BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 3 August 2014

இன்றைய செய்திகள் - Satrumun Special News

உடலுறவுக்காக உயிரையும் கொடுக்கும் ஆண்கள், செக்ஸ்காக சீக்கிரம் செத்துபோகும் ஆண்கள் - ஆய்வு முடிவுகள்
http://www.satrumun.net/2014/08/why-gents-loose-their-life-soon.html

"கட்டிபிடி" வைத்தியம் ஒரு மணி நேரத்திற்கு 3,700 ரூபாய் !! பிரபலமாகி வரும் கட்டிப்பிடி ஸ்பெசலிஸ்ட் பெண் !!
http://www.satrumun.net/2014/08/3700.html

உலகின் அதிவேக இண்டர்நெட் . 1 ஜிபி பைலை 0.2 மில்லி செகண்டில் டவுன்லோட் செய்திடலாம் !!
http://www.satrumun.net/2014/08/1-02.html

"இவர் தான் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் " பயிற்சியாளர் புகழாரம் !! யார் இந்த இவர் ??
http://www.satrumun.net/2014/08/blog-post_63.html

ஃபேஸ்புக் நம் அனைவருக்கும் ரூ.41,000 இழப்பீடாக தர வேண்டும்  என்று வழக்கு தொடர்ந்தார் சட்ட மாணவன் !!
http://www.satrumun.net/2014/08/41000.html

ஷிம்லாவில் அமைக்கப்பட்ட குடிநீர் ஏ.டி.எம் ! ஒரு லிட்டருக்கு 50 பைசா
http://www.satrumun.net/2014/08/50.html

ராஜபக்சே கூட்டாளி தயாரிக்கும் "கத்தி"க்கு தமிழக இயக்குனர்கள் சங்கம் ஆதரவு
http://goo.gl/3BLziw

இந்தா, கிளம்பிட்டாரில்ல. இந்திக்கு போகும் வேலையில்லா பட்டதாரி
http://goo.gl/nQIgu9

இண்டர்நெட் போதையில் இருந்து விடுபட வந்துவிட்டது முதல் இண்டேநெட் டி-அடிக்சன் மையம் !!
http://www.satrumun.net/2014/08/blog-post_93.html

தங்கம் வென்று சாதித்தார் இந்தியாவின் பாருப்பள்ளி காஷ்யப் !!
http://www.satrumun.net/2014/08/blog-post_97.html

தண்ணீர் அசைவமாம், வந்துவிட்டது வெஜிடேரியன் வாட்டர் !!
http://www.satrumun.net/2014/08/blog-post_23.html

படம் பார்த்து விட்டு படத்தை விமர்சனம் செய்த பெண்ணை தாக்கிய ரசிகர்கள்!
http://www.satrumun.net/2014/08/blog-post_88.html

உணவில் கரப்பான்பூச்சி !! ஐ.ஆர்.சி.டி.சி க்கு ஒரு லட்சம் அபராதமாக விதித்தது இந்தியன் ரயில்வேஸ் !!
http://www.satrumun.net/2014/08/blog-post_48.html

பேஸ்புக்கில் அவதூறாக பதிவிட்டவருக்கு 15 ஆண்டுகள் சிறை !!
http://www.satrumun.net/2014/08/15.html

மோடி தனது நேபாள் பயணத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்த்து வைக்க போகிறார் !!
http://www.satrumun.net/2014/08/blog-post_3.html

உடலுறவுக்காக உயிரையும் கொடுக்கும் ஆண்கள், செக்ஸ்காக சீக்கிரம் செத்துபோகும் ஆண்கள் - ஆய்வு முடிவுகள்


உடலுறவுக்காக உயிரையும் கொடுக்க பெண்களை விட ஆண்கள் தான் தயாராக உள்ளார்கள், இனப்பெருக்க ரீதியில் எதிர்பாலினத்தை கவர்வதற்க்காக செய்யும் சில வீரமான ஆபத்து நிறைந்த செயல்களில் பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள்.

இது ஏன் என்று கவனித்தால் ரிஸ்க் எடுத்து உயிரை கொடுத்து ஒரு விரும்பி பெண்ணை அடைந்தால் குறைந்தபட்சம் அவனுடைய சந்ததி தொடடும் வாய்ப்பை  உருவாக்கிவிடுகிறான் அதனால் அவன் இறந்தாலும் அது ஒரு பொருட்டல்ல ஏனெனில் பரிணாமத்தை பொறுத்தவரை அவன் சந்ததி உருவாகிவிட்டது.

“பரிணாமத்தில் ஒரு விளையாட்டு உண்டு. அது உன் மரபணுக்களை அடுத்த சந்ததிக்கு லாவகமாகக் கடத்திச் செல்வதே” என்கிறார் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக உளவியல் ஆய்வாளர் டேனியல் க்ரூகர் (Daniel Kruger of the University of Michigan)

பொருளாதார ஏற்றத்தாழ்வு  மற்றும் ஒருவரின் செக்ஸ் உறவின் வெற்றி இரண்டும் ஒரு ஆண்களின் ஆயுட்காலத்தை வெவ்வேறு விதமாக பாதிக்கின்றன, மாறாக பெண்களோ இவ்விரண்டினால் பாதிக்கப்படுவதில்லை.

சுமார் 70 நாடுகளில், ஆண்களின் துணையைத் தேர்ந்தெடுக்கும் போட்டியை ஊக்குவிக்கும்கலாச்சார மற்றும் பண்பாட்டு காரணிகளை ஆராய்ந்ததில், இந்த உண்மை வெளிப்பட்டதாக ஆய்வாளர் டேனியக் க்ரூகர் கூறுகிறார்.

ஆண்கள், பெண்கள் வேற்றுமை மிகக்குறைவானதாக இருக்கும் நாடான நார்வேயில் சம‌ பொருளாதார சமநிலை மற்றும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளற்ற குறைந்த நாடான நார்வே போன்றவற்றில் ஆண்கள் மற்றும் பெண்களின் இறப்பு விகிதம் கிட்டத்தட்ட ஒரே அளவில் தான் உள்ளன.

ஆனால் பிறநாடுகளில் ஆண்களைவிட பெண்கள் 4.5 வருடம் அதிகம் வாழ்கிறார்கள் , ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆண்கள் பெண்களை விட விரைவில் இறந்தவிடுகிறார்கள் காரணம், அந்த ஆண்கள்  அந்தஸ்த்து, பணம் இறுதியில் செக்ஸ்க்காக வன்முறை, மன உளைச்சல் நிறைந்த செயல்களில் ஈடுபடுகிறார்கள் இதன் விளைவு, ஆண்-பெண் இறப்பின் விகித வித்தியாசம், கொலம்பியாவில் 7.8 வருடங்கள், அமெரிக்காவில் 5.2 வருடங்களால். அதாவது, பெண்களைக்காட்டிலும் ஆண்கள் சீக்கிரம் இறந்துவிடுகிறார்கள்!

கற்பனையான பொருளாதார ஏற்றத்தாழ்வு கூட ஆண்களின் ஆயுட்காலத்தை பாதிக்கிறது,  எடுத்துக்காட்டாக ஹை ஃபை  தொலைக்காட்சிகளான எம்.டிவி (MTV) போன்றவை பணக்காரத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன,  விளைவு, அம்மாதிரியான தொலைக்காட்சி அலவரிசைகளைப் பார்க்கும் ஆண்கள், “நானும்கூட இது மாதிரியான விலை உயர்ந்த பொருட்கள் சம்பாதிக்கனும்” அப்படிங்கற அவங்களோட எதிர்பார்ப்புகளும் பல மடங்கு கூடிவிடுகிறது என்கிறார் க்ரூகர். இதனால் இரவு பகல் பாராமல் வேலை செய்து உடலை கெடுத்து வாழ்க்கையையும் கெடுத்துக்கொள்கிறார்கள்

தங்கம் வென்றார் இந்தியாவின் பாருப்பள்ளி காஷ்யப் !!



பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் காஷ்யப் சிங்கப்பூரின் டெரிக் வொங்கை வீழ்த்தி தங்கம் வென்றார் . இந்தியாவின் அர்.வி குருசாய்தட் வெண்கலம் வென்றார் .

1982க்குப் பின் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை . 1982 இல் சையத் மோடி தங்கம் வென்றார் . 

ஷிம்லாவில் அமைக்கப்பட்ட குடிநீர் ஏ.டி.எம் ! ஒரு லிட்டருக்கு 50 பைசா ..



ஹிமாச்சல்பிரதேசத்தின் தலைநகரமான ஷிம்லாவில் இனி நீங்கள் ஏ.டி.எம் கார்ட் போன்ற ஒரு கார்டை பயன்படுத்தி குடிக்கும் தண்ணீரைப் பெறலாம் . இந்த வசதியை மாநில முதல்வர் விர்தர்பா சிங் , ஊள்ளூர் மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் , சுத்தமான குடிநீரைக் கொடுக்கும் வகையில் போன வாரம் தொடங்கி வைத்தார் .

இந்த இயந்திரம் மூலம் 50 பைசா செலுத்தி ஒரு லிட்டர் குடிநீரைப் பெற்றுக் கொள்ளலாம் . இந்த ஏ.டி.எம் 24 மணி நேரமும் இயங்கும் . இந்த இயந்திரத்தை ஏ.டி.எம் போல எளிதாக பயன்படுத்தலாம் .

இது போன்ற திட்டம் முதன் முதலில் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது . 

வந்துவிட்டதாம் வெஜிடேரியன் வாட்டர் !!



இனிமேல் ஒரு ஹோட்டலுக்கு போகும் போது  , அங்கே உள்ளவரிடம் நீங்கள் குடிக்க தண்ணீர் கேட்டால் , அவர் உங்களிடம் சைவம் வேண்டுமா அல்லது அசைவம் வேண்டுமா என்று தான் இனிமேல் கேட்பார் . ஆம் இந்தியாவின் வீட்டு உபகரணங்கள் உற்பத்தி செய்யும்  நிறுவனம் ஒன்று , தன்னுடைய தண்ணீர் வடிகட்டி விளம்பரத்தில் தண்ணீரை சுத்தப்படுத்தி வெஜிடேரியனாக தருவதாக காட்டி வருகின்றனர் .

பொதுவாக வடிகட்டிகள் எல்லாம் தண்ணீரில் உள்ள பாக்டரியாக்களை கொன்று விடும் . ஆனால் இறந்து போன அந்த பாக்டரியாக்கள் அங்கேயே தங்கி விடுவதால் அது நான் வெஜிடேரியன் ஆகி விடுகிறதாம் . ஆனால் இந்த வடிகட்டி அந்த இறந்த பாக்டரியாக்களையும் நீக்கி விடுகிறது . அதனால் நமக்கு வெஜிடேரியன் தண்ணீர் கிடைக்கிறது .

எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க !!!!

இண்டர்நெட் போதையில் இருந்து விடுபட வந்துவிட்டது முதல் இண்டேநெட் டி-அடிக்சன் மையம் !!



நாம் இப்போது கிட்டதட்ட அரைகுறையான டிஜிட்டல் உலகத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம் . இந்த டிஜிட்டல் உலகில் மக்களுக்கு போதை தருவது இண்டர்நெட் தான் . அந்த போதையில் இருந்து விடுபட இந்தியாவின் முதல் இண்டர்நெட் அடிமையாகுதலை தடுக்கும் முதல் மையம் டில்லியில் திறக்கப்பட்டுள்ளது .

இங்கே முக்கியமாக சிறுவர் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் வருகின்றனர் . இங்கே சிகிச்சைக்கு வருபவர்களை சில விளையாட்டுகளை விளையாட வைத்தும் , மற்றவர்களிடம் உரையாட வைத்தும் அவர்களுக்கு வெளி உலகம் எவ்வளவு அழகானது என்பதை உணர்த்துகின்றனர் .

இன்னும் சில நாட்களில் இது போன்ற மையங்கள் நாடு முழுவதும் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை .


" கட்டிபிடி " வைத்தியம் ஒரு மணி நேரத்திற்கு 3,700 ரூபாய் !! பிரபலமாகி வரும் கட்டிப்பிடி ஸ்பெசலிஸ்ட் பெண் !!



தாங்க முடியாத சோகமா , யாரிடமும் வெளியே சொல்ல முடியாத அளவு துக்கமா , எதுவாக இருந்தாலும் நம்மிடம் ஒரு மெல்லிய புன்னகை பூத்துக் கொண்டு நம்மை கட்டி அணைத்தால் எவ்வளவு சோகம் இருந்தாலும் நொடியில் காணாமல் போய்விடும் . இதை கமல் , வசூல் ராஜாவில் " கட்டிப்பிடி வைத்தியம் என சொல்லுவார் . இதையே வியாபாராமக்கி வசூல் செய்து வருகிறார் அமெரிக்க பெண் சமந்தா ஹெஸ் .



இவர் இதை தொழில் முறையாக செய்து வருகிறார் . நீங்கள் இதை அதிசயமாக பார்க்கலாம் . ஆனால் இவர் இதனை ஒரு வருடமாக செய்து வருகிறார் . ஒரு மணி நேரத்திற்கு 3,700 ரூபாய் வாங்குகிறார் . இவருக்கு பல கட்டிப்பிடி முறைகள் தெரியும் . வாடிக்கையாளர்கள் தேவை அறிந்து அவர்களுக்கு ஏற்ற முறையை கையாள்வார் .



இவ்வாறு கட்டிப்பிடிக்கும் சமயம் நம்மைச் சுற்ற உள்ள அமைப்பு நமக்கு விருப்பமானதாக இருக்கலாம் . பார்க் , பெட் ரூம் , தியேட்டர் என எதுவாகவும் இருக்கலாம் .

ஆனால் இதில் எந்த விதமான செக்ஸ் நடவடிக்கைகளும் இருக்காது . இருவரும் முழு ஆடையில் இருப்பர் . இதை அவர் தூய்மையாக செய்து வருகிறார் .

படம் பார்த்து விட்டு படத்தை விமர்சனம் செய்த பெண்ணை தாக்கிய ரசிகர்கள் !!



இப்போது கிட்டதட்ட அனைவரும் படத்தைப் பார்த்து விட்டு அதைப் பற்றி எழுத ஆரம்பித்து விட்டார்கள் . சிலர் அப்படி எழுதுவதற்காகவே படத்தை முதல் நாள் பார்க்க சென்று விடுகிறார்கள் . மேலும் சிலர் படத்தில் கிளைமாக்ஸ் வரும்போதே அந்த படத்தைப் பற்றி டைப் அடிக்க ஆரம்பித்து வருகின்றனர் . நம்முடைய கருத்தைச் சொல்வதற்கு நமக்கு சுதந்திரம் இருக்கிறது .

அது போல திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சினா ராயா என்னும் பெண் குறும்பட இயக்குநர் மலயாள நடிகர் அசிஃப் அலி யின்  , " ஹை ஐ அம் டோனி "  என்னும் படத்தைப் பார்த்துவிட்டு விமர்சனம் செய்தார் . மேலும் அந்த பணம் கொடுத்த காசிற்கு மதிப்பாக இல்லை என்றும் கிளைமாக்ஸ் காட்சி சரி இல்லை என்றும் தெரிவித்தார் .

இதனால் கோவமடைந்த அசிஃப் அலி  ரசிகர்கள் தொடர்ந்து  சினா ராயாவுக்கு மிரட்டல் மற்றும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் . சில ரசிகர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் அந்த பெண் இயக்குநரை அடித்துள்ளனர் .

இது குறித்து காவல்துறையிடம் அவர் பூகார் கொடுத்தார் . அவர் கொடுத்த பூகாரின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

உலகின் அதிவேக இண்டர்நெட் . 1 ஜிபி பைலை 0.2 மில்லி செகண்டில் டவுன்லோட் செய்திடலாம் !!



இண்டர்நெட் பயன்பாடு வேகமாக பரவி வரும் இந்த காலத்தில் அனைவரும் வேகமான இண்டர்நெட்டை பயன்படுத்தவே விரும்புவர் . ஒரு 1 ஜிபி அளவு கொண்ட பைலை 0.2 மில்லி செகண்டில் உங்களால் டவுங்லோட் செய்திட முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா . ஆம் , டென்மார்க்கில் பல்கலைக்கழகம் ஒன்றில் 42 டிபிபிஎஸ் வேகத்தில் இண்டர்நெட் இணைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர் . ஒரு ஒளியிழை மூலம் ஒரே ஒரு லேசர் டிரான்ஸ்மிட்டர் மூலம் இதனை வடிவமைத்தனர் .

இதற்கு முன்னர் சாதனையாக 26 டிபிபிஎஸ் என்பதே அதி வேகமாக இருந்தது . இதனை ஜெர்மணி பல்கலைக்கழகம் ஒன்று வடிவமைத்து இருந்தது .

பேஸ்புக் பயனர் அனைவருக்கும் ரூ.41,000 இழப்பீடாக பேஸ்புக் தர வேண்டும் !! வழக்கு தொடர்ந்தார் சட்ட மாணவன் !!



ஆஸ்திரிய சட்டக் கல்லூரி மாணவன் ஒருவன் பேஸ்புக் தனி நபரின் உரிமைகளை மீறி உள்ளதாக நீதிமன்றம் ஒன்றில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் .

மேஸ் ஸ்கிரிம்ஸ் என்னும் அந்த மாணவன் பேஸ்புக் இழப்பீடாக 500 யுரோ , இந்திய மதிப்பின் படி 41,000 ரூபாய் பேஸ்புக் பயனர் அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளான் . மேலும் 1.32 லட்ச கோடி பயனர்களும் இந்த சட்ட போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் .

பேஸ்புக் நிறைய தனி நபர் உரிமைகளை மீறி உள்ளது . எடுத்துக்காட்டாக கிராப் சர்ச் வசதி , பிரிசம் புரோகிரமில் கலந்து கொண்டது என பல மீறல்கள் உள்ளது . இவை அனைத்தையும் எதிர்த்து அவர் வர்க்கமாக வழக்கு பதிவு செய்துள்ளார் .

"இவர் தான் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் " பயிற்சியாளர் புகழாரம் !! யார் இந்த இவர் ??



ஐ.பி.எல் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடியவர் சஞ்சு சாம்சன் . தனது அதிரடி மற்றும் நிலையான ஆட்டத்தால் ரசிகர்கள் மற்றும் தேர்வாளர்களை இழுத்தவர் இவர் . 19 வயதில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவரை பலர் வியந்து பார்த்தனர் . இப்போது இவரை இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் என இந்திய ஏ அணியின் பீல்டிங் பயிற்சியாளர் புகழ்ந்துள்ளார் .

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய ஏ அணி 84/6 விக்கெட்கள் சரிந்து தத்தளித்து கொண்டு இருந்தது , அந்நேரத்தில களமிறங்கிய சஞ்சு சாம்சன் 92 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றியின் அருகில் கொண்டு வந்தார் .

இந்த போட்டிக்கு பின் இந்திய ஏ அணியின் பீல்டிங் பயிற்சியாளர்  அபய் ஷர்மா கூறுகையில் , " சஞ்சு சாம்சன் தான் இந்தியாவின் எதிர்காலம் . இவர் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு அருமையாக ஆடுகிறார் . முதல் ஒரு நாள் போட்டியில் இவரின் ஆட்டம் தரமாக இருந்தது . தோல்வியில் இருந்து இந்தியாவை வெற்றியின் விளிம்பிற்கு கொண்டு சென்றார் . வீக்கெட் கீப்பிங் திறமையும் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே போகிறது "என்றார் .



உணவில் கரப்பான்பூச்சி !! ஐ.ஆர்.சி.டி.சி க்கு ஒரு லட்சம் அபராதமாக விதித்தது இந்தியன் ரயில்வேஸ் !!



டிரெயின் உணவுகளின் தரம் மோசமாக இருப்பதால் , ஐ.ஆர்.சி.டி.சி உட்பட 9 உணவு தயாரிப்பாளர்களுக்கு 11.50 லட்சம் அபதாமாக விதித்தது இந்தியன் ரயில்வேஸ் .

ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் , " நாங்கள் கடந்த ஒரு மாதமாக ஒரு சிறப்பு குழுவை தொடங்கி , பல்வேறு ரயில்களில் பறிமாறப்படும் உணவை பரிசோதித்து வந்தோம் . உணவு சரியில்லாத உணவு தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம் " என்றார் .

மேலும் கொல்கத்தா ராஜ்தானி ரயிலில் ஜூலை 26 ஆம் தேதி பறிமாறப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்தது . அதற்கு காரணமான ஐ.ஆர்.சி.டி.சி க்கு ஒரு லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது . இது போன்று 50,000 முதல் 1 லட்சம் வரை அபராதமாக விதிக்கப்படும் . இது போன்று 5 முறை மாட்டிக் கொண்டால் அவர்களின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் .

மோடி தனது நேபாள் பயணத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்த்து வைக்க போகிறார் !!



கடந்த 17 வருடங்களாக இந்திய பிரதமர் யாரும் நேபாள் சென்றதில்லை . இன்று 17 வருடங்கள் கழித்து பிரதமர் மோடி நேபாள் செல்ல இருக்கிறார் . அவர் அங்கு சென்று இரு நாடுகளின் உறவை வலுவாக்க முயற்சிப்பார் . மேலும் ஒரு சிறப்பான மனிதாபிமான செயலும் நடைபெற உள்ளது . இதை தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார் .

டிவிட்டரில் மோடி , " தான் நீண்ட நாட்களுக்கு முன் , தன் ஊர் , மொழி தெரியாத , யாரும் உதவ முன்வராத பையன் ஒருவனை சந்தித்ததாகவும் , அவன் மீது தான் அக்கறை கொண்டு அவனது எதிர்காலம் பற்றியும் யோசிக்க ஆரம்பித்தார் . அந்த பையனும் படிப்பிலும் ஆர்வம் அடைந்தான் . விரைவில் குஜராத்தி மொழியையும் கற்றுக் கொண்டான் " என்று பதிவிட்டு இருந்தார் .

சிறிது நாட்களுக்கு முன் அவனுடைய பெற்றோர்கள் நேபாளில் வாழ்ந்து வருவரதை கண்டு பிடித்தனர் . எனவே  அந்த பையனை அவர் குடும்பத்துடன் இன்று நேபாளம் செல்லும் போது சேர்த்து வைப்பார் என்று அறிவித்துள்ளார் .

பேஸ்புக்கில் அவதூறாக பதிவிட்டவருக்கு 15 ஆண்டுகள் சிறை !!



தாய்லாந்து நாட்டில் சேர்ந்த ஒரு இசையமைப்பாளர் அரசை அவதூறாக எழுதி பேஸ்புக்கில் போட்ட வழக்கில் , புதிய தேசத்துரோக சட்டத்தின் கீழ் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .

28 வயதான அவர் 2010 முதல் 2011 வரை அரசை எதிர்த்து அவதூறாக எழுதி வருவதால் , அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது .

அந்த நாட்டின் அரசரை பலர் தெய்வமாக வணங்கி வருகின்றனர் . மேலும் பல கடுமையான அரசி அவதூறு சட்டங்களால் அவரது மரியாதை பாதுகாக்கப்பட்டு வருகிறது . அந்த சட்டங்களின் படி அவரைப் பற்றி அவதூறாக எழுதுபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும் .


 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media