BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 20 June 2014

போட்டியில் ஜெயித்தால் இங்கிலாந்து ராணியிடம் இருந்து முத்தம் வேணுமாம் !!

இத்தாலி நாட்டின் இளம் வீரர் மரியோ பலோடெல்லி . இவர் இத்தாலி அணியின் முன் கள ஆட்டக்காரர் . இவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் இத்தாலி அணிக்கு முக்கிய கோல் அடித்து அணியை வெற்றி பெற செய்தார் .

இங்கிலாந்து அணி உருகுவேயுடன் தோற்ற உடன் தனது டிவிட்டர் பக்கத்தில் , " நாங்கள் கோஸ்டா ரிக்கா அணியை தோற்கடித்தால் , இங்கிலாந்து நாட்டின் ராணி என் கண்ணத்தில் முத்தம் தர வேண்டும் என டிவிட் செய்து இருந்தார் .

இப்போது இத்தாலி மற்றும் கோஸ்டா ரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது .....

சல்மான் கானின் கிக் படம் சாதனை !!

சல்மான் கான் மற்றும் ஜாக்குலின் பெர்ணாண்டஸ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பெயர் " கிக்  "

அந்த படத்தின் ட்ரெய்லர் சென்ற வாரம் வெளியானது . வெளியான வேகத்தில் பல சாதனைகளை செய்தது அந்த ட்ரெய்லர் . அமீர் கானின் தூம் - 3 40 பட ட்ரெய்லரை 6 நாட்களில் 40 லட்சம் பேர் பார்த்தனர் . ஹிருத்திக் ரோஷனின் க்ரிஷ் - 3 படத்தின் ட்ரெய்லரை  4 நாட்களில் 40 லட்சம் பேர் பார்த்தனர் .  ஆனால் " கிக் " படத்தின்  ட்ரெய்லரை 59 மணி நேரத்தில் 50 லட்சம் மக்கள் பார்த்தனர் . மேலும் யுட்யூபில் 23,000 க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளனர் .

காங்கிரஸ் உறுப்பினரே இல்லாத ஆந்திர சட்டமன்ற முதல் கூட்டம் தொடங்கியது !!

ஆந்திர சட்டமன்றத்தின் முதல் கூட்டதொடர் நேற்று தொடங்கியது .அங்கே வரலாற்றிலேயே முதல் முறையாக காங்கிரஸ் உறுப்பினர் இல்லாத அவையாக இது அமைந்து உள்ளது .மாநிலத்தில் ஒரு இடத்தை கூட வெல்ல முடியாமல் போனது .

அங்கு மொத்தம் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் 102 தொகுதிகளில் வெற்றி பெற்று தெலுங்கு தேசம் ஆட்சி அமைகிறது .ஒய்.எஸ்.ஆர் . காங்கிரஸ் கட்சி 67 தொகுதிகளில் வெற்றி பெற்றது .4 தொகுதிகளில் பா.ஜ.க வும் ,2 தொகுதிகளில்  சுயேட்சையும் வெற்றி பெற்றன .காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை .இதற்கு முக்கிய பிரச்சனை மாநிலத்தை இரண்டாக பிரித்தது தான் .

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடி விழுந்துள்ளது  .அவர்கள் இந்திய நாட்டை 10 ஆண்டுகள் ஆட்சி செய்து மக்களின் வெறுப்பை மிகுதியாக பெற்றுள்ளதால் இந்த அடி விழுந்துள்ளது .

நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார் !!

விஜய் டிவியில் புதிய தொடருக்கான நட்சத்திர தேர்வில் இறங்கி உள்ளார்கள் ."நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார் " என்னும் பெயரில் தேர்வுகள் நடைபெறும் .மதுரையில் இந்த தேர்வு முடிந்து விட்டது .

ஜூன் 21 மற்றும் 22 தேதிகளில் சென்னையில் உள்ள ஷ்ரைன் வேளாங்கண்ணி பள்ளியிலும் ,ஜூன் 28 மற்றும் 29 தேதிகளில் திருச்சி கே.கே. நகரில் உள்ள ஆல்பா விஸ்டம் பள்ளியிலும் நடைபெறுகிறது .

இதில் வயது வரம்பின்றி ஆண்களும் ,பெண்களும் கலந்து கொள்ளலாம் .எனவே நடிப்பு திறமை உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் .

மீண்டும் சினிமாவுக்கே வருகிறார் சிரஞ்சீவி : சிறந்த கதைக்கு 1 கோடி !!

காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் மீண்டும் நடிக்கவே வருகிறார் ஆந்திராவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி .

யாருடைய ஆதரவும் இன்றி சினிமாவில் சிறந்த நடிகன் ஆனவர் .இவரது தம்பி பவன் கல்யான் ,மகன் ராம்சரண் ,மைந்துனர் மகன் அல்லு அர்ஜுன் என இவரது குடும்பமே சினமாவை ஆண்டவர்கள் .

பிறகு தனியாக கட்சி ஆரம்பித்து மத்திய அமைச்சராக இருந்தவர் .இப்போது மீண்டும் சினிமாவுக்கே திரும்புகிறார் .இதுவரை 149 படங்களில் நடித்து உள்ளார் .இவரது 150வது படம் சிறந்த கதை அம்சம் உள்ளதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் .அதனால் சிறந்த கதை கொண்டு வரும் கதையாசிரியருக்கு 1 கோடி தருவதாக கூறி உள்ளார் .

மோடி அரசின் முதல் கசப்பு மருந்து : ரயில் கட்டணம் 14.2. % உயர்வு !!

மோடி அரசு இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டது .ரயில்வே கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள் .

பயணிகள் ரயில் கட்டணத்தை 14.2 சதவீதமாகவும் ,சரக்கு ரயில் கட்டணம் 6 சதவீதமும் உயர்ந்து உள்ளது .எதிர்பார்த்தது போலவே ரயில்வே பட்ஜெட்டிற்கு முன்பாகவே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது .

இது இன்று முதல் அமலுக்கு வந்தது .முன்பதிவு செய்தோர் பயணத்தின் போது கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும் .இதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு இருக்கும் ,ஆனால் இது தவிர்க்க முடியாதது .இலவசங்களை மட்டும் தருவது அல்ல நல்ல அரசு .தேவையான சமையங்களில் சில சவாலான முடிவுகளையும் எடுப்பதும் தான் நல்ல அரசு .மருந்து கசப்பாக இருந்தாலும் உடல்நலத்திற்காக எடுத்துக்கொண்டு தான் ஆக வேண்டும் .இருந்தாலும் மோடி அரசு கட்டண உயர்வோடு நிறுத்தி கொள்ளாமல் ரயில்களின் தரத்தையும் உயர்த்த வேண்டும் .

கரப்பான் பூச்சியுடன் வாழும் சீன பெண் !!

சீன நாட்டில் உள்ள பெய்ஜிங் நகரத்தில் வசிப்பவர் யுவான் மெக்ஸ்யா .இவருக்கு 37 வயதாகிறது .இவர் மருத்துவ பணியாளர் .

அவரது வீட்டை பண்ணையாக மாற்றி கரப்பான் பூச்சிகளை வளர்த்து வருகிறார் .இவற்றை சீன மருந்துகளில் மூல பொருள்களாக பயன்படுத்துகிறார்கள் .இவற்றை வளர்த்து தண்ணீரில் மூழ்கி சாவடித்து பின் வெயிலில் உலர வைக்கிறார் .அதனை கிலோ ரூபாய். 5900 என்று விற்று வருகிறார் .

கரப்பான் பூச்சிகளை பார்த்தால் அஞ்சி நடுங்கும் மக்கள் மத்தியில் அவற்றுடன் வாழும் இந்த பெண்ணுக்கு பாராட்டுகள் .



உலக கோப்பை கால்பந்து போட்டி பார்த்து 21 பேர் பலி !!

நைஜீரியாவில் பெரிய திரைகளில் பிரேசில்- மெக்சிகோ அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியை பார்த்து வந்தார்கள் .

அப்போது அங்கு நின்று இருந்த ரிக்சாவில் இருந்து குண்டு வெடித்தது .இதனால் அங்கு போட்டியை கண்டு ரசித்து கொண்டு இருந்த 21 பேர் பலியாகினர் ,27க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர் .இதனை ஒரு தீவரவாத அமைப்பு நடத்தியதாக ஒத்து கொண்டு உள்ளது .


இது கால்பந்து ரசிகர்களிடியே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .அவர்களுக்கு அரசு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து உள்ளது .

தந்தையைப் போல மகளும் ஐஐடி யில் சேர்ந்தார் .. !!!

இந்தியாவின் பொறியியல் படிப்பிற்கான கடினமான தேர்வுகளில் ஒன்றான ஜெஇஇ தேர்வின் முடிவுகள் வெளி வந்தன .



அந்த தேர்வில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா எழுதி இருந்தார் . இந்த தேர்வில் இந்தியா அளவில் 3,322 வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார் . போர்ட் தேர்விலும் 96 சதவீதம் எடுத்து இருந்தார் .

இவருடைய தந்தை அரவிந்த் கெஜ்ரிவாலும் ஐ.ஐ.டி யில் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .  ஹர்ஷிதா விற்கு ஒரு தம்பியும் உண்டு . அவர் பெயர் புல்கிட் . இருவரும் தந்தையின் அரசியல் பிரவேசத்தால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் நன்றாக படித்து வருகிறார்கள் .



ஹர்ஷிதா ஜெஇஇ தேர்வு எழுதும் போது அவருடைய தந்தை கெஜ்ரிவால் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ...

ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணம் 40 சதவீதம் அதிகரிப்பு !!

ஸ்விஸ் வங்கி ஒரு தகவலை நேற்று வெளியிட்டது .அதில் அங்கு உள்ள இந்தியர்களின் பணம் 40 சதவீதம் அதிகரித்து உள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன . ஸ்விஸ் பேங்கில் உள்ள இந்தியர்களின் பண மதிப்பு 14,000 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது .

அங்கு உள்ள கருப்பு பணத்தை மீட்க நமது அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்த தகவல் நமக்கு கவலையளிகிறது .இப்போது அங்கு உள்ள இந்தியர்களின் பணம் சுமார் 14 ஆயிரம் கோடி .

மற்ற நாடுகளின் பணம் இங்கு குறைந்து வரும் நிலையில் இந்தியர்களின் பணம் மட்டும் உயர்ந்து வருகிறது .வாடிக்கையாளரின் ரகசியங்களை பாதுகாக்கும் கொள்கை கொண்டது ஸ்விஸ் வங்கி .இந்தியாவில் இது கருப்பு பணம் என்கிற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரித்து வருகிறது .கருப்பு பணத்தை மீட்பதாக மோடி அரசு வாக்குறுதி அளித்து இருந்தது .ஆனால் இன்னும் எந்த வேகமும் காட்டவில்லை .

ஒபாமாவின் மகளுக்கு பிரபல இயக்குநருடன் பணியாற்ற வாய்ப்பு !!

ஹாலிவுட் படங்களை தொடர்ந்து பார்ப்பவர்கள் அனைவரும் அறிந்த ஒரு பெயர் ஸ்டிபன் ஸ்பீல்பெர்க் . இவர் உலக புகழ்பெற்ற படங்களான ஜூராசிக் பார்க் , ஜாவ்ஸ் , லிங்கன் , இந்தியனா ஜோன்ஸ் போன்றவற்றை இயக்கியுள்ளார் . அடுத்து அமெரிக்க தொலைக்காட்சியான ஏ.பி.எஸ் என்னும் தொலைக்காட்சிக்காக “தி எஃஸ்டான்ட்” என்னும் அறிவியல் தொடரை இயக்க உள்ளார் .   


அமெரிக்க அதிபர் ஓபாமாவின் மூத்த மகள் மாலியா ஒபாமா . இவருக்கு இப்போது 15 வயது ஆகிறது . தன்னுடைய கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க விரும்புவதால் ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் ஸ்டிபன் ஸ்பீல்பெர்க் அவர்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் .  ஸ்பீல்பெர்க் இயக்க உள்ள “தி எஃஸ்டான்ட்” என்னும் அறிவியல் தொடரில் மாலியா ஓபாமா பணியாற்ற உள்ளார் .

புதிதாக கண்டுபிடித்த உயிரினத்துக்கு இந்திய விஞ்ஞானியின் பெயர் வைத்து மரியாதை செய்தனர் !!

பம்பாய் இயற்கை வரலாறு சங்கத்தில் மூத்த விஞ்ஞானி ஆக இருப்பவர் வரத் பி கிரி . இவர் கடந்த ஆண்டு மஹாரஷ்ட்ரா மாநிலத்தின் மலைப் பகுதிகளில் இருந்து பல்லி இனத்தைச் சேர்ந்த புதிய வகை உயிரினத்தைக் கண்டறிந்தார் .

இந்த உயிரினத்தை இவர் கண்டுபிடித்ததால் அந்த உயிரினத்திற்கு செனாமஸ்பிஸ் கிரி என்று பெயரிட்டுள்ளனர் . இந்த விலங்கு செனாமஸ்பிஸ் என்னும் குடும்பத்தைச் சார்ந்ததால் செனாமஸ்பிஸ் என்றும் அதை கண்டறிந்தவர் கிரி என்பதால் கிரி என்றும் பெயரிட்டுள்ளனர் .

இந்த விலங்கை சென்ற வருடம் நான்கு இள மாணவர்கள் கண்டு பிடித்தனர் . இந்த நான்கு மாணவர்களின் குரு வரத் பி கிரி தான் . மாணவர்கள் தங்கள் குருவை கௌரவப்படுத்துவதற்காக தங்களின் கண்டு பிடிப்பிற்கு குருவின் பெயரை சூட்டுயுள்ளனர் .

ஏற்கனவே  வரத் பி கிரி அவர்களின் பெயரில் ஒரு பாம்பு இனத்தைச் சேர்ந்த உயிரினம் உள்ளது !!

டிவிட்டரில் இணைந்தது மத்திய உள்துறை அமைச்சகம் !!

மத்திய உள்துறை அமைச்சகம் டிவிட்டர் வலைத்தளத்தில் @HMOIndia  என்ற புதிய முகவரியை தொடங்கி உள்ளது .

வெளிப்படையான மற்றும் பொறுப்பாக அரசு செயல்பட ஒவ்வொரு துறை அமைச்சர்களும் தங்களுக்கு என பேஸ்புக் மற்றும் டிவிட்டர் கணக்குகளை தொடங்க வேண்டும் என்று மோடி கூறீ  இருந்தார் .அதனை தொடர்ந்து உள்துறை அமைச்சகம் இந்த கணக்கை தொடங்கி உள்ளது .இதனை தொடங்கிய முதல் நாளிலையே இதனை பின்பற்றுவர்கள் எண்ணிக்கை 7000 ஐ தாண்டியது.

இதில் அந்த துறையின் செயல்திட்டங்கள் ,கொள்கை  முடிவுகள் மக்களுக்கு தெரிவிக்கப்படும் .அவர்கள் முதல் பதிவாக 'இந்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ டிவிட்டர் முகவரிக்கு நல்வரவு 'என்று பதிவு செய்தனர் .

பங்களாதேஷ் வீரரின் மனைவியை கிண்டல் செய்தவர் கைது !!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹாசன் . தற்போது நடந்து முடிந்த இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றார் .



ஜூன் 15 ஆம் தேதி நடந்த போட்டியைப் பார்க்க இவர்து மனைவி வருகை தந்து  இருந்தார் . அந்த போட்டியின் போது ரவுடிகள் சிலர் அவரது மனைவியை கிண்டல் செய்தனர் .

அதனால்  ஷகிப் அல் ஹாசன் போலிசாரிடம் பூகார் கொடுத்தார் . இவர் அளித்த பூகாரின் பேரில் குற்றவாளிகளை கைது செய்தனர் . குற்றவாளியில் ஒருவன் பிரபல வணிகரின் மகன் கைதானார் .


பத்ஜெட் எப்போது ??

2014-15 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஜூலை 11 ஆம் தேதி தாக்கல் செய்வார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் ஜூலை 7 ஆம் தேதி தொடங்கும் என்றும் ரயில்வே பட்ஜெட் ஜூலை 9
ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது .நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் முதல் பட்ஜெட் இதுவாகும் .


மோடி அரசின் முக்கிய கொள்கை விளக்க ஆவணமாகவும் இது இருக்கும் .இதற்கான ஆலோசனைகளை நிதி அமைச்சர் ஏற்கனவே தொடங்கி விட்டார் .விலைவாசி உயர்வு ,பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளார் .அரசுக்கு அதிக செலவை ஏற்படுத்தும் மானியங்களை குறைப்பது தொடர்பான அம்சங்கள் முக்கிய இடம்பெறும் என கூறபடுகிறது.

ஈராக் நாட்டிற்கு படைகளை அனுப்பினார் ஒபாமா !!


ஈராக்கில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டு இருக்கிறது . தீவிரவாதிகளின் கை ஓங்கி இருக்கிறது . ஈராக்கின் அதிகாரிகள் அமெரிக்காவை வான்வெளி தாக்குதல் நடத்த வேண்டும் என ஈராக் வேண்டுகோள் விடுத்து இருந்தனர் . இதனை அடுத்து அமெரிக்காவில் முக்கிய அமைச்சர்களுடன் ரகசிய சந்திப்பு நடந்தது .

இதனையடுத்து நேற்று ஓபாமா தெரிவிக்கையில் , " 300 ராணுவ ஆலோசகர்களை ஈராக்கிற்கு அனுப்ப உள்ளோம் . எங்களுடைய் எண்ணம் , ஈராக்கில் நடைபெற உள்ள உள்நாட்டுப் போரை தடுப்பதாகும் . ஈராக் நிலை குலைந்து விட்டால் , எங்களின் எதிர்கள் இதை சாதகமாக்கிக் கொண்டு எங்களை தாக்க நேரும் . ஆனால் நாங்கள் இப்போது அங்கே சண்டையிட செல்லவில்லை " என்றார்


மேற்கு வங்களத்தில் வண்டிகளின் மேல் சிவப்பு விளக்கு பயன்படுத்த தடை !!

சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி , மேற்கு வங்கள அரசு சிவப்பு விளக்குகள் பயன்படுத்துவதை 80 சதவீதம் குறைக்க , சிவப்பு விளக்கை பயன்படுத்த அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .

சிவப்பு விளக்குகளை பயன்படுத்த முதலைமைச்சர் , தலைமை நீதிபதி உள்ளீட்ட ஏழு அதிகாரிகள் மட்டுமே சிவப்பு விளக்கு பயன்படுத்த வேண்டும் . மற்றவர்கள் நீல நிற விளக்கை பயன்படுத்தலாம் . நீல நிற விளக்குகள் பயன்படுத்தலாம் ஆனால் அதில் பிளாஷ் இருக்க கூடாது .

மேலும் மற்ற மாநிலங்களில் உள்ள அதிகாரிகள் மேற்கு வங்களம் சென்றாலும் இதே நியமனங்களைப் பின்பற்ற வேண்டும் .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media