30 வயதிலிருந்து 40 வயது வரை தான் மனித வாழ்வில் செக்ஸ் உறவின் உச்சகட்டம் எனலாம், திருமணம் ஆகியிருந்தாலும் உடலுறவு குறித்து புரிதல் கிடைத்து நிதானமாக ஆண்களும் பெண்களும் உடலுறவு கொள்வது இந்த வயதில் தான். ஆனால் தற்போதைய ஆராய்ச்சியில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கணவன் மனைவி ஆகியோரின் தவிர்க்க முடியாத வேலைப்பளுவினால் 30 வயதில் இருந்து 40 வயதிற்குட்பட்ட கணவன் மனைவிகள் தங்களின் சந்தோசமான செக்ஸ் வாழ்க்கையை தொலைத்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்கள், பெண்கள் என இருவருமே சம்பாதிக்கும் ஆசை தான் அவர்களின் செக்ஸ் ஆர்வத்துக்கு வேட்டு வைத்துக்கொண்டிருப்பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் காரணிகள் மற்றும் எந்தெந்த வயதில் என்ன மாதிரியான பிரச்சினைகள் ஏற்படும் என்பது பற்றியும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஆண்-பெண் இருவரில் யாருக்கு செக்ஸ் ஆர்வம் அதிகம் என்று ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் பல வியப்பூட்டும் தகவல்கள் தெரியவந்தன.
இந்த ஆய்வு 30 வயது முதல் 50 வயது வரை உடைய ஆண் பெண்களிடம் மேற்கொள்ளப்பட்டது. அதில் 30 வயதுப் பெண்களில் 85 சதவீதம் பேரிடம் செக்ஸ் ஆர்வம் அதிகமிருப்பதாக தெரியவந்தது. ஆனால் 30 வயதுடைய ஆண்களில் 75 சதவீதம் பேர்தான் அதிக செக்ஸ் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
செக்ஸ் உறவில் அதிக ஆர்வம் இருந்தாலும் அதிக வேலைப்பளுவினால் சோர்வடைந்து விடுவதாகவும் மாதம் ஒரு முறைதான் கணவருடன் உறவு வைத்துக் கொள்ள முடிகிறது என்றும் பல பெண்கள் கூறியுள்ளனர்.
கணவன் மனைவி இருவருமே நீண்ட நேரம் வேலை செய்வதாலும் வேலைக்கு செல்லும் பயண நேரம், வேலைக்காரணமான மனஅழுத்தம், பணக்கவலை எல்லாம் தங்களின் செக்ஸ் வாழ்க்கையை வீணாக்கி வருகிறது என்றும் கணக்கெடுப்பில் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வு பற்றி கருத்து கூறிய டாக்டர்30 வயதில் இருந்து 40 வயது வரை பெண்களின் செக்ஸ் ஆசைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மாறாக ஆண்களின் ஆசைகள் குறைந்து கொண்டே போகிறது. அதுதான் பெண்களின் வேதனைக்கு காரணம்' என்கிறார்.
மேலும் ஓரிரண்டு குழந்தை பெற்றவுடன் இந்த குழந்தைகளே போதுமென்று உடல்உறவை குறைத்துக் கொள்வது நல்லது என்றும் தம்பதியினர் முடிவு செய்கிறார்கள். 40 வயதில் பெண்கள் அதிக செக்ஸ் ஆர்வத்துக்கு உள்ளாகிறார்கள். அப்போது அவர்களின் குழந்தைகளும் பருவம் அடையும் நிலைக்கு வளர்ந்திருப்பார்கள். அதனால் உறவை தவிர்க்கிறார்கள்.
30 வயதில் பெண்களுக்கு செக்ஸ் ஆர்வம் அதிகம் ஏற்படுகிறது ஆனால் இந்த வயது ஆண்களுக்கு சம்பாதிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி மிகுந்து விடுகிறது. அதனால் 30 வயது ஆண்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறையத் தொடங்குகிறது.
40 வயதில் பெண்களுக்கு செக்ஸ் ஹார்மோன்கள் சுரப்பது குறையத் தொடங்குகிறது. மேலும் குழந்தைகள் பெரியவர்களாகி இருப்பதும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலையும் பெண்களின் செக்ஸ் உணர்வை குறைக்கிறது.
ஆனால் ஆண்கள் 40 வயதில் வேலை, தொழிலில் செட்டில் ஆகி நல்ல வருமானத்தை ஈட்டுவதால் டென்சன் இன்றி இருக்கிறார்கள், இதனால் செக்ஸ் உணர்வு அதிகரிக்கிறது.
50 வயதில் பெண்கள் மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் கட்டத்தை அடைகிறார்கள். இதுவும் பெண்களின் செக்ஸ் உணர்வை குறைக்கிறது.
ஆண்களில் பெரும்பாலானவர்களுக்கு 50 வயதில் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய் பாதிப்புகளின்செட்டில் ஆகிவிடுகிறார்கள். இருந்தாலும் குறையும் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அதற்காக அதிக நேரத்தையும், கவனத்தையும் செலவிடுவதால் உணர்வு குறைகிறது.
30வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்கும் தம்பதிகள் புரிதலுடன் செக்ஸ் உறவை நன்றாக அனுபவித்து கொள்ள வேண்டும், இந்த வயதை விட்டுவிட்டால் அதற்கு பின் உடலும் மனமும் செக்ஸ் உறவுக்கு அனுமதிக்காது என்பதை புரிந்துகொண்டு செக்ஸ் உறவை அனுபவியுங்கள்.