BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 14 October 2014

தண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள்



வெளியூர்களுக்கு பயணம் செல்லும்போது, பெரும்பாலோனோர், குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம். Aquafina, Kinley, Bislery போன்ற பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துவோம்.  இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதில்லை. அதோடு இப்பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை. 

அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலான எண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு தயாரிக்கப் பட்டது என்பதை உணர்த்தும். படத்தில் எண்களும் அதற்கான வேதிப்பொருளின் பெயரும் இடம் பெற்றுள்ளது . இந்த வேதிபொருட்கள் அனைத்துமே நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை. இந்த பாட்டில்களிலுள்ள நீரை அருந்திவிட்டு எக்காரணம் கொண்டும் அதில் மீண்டும் நீரை நிரப்பி பயன்படுத்தக்கூடாது .  அவ்வாறு பயன்படுத்தினால் உடலுக்கு பெரும் தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது .
கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாட்டில்களில் குடி நீரை நிரப்பி பள்ளிகளுக்கு தினமும் அனுப்புகிறார்கள்.
இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.  மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் பாட்டில்களையும் வெயில் படும் இடங்களிலும் வைக்கக்கூடாது.  அப்படி வைப்பதால் பாட்டிலின் வேதிப்பொருட்கள் வெகு எளிதில் நீரில் கலந்து விட வாய்ப்புள்ளது. இவற்றில் 1, 3, 6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை. ஆகவே இனிமேல் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது கம்பெனி பெயர் மற்றும் பாட்டிலின் அடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குவது சிறந்தது. தண்ணீர் காலியானதும், பாட்டிலை, சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அப்புறப் படுத்துவது அதை விட சிறந்தது

சிறுநீரக பாதிப்புக்கு வாழைத்தண்டு நல்ல மருந்து

 
 
சர்க்கரை நோயை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறும்போது, அது சிறுநீரகத்தைப் பாதிக்கும் வாய்ப்பு மிக அதிகம். மற்ற எந்த நோய்க்கும் இல்லாதபடி, சிறுநீரக நோய்க்கு உணவில் தனிக் கவனம் தேவை.  

சேர்க்கவேண்டியவை: தினசரி மூன்று முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியம்.  பலரும் பணி அவசரத்தில் தவறவிடுவது இதனைத்தான். சிறுநீரை நன்கு வெளியேற்ற உதவிடும் உணவுகளான வாழைத்தண்டு, வாழைப்பூ, முள்ளங்கி, பார்லி, வெள்ளரி போன்ற காய்கறிகளைத் தவறாது வாரம் மூன்று, நான்கு நாட்களாவது சாப்பிடுவது அவசியம். பாசிப்பயறின் புரதம் சிறுநீரக நோயினருக்கு ஏற்றது.  காய்கறி, கீரைகளை நிறைய நீர்விட்டு நன்கு வேகவைத்து, நீரை வடித்துவிட்டு சாப்பிடுவது அதிக அளவு உப்புகள் உணவில் தங்காமல் பார்த்துக்கொள்ளும்.
 
தவிர்க்கவேண்டியவை: அதிக உப்பு, சிறுநீரகத்தின் பணிக்கு சிரமம் கொடுக்கும். வாழை, எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்கனியைத் தவிர்ப்பது நல்லது.  கேரட், காலிஃப்ளவர், பீட்ரூட், நூல்கோல், பருப்புக் கீரை இவற்றில் சோடியம் அதிகம் உள்ளதால் தவிர்க்கவும்.

தமிழில் தேசிய கீதம் : தமிழ் ஆசிரியருக்கு சிங்கப்பூர் அரசு பாராட்டு



சிங்கப்பூரில் ஆங்கிலம், சீனம், மலாய் மற்றும் தமிழ் ஆகிய 4 மொழிகள் ஆட்சி மொழிகளாக உள்ளன. இங்கு ‘முன்னேறு வாலிபா... எனத் தொடங்கும் தமிழ்பாடல், தேசிய கீதமாக உள்ளது. கடந்த 1967ம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் உள்ள பள்ளிகளிலும், அந்நாட்டின் தேசிய அணிவகுப்பின் போதும் இந்தப்பாடல் பாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, சீனா மற்றும் மலேசிய மாணவர்களும் இதனை விரும்பி பாடுகின்றனர். இதனை ஜேசுதாசன் என்ற தமிழாசிரியர் 1966-ல் இயற்றியுள்ளார்.

கால் வலியை விரட்டும் நெல்லி ரசம்

குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும் திறமை பெற்றது வெற்றிலை நெல்லி ரசம். 



தேவையான பொருட்கள்:

முழு நெல்லிக்காய் 10, வெற்றிலை 20, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் 4, பூண்டு 6 பல், வால் மிளகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை: 

நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு, பொடியாக நறுக்கிய பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும். அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.


இந்த நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதயநோயாளிகளுக்கும் ஏற்ற உணவாக அமைகிறது. எலும்பு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

ஈராக்கில் 3 இடங்களில் குண்டு வெடிப்பு



ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று மாலை 3 குண்டுகள் வெடித்தது. இந்த தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். 60 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும் போது வடக்கு பாக்தாத்தில் ஒரு போலீஸ் சோதனை சாவடி அருகே நிகழ்த்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர் 30 பேர் படுகாயம் அடைந்தனர். கிழக்கு பாக்தாத்தில் ஒரு புகழ் பெற்ற சந்தையின் அருகே சாலையோரத்தில் நடந்த மற்றொரு குண்டு வெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். 24 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் பல கடைகள் முற்றிலும் சேதம் அடைந்தன. இதே போல் கிழக்கு பாக்தாத்தின் ஹபிபியா மாவட்டத்தில் நடந்த மற்றொரு குண்டு வெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதாரம்: பிரெஞ்சு நிபுணருக்கு நோபல் பரிசு




இந்த ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஜீன் டிரோலுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தையின் ஆற்றல், அதனை முறைப்படுத்துவது குறித்த மிகச் சிறந்த ஆய்வுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ஸ்வீடன் விஞ்ஞானியான ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக, பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது
.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதிப் பணி ஆகிய துறைகளில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. இறுதியாக, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பிரெஞ்சு பொருளாதார நிபுணர் ஜீன் டிரோலுக்கு வழங்கப்படுவதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. ஸ்விட்சர்லாந்தின் ஸ்டாக்ஹோம் நகரிலுள்ள "ராயல் ஸ்வீடிஷ் அகாடமி'யில் இந்த அறிவிப்பை வெளியிட்ட தேர்வுக் குழு தெரிவித்ததாவது: மிகச் சில நிறுவனங்களின் நடவடிக்கைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு,  தொழில்துறையை கட்டுப்படுத்துவதற்கான புரிந்துணர்வை அரசுகளுக்கு ஏற்படுத்தியமைக்காக ஜீன் டிரோலுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

நிறுவனங்களின் வீழ்ச்சி தொடர்பாக ஜீன் டிரோல் 1980-களின் மத்தியிலிருந்தே ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். பிற நிறுவனங்களைக் கையகப்படுத்துவது, உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றின் வாயிலாக நிறுவனங்கள் ஏகபோக உரிமையை நிலைநாட்டுவதை அரசுகள் எவ்வாறு கையாளவேண்டும் என்பதை அவரது ஆய்வுக் கட்டுரைகள் தெளிவாக விளக்குகின்றன. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முதல் வங்கிகள் வரையிலான பல்வேறு துறை நிறுவனங்கள் குறித்தும் தொழில் கொள்கை வகுக்க அவரது புத்தகங்கள் பேருதவி புரிகின்றன என்று தேர்வாளர்கள் குறிப்பிட்டனர். ஆல்ஃபிரட் நோபலால் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு உருவாக்கப்படவில்லை என்றாலும், அத்துறையை ஊக்கப்படுத்துவதற்காக ஸ்வீடன் மத்திய வங்கி 1968-ஆம் ஆண்டு இந்த விருதை உருவாக்கியது. ஜீன் டிரோல் உள்பட, இந்த ஆண்டு நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் ஆல்ஃபிரட் நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி நோபல் பரிசு வழங்கப்படும்.
ஜீன் டிரோல் (61)பிரான்ஸின் டிராயஸ் நகரில் 1953-ஆம் ஆண்டு பிறந்தவர் ஜீன் டிரோல். மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் 1981-ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்ற இவர், டூலூஸ் பொருளாதாரக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். ஹங்கேரியில் வழங்கப்படும் கெளரவம் மிக்க "ஜான் வான் நியூமன்' விருதினை 1998-ஆம் ஆண்டு இவர் வென்றுள்ளார்.

கமுதி அருகே மணல் கடத்தல்: டிராக்டர் பறிமுதல்


ராமநாதபுரம் மாவட்டம, கமுதி அருகே மணல் கடத்தல் டிராக்டரை போலீஸார் பறிமுத்ல செய்து, வட்டாட்சியரி டம் ஒப்படைத்தனர்.

 கமுதி பகுதியில் ஆற்று மணல் கடத்தப்படுவதைத் தடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் க.ந்தகுமார், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் எம்.என்.மயில் வாகனன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து வட்டாட்சியர் பி.நாகநாதன் தலை மையில் வருவாய்த்துறையினரும், உதவி காவல் கண்காணிப்பாளர் எஸ்.சுந்தரவடிவேல் தலைமையில போலீஸாரும் தினசரி ரோந்து சுற்றி மணல் கட்த்தப்படாமல் தடுப்பதற்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த நிலையி்ல் கா வல் ஆய்வாளர் முருகன், சார்பு ஆய்வாளர்கள் தங்கப்பாண்டியன், திலகவதி, மாடசாமி ஆகியோர் போலீஸாருடன் ரோ ந்து சுற்றி வந்தபோது, எதிரே ஆற்று மணலை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று வந்ததைக் கண்டனர்.  இதையடுத்து ம ணலுடன் டிராக்டரை போலீஸார் கைப்பற்றி மேல் நடவடி்க்கைக்காக, வட்டாட்சியர் பி.நாகநாதனிடம் ஒப்படைத்தனர். ம ணல் கடத்தல் சம்பந்தமாக விசாரித்து தண்டனை வழங்கும் பொருட்டு, பரமக்குடி உதவி ஆட்சியர் எஸ்.சமிரனுக்கு த கவல் அறி்க்கையை வட்டாட்சியர் அனுப்பி உள்ளார்.

இந்தியாவிலேயே முதல்முறையாக அகமதாபாத்தில் அறிமுகமாகும் புதிய சாலை விதிமுறைகள்



வெளிநாடுகளில் இருப்பது போன்ற புதிய சாலை விதிமுறைகள் திட்டம் இந்தியாவிலேயே முதல்முறையாக அகமதாபாத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐ.டி.எஸ். எனப்படும் இந்த டிராபிக் கன்ட்ரோலில் சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களுக்கு ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்ட போர்டுகள் போக்குவரத்து நிலைமையை காட்டிக் கொண்டேயிருக்கும். அதிலுள்ள சென்சார்கள் அடுத்தடுத்த சாலைகளில் உள்ள போக்குவரத்து நிலவரங்களை கண்டறிந்து எல்.இ.டி. விளக்குகளில் பிளாஷ் செய்கிறது. அதற்கான குறியீடுகளையும் படமிட்டு காட்டுகிறது. இதைபார்த்து வாகன ஓட்டிகள் அடுத்து என்ன செய்யலாம் என்பதை முடிவெடுத்துக் கொள்ளலாம்.

பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ஜப்பானுக்கு சென்றிருந்தார். அங்குள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு முறைகளை பார்த்து வியந்த அவர் ஜப்பானை போன்றே குஜராத்திலும் இப்படியொரு போக்குவரத்து முறையை அமைக்க சர்வதேச ஒத்துழைப்பு முகமையான 'ஜைக்கா' விடம் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, அண்மையில் பிரதமரான பிறகும் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் பிரதமர் மோடி. இந்நிலையில், பிரதமரின் கோரிக்கையை ஏற்று ஜப்பானை சேர்ந்த ஜீரோ சம் கம்பெனி அகமதாபாத் முனிசிபல் கழகத்துடன் இணைந்து இன்று 132 அடி ரிங் ரோட்டில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதற்கட்ட சோதனை நடத்தி பார்த்தது. இதற்கு 'ஜைக்கா' நிதியுதவி செய்தது.

இந்த சோதனையில், சென்சார் வசதி கொண்ட 14 கேமிராக்களும், வி.எம்.எஸ் எனப்படும் 4 பெரிய எல்.இ.டி. விளக்குகள் கொண்ட டிஸ்பிளே போர்டுகளும் குறிப்பிட்ட இடைவேளைகளில் பொருத்தப்பட்டது. வாகன போக்குவரத்தை அந்த சென்சார்கள் துல்லியமாக உணர்ந்து குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பிளாஷ் செய்தது. இந்த சோதனை 2015 மார்ச் இறுதி வரை செயல்படுத்தப்படும். அதன்பிறகு, ஏ.எம்.சி. முறையில் இந்த ஐ.டி.எஸ். டிராபிக் சிஸ்டம் இந்தியாவில் பல நகரங்களில் அமைக்கப்படுகிறது. 
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media