட்ட வில்லை என்பதனால் .

நண்பரிடம் பேசி அவர்கள் ஏதேதோ மிரட்டிக் கொண்டிருக்க , நான் அருகில் சென்று , சார் , என் வக்கீல் உங்களிடம் பேச விரும்புகிறார் , நீங்கள் என்ன வழக்கு வேண்டுமானாலும் முறையே பதிவு செய்யுங்கள் , அதற்க்கான அபராதம் என்னவோ அதை நாங்கள் நீதிமன்றத்தில் கட்டி விடுகிறோம் என்று சொன்னது தான் தாமதம் ...

" யோவ் ... யாருய்யா நீ " என்று மிரட்டல் தொனியில் கேள்வி

நான் உடனே , சார் , நான் இவருடன் வாகனத்தில் வந்தவன் , உங்களிடம் நான் எதையும் தவறாக கேட்கவில்லை . தயவு கூர்ந்து அபராதத்திர்கான தாக்கீதை கொடுங்கள் , என்று சொல்ல ...

"டேய் ... தே... பைய்யா ... நீ யாருடா என்னை கேள்வி கேட்க "

என்பது அவரது பதில் ....

சார் , நான் உங்களிடம் மரியாதையாக பேசிக் கொண்டிருக்கிறேன் , தயவு கூர்ந்து மரியாதையாக பதில் அளியுங்கள் என்று சொல்ல ...

"ஒம்...... உனக்கென்ன டா மரியாத "

இப்படி பேசியவுடன் ... லஞ்சம் வாங்கி பிழைப்பை நடத்தும் உங்களுக்கே இவ்வளவு மரியாதை கொடுத்து நான் பேசும் பொழுது ... அபராதத்தை கட்டுகிறேன் என்று சொல்லும் எனக்கு நீங்கள் மரியாதை தந்து தானாக வேண்டும் ... என்று நான் பதிலுக்கு கூறினேன்

நீங்கள் காவல் துறை அதிகாரி என்கிறீர்கள் , உங்கள் சட்டைப் பையில் உங்கள் பெயர் கொண்ட அட்டை இருக்க வேண்டும் , அது இல்லை . அதுவே சட்டப் படி தவறு , அதையும் மீறி தவறான வார்த்தைகளை உச்சரிக்கிறீர்கள் , அதுவும் தவறு என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே ...

அவருடன் இருந்த 4 காவலாளிகள் சரமாரியாக என்னை அடிக்கத் துவங்கினார்கள் ...

சரி அடியுங்கள் .. எனக்கு அது குறித்து கவலையில்லை , ஆனால் , கேள்வி கேட்கும் நபர்களை இப்படித் தான் அசிங்கமாகத் திட்டுவீர்களா என்று கேட்டுக் கொண்டே இருந்தேன் ...

நண்பர் என்னிடம் வந்து சமாதானமாகப் போகலாமே என்று சொல்ல ... இல்லை , இவர்களுக்கு நாம் யார் என்று காட்ட வேண்டும் என்பதை விட ... இவர்களுக்கு சில விஷயங்களை புரிய வைக்க வேண்டும் என்பதே முக்கியம் என்று ... மிகத் தெளிவாக உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள் என்று நான் சொல்ல ...

அவர் அருகில் இருந்த சட்டம் ஒழுங்கு காவல் துறை பெண் அதிகாரியிடம் என்னை ஒப்படைத்தார் ...

அந்த அம்மணி , நவீன சொர்ணாக்கா போல ... ஆரம்பமே அசத்தலாக இருந்தது , ஏன்டா தே ... மவனே என்று ஆரம்பித்து திட்ட....

மேடம் நீங்கள் என் தாயை போன்றவர் , நான் எந்தத் தவறும் செய்யவில்லை , கேள்வி கேட்டேன் , அதற்கு அடிக்கிறார்கள் .. இப்பொழுது நீங்களும் தவறாக நடந்துக் கொள்கிறீர்கள் ... என்று சொல்லிப் பார்த்தும் .. ஜீப்பில் ஏற்றி ஆர் 3 காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள் ...

அங்கே இருந்த உயர் அதிகாரி , அவர் பெயர் இஸ்மாயில் என்று நினைக்கிறேன் ...

என்ன விஷயம் என்று கேட்டார் ... அதற்கு நான் சொல்லும் முன்னரே முந்திக் கொண்ட அந்த ட்ராபிக் அதிகாரி ...

சார் என்னை தரக் குறைவாக பேசி என்னை பணி செய்ய விடாமல் இவர் தடுக்கிறார் என்றார் ...

நம்ப முடிகிறதா ? என் உடலமைப்பைப் பார்த்தால் , எவரையும் , அதுவும் காவல் துறை அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுக்கும் சரீரமா எனக்கு ?

அத்து மீறியது அந்த அதிகாரி , நான் கேள்வி மட்டுமே கேட்டேன் , என்னை இங்கே அழைத்து வந்துள்ளீர்கள் .. எனக்கு எதற்கும் பயமோ கவலையோ இல்லை ... புகாரை பதிவு செய்யுங்கள் , இவர் என்னை அடித்தார் என்பதையும் நான் பதிவு செய்கிறேன் , என்னிடம் ஆதாரம் இல்லாமல் இருக்கலாம் .. ஆனால் என் மனசாட்சி போதும் ... என்று நான் சொல்ல

அந்த அதிகாரி அந்த ட்ராபிக் காவல் அதிகாரியிடம் ஏதோ சொல்லி சமாளிக்கச் சொன்னார் ...

அதற்குள் என் வக்கீலும் அங்கே ஆஜராக , வழக்கை பதிவு செய்யுங்கள் என்று நான் அடம் பிடிக்க ... பின்னர் , அந்த அதிகாரி என்னிடம் வந்து மன்னிப்புக் கோருவதாக கூறினார் ...

எதற்கு மன்னிப்பு ? அவர் அதிகாரி அவர் பணியை அவர் செய்கிறார் ... நான் சாமானியன் ... கேள்வி கேட்கிறேன் , உரிய பதில் அளிக்க வேண்டியது அவர் கடமை , பதில் அளிக்க முடியாது என்று சொல்வதும் அவர் உரிமை ... ஆனால் கேள்வி கேட்டதற்கே அடிப்பேன் என்பது நியாயமில்லை ...

என்னை பொதுவில் 30 பேர் பார்க்கும் படி அடித்தது எனக்கு அவமானமில்லை ... ஆனால் இனியும் நீங்கள் எவரிடமும் அவ்வாறு நடந்துக் கொள்ளக் கூடாது அவ்வளவே ... நீங்கள் யூனிபார்ம் அனிந்து வந்திருக்கும் அதிகாரி ... நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்பது முறையாகாது , எனக்கு அது அவசியமும் இல்லை ...

நான் யார் , என் பின்னணி என்ன என்றெல்லாம் காண்பித்து உங்களிடம் எனக்கு சலுகையும் தேவையில்லை ... அபராதம் என்னவோ அதைக் கட்ட நான் தயார் . ஆனால் , இனி எவரிடமும் இப்படி முறைகேடாக நடந்துக் கொள்ளாதீர்கள் ....

நீங்கள் எங்கள் சேவகர்கள் , எங்கள் எஜமானிகள் அல்ல .... 7 கோடி மக்களுக்கு 83 ஆயிரம் காவல் துறையினர் தான் என்பதை நானும் அறிவேன் , உங்களுக்கு இருக்கும் மன அழுத்தங்களையும் நான் அறிவேன் ... அதனால் தான் , உங்கள் மீது எனக்கு கோவம் இல்லை ... ஆனால் வேறு எவருக்கும் இப்படி இனி நடக்கக் கூடாது என்பதனால் தான் இவ்வளவு போராட்டமே ...

நன்றி வணக்கம் .. என்று கூறிவிட்டுக் கிளம்பினேன் ...

பின்னால் வந்த அந்த அதிகாரி என்னிடம் சொன்னது

சார் . தப்பு நடந்திடுச்சு ... ஆனாலும் , மன்னிப்பு தேவையில்லைன்னு சொன்னீங்க பாருங்க , அது தான் பெரிய விஷயம் என்றார் ...

அது பெரிய விஷயமில்லீங்க ... நான் பட்ட அவமானம் இனி எவருக்கும் ஏற்படக் கூடாது என்றால் , அங்கே அவசியப் படுவது தண்டனையில்லை , விழிப்புணர்வு .. என் வலி என்ன என்று உங்களுக்குத் தெரிய வேண்டும் என்று நினைத்தேன் , தெரியப் படுத்திவிட்டேன் ... அதே வலி உங்களுக்கும் ஏற்பட வேண்டும் என்று நினைத்தால் , என் வலியை நான் முழுவதுமாக உணரவில்லை என்றே அர்த்தம் ...

இப்படிச் சொல்லி தற்பொழுது தான் வீடு வந்து சேர்ந்தேன்

இதைச் சொல்வதனால் என்னை யார் கிண்டல் செய்வார்கள் என்பதை விட ... ... இனி எவரையும் இவர்கள் இவ்வாறு நடத்தக் கூடாது என்பதற்கு தான் .... எல்லோரும் தெரிந்துக் கொள்ளுங்கள் , கேள்வி கேட்க பழகிக் கொள்ளுங்கள் ... இவர்கள் ஒன்றும் கடவுள் இல்லை ... கேள்விக்கு அப்பார் பட்டவர்களும் இல்லை .... கேள்வி கேளுங்கள் ... பதில் சொல்ல வேண்டிய சேவகர்கள் தான் இவர்கள்

https://www.facebook.com/kishore.kswamy/posts/10202646635755441

இந்த முறை சியோமி எம்.ஐ. 3 மொபைல் எத்தனை நொடிகளில் விற்று தீர்ந்தது என்பதை பார்த்து அதிர்ச்சியடந்து விடாதீர்கள்




சியோமியின் எம்.ஐ.3 மொபைலுக்கு இருக்கும் மவுசு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனை வாங்குவதற்காக ஒரு போரே நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த மாதம் விற்பனைக்கு வந்த மொபைல் நொடிகளில் விற்று தீர்ந்து விடுகிறது. முதல் 3 ரவுண்டில் 35 ஆயிரம் மொபைல்கள் விற்று தீர்ந்து இருந்தன. 4 வது ரவுண்டு இன்று நடந்தது. இதில் 20 ஆயிரம் மொபைல்கள் விற்பனைக்கு வந்தன. அவை அனைத்தும் 2.4 செகன்டுகளில் விற்று தீர்ந்து விட்டன. அடுத்த ரவுண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி நடக்க உள்ளது. இதில் பதிவு செய்வதற்கான நேரம் இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

இந்த மொபைல் பிளிப்கார்ட் இணையதளத்தில் மட்டும் தான் கிடைக்கும். இதனை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என சிலர் தவம் இருந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஜிகர்தண்டா, வேலையில்லா பட்டதாரி புகைப்பிடிப்பதை ஊக்குவிக்கிறது என சாடும் மருத்துவர் இராமதாசு

ஜிகர்தண்டா, வேலையில்லா பட்டதாரி புகைப்பிடிப்பதை ஊக்குவிக்கிறது, திரைத்துறையினர் சமூகப் பொறுப்புடன் செயல்படவேண்டும் - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை.


வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர் வெளியான போது பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர், அதையடுத்து புகைப்பிடிப்பது போன்ற அந்த போஸ்டர் விளம்பரங்களில் பயன்படுத்தப்படவில்லை, தற்போது வெளியாகியுள்ள ஜிகர்தண்டா திரைப்படமும் புகைப்பிடித்தலை ஊக்குவிக்கின்றது என்று கடுமையாக விமர்சித்துள்ளார் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ்

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவர் இராமதாசின் அறிக்கையின் ஒரு பகுதி இங்கே

"உலகின் தலைசிறந்த அறிவாயுதங்களில் ஊடகமும் ஒன்றாகும். ஊடகக் குடும்பத்தின் வலிமையான உறுப்பினரான திரைப்படங்கள் ஏற்படுத்தும் சமூக சீரழிவுகள் அண்மைக்காலமாக அதிகரித்துவிட்டன. இளைஞர்களை தவறான வழிக்கு திருப்புவதில் திரைப்படங்கள் தான் முக்கியப் பங்காங்காற்றுகின்றன.

தமிழ் திரைப்படங்களில் அண்மைக்காலமாக வன்முறைக் காட்சிகளும், புகை பிடிக்கும் மற்றும் மது அருந்தும் காட்சிகளும் அதிகரித்து விட்டன. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ‘வேலையில்லாப் பட்டதாரி’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பவர் அடிக்கடி புகைப்பிடிப்பது போன்றும், மது அருந்தி விட்டு நடனமாடுவது போலவும் காட்சிகள் அமைந்திருக்கின்றன.

ஜிகர்தண்டா என்ற திரைப்படமும் மது மற்றும் புகையை போற்றும் வகையில் தான் உள்ளது. பொதுவாகவே இப்போது வெளியாகும் பெரும்பாலான படங்களில் நாயகன், நாயகி இருவரும் இணைந்து மது அருந்துவதைப் போலவும், செயற்கரிய செயல்களை செய்துவிட்டால் அதைக் கொண்டாட ஒரேவழி மதுவும், புகையும் பிடித்தபடியே நடனமாடுவது தான் என்பது போன்றும் காட்சிகள் வைக்கப்படுகின்றன. காட்சிக்கு தேவையே இல்லாவிட்டாலும் கூட 90 % திரைப்படங்களில் இத்தகைய காட்சிகள் இடம் பெறுகின்றன.

மருத்துவர் அன்புமணி இராமதாசுவின் அறிவுரையை ஏற்று ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் இளைஞர்களை சீரழிக்கும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டோம் என வாக்குறுதி அளித்தனர். ஆனால், இன்னும் சில நடிகர்கள் இத்தகைய காட்சிகளில் நடிப்பதும், எச்சரிக்கை வாசகத்தை காட்டி விட்டால் எத்தனை முறை வேண்டுமானாலும் இத்தகைய காட்சிகளை காட்டலாம் என சமூக பொறுப்பின்றி செயல்படுவதும் தொடர்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புகைப்பிடிப்பதால் 10 லட்சம் பேரும், மது அருந்துவதால் 18 லட்சம் பேரும் உயிரிழக்கிறார்கள்.புகைப்பிடிக்கும் இளைஞர்களில் 52.2% பேர் திரைப்படங்களில் தங்களுக்கு பிடித்த நடிகர் புகைக்கும் காட்சிகளைப் பார்த்து தான் புகைப்பழக்கத்திற்கு ஆளானதாக லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் உணராமல் தங்களின் வருமானத்திற்காக மது மற்றும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடித்து இளைஞர் சமுதாயத்தை திரைத்துறையினர் தொடர்ந்து சீரழித்து வருவதை இனியும் வேடிக்கைப் பார்க்க முடியாது.

உண்மைய பேசிய முதலமைச்சர் மகள் மீது ஜாமீனில் வரமுடியாத வழக்கு


இந்திய சுதந்திரத்திற்கு முன் காஷ்மீரும் தெலுங்கானாவும் இந்தியாவின் அங்கம் அல்ல. அவை வலுக்கட்டாயமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டன என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும் எம்பியுமான கவிதா கூறினார், இதையடுத்து பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த புகாரில் ஜாமீனில் கவிதா மீது ஜாமீனில் வெளி வர முடியாத வழக்கு பதியப்பட்டுள்ளது. இதையடுத்து முதல்வர் மகள் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பு ஹைதராபாத்தில் நிலவுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு 600க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இந்தியாவுடன் தானாக இணைந்தன அல்லது இணைக்கப்பட்டன. காஷ்மீரும், ஹைதராபாத்தும்(தெலுங்கானா) மட்டும் இந்தியாவுடன் இணையவில்லை, அதன் பின் போலிஸ் நடவடிக்கையை அடுத்து ஹைதராபாத்(தெலுங்கானா) இந்தியாவுடன் இணைக்கப்பட்டது, காஷ்மீரும் காஷ்மீர்-இந்தியா ஒப்பந்தத்தின் அடிப்படையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்து இணைக்கப்பட்டது.

உண்மையை சொல்வதற்கெல்லாம் ஜாமீனில் வரமுடியாத வழக்கு போடுவது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான போக்கு நிலவுவது பாஜகவின் எத்தேச்சாதிகார போக்கை காண்பிக்கின்றது.

Telungana CM chandrashekara rao daughter Kavitha, Member of Parliament (MP) has told that Kashmir and Telungana never been part of India before Independence. These 2 were annexed to india forcibly. BJP advocate complaint to police about her speech and Police registered case against CM daughter Kavitha MP in non bailable sections.

சச்சின் மட்டும் என்ன பாவம் செய்தார் ??




கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சினுக்கு கவுரவமாக எம்.பி. பதவியை காங்கிரஸ் அரசு தந்தது. ஆனால் அதனை எதற்கும் பயன்படுத்தாமல் இருந்தார். ஆனால் அதற்குரிய சம்பளத்தை மட்டும் வாங்கி கொண்டார். கடந்த வருடம் முழுவதும் அவர் பாராளுமன்றம் வந்ததற்கான அடையாளமே இல்லை. இவ்வாறு சச்சின் நாடாளுமன்றம் வராதது  பலராலும் விமர்ச்சிக்கப்பட்டது. தனது அண்ணனுக்கு சர்ஜரி செய்ததால் தன்னால் நாடாளுமன்றத்துக்கு வர முடியவில்லை என விளக்கம் தந்தார்.

இந்த விவகாரத்தில் சச்சின் மற்றும் ரேகாவின் பெயர்கள் மட்டும் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளன. ஆனால் இவர்களை போல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 33 எம்.பி.க்கள் நாடாளுமன்றம் பக்கம் எட்டி பார்ப்பதில்லை. அவர்களை மட்டும் யாரும் எதுவும் கேட்பதில்லை. சச்சின் மட்டும் என்ன பாவம் செய்தார், தனியாக விமர்ச்சிக்கபடுவதற்கு. நடிகை ஹேமாமாலினி, அமர் சிங், அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் ஆகியோர் கூட நாடாளுமன்றம் பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை.

சச்சின் மீது தவறு உள்ளது உண்மை தான் ஆனால் அதே நேரத்தில் பாராளுமன்றம் வராத அனைவரிடம் இதனை கேட்பதும் தான் சிறந்த ஜனநாயகமாக இருக்கும்.

5 வது டெஸ்டில் மாஸ்க் போட்டு கொண்டு விளையாட போகும் வீரர், எந்த மாஸ்க் அணிவது என உதவி கேட்டுள்ளார்





இந்தியாவுடனான 4 வது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்துக்காக பேட் செய்து கொண்டு இருந்த போது இந்திய வீரர் வருண் ஆரோன் வீசிய பந்து ஸ்டுவார்ட் பிராடின் மூக்கை பதம் பார்த்தது. உடனே ரத்தம் கொட்டியது. அதன் பிறகு அவர் அந்த போட்டியில் ஆடவில்லை. மூக்கில் கட்டு போட்டு இருந்தார். இந்நிலையில் 5 வது டெஸ்டில் ஆட போவதாக பிராட் கூறியுள்ளார். அதுவும் மாஸ்க் போட்டு கொண்டு ஆடப்போவதாக கூறியுள்ளார். எந்த மாஸ்க்கை அணிவது என டிவிட்டரில் தனது ரசிகர்களிடம் கேட்டுள்ளார். 

நமக்கு தேவையான போது உணவு தரும் நீங்கள் நம்பமுடியாத மெஷின்கள்



* கப் கேக் பெறுவதற்கு இது பயன்படும்



* பீட்சா பெறுவதற்கு இது பயன்படும்



* உருளை கிழங்கு கிரேவி பெறுவதற்கு பயன்படும்




* இதில் கிளஸை வைத்தால் பீர் உடனடியாக  சேர்ந்து விடும்





* பர்கரை உடனடியாக பெறுவதற்கு





* ஒரு கோக் வேண்டுமானால் இது பயன்படுத்துங்கள்



* ஃபெரஞ்சு ஃப்ரைஸ் வேண்டுமானால் இந்த மெஷின் உள்ளது





* உடனடியாக சரக்கு அடிக்க வேண்டுமானால் நோ டென்ஷன்





* ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என ஆசை வந்தால்





incredible food machines you won't believe exist. still all the machines didn't come to india.

தன்னை கேலி செய்த ஆணை துரத்தி துரத்தி அடித்த ஒரு தைரியமான பெண்




பெங்களூரில் ஒரு துணிச்சலான சம்பவம் நடந்துள்ளது. பார்க்கில் இருந்த ஒரு பெண்ணை , அந்த பக்கமாக வந்த வாலிபர் கிண்டல் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பெண் வாலிபரை துரத்தி பிடித்து அவரை அடித்துள்ளார். இவை அனைத்தையும் அவளது தோழி ஒருவர் வீடியோ பிடித்துள்ளார். இந்த வீடியோவை அவர் பேஸ்புக்கில் அப்லோட் செய்து உள்ளார். அந்த நபர் மீது போலீஸில் புகாரும் கொடுத்து விட்டார்.

இந்த வீடியோ பேஸ்புக்கில் பதிவு செய்வதன் மூலம் பல பெண்களுக்கு தைரியம் வரும் . அப்போது சில மாற்றங்கள் வரும் என நம்பிக்கையாக பேசினார்.



Banglore woman kicks off a man who harassed her in public.

ஏ.டி.எம்.மில் இருந்து பணத்துக்கு பதில் பாம்பு வந்தது, அதிர்ச்சியடைந்த பெண்




கலிபோர்னியாவை சேர்ந்த ஜுலியட் மெட்னாட் என்னும் பெண் ஏ.டி.எம். நிலையத்துக்கு சென்று கார்ட்டை ஸ்வைப் செய்து விட்டு பணம் வரும் என்று காத்துக்கொண்டு இருந்தார். ஆனால் பணம் வெளியே வருவதற்கு முன் அங்கிருந்த பாம்பு ஒன்று வெளியே வந்து எட்டிப்பார்த்தது. இதனை பார்த்த அவர் அதிர்ச்சியுற்றார்.  உடனடியாக வெளியே வந்து காவலர்களிடம் புகார் தெரிவித்தார். காவலர் உள்ளே சென்று பார்த்தபோது மிஷினை சுற்றி பாம்பு ஊர்ந்து கொண்டிருந்ததை பார்த்தார்.

உடனடியாக தனது மேலதிகாரிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார். வன விலங்கு அதிகாரிகள் விரைந்து வந்து அந்த பாம்பை அகற்றினர். அந்த ஏ.டி.எம். மிஷின் செண்டரில் எலிகள் நடமாடுவதாகவும், அதை பிடிக்கவே அந்த பாம்பு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மெஷினுக்குள் பாம்பு சென்றதால் சில தொழிற்நுட்ப கோளாறுகள் நடந்து உள்ளன. எனவே அந்த ஏ.டி.எம். தற்போது தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.


snake came in atm instead of cash, so that the woman got shocked.

வீரம் vs விஜய் அவார்ட்ஸ், டி.ஆர்.பி. ரேட்டிங்கில் வென்றது யார் ??





விஜய் டிவியில் 10 நாட்களுக்கு முன் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டது.இது 2 பாகங்களாக பிரித்து ஒளிபரப்பபட்டது.  இதில் முதல் பாகத்துக்கு  போட்டியாக  சன் டிவியில் சிங்கம் 2 படம் ஒளிபரப்பபட்டது. விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை குறைந்தபட்சம் 2 கோடி பேர் பார்ப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறியது. இதில் அஜித்துக்கு விருது தராததால் அதற்கு எதிராக அஜித் ரசிகர்கள் இருந்தனர். எனவே அஜித் ரசிகர்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள சன் டிவி முடிவு எடுத்தது. அவர்களை தங்கள் பக்கம் இழுக்க 2 ஆம் பாகத்துக்கு போட்டியாக வீரம் படத்தை போட்டார்கள்.

இதன் காரணமாக டி..ஆர்.பி. போட்டியில் வெல்ல போவது யார் என கடும் சண்டை நடந்து கொண்டு இருந்தது. இறுதியில் அதன் பட்டியல் வெளியாகி உள்ளது. ஜூலை 27ம்தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை எந்த சேனல் அதிகமாகப் பார்க்கப்பட்டது என்ற நிலவரம் அந்த டி.ஆர்.பி மூலமாக தெரியவந்துள்ளது. சென்னை நகரை பொருத்தவரையில் டி.ஆர்.பி. யில் விஜய்க்கு டிவிக்கு 10 புள்ளிகளும், சன் டிவிக்கு 11 புள்ளிகளும் கொடுக்கப்பட்டு உள்ளன. ஒட்டுமொத்த தமிழகத்தை பொருத்தவரையில் விஜய் டிவிக்கு 10 புள்ளிகளும், சன் டிவிக்கு 9 புள்ளிகளும் தரப்பட்டு உள்ளன.
தமிழகத்தை பொருத்தவரையில் தளபதியும், சென்னையை பொருத்தவரையில் தலயும் வென்று உள்ளார்கள்.


The TRP battle between vijay tv show vijay awards and sun tv movie veeram on july 27 th. It shows the war between vijay and ajith.

ஆல் ரவுண்டர்களில் நம்பர் - 1 இடத்தைப் பிடித்தார் அஷ்வின் !!



திங்கட்கிழமை அன்று வெளியிடப்பட்ட ஐ.சி.சி ஆல் ரவுண்டர் ரேங்கிங்கில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் முதல் இடம் பிடித்தார் .

சென்ற போட்டியில் இந்திய அணி தோற்றாலும் , அஷ்வின் இரண்டு இன்னிங்க்சில் முறையே 40, 46 ரன்கள் சேர்த்தார் . ஆனால் பந்து வீச்சில் இவரால் விக்கெட் எதுவும் எடுக்க முடியவில்லை .

372 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தார் . இரண்டாம் இடத்தில் தென் ஆப்ரிக்காவின் வெரான் பிலாண்டர் 365 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார் . ஷகிப் அல் ஹாசன் மூன்றாம் இடத்திலும் , ஜான்சன் 4 ஆம் இடத்திலும் உள்ளார் .

" நான் யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளேன் " - ஆறே நாளில் பட்டம் பெற்ற மத்திய அமைச்சர் சொல்லுகிறார் .


மோடி அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் ஸ்மிருதி இராணி . முன்னர் இவர் கல்வி நிலை குறித்து பலர் அதிருப்தி தெரிவித்து இருந்தனர் . ஆனால் அவர்களின் கேள்வி குறித்து நடந்த இந்தியா டுடேயின் கூட்டத்தில் பதில் அளித்துள்ளார் .

அவர் கூறுகையில் , " என்னை பலர் படிக்காதவர் என்று குறை கூறுகின்றனர் . ஆனால் எனக்கும் யேல் பல்கலைக்கழகத்தில் இருந்து பட்ட இருக்கிறது . என்னால் அதை வெளிக் கொண்டு வர முடியும் , அதை மட்டும் இல்லாமல் , யேல் பல்கலைக்கழகத்தில் இருந்தவர்கள்  என் தலைமைப் பண்பை எப்படி பாராட்டினார்கள் என்றும் கொண்டு வர முடியும் . ஆனால் அது தேவையில்லை . இது போன்ற பிரச்சனைகளைக் கிளப்பி என் கவனத்தைச் சிதறடிக்கின்றனர் " என்றார்

ஆனால் அவர் அந்த பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்டம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை . இது குறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவிக்கையில் , " இந்தியா சார்பாக 11 அமைச்சர்கள் யேல் பல்கலைக்கழகத்தில் நடந்த தலைமைப் பண்புக்காக நடந்த 6 நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் " என்று தெரிவித்துள்ளார் .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media