BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 12 January 2014

தலித் வீடுகளுக்கு சென்று, சாப்பிட்டு விட்டு, போஸ் கொடுப்பது ராகுல் காந்தியின் வேலை

உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில், ராகுல் காந்தியை எதிர்த்து ஆம் ஆத்மியின் குமார் விஷ்வாஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்க படுகிறது.

இந்நிலையில், அமேதி தொகுதியில், இன்று பேரணியில் பேசிய குமார் விஷ்வாஸ், "நான் ஒன்றும், தலித் வீடுகளுக்கு சென்று அவர்கள் வீட்டில் சாப்பாடு சாப்பிட்டு விட்டு, தொலைகாட்சி சேனல்களை வர வழைத்து, விளம்பரம் தேடி கொள்ள மாட்டேன். ராகுல் காந்திதான் அது போல் போஸ் கொடுத்து கொள்வார், அவரின் தாயோ, மகாராணி போல் வலம் வந்து கொண்டிருக்கிறார். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று வருகிறார். நம் நாட்டில் உள்ள மருத்துவர்களையே இவர் நம்பாத போது, இவரை எப்படி நம்புவது?" என கடுமையாக ராகுலையும், சோனியாவையும் குற்றம் சாட்டி பேசியுள்ளார்.

மேலும் பேசிய குமார் விஷ்வாஸ், காங்கிரஸ் கட்சியினர் என்னை ஜோக்கர் என்று அழைக்கின்றனர். நான் ஜோக்கர் தான், ஆனால், இவர்களை போல் நாட்டினை விற்று விடமாட்டேன் என்று திடமாக கூறினார்.

இந்திய வரலாற்றிலே, மன்மோகன் சிங் பிரதமராக இருந்த 10 வருடங்கள் மோசமான‌ காலம்-மோடி

கோவாவில் உள்ள பனாஜியில் ஒரு பேரணியில் பேசிய நரேந்திர மோடி,  காங்கிரஸ் தலைமையில், மன்மோகன் சிங் பிரதமராக இத்தனை காலம் இருந்தது, நாட்டின் வரலாற்றிலேயே மிக மோசமான காலம் என்று பேசியுள்ளார். காங்கிரஸின் ஆட்சியால் மக்கள் மிகுந்த அவதி படுகின்றனர். அக்கட்சியை ஒழித்து கட்ட, மக்கள் எப்பொழுதோ முடிவெடுத்து விட்டனர் எனவும் கூறியிருக்கிறார்.

பா.ஜ.க, தன்னை போல் ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து வந்த ஒருவனுக்கு, தலைவர் ஆக வாய்ப்பு கொடுத்திருக்கிறது என்றும், மக்களின் நல்ல காலங்களில் மட்டுமல்லாமல், கெட்ட காலங்களிலும் அவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க என்றுமே இருந்து இருக்கிறது எனவும் பேரணியில் பேசிய மோடி தெரிவித்துள்ளார்.

2004-2014 இந்தியாவிற்கு மோசமான காலம் என நீங்கள் ஒப்பு கொண்டால், லைக் செய்யுங்கள்.

இல்லையென மறுத்தால், உங்கள் கருத்தை கமென்ட் செய்யுங்கள்.

15 வயது சிறுவனுடன் 16 வயது சிறுமி ஓட்டம்: 4 மாத கர்ப்பிணியாக விழுப்புரத்தில் மீட்பு

சென்னை வியாசர்பாடியில் வசித்து வந்த  15 வயது சிறுவனுக்கும், 16 வயது சிறுமிக்கும் காதல் ஏற்பட்டு, பெற்றொருக்கு தெரியாமல் அடிக்கடி சந்தித்து வந்தனர். ஒரு நாள், இருவரும் காணாமல் போனதை அடுத்து, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர், சிறுமியின் பெற்றோர்.

காவல்துறை விசாரணையின் போது, இருவரும், விழுப்புரத்தில் இருப்பதாக தெரிய வந்தது. உடனே, போலீஸாரும், பெற்றோரும் விழுப்புரத்திற்கு சென்று, பார்த்த போது, அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து, இம்மாதம் 17ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த இருக்கின்றனர். அதுவரை சிறுவன், ராயபுரம் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், சிறுமி கெல்லீஸ் மகளிர் காப்பகத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கரிப்பிணியை மருத்துவமனையில் சேர்க்க உதவிய இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்

காஷ்மீரில் கடுமையான பனியால், சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல இயலாது. இந்நிலையில், தவார் கிராமத்தை சேர்ந்த முஹம்மது அஷ்ரப் என்பவரின் மனைவி, 6 மாத கர்ப்பிணியான இருப்பதாகவும், அவருக்கு, கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தில் இருப்பதாகவும்,  ராணுவ தலைமை அலுவலகத்துக்கு ஓடி வந்து, தன் மனைவி மற்றும் கருவில் இருக்கும் குழந்தையை காப்பாற்ற உதவ வேண்டுமென கதறி இருக்கிறார்.

இந்த விஷயம், ராணுவ உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க பட்டது. உயிருக்கு போராடும் கர்ப்பிணி பெண்ணையும் அவரது வயிற்றுக்குள் இருக்கும் கருவையும் காப்பாற்றியே தீர வேண்டும் என்பதற்காக அந்த‌ ராணுவ உயரதிகாரி, விமானப்படையின் நவீன ரக எம்.ஐ.-17 ஹெலிகாப்டரை அந்த கிராமத்துக்கு அனுப்பி வைத்தார். வலியால் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணை கிராமத்தில் இருந்து ஏற்றி சென்ற ஹெலிகாப்டர்,   அவரை அரசு மருத்துவமனையில் இறக்கி விட்டது.

இதே போல், கடுங்காய்ச்சலால், உயிருக்கு போராடி கொண்டிருந்த வேறொருவரையும், விமானப்படை ஹெலிகாப்டரில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் சேர்க்க ராணுவத்தினர் உதவி செய்தனர்.

ஒரு ரூபாய்க்கு, ஆம் ஆத்மிக்காக வேலை பார்க்கும் அதிகாரிகள்

முன்னாள் அரசு அதிகாரிகள் இருவர், ஆம் ஆத்மிக்காக, டெல்லியில் லஞ்சத்தை ஒழிக்க மற்றும் சுயஆட்சி திட்டத்தை கொண்டு வருவதற்கு, மாதம் ஒரு ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டு, உதவ போவதாக தெரிவித்து இருக்கின்றனர்.

மத்திய பிரதேச முன்னாள் தலைமை செயலாளர் பெஹர், டெல்லியில் சுயஆட்சி திட்டம் கொண்டு வருவதற்கும், மற்றும் டெல்லி முன்னாள் காவல் துறை இணை ஆணையர் திலீப் குமார், டெல்லியில் லஞ்சத்தை ஒழிக்க அமைக்கப்பட்டிருக்கும், ஹெல்ப்லைனை கண்காணிக்கவும், பணியில் ஈடுபட இருக்கின்றனர். இதற்காக இவர்கள் பெற போவது மாதம் ஒரு ரூபாய் மட்டுமே.

லஞ்ச ஒழிப்புக்காக அமைக்கபட்ட 1031 ஹெல்ப்லைன் எண்னுக்கு,இரண்டே நாட்களில், 23,000 அழைப்புகள் வந்துள்ளது.

"என்னுடைய பங்களிப்பு, எந்த தனிப்பட்ட கட்சிக்கும் இல்லை, டெல்லி அரசுக்கே ஆகும்" என்று, பெஹர் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் இன்று முதல், இலங்கையில் இருந்து விடுவிக்கப்படுவர்- ஜெயலலிதா



தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, இலங்கை அரசால், கைது செய்து வைக்கப்பட்ட மீனவர்கள், இன்று முதல் விடுவிக்கப்படுவர் என்று அறிவித்துள்ளார்.

கைது செய்து இலங்கை சிறையில் வைக்கப்பட்டுள்ள, 275 தமிழக மீனவர்களில், பெரும்பாலோனோர் விடுவிக்க படபோவதாக, மத்திய அரசிடம் இருந்து செய்தி வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

தமிழக சிறைகளில் வைக்கப்பட்டுள்ள, 179 இலங்கை மீனவர்களும், விடுவிக்கப்பட வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இரு நாடுகளின் மீனவர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், சென்னையில் வரும் 20ம் தேதி சந்தித்து, இப்பிரச்ச்னை பற்றி கலந்துரையாடுவர் என கூறப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பள்ளி மாணவி கூட்டு கற்பழிப்பு, அதில் பங்களித்த போலீஸ்காரர்

உத்தர பிரதேசத்தில், மோடிநகர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு மாணவி மூன்று பேரால் கற்பழிக்கப் பட்டுள்ளார். இதில் ஒருவர் போலீஸ் கான்ஸ்டபிள், பெயர் நிதின்.

டிசம்பர் 4ம் தேதி, ட்யூஷனில் இருந்து, வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது, கரண் என்கின்ற தன் பக்கத்தில் வீட்டில் இருக்கும் ஒருவன், தனியான இடத்திற்கு, அழைத்து சென்று, தன் நண்பர்கள் கேஷவ் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிளான நிதின் என்போரை வரவழைத்து மாறி மாறி கற்பழித்தனர் என்று அந்த‌ பெண், காவல் துறையில் கொடுத்த புகாரில் கூறியுள்ளார்.

கற்பழிப்பு சம்பவத்தை வீடியோ எடுத்து வைத்து, இதை பற்றி புகார் கொடுத்தால், இன்டர்நெட்டில் அப்லோட் செய்துவிடுவதாகவும், அப்பெண்ணை மிரட்டி இருக்கிறார், கான்ஸ்டபிள்  நிதின். இதை சொல்லியே, இது வரை பல முறை, மூவரும் தன்னை கற்பழித்ததாகவும் அந்த பெண் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, குற்றம் புரிந்த மூவரையும், கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.



தேவயாணி பணியாளுக்கு ஒரு மணி நேரத்திற்கு $1 சம்பளம், சிக் லீவ் கிடையாது, வாரத்திற்கு 100 மணி நேர வேலை


வாரத்திற்கு 100 மணி நேர வேலை, ஏழு நாட்களும் வேலை, சிக் லீவோ வேற எந்த லீவோ கிடையாது, ஒரு மணிநேரத்திற்கு ஒரு டாலரே சம்பளம் என தன் பணியாளை துன்புறுத்தியிருத்தி இருக்கிறார் தேவயாணி என்கிறது, அமெரிக்க நீதிபதியின் குற்றசாட்டு.

மேலும், நியூயார்க்கில் சட்டப்படி கொடுக்கபட வேண்டிய குறைந்தபட்ச ஊதியம், ஒரு மணி நேரத்திற்கு எட்டு டாலர். தேவயாணி கொடுத்ததோ, ஒரு மணி நேரத்திற்கு ஒரு டாலர். ஆனால், கான்ட்ராக்ட் பேப்பர்களில், தான் தர போவதாக அவர் கூறியிருக்கும் சம்பளம், ஒரு மணி நேரத்திற்கு 9.75 டாலர்.

மாதம் $4500 டாலர், அதாவது, கிட்டதட்ட 2.78 லட்ச ரூபாய் சம்பளம் தன் பணியாள் சங்கீதாவிற்கு தர போவதாக, அமெரிக்க விசா படிவத்தில் கூறிவிட்டு, அமெரிக்கா சென்ற மாலையே, மாதம் வெறும் 30,000 ரூபாய் மட்டுமே தர போவதாக, இன்னொரு ஒப்பந்தத்தில் தன் பணியாளிடம் கையொப்பம் வாங்கியிருக்கிறார்.

இது போல் துன்புறுத்த படுவோருக்கு உதவும் 'சேஃப் ஹாரிசன்' என்ற நிர்வாகம், சங்கீதாவிற்கு உதவி வருகிறது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media