BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 8 March 2014

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உதயகுமார் விருப்பம்


ஆம் ஆத்மி கட்சியில் சில நாட்களுக்கு முன்பு இணைந்த அணு உலை எதிர்ப்பாளர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார் மற்றும் குழு உறுப்பினர் ஜேசுராஜ் ஆகிய இருவரும் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் கிறிஸ்டினா சாமி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், உதயகுமார், ஜேசுராஜ் ஆகிய இருவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பது குறித்து ஆம் ஆத்மி கட்சி மேலிடத்தில் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

பெண்ணின் பெயரில் போலியாக முகநூல் கணக்குகள் தொடங்கி, ஆபாச படங்களை வெளியிட்ட வாலிபர் கைது


ஆந்திர மாநிலத்தை சேர்ந்த முஹம்மது காலித், ஒரு ஓட்டலில் பணியாற்றிய போது, அங்கு வேலை செய்த இளம்பெண் மீது காதல் வயப்பட்டார். அவரது காதலை அந்த பெண் நிராகரித்ததால் அவரது இமெயில் ஐ.டி.யை அறிந்திருந்த முஹம்மது காலித், அதை வைத்து அந்த பெண்ணின் பெயரில் போலியாக ஃபேஸ்புக்கில் கணக்கை ஆரம்பித்து, அந்த பெண்ணின் புகைப்படத்துடன் ஆபாச செய்திகளையும், படங்களையும் பதிவேற்றம் செய்து, அவரது நணபர்கள் பார்க்கும்படி செய்து வந்துள்ளார்.

இது தொடர்பாக அந்த பெண் ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.  போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரில் 7 போலி ஃபேஸ்புக் கணக்குகளை ஆரம்பித்து,  முஹம்மது காலித் ஆபாச வேலைகளில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

3 பேர் உயிரை காக்க பணம் வாங்காமல் வாதாடிய ராம்ஜெத் மலானிக்கு சென்னையில் விழா


ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வாதாடிய பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத் மலானியை கௌரவிக்கும் வகையில், மதிமுக பேரவையில் இன்று காலை சென்னை அண்ணாநகர் விஜயஸ்ரீ மகாலில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் கலந்து கொள்ள வந்த ராம்ஜெத் மலானிக்கு பலத்த, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழாவில் ராம்ஜெத் மலானியை பாராட்டி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசிய‌தாவது:

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதில் ராம்ஜெத் மலானிக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த 3 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று அவர் கடுமையாக பாடுபட்டு வருகிறார்.

3 பேரின் உயிரைக் காப்பாற்ற அவர் பணம் வாங்காமல் வாதாடியுள்ளார். அவருக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவருக்கு தமிழ்ச்சமுதாயம் மிகவும் கடமைப்பட்டுள்ளது.

ராம்ஜெத்மலானி 120–ம் ஆண்டுகள் நோய் நொடியின்றி நன்றாக வாழ வேண்டும். அவரது 100–வது பிறந்தநாள் விழாவை நாம் சென்னையில் கொண்டாட வேண்டும்.

மூவர் உயிர் காக்க, பணம் வாங்காமல் பாடுபட்ட மாமனிதர் ராம்ஜெத் மலானியை சல்யூட் செய்ய நினைப்பவர்கள், லைக் செய்யுங்கள்!

குஜராத்தில் உள்ள டீக்கடை முன்பு டீ குடித்தபடியே மோடி இன்று பிரச்சாரம், தமிழகத்தில் 41 டீக் கடைகள் முன்பு வீடியோ கான்பரன்சிங்


பாஜகவினர் தங்களது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 'நமோ' டீக்கடை என்ற பெயரில் நாட்டில் பல டீக்கடைகளை திறந்து வருகின்றனர். சமீபத்தில் கூட‌ குஜராத்தில் ஒரு டீக்கடை முன்பு இருந்து,  நரேந்திரமோடி தேர்தல் பிரச்சாரம் செய்தார். வீடியோ கான்பரன்சிங் வசதி மூலம் அப்பிரச்சாரம் நாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்டது.

அதே போன்றதொரு பிரச்சாரத்தை, இன்று மாலை அவர் குஜராத்தில் உள்ள டீக்கடை முன்பு, டீ குடித்தபடியே செய்கிறார்.

நாடு முழுவதும் இன்று மாலை வீடியோ கான்பரன்சிங் வசதி மூலம் அவரின் பிரச்சாரம் ஒளிபரப்பாகிறது. இதற்காக 1500 டீக்கடைகள், தமிழகத்தில் மட்டும் 41 டீக்கடைகள், முன்பு பெரிய திரைகள் கட்டப்பட்டு இருக்கிறது.  மோடி பேசும் போது அவரிடம் பொது மக்கள் நேரடியாக கேள்விகள் கேட்கலாம்.

சென்னையில் வேளச்சேரி ரயில் நிலையம் அருகிலும், வெட்டுவாங்கேனி, விருகம்பாக்கம், எம்.ஜி.ஆர். நகர் 100 அடி ரோடு, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தி.நகர், மத்திய சென்னையில் அயனாவரம், உள்பட 2 இடங்களிலும் வட சென்னையில் தங்கசாலை உள்பட 2 இடங்களிலும், மொத்தமாக 9 இடங்களில் அவரது பேச்சு ஒளிபரப்பாகிறது.

டெல்லியில் இருந்து சென்ற இன்டிகோ விமானம் நேபாளத்தில் தீப்பிடித்தது


டெல்லியில் இருந்து சென்ற இன்டிகோ விமானம், நேபாள தலைநகர் காத்மண்டுவில் உள்ள‌ விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், திடீரென பின்பக்க டயரில் தீப்பிடித்தது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பீதியடைந்தனர். இதைக் கவனித்த பொறியாளர்கள் உடனடியாக விமானத்தில் உள்ளவர்களை வெளியேற்றும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு 171 பயணிகளை கீழே இறக்கினர். மீதமுள்ள பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் முன்பகுதியில் வழக்கமாக வரும் படிக்கட்டு வழியாக வெளியேறினர். 81 வினாடிகளில் அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

இண்டிகோ நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவின் தலைவர் காத்மண்டுவுக்கு விரைந்துள்ளார். மேலும், இந்த விபத்து தொடர்பாக முழு  விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தனது மனைவியை கவனிக்கத் தெரியாத மோடி, நாட்டை எப்படி கவனித்துக் கொள்ள போகிறார்?



காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், பாஜக பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். அவர் மோடியைப் பற்றி பேசியது பின்வருமாறு:

மோடியிடம் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். அவருடைய மனதில் சிறிதளவாவது பெண்கள் மீது மரியாதை இருந்தால், தேர்தல் விண்ணப்பத்தில் தனது மனைவியின் பெயரை குறிப்பிட வேண்டிய பகுதியை ஏன் நிரப்பாமல் விட்டார்?

மோடி தனக்கு திருமணமாகிவிட்டதாக ஏன் அதில் கூறவில்லை? அவர் திருமணம் செய்து கொள்ளவில்லையா? அல்லது தனது மனைவியை கை விட்டுவி்ட்டாரா? வறுமையில் வாடும் ஜஷோடாபென் (மோடியின் மனைவி என கூறப்படுபவர்) வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார். இவ்வளவு பெரிய மனிதராக வந்திருக்கும் மோடி ஏன் அவரது மனைவிக்கு பங்களாவை தரவில்லை? தனது மனைவியை கவனிக்கத் தெரியாத ஒருவர் நாட்டை எப்படி கவனித்துக் கொள்ள போகிறார்?

இவ்வாறு திக் விஜய் சிங்க் பேசியுள்ளார். இது குறித்து உங்களது கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.

மலேசிய விமான விபத்தில் சிக்கிய சென்னை பெண்


மலேசியாவில் இருந்து சீனாவின் தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்ட போயிங் ரக விமானம், வியட்நாம் அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சென்னையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர் சந்திரிகா சர்மா (51) பயணித்தது தெரியவந்துள்ளது. மங்கோலியாவில் நடைபெறும் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக அவர் மலேசியாவில் இருந்து பீஜிங் செல்லும் விமானத்தில் பயணித்துள்ளார்.

சென்னையில் கணவருடனும், கல்லூரிக்கும் செல்லும் தன் மகளுடனும் வசித்து வந்தார், சந்திரிகா சர்மா. விமான விபத்து குறித்து அதிகாரப் பூர்வ அறிவிப்பு வந்ததும், அவரது குடும்பத்தினர் கடும் சோகத்தில் மூழ்கினர்.

கடலில் விழுந்து விபத்துக்குள்ளான மலேசிய விமானம்


மலேசிய ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் 777- 200 ரகத்தைச் சேர்ந்த எம்.எச்.370 விமானம் இன்று காலை காணாமல் போனது. விமானத்தில் ஐந்து இந்தியர்கள் உட்பட‌ 239 பேர் இருந்தனர். விமானம் காணாமல் போனது குறித்து மலேசிய ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில்,"எம்.எச்.370 விமானம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 12.41 மணிக்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அதே நாளில் காலை 6.30 மணிக்கு பீஜிங் விமான நிலையத்திற்கு விமானம் சென்றிருக்க வேண்டும். ஆனால் அதிகாலை 2.40 மணியளவில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து விலகியுள்ளது. விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காணாமல் போன அந்த‌ மலேசிய விமானம், வியட்நாமின் தோ சு தீவுகளில் இருந்து 153 மைல் தொலைவில் கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு அரசு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

ஒரு தொகுதிக்கு ஏன் ஒத்துக்கொண்டோம் - திருமாவளவன் பேட்டி


திமுக கூட்டணியின் நீண்ட நாளாக இருப்பவரும் திமுக தொடர்பான ஈழநிலைப்பாட்டிற்கும் அதன் காங்கிரஸ் கூட்டணிக்கும் திமுகவினரை விட அதிக விளக்கங்கள் கொடுத்தவர் திருமாவளவன்,
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media