BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 21 May 2013

FLASH NEWS: புனே வாரியர்ஸ் ஐபிஎல் லிருந்து விலகல்.

ஸ்பாட் பிக்சிங் என்று ஸ்ரீசாந்த் உட்பட 3 ஆட்டகாரர்கள் கைது, மாடல் அழகிகளுடன் விடிய விடிய கூத்து என்று போய் கொண்டிருக்கும் ஐபிஎல்லில் புதிய திருப்பமாக புனே வாரியர்ஸ் அணி ஐபிஎல் லை விட்டு விலகியுள்ளது.

இந்த அணி  பேங்க் காரன்டி தவனை பணம் கட்டாததால் பிசிசிஐ எடுத்து கொண்டது. சஹாரா நிறுவனம்  10 ஆண்டுகளுக்கு 1702 கோடிக்கு புனே வாரியர்ஸ்சை வாங்கியிருந்தது

Pune Warriors India withdraw from IPL Indian Premier League

மரக்காணம் கலவரத்தில் கொல்லப்பட்ட இருவர் குடும்பத்திற்கும் தலா ரூபாய் 3 லட்சம் நிதி வழங்குகிறது பாமக. - அன்புமணி அறிவிப்பு

மரக்காணம் கலவரத்தில் கொல்லப்பட்ட இருவர் குடும்பத்திற்கும் தலா ரூபாய் 3 லட்சம் நிதி வழங்குகிறது பாமக. - அன்புமணி அறிவிப்பு

மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவில் பங்கேற்கச் சென்றவர்களுக்கும் தலித் மக்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது, இதில் இரண்டு வன்னியர்கள் கொல்லப்பட்டனர் மேலும் பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதில் தீயிட்டு கொளுத்தப்பட்ட வீடுகளுக்கு அரசு இழப்பீடு வழங்கியது ஆனால் கொல்லப்பட்ட இரண்டு குடும்பங்களுக்கும் அரசு எந்த நிவாரண உதவியும் வழங்கவில்லை.

இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி கொல்லப்பட்ட கட்சி தொண்டர்கள் இருவர் குடும்பத்திற்கும் தலா 3 இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்போவதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் அ.தி.மு.க. அரசால் பழி வாங்கும் நோக்குடன் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த 89 பேர் இதுவரை குண்டர் சட்டத்திலும், தேசியப்பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலை செய்யப்படும் வரை இவர்களின் குடும்பத்திற்கான நிதி மற்றும் பொருள் உதவிகளை கட்சி வழங்கும். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் சட்ட உதவி வழங்குதல் மற்றும் அதற்கான அனைத்துச் செலவுகளையும் பாட்டாளி மக்கள் கட்சியே ஏற்றுக் கொள்ளும் என்று அறிக்கையில் டாக்டர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

#தொண்டர்களை கட்சி கைவிட்டால் கட்சியை தொண்டர்கள் கைவிட்டு விடுவார்கள் என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்து வைத்துள்ளார் போல சின்ன டாக்டர்

ஐ-கேட் சிஈஓ பனீஷ் மூர்த்தி அதிரடி நீக்கம், பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் போர்ட் நடவடிக்கை.

ஐ-கேட் சிஈஓ பனீஷ் மூர்த்தி அதிரடி நீக்கம், பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் போர்ட் நடவடிக்கை.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரியாக இருந்த பனீஷ் மூர்த்தி பாலியல் அத்துமீறல் விவகாரத்தில் 2002ல் இன்ஃப்சிஸ்லிருந்து விலக நேரிட்டது, அதன் பின் அவர் ஐ-கேட் நிறுவனத்தி சிஈஓவாக சேர்ந்தார். தற்போது ஐ-கேட் நிறுவனத்தின் போர்ட் தனியாக நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

#சிஈஓவா சேரும்போதே குற்றச்சாட்டு இருந்தது, இப்போ போய் நடவடிக்கை எடுக்க இதில் என்ன உள்குத்தோ.

பிரியாணிக்கு ஆசைப்பட்டு வாந்தி பேதி புடுங்கிருச்சே - திமுக ஆலோசனை கூட்டத்தில் நடந்த கொடுமை

பிரியாணிக்கு ஆசைப்பட்டு வாந்தி பேதி புடுங்கிருச்சே.

ஈரோட்டில் நடந்த திமுக ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கப்பட்ட கோழி பிரியாணியை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. இதையடுத்து 82 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம் பவானி அருகே உள்ள பெருமாள் மலையில் நேற்று நடைபெற்றது, இதில் அதிரடி புகழ் முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பி. ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர், இதில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன , இதை எடுத்துச் சென்று மாலை மற்றும் இரவு நேரத்தில் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்ட 82 திமுகவினர் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

#தொண்டர்களுக்கு கடசியில் மிஞ்சுவதே இந்த பிரியாணி லெக்பீஸ்சும் குவார்ட்டரும் தான், அதைக்கூட நல்லதா போட முடியவில்லையா?

ஐபிஎல்லை தடை செய்யாதாம் சொல்வது உச்சநீதிமன்றம்.

கிரிக்கெட் ஜென்டில்மேன்களின் விளையாட்டாக இருக்க வேண்டுமாம், ஐபிஎல்லை தடை செய்யாதாம் சொல்வது உச்சநீதிமன்றம்.

சூதாட்ட புகார் காரணத்தால் மீதம் உள்ள நான்கு ஐபிஎல் ஆட்டங்களையும் நிறுத்த தடை கோரிய வழக்கை டிஸ்மிஸ் செய்தது உச்சநீதிமன்றம், மேலும் உச்ச நீதிமன்றம் கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன்களின் ஆட்டமாக இருக்க வேண்டியதை பிசிசிஐ உறுதிசெய்ய வேண்டும் என்றும் இது தொடர்பான நடவடிக்கைகளை அது எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

பெட்டி, புட்டி, குட்டி புகுந்த விளையாட்டை இன்னும் எப்படி ஜென்டில்மேன்களின் விளையாட்டாக வைத்திருக்க முடியும். ஒரு வேளை ஜட்ஜ் ஷங்கர் பட ஜென்டில்மேனை சொல்றாரோ?
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media