BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 3 July 2013

தர்மபுரி காதல் திருமணப் பிரச்சினை, இளவரசன் உடன் வாழ தயாராக இல்லை - திவ்யா பேட்டி வீடியோ

தர்மபுரி காதல் திருமணப் பிரச்சினை, எந்த சூழ்நிலையிலும் இளவரசன் உடன் சேர்ந்து வாழ தயாராக இல்லை - திவ்யா பேட்டி வீடியோ

தர்மபுரியை சேர்ந்த திவ்யா-இளவரசன் காதல் திருமணம் செய்து கொண்டதும் அதைத்தொடர்ந்து நடந்த கலவரங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற‌ மரக்காணம் கலவரம் என கடைசியாக டாக்டர் ராமதாஸ் கைதில் கொண்டு போய் நின்றது, இந்நிலையில் காதல் திருமணம் செய்து கொண்ட திவ்யா கணவரை பிரிந்து தாயிடம் வந்துவிட்டார், இவரை மிரட்டி கடத்தி கொண்டு போய்விட்டதாக இளவரசன் தரப்பு புகார் அளிக்க சென்ற மாதம் கோர்ட்டில் தாயுடன் இருக்க விரும்புவதாக திவ்யா நீதிபதிகளிடம் கூறிவிட்டு தாயுடன் சென்று விட்டார்.

ஜூலை 1ம் தேதி கோர்ட்டுக்கு வந்த திவ்யா தனது தாயுடன் இருக்க விரும்புவதாகவும் தன் தாயார் சம்மதித்தால் தன் கணவருடன் செல்ல விரும்புவதாகவும் கூறியதாக விகடன் இணையதளம், நக்கீரன், ஒன் இண்டியா போன்ற இணையதளங்களில் செய்திகள் வெளியாகின, ஆனால் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் திவ்யா தான் இளவரசனுடன் தான் எந்த சூழ்நிலையிலும் சேர்ந்து வாழ தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.






Dharmapuri Divya and Ilavarasan break up, Divya told not ready to live with ilavarasan, she wants to live with her mother, she said that she is not interested with ilavarasan

ஆஸ்பத்திரி கம்பவுண்டர் லஞ்சம் வாங்கி சேர்த்தது 100 கோடி

செய்வதோ ஆஸ்பத்திரி கம்பவுண்டர் வேலை, சொத்தோ 100 கோடிக்கும் மேல், எல்லாம் லஞ்சம் வாங்கியது தான்.

அரசியல்வாதிகள், பெரிய அதிகாரிகளை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு ராஜஸ்தானில் லஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்ட கம்பவுண்டரிடம் 100 கோடிகும் மேல் சொத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மான் சிங் என்ற மருத்துவமனையில் கம்பவுண்டராக பணியாற்றுபவர் மகேஸ் சந்த் சர்மா(வயது 52) லஞ்சம் வாங்கி வாங்கியும் நர்சிங் கவுன்சில் தலைவர் சர்மாவுக்கு பல விசயங்களில் தரகரகாவும் இருந்து இத்தனை கோடிகளை சுருட்டியுள்ளார்.

ஆரம்ப காலத்திலிருந்து இவர் வாங்கிய லஞ்சம், நாளடைவில் பெரிய அளவில் மாறியது.இதனையடுத்து தனது மனைவி மீனா தேவி பெயரில் சொத்துக்களை வாங்கி குவிக்க ஆரம்பித்தார். ராஜஸ்தானில் உள்ள 25 நர்சிங் கல்லூரிகளில் இவர் பங்குதாரராக உள்ளார்.

இந்நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றின் உரிமையாளர் ரமேஷ் சந்த் என்பவர் தனது கல்லூரிக்கு கூடுதல் இடங்கள் பெற்றுத் தர மகேஸ் சந்த் சர்மாவை அணுகினார். அதற்காக 5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்டார்.

# 4 நாள் திகாரில் காய்ந்த ரொட்டி தின்றுவிட்டு வெளியே வந்தால் முடிந்து போகும், லஞ்சம் வாங்கியவர்கள் சொத்தை எப்பவாவது பறிமுதல் செய்திருக்கிறோமா என்ன கவலைப்பட?
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media