BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 5 August 2014

தன் கண் முன்னே கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட தோழியை திருமணம் செய்த நண்பன் !!



பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு அதன் பின்னர் வாழ்க்கை பொதுவாக சாதராணமாக இருப்பதில்லை . பல தடங்கலுக்கு நடுவே அவர்கள் தன் வாழ்க்கையை நடத்த வேண்டும் . எனவே சிலர் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர் . எவனோ ஒருவன் தன்னுடைய இச்சைகளை கொட்டி தீர்த்து விட்டால் , அதற்கு அந்த பெண் எப்படி பொறுப்பாவாள் ?? ஆனால் இதைப் பலர் மறந்து விட்டு அவர்களை ஏதோ ஒரு வேற்று கிரகவாசிகள் போல் பார்க்கின்றனர் . ஆனால் பீகாரில் , தனது கண்முன்னே கற்பழிக்கப்பட்ட தனது தோழியை முழு மனதுடன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது .

இது நடந்து ஒரு வருடம் ஆகி இருந்தாலும் , அந்த நண்பனின் செயலை நாம் நிச்சயம் பாராட்டி ஆக வேண்டும் . மூன்று பேர் கொண்ட கும்பலால் அடித்து நொறுக்கப்பட்ட அவரை கட்டி விட்டு , அவரது தோழியை அவரது கண் முன்னே பாலியல் வன்புணர்வு செய்தார்கள் .


ஆனால் இந்த சம்பவம் நடந்த முடிந்த 4 வது நாளில் அந்த பெண்ணை திருமணம் செய்தார் அந்த நண்பர் . அவர் அந்த பெண்ணை முழு மனதுடன் ஏற்றுக் கொள்வதாக கூறினார் .

இது போன்று சில நல்ல உள்ளங்கள் நம் நாட்டில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் .

பெண்ணை கடத்தி , கற்பழித்து மதம் மாற வற்புறுத்திய கொடூர சம்பவம் !!



மீரட்டில் 20 வயது பெண்ணை கடத்தி ஒரு பள்ளி நிறுவனத்தில் வைத்து  கூட்டமாக பாலியல் வன்புணர்வு செய்து அந்த பெண்ணை மதம் மாற வற்புறுத்திய கொடூர சம்பவம் நடந்துள்ளது .

அவரை கடத்திய அந்த ஊர்த் தலைவர் மற்றும் உள்ளூர் ஆட்கள் அந்த பெண் வேலை பார்க்கும் பள்ளிக்கு இழுத்துச் சென்று பாலியல் வண்புனர்வு செய்துள்ளனர் . ஆனால் அந்த பெண் எப்படியோ அவர்களிடம் இருந்து தப்பித்து தன் அப்பாவிடம் நடந்ததை கூறியுள்ளார் .

மேலும் தன்னுடன் 50 பெண்களும் உடன் இருந்ததாக கூறினார் . அந்த பெண்களை அவர்கள் சவூதி அரேபியாவுக்கு அனுப்ப திட்டமிட்டு இருந்ததாக அவர் தெரிவித்தார் .

போலிஸ் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் . இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

காமன்வெல்த் போட்டிகளின் போது , கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர் யார் ??



20 வது காமன்வெல்த் போட்டிகள் முடியும் போது இந்தியா 64 பதக்கங்களை வென்று இருந்தது . 15 தங்கம் வென்ற இந்தியா 5 வது இடம் பிடித்தது . இந்தியாவுக்கு முன் பதக்க பட்டியலில் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா , கனடா , ஸ்காட்லாந்து ஆகிய நாடுகள் இடம் பெற்று இருந்தது .

இந்த போட்டிகளின் போது அதிகம் தேடப்பட்ட வீரராக இருப்பவர் மல்யுத்த வீரர் சுஷில் குமார் . இவர் மல்யுத்தத்தில் 74 கிலோ பிரிவில் தங்கம் வென்றார் .

அதிகம் தேடப்பட்ட விளையாட்டுகளில் பாட்மிண்டன் முதலிடத்தில் உள்ளது . பேட்மிண்டனில் 32 ஆண்டுகளுக்கு பின் காஷ்யம் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த முறை 2 நொடிகளில் விற்று தீர்ந்தது எம்.ஐ. 3 மொபைல்




இன்று விற்பனைக்கு வந்த எம்.ஐ. 3 மொபைல் 2 நொடிகளில் விற்று தீர்ந்தது. முதல் நாள் 5000 மொபைல்கள் விற்பனைக்கு வந்தது அவை அனைத்தும் 5 நொடிகளில் விற்று தீர்ந்தது. அடுத்து 15000 மொபைல்கள் விற்பனைக்கு வந்தன. இவை அனைத்தும் 3 நொடிகளில் விற்று தீர்ந்தன. இன்று 15000 மொபைல்கள் விற்பனைக்கு வந்தது. ஆனால் 2 நொடிகளில் விற்று தீர்ந்து விட்டது. இதனால் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

அடுத்து ஆகஸ்ட் 12 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இதற்கு இன்று மாலை 6 மணி முதல் பதிவு செய்யலாம்.


இன்றைய செய்திகள் - Satrumun Special daily News

ஏர்டெல்லின் நூதனத்திருட்டு, 2ஜி, 3ஜி மொபைல் இண்டெர்நெட் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு என போஸ்டர்

சச்சினின் மீதான அபிப்பிராயத்தையே மாற்றும் புதிய ரகசியத்தை வெளியிட்ட ராகுல் டிராவிட் 

தன் கண் முன்னே கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட தோழியை திருமணம் செய்த நண்பன் !!

பெண்ணை கடத்தி , கற்பழித்து மதம் மாற வற்புறுத்திய கொடூர சம்பவம் !!

அதிகம் சம்பாதிக்கின்ற நடிகைகளின் பட்டியல் !!

2 நொடிகளில் விற்று தீர்ந்த எம்.ஐ. 3 மொபைல் - விற்பனையில் அதிரடி சாதனை

இனி ஆன்ட்ராய்ட் போனில் இலவசமாக பேசலாம், கலக்கலான புதிய அப்ளிகேஷன்

ரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்து போராடிய அதிமுகவினர், எதுக்கு இந்த பொழப்பு?

ஜெயலலிதா விவகாரத்தில் வருத்தம் தெரிவித்தார் இலங்கை அதிபர் ராஜபக்சே

தல அஜித் அடிக்கடி சொல்லும் ‘ஹிட்’ ரகசியம்? : பெருமையாகச் சொன்ன டைரக்டர்

தனுஷின் வேலை இல்லா பட்டதாரி படத்துக்கு வந்து இருக்கும் புதிய பிரச்சனை

நடிகை மல்லிகா ஷெராவத் மீது வழக்கு, தேசிய கொடியை வைத்து தனது பெண் உறுப்புகளை மறைத்ததற்காக 

பெண் நீதிபதிக்கே செக்ஸ் தொல்லை தந்த ஆண் நீதிபதி

இந்தியக் குடிமகன்களுக்களான ஐ.டி கார்ட் வர உள்ளது - மத்திய அரசு அறிவிப்பு

மோடியின் ஆட்டோகிராப்பால் உலக சாதனை படைக்கப்படுமா?

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் !! பேச்சுகளை தொடங்க உள்ளனர்

"பாம் காஸா " என்னும் சர்ச்சைக்குரிய கேமை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள் !!

ஆண்டர்சன்-ஜடேஜா விவகாரம் , ஐசிசி மேல் முறையீடு செய்யுமா ??


சச்சினின் மீதான அபிப்பிராயத்தையே மாற்றும் புதிய ரகசியத்தை வெளியிட்ட ராகுல் டிராவிட்


சச்சின் என்றாலே கடுமையான உழைப்பு என்பது அனைவரும் அறிந்தது, உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக அதிக ஆண்டுகள் விளையாடியிருந்தாலும் கூட நெட் பிராக்டிசை அவர் எப்போதும் நிறுத்துவதே இல்லை, மிக நீண்ட அனுபவம் கிடைத்த பின்பும் கூட நெட் பிராக்டிசை சின்சியராக செய்பவர் என்று தான் சச்சின் குறித்து அனைவரும் அறிந்திருந்தோம், ஆனால் அதை புரட்டி போடும் உண்மையை வெளியிட்டார் டிராவிட்

2003 கிரிக்கெட் உலக கோப்பையில் சச்சின் இந்தியாவுக்காக எல்லா போட்டிகளிளும் விளையாடி  673 ரன்கள் குவித்தார். இந்த சாதனை எந்த உலக கோப்பையிலும் நிகழ்த்தப்படாத சாதனை ஆகும். ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்னும் சாதனை இன்று வரை சச்சினிடமே உள்ளது. 2003 க்கு பிறகு 2 உலக கோப்பை முடிந்து விட்டது, ஆனால் இந்த சாதனையை யாரும் இன்னும் நெருங்க கூட இல்லை. பாகிஸ்தான் அணிக்கு எதிராக சச்சின் 98 ரன்கள் குவித்தது சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு முக்கியமான ஆட்டம் ஆகும்.

இவ்வாறு விளையாடியதற்கு சச்சின் கடுமையான பயிற்சி எடுத்து இருப்பார் என பலரும் நினைத்து இருப்பார்கள். இது குறித்த உண்மையை ராகுல் டிராவிட் தெரிவித்து உள்ளார். அந்த தொடர் முழுவதும் சச்சின் வலை பயிற்சியில் ஈடுபடவில்லை எனபது அதிர்ச்சி தரும் உண்மையாகும். அவர் ஏன் வலைபயிற்சியில் ஈடுபடவில்லை என டிராவிட் கேட்ட போது , நான் எனது பேட்டிங் பற்றி இப்போது சிறப்பாக உணர்கிறேன், வலையில் வந்து விளையாடி ‘டச்’சை விரயம் செய்ய விரும்பவில்லை. இவ்வாறு நான் உணரும்போது களத்தில் சிறப்பாக பேட் செய்வேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.

சச்சினுடன் விளையாடியதை மிக பெரிய பெருமையாக நினைப்பதாக டிராவிட் தெரிவித்தார். 

இனி ஆன்ட்ராய்ட் போனில் இலவசமாக பேசலாம், புதிய அப்ளிகேஷன் வந்து உள்ளது




இப்போது போனில் இலவசமாக பேசுவதற்கு பேஸ் டைம், வைபர், ஸ்கைப் போன்ற அப்ளிகேஷன்கள் உள்ளன.  ஆனால் அவை எல்லாம் சரியாக உபயோகப்படுவதில்லை. அந்த குறையை போக்குவதற்கு புதிய அப்ளிகேஷன் வந்து உள்ளது. அதன் பெயர் நானு. இது முதலில் ஆன்ட்ராய்டில் மட்டும் வந்து உள்ளது. இதன் மூலம் 2 ஜி இன்டெர்னெட் வசதி இருந்தாலே போதும், நாம் இலவசமாக பேசி கொள்ளலாம்.

இந்த அப்ளிகேஷன் இருந்தால் போதும் , இருவரும் பேசி கொண்டே இருக்கலாம். இதன் மூலம் 10 நிமிடங்கள் பேசினால் 1 எம்.பி. டேட்டா தான் செலவு ஆகும். இந்த அப்ளிகேஷன் இல்லாதவருடன் நாம் இலவசமாக பேசலாம், ஆனால் அது 15 நிமிடங்கள் தான். இதில் எந்த விளம்பரங்களும் வராது. இதன் மூலம் 41 நாடுகளில் உள்ள லேன்ட்லைன்களுக்கும், 9 நாடுகளில் உள்ள மொபைல் போன்களுக்கும் பேசலாம்.

இதனை விரிவுபடுத்த உள்ளார்கள். அடுத்து ஐஓஎஸ், வின்டோஸ் தரைதளத்துக்கும் இதனை கொண்டு வர உள்ளார்கள். அடுத்து இலவச எஸ்.எம்.எஸ். வசதியும் வர உள்ளது. 

தனுஷின் வேலை இல்லா பட்டதாரி படத்துக்கு வந்து இருக்கும் புதிய பிரச்சனை





தனுஷ் நடிப்பில் வெளிவந்து தற்போது மிகபெரிய வெற்றியை பெற்ற படம் வேலை இல்லா பட்டதாரி. இந்த படத்துக்கு எல்லா இடத்திலும் ஆதரவு இருந்தது. இந்த படத்தின் நாயகன் தனுஷிற்கு இது 25 வது படம். அது அவரது சினிமா வாழ்க்கையில் மிக பெரிய வெற்றி படமாக அமைந்து விட்டது. இந்த படம் தனுஷுக்கு என தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்தது. குறிப்பாக இந்த படம் இன்ஜினியரிங் மாணவர்களிடையே மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வசூலிலும் மிக பெரிய சாதனை படைத்து வருகிறது.

இந்த படத்தின் உரிமையை பலரும் கேட்டும் தனுஷ் கொடுக்க முன்வரவில்லை. அந்த படத்தின் ஹிந்தி பதிப்பில் நடித்து விட வேண்டும் என தனுஷ் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார். அதற்காக சரியான தயாரிப்பாளரை தேடி வருகிறார். இந்நிலையில் படத்துக்கு புதிய சிக்கல் வந்து உள்ளது. இந்த படத்தின் போஸ்டர்களில் தனுஷ் புகைபிடிப்பது போன்று உள்ளது. இது போன்ற போஸ்டர்கள் புகையிலை கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை பின்பற்றாமல் அதனை மீறுவதாக இருப்பதை அதிகாரிகள் புகாராக தெரிவித்திருந்தனர்.  படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் உடனடியாக இந்த உத்தரவை ஏற்று கொண்டதுடன் பட போஸ்டர்களை விரைவில் நீக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

ஜெயலலிதா விவகாரத்தில் வருத்தம் தெரிவித்தார் இலங்கை அதிபர் ராஜபக்ஷே




இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணையதளமான www.defence.lk என்ற இணையதளத்தில் இந்திய இலங்கை மீனவர் இடையேயான பிரச்னை குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.. குறிப்பாக தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் அத்துமீறி நுழைந்து தாக்கப்படுவது குறித்தும், கைது செய்யப்படுவது குறித்தும் இந்திய பிரதமருக்கு தமிழக முதல் அமைச்சர் கடிதம் எழுதுவது தொடர்பாக மிகவும் இழிவுபடுத்தும் வகையில் விமர்சனங்கள் அந்த கட்டுரையின் முகப்பு பகுதியில் இடம்பெற்றிருந்தது.

நமது பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா எழுதுவது காதல் கடிதங்கள் என அந்த கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தது. இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது , இதனால் அந்த கட்டுரை அந்த இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்த கட்டுரை இலங்கை அரசின் அனுமதி இல்லாமல் வெளியிடப்பட்டு இருந்தது என அவர்கள் தெரிவித்து இருந்தார்கள். இந்த விவகாரத்திற்காக அவர்கள் மோடியிடமும் ஜெயலலிதாவிடமும் மன்னிப்பு கேட்டார்கள்.

இதில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் , பழ. நெடுமாறன் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்து இருந்தார்கள். திமுக சார்பில் பேசிய திருச்சி சிவா , இது போன்ற கட்டுரைகள் வெளியாவதை இலங்கை அரசு தடுக்க வேண்டும் என்றார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதனை எதிர்த்து தமிழ் திரையுலகினர் நேற்று ஆர்பாட்டம் செய்தனர். இலங்கை அரசு இதில் ஜெயலலிதாவிடம் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்கள்.இந்த போராட்டத்தில்  நடிகர்கள் விஜய், சூர்யா, பிரபு, சிவகுமார், பார்த்திபன், ஸ்ரீகாந்த், பாக்யராஜ், விவேக், ஜீவா, விக்ரம்பிரபு, இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய நடிகர் விஜய்,  ஜெயலலிதாவை தவறாக பேசியது தனது தாயை தவறாக பேசியது போல் இருந்ததாக கூறினார்.

இந்த நிலையில், இணையதளத்தில் வெளியான கட்டுரை குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சே தனது வருத்தை தெரிவித்தார். இந்த விவகாரம் நடந்தற்காக நான் வருந்துகிறேன். இது தொடர்பாக நான் அறிக்கை கேட்டுள்ளேன் என்று இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த  மஹிந்தா ராஜபக்சே தெரிவித்துள்ளார். கேவலமான செயல்களில் ஈடுபட்டு விட்டு மன்னிப்பு கேட்பது ராஜபக்ஷேவுக்கு புதிது அல்ல.




ஆண்டர்சன்-ஜடேஜா விவகாரம் , ஐசிசி மேல் முறையீடு செய்யுமா ??





இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்னுடன் சண்டையில் ஈடுபட்டதால் இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆட்டத்தொகையில் பாதியை அபராதமாக செலுத்த உத்தரவிட்டு உள்ளது. முதல் டெஸ்டின் 2 ஆம் நாள் ஆட்ட இடைவேளியின் போது இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்டர்சன் கோபமாகி ஜடேஜாவை தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இந்திய அணி ஆண்டர்சன் மீது புகார் அளித்து இருந்தது. பதிலுக்கு இங்கிலாந்து அணி ஜடேஜா மீது புகார் அளித்தது. இது விசாரணையில் இருந்தது . இதில் ஜடேஜாவுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆன்டர்சன் மீதான குற்றச்சாட்டில் அவர் குற்றமற்றவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி மட்டுமே அப்பீல் செய்ய முடியும். தீர்ப்பு வெளியான 7 நாட்களுக்குள் அப்பீல் செய்யப்பட வேண்டும். அதாவது ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு முன் மட்டுமே அப்பீல் செய்ய இயலும். இந்த நிலையில், தீர்ப்பு பெற்றி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்செய் படேல் கூறுகையில், இந்த விவகாரத்தில் நாங்கள் செய்தது என்னவென்றால், தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளோம். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய எங்களுக்கு உரிமை கிடையாது என்று தெரிவித்தார்.

எனவே பிசிசிஐ யின் கோரிக்கையை ஏற்று ஐசிசி மேல் முறையீடு செய்யுமா என்று பொறுந்திருந்து தான் பார்க்க வேண்டும். 

ஏர்டெல் நூதனத்திருட்டு, 2ஜி, 3ஜி மொபைல் இண்டெர்நெட் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு

ஏர்டெல் 2ஜி, 3ஜி மொபைல் இண்டெர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு 2ஜி அல்லது 3ஜி பேக் முடிந்த உடன் நெட் பயன்படுத்தினால் எந்த முன்னறிவிப்பும் இன்றி  ஆட்டோமேட்டிக்காக மெயின் பேலன்சில் இருந்து பணம் குறைக்க ஆரம்பித்துவிடுவார்கள், எனவே 2ஜி, 3ஜி பேக் முடிந்தந்தா என்று கூட தெரியாமல் பணத்தை இழக்க ஆரம்பித்துவிடுவார்கள், இதில் நொந்து போன பூபதி என்பவர் இதை போஸ்ட்டராக அடித்து வெளியிட்டுள்ளார்.

நீங்களும் இதை ஷேர் செய்து ஏர்டெல்லின் இந்த நூதனத்திருட்டை தடுக்க உதவுங்கள்


ரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்து போராடிய அதிமுகவினர்

இலங்கையின் ராணுவ இணையதளத்தில் முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் மோடியுடன் தொடர்பு படுத்தி விமர்சனம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்து சென்னை பேசின்பிரிட்ஜ் ரயில் பாலத்தில் தலை வைத்து படுத்த நேற்று ரயில் மறியல் போராட்டம் அ.தி.மு.க.வினர்.

ஆனால் இந்த பாலத்தில் ரயில் போக்குவரத்து நீண்ட நாட்களாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது,ஒரு வேளை இது தெரிந்ததான் தண்டவாளத்தில் தலைவைத்தார்களோ... ஃபேஸ்புக்ல படம் போடுவதற்கென்றே போஸ் கொடுத்தது போல் இருக்கே



கல்லக்குடியில் ட்ரெயினிங் எடுத்திருப்பாங்களோ?

மோடியின் ஆட்டோகிராப்பால் உலக சாதனை படைக்கப்படுமா




நேற்று 2 நாள் சுற்றுபயணமாக மோடி நேபாள் சென்றார். நேபாள் தலைநகர் காட்மாண்டுவில் வசிக்கும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 5–ம் வகுப்பு படிக்கும் மாணவி மானசி சர்மா. இவருக்கு  பத்து வயது ஆகிறது . இவர் தனது தந்தையுடன் மோடி தங்கி இருக்கும் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று மோடியின் ஆட்டோகிராப்பை பெற்றார். உலகின் பிரபலமானவர்களிடம் இருந்து ஆட்டோகிராப் பெற்று உலக சாதனை படைக்க வேண்டும் என்பது அந்த சிறுமியின் விருப்பம் ஆகும்.

மோடி அளித்த அந்த ஆட்டோகிராப்பில் ,நீ வளர்ந்து பெரியவள் ஆனதும் மனித சமுதாயத்துக்கு சேவை செய்; அது தான் சிறந்த சேவை’ என்று எழுதி கையெழுத்திட்டு கொடுத்தார். இது போன்று அந்த சிறுமி இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ராணுவ தளபதி விக்ரம் சிங், கிரிக்கெட் கேப்டன் தோனி, இந்தி திரை உலக நட்சத்திரங்களான வினோத் கன்னா, கோவிந்தா மற்றும் ராக் இசைப் பாடகர் பிரேயன் ஆடம்ஸ் ஆகியோரிடம் இருந்து ஏற்கனவே ஆட்டோகிராப் பெற்றுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் 72 போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் !! பேச்சுகளை தொடங்க உள்ளனர் ..



கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்த போரை நிறுத்த இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் முன் வந்துள்ளனர் . இந்த போர் நிறுத்தம் இரு கசப்பான எதிரிகளுக்கு இடையே நடக்கும் இரத்தம் வடியும் போரை முடிவிற்கு கொண்டு வருவதற்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது .

இந்த 72 மணி நேர போர் நிறுத்தத்தை நீண்ட காலமாக நிறுத்தமாக மாற்ற முயற்சிகள் நடந்து வருகிறது . இந்த பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தது எகிப்து .

ஆனால் இந்த போர் நிறுத்தம் கட்டுக் கோப்பாக இருக்குமா ?? 

காங்கிரஸ் கட்சிக்கு உயிர் தர புதிய பதவியுடன் பிரியங்கா காந்தி வருகிறார்




காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் வெறும் 44 தொகுதிகளை மட்டும் பெற்று படுதோல்வியடைந்தது. இதனால் அந்த கட்சியால் எதிர்கட்சி தலைவர் பதவியை கூட பெற முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் ராகுல் காந்தி தான் என பலராலும் குற்றம்சாட்டப்பட்டது. அவரின் தவறான அனுகுமுறையால் தான் தோல்விக்கு காரணம் என பல மூத்த தலைவர்கள் உணர்ந்தார்கள். என்ன அவர் சோனியா காந்தியின் மகன் என்பதால் நேரடியாக சொல்ல முடியவில்லை.

இப்போது காங்கிரஸ் கட்சி உயிர் போகும் நிலையில் உள்ளது . அதனை யாராவது அதனை யாராவது காப்பாற்றி அதனை புத்தியிர் பெற செய்ய வேண்டும். இல்லையெனில் காங்கிரஸ் கட்சி வரலாற்றில் மட்டும் தான் இருக்கும். நிஜ வாழ்க்கையில் அது இல்லாத ஒன்றாக மாறி விடும். அதனை காப்பாற்றும் சக்தி பிரியங்கா காந்தியிடம் உள்ளதாக பலரும் கருதுகிறார்கள். அவர் இந்திரா காந்தி போன்று தோற்றம் மட்டும் இல்லாமல் செயலிலும் அப்படியே செயல் படுகிறார்.

அப்படி அவர் வந்தால் தேசிய பொது செயலாளர் அல்லது உபி காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்படலாம். மோடியின் மக்கள் செல்வாக்கை மீறி பிரியங்கா மக்களின் பிரியத்தை பெறுவாரா என பொருத்திருந்து பார்ப்போம்.

" பாம் காஸா " என்னும் சர்ச்சைக்குரிய கேமை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள் !!



இஸ்ரேல் காஸா மீது நடத்தும் போரை ஒத்து உருவாக்கப்பட்ட கேம் தான்  " பாம் காஸா " . இந்த சர்ச்சைக்குரிய கேமை திங்கட்கிழமை அன்று பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள் .

ஜூலை 26 ஆம் தேதி வெளியான இந்த கேமை 1000 த்துக்கும் மேற்பட்டவர்கள் விளையாடி உள்ளார்கள் . இந்த விளையாட்டில் தீவிரவாதிகள் மீது நாம் பாம் போட வேண்டும் . அதே நேரத்தில் பொது மக்களை காப்பாற்ற வேண்டும் . பொதுமக்கள் அதிகமாக கொல்லப்பட்டால் கேம் முடிந்து விடும் .



பல மக்களின் எதிர்ப்பினால் இந்த கேமை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள் . 

நமது நாட்டின் பெண் நீதிபதிக்கே செக்ஸ் தொல்லை தந்த ஆண் நீதிபதி




மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 2011–ம் ஆண்டு ஆகஸ்டு 1–ந் தேதி முதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பெண் நீதிபதி ஒருவர், 2012 அக்டோபர் முதல் மாவட்ட கூடுதல் மற்றும் செசன்சு நீதிபதியாக பதவி வகித்து வந்தார். பல பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி வந்தார். ஆனால் எந்த காரணமும் சொல்லாமல் இவர் கடந்த மாதம் 15 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அதற்கான காரணம் அப்போது தெரியவில்லை.

இப்போது அதற்கு காரணம் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் செக்ஸ் தொல்லையே என்று தெரிய வந்துள்ளது. அவர் பல வழிகளில் இவருக்கு செக்ஸ் தொல்லை தந்துள்ளார். அவரை குத்துப்பாட்டுக்கு கவர்ச்சி நடனம் ஆட சொல்லியுள்ளார். அவரை தனிமையில் அனுபவிக்க நினைத்து உள்ளார். ஆனால் எதற்கும் அந்த பெண் நீதிபதி இணங்கவில்லை. இதனால் கோபமடைந்த அவர் இவரை வேறு தொலைவான இடத்துக்கு பணிமாற்றம் செய்து உள்ளார்.

இதனால் தனது மகளின் 12 ஆம் வகுப்பு படிப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அதனை தள்ளி வைக்குமாறு கேட்டு உள்ளார் . ஆனால் அதற்கு ஒத்துக்கொள்ளப்படவில்லை. இதனால் தனது பெண்மையையும், கற்பையும், மகளின் படிப்பையும் காப்பாற்றுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். இது தொடர்பாக பெண் நீதிபதி, ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, மத்திய சட்ட மந்திரி உள்ளிட்டோருக்கு புகார் அனுப்பி உள்ளார்.

ஒரு நாட்டின் பெண் நீதிபதிக்கே இந்த நிலைமை என்றால் மற்ற பெண்களில் நிலைமை ??

அதிகம் சம்பாதிக்கின்ற ஹாலிவுட் நடிகைகளின் பட்டியல் !!


பிரபல பத்திரிக்கை நிறுவனமான போபர்ஸ் அதிகம் சம்பாதிக்கின்ற நடிகைகளின் பட்டியலை வெளியிட்டது . இந்த பட்டியலில் முதலிடத்தின் சென்ற வருடம் 7 அகாடமி விருதுகள் வென்ற படத்தில் நடித்த சாண்ட்ரா புல்லாக் முதலிடம் படித்தார் .

1) சாண்ட்ரா புல்லாக்


2) ஜென்னிபர் லாரண்ஸ்


3) ஜென்னிபர் அணிஸ்டன்


4) க்வெனத் பால்ட்ரோ


5) ஏஞ்சலினா ஜோலி


6) ஸ்கார்லெட் ஜொஹன்சன்


வர உள்ளது இந்தியக் குடிமகன்களுக்களான ஐ.டி கார்ட் !! அறிவித்துள்ளது மத்திய அரசு ...



இந்தியக் குடி மக்கள் அனைவரும் அடங்கிய தரவுத்தளம் ஒன்றை உருவாக்க உள்ளது மத்திய அரசு . இதனை உருவாக்கி அவர்களுக்கு ஒரு ஐ.டி கார்ட் வழங்கப்படும் . இதன் மூலம் இந்தியாவின் குடிமகன்கள் யார் என்று அறிந்து கொள்ளலாம் . இதற்கான முயற்சியை தொடங்கிவிட்டதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது .

இந்த ஐ.டி கார்டை பெற தகுதிகள் என்ன ??

பிறப்பு சான்றிதழ் , நில ஆவணம் உள்ளீட்ட முக்கிய ஆவணங்களில் ஒன்றை நாம் இந்தியக் குடிமகன் என்பதற்கு அடையாளமாக காட்ட வேண்டும் . இது போன்ற ஆவணங்கள் இல்லாத கிராமப்புற மக்களுக்கு வேறு முறை பின்பற்றப் படும் .

2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சர்வேயில் இந்தியாவில் வாழ்கிற 85 சதவீத மக்கள் இந்தியாவின் குடிமக்கள் .  2 சதவீதம் பேர் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் .

இந்த ஐ.டி கார்ட் தயாரிக்க 4,000 கோடி வரை செலவாகும் என்று கணிக்கின்றனர் . இந்த அடையாள அட்ட வழங்குவது உட்ப்பட அனைத்தும் 2014 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தது .

இந்திய கொடியை வைத்து தனது பெண் உறுப்புகளை மறைத்ததற்காக நடிகை மல்லிகா ஷெராவத் மீது வழக்கு




பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் தற்போது நடித்து வரும் படம் டேர்டி பாலிடிக்ஸ். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளிவர உள்ளது. இந்த படத்தின் போஸ்டர் சில வாரங்களுக்கு முன் வந்தது. அதில்  நடிகை மல்லிகா ஷெராவத் நமது நாட்டின் தேசிய கொடியை வைத்து தனது பெண் உறுப்புகளை மறைத்து கொண்டு இருப்பார். அவர் வேறு எந்த ஆடையும் அணிந்து இருக்க மாட்டார். சிவப்பு விளக்கு உள்ள காரின் மீது அமர்ந்து இருப்பார்.

அவர் மீது இந்த செயலால் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த போஸ்டரின் பின்னால் உள்ளது ராஜஸ்தான் சட்டசபை ஆகும்.  இந்த போஸ்டர் இந்திய தேசிய கொடி மற்றும் ராஜஸ்தான் சட்டசபை ஆகிய இரண்டையும் அவமதிப்பது போல் இருப்பதாகும். எனவே இது தொடர்பாக 4 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு நோட்டீஸ் அனுப்பபட்டு உள்ளது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media