BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 24 June 2014

ஈராக்கில் இருந்த 17 இந்தியர்கள் காப்பாற்றப் பட்டுள்ள்னர் !!

ஈராக்கில் தீவிரவாதிகளிடம் சிக்கி இருந்த 17 இந்தியர்களை மீட்டுள்ளதாக இத்தாலி அரசு தெரிவித்துள்ளது .

இப்போது அவர்கள் பாக்தாத் நகரத்தில் இருப்பதாகவும் கூடிய விரைவில் இந்தியாவிற்கு அனுப்பப்படுவர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .

மேலும் மொசுலில் உள்ள 39 இந்தியர்கள் நலமாக இருப்பதாகவும் , 46 நர்ஸ்களும் பிரச்சனை இல்லாமல் இருப்பதாக தெரிவித்தார் .


நாளை வங்கதேசம் செல்கிறார் சுஷ்மா சுவராஜ் !!

இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மூன்று நாள் சுற்றுப் பயணமாக வங்கதேசம் செல்கிறார் .

நாளை வங்கதேசம் செல்லும் அவர் வங்கதேசத்தின் வெளியுறவுத்துறை அமைச்சருடன் கலந்து ஆலோசிக்க உள்ளார் . மேலும் பல அதிகாரிகளுடனும் பேச உள்ளார் .

பதவியேற்ற பின் சுஷ்மா சுவராஜ் செல்லும் முதல் வெளிநாட்டு பயணம் என்பது குறிப்பிடத்தக்கது
 !!

விலையை உயர்த்தியும் வாடிக்கையாளர்களை இழக்காத ஏர்டெல் : உலக அளவில் 3வது இடம் !!



உலகின் 3வது பெரிய டெலிகாம் நிறுவனம் என்னும் சிறப்பை பெற்று உள்ளது ஏர்டெல் நிறுவனம். முதல் இடத்தில் சீனா மொபைலும், இரண்டாம் இடத்தில் வோடாபோனும் உள்ளன .இந்த 20 நிறுவனம் 20 நாடுகளில் இதன் சேவையை அளித்து வருகிறது. அவர்கள் 297 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு உள்ளது . 2012 இல் இந்த நிறுவனம் 4 ஆம் இடத்தில் இருந்தது.





கடந்த மாதம் இதன் விலை அனைத்தையும் உயர்த்தியது ஏர்டெல் நிறுவனம். முதலில் விலையை உயர்த்துவது இவர்கள் தான் . ஆனாளும் இவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழப்பது இல்லை. அதற்கு முக்கிய காரணம் ஏர்டெல் நிறுவனத்தின் சிக்னல் எல்லா இடங்களிளும் கிடைக்கும். ஆனால் பொது துறை நிறுவனமான பி.ஸ்.என்.எல் சேவையை ஊக்குவிப்பதே நமது கடமையாகும். அரசும் மக்களும் இதற்கு சேர்ந்து உழைக்க வேண்டும்.

சதாம் உசேனை தூக்கிலிட்ட நீதிபதியை கொன்ற தீவிரவாதிகள் !!!


ராவுஃப் அப்துல் ரஹ்மான் என்னும் நீதிபதி கடந்த 2006 ஆம் ஆண்டு சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார் .

இப்போது ஈராக்கில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது , ஐ.எஸ்.ஐ.எஸ் என்னும் தீவிரவாத அமைப்பின் கை ஓங்கி உள்ளது . அந்த அமைப்பினர் ராவுஃப் அப்துல் ரஹ்மான் என்ற நீதிபதியை கடத்தி வைத்து இருந்தனர் . இப்போது அவரை கொன்றுள்ளனர் . இதன் மூலம் அவரை பழி தீர்த்துள்ளதாக தெரிவித்தனர் ,

ஆனால் இதை அந்த நாட்டு அரசு இன்னும் தெரிவிக்கவில்லை !!!

மந்திரிகளின் செல்போன் கட்டணம் 21.56 லட்சம் : எங்கே போகிறோம் நாமும் !!



                   கர்நாடகாவில் கடந்த ஒராண்டில் மட்டும் அங்கு உள்ள அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் லேன்ட்லைன் மற்றும் செல்போன் கட்டணம் ரூபாய் 21.56 லட்சம் ஆகும். இந்த தகவலை அந்த மாநிலத்தின் முதல்வர் சித்தராமையா கூறினார். இது குறித்து சட்டபேரவையில் இன்று கேள்வி எழுப்பபட்டது. ஆனால் அவர்களுக்கு எந்த கட்டுபாடுகளும் என்றார் முதல்வர் . ஆனால் மந்திரிகளின் செல்போன் கட்டணம் மட்டும் ரூபாய் 5000 க்குள் இருக்க வேண்டும் என்பது கட்டுபாடு ஆகும்.
                    இவர்களுக்கு ஏன் அரசு இலவசமாக இந்த சலுகைகளை வழங்குகிறது என்று தெரியவில்லை. ஏழை விவசாயி குடிக்க கஞ்சி இல்லாமல் அரசாங்கத்திற்கு வரி கட்டும் போது இவர்களுக்கு மட்டும் ஏன் இந்த இலவச இணைப்பு.

                    இந்த இணைப்பை துண்டித்தால் மட்டுமே நம் சிறப்பை பெற முடியும்.


உயிரைக் காப்பாற்றிய வாட்ஸ்அப் !!!


இன்றைய அனைத்து இளைஞர்களிடமும் ஆன்ட்ராய்ட் மொபைல் உள்ளது . அந்த மொபைலில் கிட்டதட்ட அனைத்து இளைஞர்களிடமும் வாட்ஸ்ஸப் என்னும் அப்ளிகேஷன் இருக்கிறது .. அந்த  வாட்ஸ்ஸப் எப்படி ஒரு ஆணின் வாழ்க்கையை காப்பற்றியது என பார்க்கலாம் .

பிரியங்கா ஷர்மா (32) , கௌரவ் ஆரோரா (35) என்ற இருவரும் டில்லியில் இருந்து பெங்களூரில் வேலை செய்து வருகிறார்கள் . இருவரும் ஒன்றாக இணைந்து மலை ஏற்றத்தில் ஈடுபட்டனர் . இறங்கும் போது கௌரவ் சின்ன தவறினால் 300 அடியில் இருந்து பாறைகளில் இருந்து உருண்டு விழுந்தார் . இதனால் ஏற்பட்ட காயத்தினால் புதர்களுக்குள் மாட்டிக் கொண்டதால் அந்த இடத்தை விட்டு அவரால் நகர இயலவில்லை .

மொபைல் மூலம் பிரியங்காவை தொடர்பு கொள்ள முயன்றார் , ஆனால் இயலவில்லை . நெட்வோர்க் சரி இல்லாததால் தொடர்பு கொள்ள முடியவில்லை .  கௌரவ் தன்னுடைய நண்பருக்கு வாட்ஸ்ஸப் மூலம் அந்த இடத்தை போட்டோ எடுத்து அனுப்பினார் . அந்த போட்டோவின் உதவியுடன் அவரை கண்டுபிடித்தனர் .

இப்போது அவர் நலமாக உள்ளார் !!!

மோடியின் அமைச்சர்களை இனி மக்கள் எளிதில் சந்திக்கலாம் !!




இப்போது அமைந்து உள்ள அரசின் அமைச்சர்களை மக்கள் இனி எளிதில் தொடர்பு கொள்ளலாம் என்றார் மத்திய சுற்றுசூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடெகர். அடுத்த வாரத்தில் இருந்து மக்களுடன் தொடர்பில் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார். இதற்காக அவர்கள் பேஸ்புக் , டிவிட்டர் போன்ற சமூக வலைதலங்களை பயன்படுத்த உள்ளார்கள். இதில் மக்களிடம் தங்கள் ஆட்சியை பற்றிய கருத்துகளை கேட்பார்களாம். அதன் மூலம் தங்களின் தவறுகளை திருத்தி கொள்ளலாம் என்று எண்ணுகிறார்கள். அந்தந்த துறைகளில் தங்கள் திட்டங்கள் , அதனை செயல்படுத்தும் முறைகள் ஆகியவற்றை இதன் மூலம் மக்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். இது ஒரு வழி பேச்சாக இல்லாமல் இருவரும் பேசி கொள்வதாக இருக்கும். இதன் மூலம் மக்களின் குறைகளை எளிதில் அறிந்து அதனை தீர்த்து வைக்கலாம் .

இதில் அனைத்து மொழிகளையும் சமமாக பார்பார்கள் . ஹிந்திக்கு மட்டும் தனி முக்கியத்துவம் என்பது இருக்காது என்றார்.



சிறுமிக்கு பாலியல் தொல்லை : இந்தியருக்கு 25 ஆண்டு சிறை !!



அமெரிக்காவில் சிறுமி ஒருவருக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்தடுடன் அவரின் புகைபடத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்ட குற்றத்திற்காக இந்தியர் ஒருவருக்கு 25 ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. இவர் பெயர் துளசிராம் ,இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டார். அவர் தனது குற்றங்களை ஒப்பு கொண்டு சிறையில் இருந்து வந்தார். அந்த வழக்கிற்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது .அதில் அவர் 25 ஆண்டுகள் சிறையில் இருக்கும் வரை அவரை பாலியல் குற்றவாளியாக பார்க்க வேண்டும் என்று அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு எழுதியது.




.
இந்தியாவிலும் பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் இது போல கடுமையாக இருக்க வேண்டும்.

தோனிக்கு கைது வாரண்ட் !!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு ஹைதராபத் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறாப்பித்துள்ளது .

விளம்பரம் ஒன்றில் தோனி கடவுள் விஷ்ணு போன்று தோற்றமளித்து கையில் ஒரு காலணியுடன் இருந்தார் . இந்த புகைப்படம் பிஸினஸ் டூடே நாளிதழில் இடம் பெற்று இருந்தது .  இந்த புகைப்படம் ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும்படியாக உள்ளதாக விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஷ்யாம் சுந்தர் லோக்கல் நீதிமன்றத்தில் பிப்ரவரி மாதம் வழக்கு தொடுத்தார் .

நீதிமன்றத்திக் இருந்து மூன்று முறை சம்மன் அனுப்பியும் கோர்ட்டில் நேரில் ஆஜாராகத்தால் கைது செய்ய நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

பேஸ்புக் கணக்கை தொடங்கினார் ஸ்.பி.பி : லைக் செய்ய தொடங்கினார்கள் ரசிகர்கள்



பல இந்திய மொழிகளிள் 40000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் ஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் . இந்தியாவின் சிறந்த பாடகர்களிள் இவர் தான் முதன்மையானவர். இவரது பாட்டுக்கு என பல கோடி ரசிகர்கள் உள்ளார்கள். இடைவேளி விடாமல் பாடுவதிலும் இவர் வல்லவர். இப்படி பல சிறப்புகளை கொண்ட ஸ்.பி.பி கடந்த மாதம் பேஸ்புக்கில் இணைந்தார். அவரது ரசிகர்கள் வந்து அவரது பக்கத்தை லைக் செய்து வந்தார்கள். இப்போது வரை சுமார் 12 லட்சம் பேர் லைக் செய்து உள்ளார்கள் . அவரது ரசிகராக இருப்பதே ஒரு பெருமை தான் என்று அதில் கூறி வருகிறார்கள். இனி தனது ரசிகர்களுடன் உரையாடுவதற்கு இதனை பயன்படுத்தபோவதாக கூறி உள்ளார். அந்த பக்கத்தின் முகவரி https://www.facebook.com/SPB 






ராணுவத்திற்கான பட்ஜெட் உயர்த்தப்படும் - அருண் ஜெட்லி !!



புதிய அரசின் பாதுகாப்புத் துறை மற்றும் நிதித் துறை அமைச்சராக அருண் ஜெட்லி நியமிக்கப்பட்டார் . இவர் தனது முதல் பட்ஜெட்டை ஜூலை 10 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார் .

இந்த பட்ஜெட்டில் ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார் .

அவர் அளித்த் பேட்டியில் , " இது எங்களுக்கு கஷ்ட காலம் , கடந்த 2 வருடங்களாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்திற்கு கீழ் உள்ளது . நாங்கள் இதை பற்றி தீவிரமாக யோசித்து முடிவெடுக்க போகிறோம் . தயவு செய்து சிறிது காலம் பொறுமை காக்க வேண்டும் " என்றார் .


   

இன்று கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள்



முத்தையா என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் கண்ணதாசன்  ஜூன் 24, 1927ல்  சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார், அக்டோபர் 17, 1981 அன்று தனது 54வது வயதில் மரணமடைந்தார்.(

திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி அர்த்தமுள்ள இந்துமதன் உட்பட பல்வேறு நூல்கள் எழுதியுள்ளார், இவருக்கு மூன்று மனைவிகளும் 15 பிள்ளைகளும் உள்ளனர்.

கண்ணதாசனின் பாடல்களில் உங்களால் மறக்கமுடியாத பாடல் ஒன்றை கமெண்ட்டில் குறிப்பிடுங்கள்

தேவை இல்லாத கோப்புகளை அழியுங்கள் , பிரதமர் மோடி !!


புதிதாக பதவியேற்ற பிரதமர் மோடியின் உத்தரவினால் , ஒரு மாதத்திற்குள் மத்திய அமைச்சரவையில் குப்பைகளாகக் கடந்த ஒன்றரை லட்சம் கோப்புகளை அழித்துள்ளனர் .

இந்த மாறி அழிப்பதில் ஈடுபடும் போது பல ஆச்சரியமான மற்றும் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோப்புகளை காண நேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தன .


சென்னை மக்களை கவர்ந்த ‘மெட்ராஸ்” பட டிரெய்லர் !!



அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் மெட்ராஸ். ஸ்டுடியொ கிரீன் நிறுவனம் இதனை தயாரித்து உள்ளார்கள். இந்த படத்தின் டிரெய்லர் நெற்று வெளிவந்தது. இது அனைவரையும் கவர்ந்து உள்ளது. முக்கியமாக சென்னை மக்களை கவரும் விதமாக இருந்தது. இந்த படம் முழுக்க முழுக்க வடசென்னையை பற்றிய கதையாகும். கார்த்தி வடசென்னையில் வசிக்கும் ஒரு வாலிபராக வருகிறார் . அந்த இடத்தின் சூழ்நிலைகள் ,பிரச்சனைகள் ஆகியவற்றை இந்த படத்தில் மிக அழகாக கூறுகிறார்கள். இந்த படத்தின் ரீலிஸ் எப்போது என்று தெரியவில்லை. 


ஆணின் உறுப்புகளை சாப்பிட்ட பெண் !!



பிரான்ஸ் நாட்டில் மிக கொடூரமான சம்பவம் நடந்து உள்ளது. அங்கே 1 தம்பதியினர் இருந்தனர். கணவரின் வயது 80 மனைவியின் வயது 71. கடந்த மே 22 ஆம் தேதி அன்று மனைவி கணவனை கொடூரமாக கொன்று உள்ளார். கொன்றது மட்டும் இல்லாமல் அவரது காது ,மூக்கு ,இதயம், ஆண் உறுப்பு ஆகியவற்றை வெட்டி எடுத்து சமைத்து சாப்பிட்டு உள்ளார் .போலீஸார் அந்த பெண்ணை கைது செய்து உள்ளார்கள். இப்போது மனநல பரிசோதனைக்கு அனுப்பி உள்ளார்கள். இந்த சம்பவம் அங்கு மிகவும் பரபரப்பை ஏர்படுத்தி உள்ளது .


அப்பாவுக்கு லீவு கொடுங்கள் , கூகுள் நிறுவனத்துக்கு கடிதம் எழுதிய சிறுமி !!

சிறு வயதில் மகள்களுக்கு தந்தையுடன் நேரத்தைக் கழிப்பதில் அதிக ஆசைக் காட்டுவார்கள் . தந்தை எப்போதும் தம்முடன் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள் .

அது போல கேட்டி என்னும் சிறுமி கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதினார் . இவரது தந்தை கூகுளில் வேலை செய்கிறார் . தனது அழகான சிறுவயது கையெழுத்தினால் கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்று எழுதினார் . அந்த கடிதத்தில் தனது அப்பாவிற்கு புதன்கிழமை பிறந்தநாள் என்றும் அந்த ஒரு நாளிற்கு மட்டும் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தனது ஸ்கெட்ச் பேனாவினால் கடிதம் எழுதி அனுப்பினார் .




இதன்பின் நடந்தது தான் நம்மை வியப்பில் ஆழ்த்தும் . அந்த கடிதத்திற்கும் கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதில் எழுதினார் . அந்த கடிதத்தில் சிறுமியின் தந்தை கடினமாக உழைப்பதாகவும் , அதனால் புதங்கிழமை மட்டும் இல்லாமல் , ஜுலை முதல் வாரம் முழுவதும் விடுப்பு அளிப்பதாக தெவிரித்தார் .



பதில் வராது என்று நினைத்த சிறுமி மற்றும் அனைவருக்கும் இந்த கடிதம் வியப்பை தந்தது .

கால்பந்து உலக கோப்பை : உள்ளே சென்றது பிரெசில் மெக்சிகோ அணிகள் !!



கால்பந்து உலக கோப்பையில் நெற்று 4 போட்டிகள் நடைபெற்றன. அதிலில் முதலில் நடைபெற்ற ஆட்டதில் நெதர்லாந்தும் சிலியும் மோதின,மற்றும் ஸ்ஸெபயினும் ,ஆஸ்திரேலியாவும் மொதின.
வெளியேறி விட்ட ஸ்பெயின் நெற்று நன்றாக விளையாடியது.அந்த அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 2-0 என்கிற என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

1.30 மணிக்கு நடைபெற்ற 2 ஆட்டங்களும் முக்கியம் வாய்ந்தவையாக இருந்தன. எனென்றால் அதில் வெற்றி தோல்வியை வைத்து தான் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணிகள் யார் என்று தெரியும். இதில் பிரேசில் அணியின் அபார ஆட்டத்தால் அந்த அணி 4-1 என்று வெற்றி பெற்றது. அந்த அணியின் நெய்மர் 2 கோல்கல் அடித்தார். மற்றொரு ஆட்டத்தில் மெக்சிகோ அணி 3-1 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்று உள்ளே நழைந்தன.


 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media