BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 8 June 2014

ராபேல் நாடல் வெற்றி !!!

பிரேஞ்ச் ஓபன் :

நேற்று பெண்களுக்கான பிரிவில் ஷரபோவா சாம்பியன் வென்றார் . இன்று ஆடவர்களுக்கான இறுதிப்போட்டி நடந்தது . அந்தப் போட்டியில் நாடல் மற்றும் ஜோகோவிக் மோதினர் .

3-6 , 7-5 , 6-2 , 6-4 என்ற செட் கணக்கில் நாடல் சாம்பியன் பட்டம் வென்றார் .

இந்த வெற்றி மூலம் நாடல் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டார் . இது இவர் வாங்கும் 14 ஆவது கிராண்ட் ஸ்லாம் . இதன் மூலம் பிடி சாம்ப்ராஸ் சாதனையை சமன் செய்து இரண்டாம் இடம் பிடித்தார் . முதல் இடத்தில் 17 கிராண்ட் ஸ்லாம் பட்ட்ங்களை வென்ற பெடரர் இருக்கிறார் .

ஐ.பி.எல் மேட்ச் பிக்ஸிங் குறித்து விசாரிக்கும் கமிட்டியில் கங்குலி !!!



தன்னுடைய நேர்மையான குணத்தாலும் , தன்னுடைய சரியான கொள்கைகளாலும் தனக்கென ஒரு தனிப் பெயர் எடுத்தவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி .

ஐ.பி.எல் போட்டிகளில் நடந்த மேட்ச் பிக்ஸிங் குறித்து விசாரிக்க தனிக் குழு ஒன்றை நீதிமான் முகுர் முத்கல் தலைமையில் அமைத்தது . இந்தக் குழுவில் ஒரு முன்னாள் வீரர் ஒருவர் இருக்க வேண்டும் என முத்கல் விரும்பினார் . இதனால் பல வீரர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது .

இன்று நடந்த கமிட்டி கூட்டத்தில் கங்குலி கமிட்டியில் சேர வேண்டும் என்று விரும்பினர் . அதுபோலவே முத்கல் , அளித்த பேட்டியில் " நாங்கள் கங்குலியை எங்களுடன் இணையக் கேட்டுக் கொண்டதால் அவர் சேர ஒத்துக் கொண்டார் . இதை தொலைபேசி மூலம் உறுதி செய்தார் கங்குலி . மேலும் அடுத்து கமிட்டி எப்போது நடைபெறும் என விரைவில் அறிவிப்போம்  " என்று கூறினார் . 

ஐபிஎல் சதாட்டப் பூகாரில் மெய்யப்பன் மற்றும் உள்ளூர் வீரர்களான அங்கிட் சவான் , அஜித் சண்டிலா மேலும் பாலிவுட் நடிகர் விண்டு தாரா பெயர்கள் மாட்டி உள்ளன . 

கங்குலி தேர்வு செய்யப்பட முக்கிய காரணம் , அவர் தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடியவராக இருப்பதாலும் , நேர்மை என்று வரும் போது அவரை அடித்துக் கொள்ள ஆள் இல்லை என்பதற்காகவும் தேர்வு செய்யப்பட்டார் . 

மேலும் கங்குலி இப்போது செய்து வரும் வருணனையாளர் பணியை அவர் தொடர்ந்து செய்யலாம் என முத்கல் தெரிவித்துள்ளார் .


ஆம் ஆத்மி மீண்டும் எழுச்சி பெறும் - அரவிந்த் கெஜ்ரிவால் ........

மூன்று நாட்களாக ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்டக் குழுவின் ஆலோசனை இன்று முடிவடைந்தது .

இந்த கூட்டத்தின் முடிவில் கெஜ்ரிவால் அளித்த பேட்டியில் , " கட்சியை மீண்டும் கட்டமைக்க அனைத்து நடவடிக்கைகளும் கீழ் நிலையில் இருந்து தேசிய நிலை வரை அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் . "மிஸன் விஸ்தார்" என்பதன் மூலம் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளும் புதுப்பொலிவு பெறும் . மேலும் பல புது நபர்கள் கட்சியின் பொறுப்பில் சேர்க்கப்படுவர் என்று தன் பேட்டியில் கூறினார் .

மேலும் யோகேந்திர யாதவ் பற்றி கூறுகையில் , அவர் எனக்கு அண்ணன் போன்றவர் . அவருக்கு என்னைத் திட்ட அனுமதி உண்டு . நானும் மனிதன் தான் , நான் தவறு செய்யும் போது , யோகேந்திர  யாதவ் போன்றவர்கள் என் தவறை சுட்டிக் காமிப்பர்  என்றார் .

மேலும் புதிய பிரதமர் மோடி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் .

மும்பை மெட்ரோ சேவை தொடங்கியது !!!

இந்த மெட்ரோ சேவையை இன்று மஹாரஷ்ட்ரா முதல்வர் பிரித்விராஜ் சவுகான் வெர்சோவா நிலையத்தில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார் . இந்த சேவை மூலம் 90 நிமிட பயணம் 20 நிமிடம் ஆக குறைய வாய்ப்பு உள்ளது . 

இந்த சேவை இன்று தொடங்கப்பட்டாலும் , விலை நிர்ணயிப்பதில் இன்னும் பிரச்சனை நீடித்து வருகிறது . மஹாரஷ்ட்ரா அரசு நிர்ணயித்த விலையை கட்டாயப்படுத்தாவிட்டால் தொடக்க விழாவில் பங்கேற்க மாட்டேன் என  பிரித்விராஜ் சவுகான் தெரிவித்து இருந்தார் . இன்று சவுகான் பங்கேற்று , இந்த விலை நிர்ணயம் நீதிமன்றம் மூலம் தீர்த்து வைக்கப்படும் என்று கூறினார் . மஹாரஷ்ட்ரா அர்சு விலையை 9 முதல் 13 ரூபாய் நிர்ணயித்து இருந்தாலும் , எம்.எம்.ஓ.பி.எல் நிறுவனம் குறைந்தபட்சம் 10 ரூபாயும் அதிகபட்சமாக 40 ரூபாயும் நிர்ணயிக்க வேண்டும் என விண்ணப்பித்து இருந்தனர் . 

ஒரு நாளைக்கு 200-250 முறை பணியாற்றி 11 லட்சம் பயணாளர்களைக் கூட்டிக் கொண்டு போகும் . ஒவ்வொரு கோச்சும் 375 பயணாளர்களைக் கூட்டிக் கொண்டு போகும் திறனுடையது .
 

மீனவர் விவகாரம் : நிரந்தர தீர்வு வேண்டி முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் !!!



இன்று மீன் பிடிக்கச் சென்ற 73 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது . அவர்களின் மீன்பிடி படகுகளையும் கைப்பற்றினர் .

இதனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீனவர்கள் பிரச்சனையில் நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதினார் .

இந்த கடிதத்தில் , உடனடி நடவடிக்கையாக இந்திய அரசு இலங்கை கடற்படையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் .  தமிழக அரசும் இந்திய அரசும் இணைந்து நடவடிக்கை எடுத்தால் இந்த விவகாரத்தில் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் . கடந்த மூன்று வருடங்களாக இலங்கை கடற்படையின் இந்த மோசமான நடவடிக்கை மீனவர் சமுதாயத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது . மேலும் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இலங்கை அரசின் இந்த செயல்கள் அவர்களின் மெத்தன போக்கைக் காட்டுகிறது . இதனால் தங்கள் தலைமையில் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் எழுதியுள்ளார் .

மேலும் மோடி அவர்களின் முயற்சியினால் ஜுன் 1 ஆம் தேதி சில மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்ததால் நன்றி கூறினார் . 

பீடி, சிகரெட் வாங்க குறைந்தபட்ச வயது 25 !!!!



புகையிலை  பொருட்கள்  வாங்குவதற்கான  வயதை  18இல்  இருந்து 25 ஆக  உயர்த்த  மோடி  அரசு பரிசீலித்து  வருகிறது.  இது  பாராட்டப்பட  வேண்டிய  செயல்.  நமது  நாட்டில்  புகையிலை  பொருட்களால்  ஆண்டுக்கு  9 லட்சம்  பேர்  இறக்கின்றனர்  என்று  ஒரு  ஆய்வு  சொல்கிறது . இதனை  உடனடியாக  நிறுத்தி  விட  முடியாது . சிறு துளியே  பெரு  வெள்ளம் . எனவே  இந்த  முயற்சி  நல்ல  பலன் தரும்.  இருந்தாலும்  புகையிலை  உபயோகிபவர்களை  தடுப்பதை விட  அதனை  தயாரிப்பவர்களை  தடுப்பதே  இதற்கு  நிரந்திர  தீர்வு !!
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media