BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 14 August 2013

வேலியே பயிரை மேய்ந்த கதை!..

உத்திரபிரதேசம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள காகெரு கிராமத்தில் வீட்டினில் தனியாக இருந்த 30 வயது பெண் இருந்துள்ளார், அப்பொழுது  தீபக் ரதி மற்றும் விகாஸ் சவுத்ரி என்ற இரண்டு கான்ஸ்டபிள் உள்ளே புகுந்து துப்பாக்கி முனையில் அப்பெண்ணை பலவந்தமாக வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளார்கள் மேலும் அவரது வீட்டில் இருந்த நகை, பணம் ஆகியவற்றையும் திருடி எடுத்து வைத்து கொண்டார்கள்.

இதை செய்தது நாங்கள் தான் என வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்றும், காவல்துறையில் இருக்கும் எங்களை யாராலும் ஒன்றும் செய்து விட முடியாது என்றும் மிரட்டி சென்றுள்ளனர், ஆகினும் அப்பெண் மற்றும் அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் செய்தனர், அந்த இரண்டு காவல்துறையினர் மீது வன்புணர்வு, கொலைமிரட்டல், ஆயுதம் காட்டி மிரட்டுதல், கொள்ளை போன்ற பல வழக்குகள் பதிவு செய்துள்ளது காவல்துறை.

இச்சம்பவம் பக்கத்து கிராம பகுதிகளுக்கும் தெரியவந்ததால் அனைவரும் திரண்டு வந்து அந்த இரு காவலருக்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர், உதவி ஆணையர் உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

# இவனுங்க எதுக்கு போலிஸ்ல சேர்ந்தானுங்க, அரசியலுக்கு போயிருக்கலாம்ல


நடிகர் விஜயின் பணிவான வீடியோ பேச்சு.......

தலைவான்னு பேரு வச்சதில் இருந்தே ஆரம்பித்துவிட்டது சர்ச்சை, விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு அவரது தந்தை எடுத்து வைக்கும் படிகட்டுகளுல் ஒன்றாக தான் இதுவும் இருக்கும் என்று நினைத்தார்களோ என்னவோ விஜயின் பிறந்தநாள் நடத்த இருந்த இடத்தை தரமுடியாது என மறுத்து விஜய்க்கு இவ்வருடத்தின் முதல் அதிர்ச்சியூட்டினர்.

படம் திரையிடப்படும் திரையரங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது தான் திரையரங்க உரிமையாளர்கள் தலைவா படத்தை வெளியிட மறுத்ததன் காரணம் என முதலில் அறியபட்டாலும், கேளிக்கை வரி சலுகை கிடைக்காமல் போனதால் வசூலில் 28% கேளிக்கை வரிக்காக கொடுக்க வேண்டியிருக்கும் அதனால் போட்ட முதலை கூட எடுக்க முடியாது என தமிழக தியேட்டர் அதிபர்கள் தயங்குவதாலும் படம் வெளியாகவில்லை என்று தகவலும் வந்தது.

அதே நேரம் படத்தில் ” முதலில் பெத்த அம்மாவை பாருடா, அப்புறம் மத்த அம்மாவை பார்க்கலாம்: என்ற சர்ச்சைக்குறிய வசனம் இருந்ததாகவும், இதுகுறித்து உளவுதுறையின் மூலம் செய்தி முதல்வர் காதுக்கு போய் படத்துக்கு எவ்வகையில் இடையூறு செய்ய முடியுமோ அதை செய்யுங்கள் என்று சொன்னதாகவும் எதிர் கட்சிகள் அரசியல் செய்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று வெளி வந்த வீடியோ பேச்சு ஒன்றில் விஜய் அதிமுக அடிப்படை தொண்டரை போலயே பேசியுள்ளார்.
அடையாளம் தெரியாத சிலரின் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக படம் வெளியாவது தடைபட்டிருக்கிறது, உங்களை போலவே நானும் ஒவ்வொரு நாளும் படம் வெளியாகிவிடும் என எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன், எனது மற்ற படங்கள் வெகு சிறப்பாக வந்திருந்தாலும் அதை பற்றி நான் எங்கேயும் பேசியதில்லை. இப்படம் வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வெளியாகி சூப்பர், டூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் அம்மா சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார், அவர் மீது என்றும் எனது மதிப்பும், மரியாதையும் குறையாது, அம்மா அவர்களை சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்டிருக்கிறேன், சுதந்திரதின விழா ஏற்பாடுகளில் இருப்பதால் இன்னும் இரண்டொரு நாளில் சந்திப்போம் என நம்புகிறேன், அம்மா அவர்கள் மனசு வைத்தால் இந்த பிரச்சனைக்கு ஒரு சுமூக முடிவு கிடைக்கும். எப்படியும் இன்னும் சில தினங்களில் படம் வெளியாகிவிடும் என்பதால் யாரும் திருட்டு டி.வி.டியில் பார்த்து அதை ஊக்குவிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

விஸ்வரூம் படம் தியேட்டரில் வெளியாவதற்கு முன்னரே டிடிஹெச் மூலம் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகும் என அறிவித்ததால் தியேட்டர் அதிபர்கள் வெளியிட மறுத்தார்கள், அதன் பின் இஸ்லாமிய அமைப்புகள் அவர்களை இழிவு படுத்துவது போல் காட்சிகள் இருப்பதாக கூறி தடை வாங்கியது, அதற்கு தமிழக முதல்வரே காரணம் என பேசப்பட்டது, ஒருசாரர் ஜெயா டீவியில் விஸ்வரூபம் படத்தின் உரிமம் கிடைக்காமல் அரசியல் செய்கிறார்கள் என சொல்ல, ஜெயா டீவிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா பேட்டி அளித்தார்.

அநேகமாக தலைவா படத்தின் மூலம் இன்னும் எதில் எதில் எல்லாம் ஜெயலலிதா சம்பந்தபடாமல் இருக்கிறார் என தெரியவர வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் நகைச்சுவையாக சொல்லி வருகின்றனர்.

உமா சங்கர் ஐ.ஏ.எஸ். - நீங்க நல்லவரா, கெட்டவரா?

பொதுவாக ஜாதக நம்பிக்கை உள்ளவர்கள் ஒரு மனிதனுக்கு 30 வருடத்திற்கு ஒருமுறை தான் ஏழரை வரும் என்பார்கள் ஆனா உமாசங்கர் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு ஒவ்வொரு ஆட்சி மாற்றத்திலும் ஏழரை ஆரம்பித்து விடுகிறது இம்முறை கொஞ்சம் தாமதமாக அதாவது சென்ற ஆண்டு செம்டம்பர் மாதம் பேசியதற்கு இப்பொழுது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

42 வயதாகும் உமாசங்கர் திருநெல்வேலியை சேர்ந்தவர். ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவதற்கு முன்பு தேசியமயமாக்கபட்ட மூன்று வங்கிகளில் பணி புரிந்தவர். 1990 ல் ஐ.ஏ.எஸ் முடித்த உமாசங்கர் 1992 ல் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உதவி கலைக்டராக நியமிக்கபட்டார்.

சுடுகாட்டு ஊழல் வெளிவந்த பொழுது செல்வகணபதிக்கு கொடுத்த குடைச்சல் காரணமாக முதன் முதலாக இவருக்கும் அதிமுகவிற்கும் புகைச்சல் ஆரம்பித்தது. ஆனால் மீண்டும் 1995 ல் திமுக ஆட்சியில் உமாசங்கர் கருணாநிதியின் சொந்த ஊரில் கலைக்டராக நியமிக்கபட்டார்.

இவரது அதிரடி நடவடிக்கைகள் சில இவரின் பால் நேர்மையான அதிகாரி என்றே பெயர் வாங்கி தந்துள்ளது இதுவரை, கல்விதுறையில் நடந்த முக்கியமான ஊழல் ஒன்றை வெளிகாட்டியதின் மூலம் 2001 ல் மீண்டும் அதிமுக ஆட்சியில் மாற்றம் செய்யபட்டார்,  அங்கேயும் நடந்த ஊழலை வெளிச்சம் போட்டு காட்டினார்.

2008 ஆம் ஆண்டு அரசு கேபிளுக்கு நிர்வாக அதிகாரியாக நியமிக்கபட்டார், அப்பொழுது ஆளுங்கட்சி ஆதரவில் செயல்பட்டு வந்த சுமங்கலி கேபிள் விஷன் அத்துமீறி செயல்படுவதை சுட்டிக்காட்டி அரசுக்கு கடிதம் எழுதினார், அந்த நேரங்களில் தயாநிதி மாறனுடன் பிணக்கு ஏற்பட உமாசங்கரும் ஒரு காரணம் என பேசப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக எந்த துறையில் இருக்கிறார் என வெளியே தெரியாத அளவுக்கு இருந்த உமாசங்கரை  மீண்டும் இந்து அமைப்புகள் வெளிக்கொண்டு வந்துவிட்டன, சென்ற வருடம் செம்டம்பர் மாதம் 15 ஆம் தேதி சேலம் ஆத்தூர் பகுதியில் கிறிஸ்துவ அமைப்பு ஒன்றிற்காக பேசிய உமாசங்கர் யாரும் ஜாதகம் பார்க்காதிற்கள், ராகு காலம், கெட்ட நேரம் இருக்கும் நாட்காட்டிகளை தீயிட்டு கொழுத்துங்கள் என பேசியதாக தெரிகிறது.

இந்துத்துவா அமைப்புகள் இந்த பேச்சு எங்கள் நம்பிக்கையை கேலி செய்வது போலவும், எங்களை புண்படுத்துவது போல் உள்ளதாகவும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது, உமாசங்கர் தரப்போ தாம் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தான் பேசியதாகவும், தாம் எப்போதும் பிற மதங்களை கேவலமாக பேசியது இல்லை என்றும் கூறி வருகிறது.

# நல்ல நேரம் பார்த்து வழக்கு போட்ருக்காங்க போல


அடங்காத பாகிஸ்தான்!

பாகிஸ்தானை சேர்ந்த இணையதளம் ஒன்று இந்தியாவை மிகவும் கேவலமாக சித்திரிக்கும் வகையில் ஒரு கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மறந்து இந்திய வீரர்கள் ஐந்து பேரை கொன்றதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து எல்லை பகுதியில் பதட்டம் ஏற்படும் வகையில் துப்பாக்கி சூடு நடத்தி கொண்டு தான் இருக்கிறது.

பாராளுமன்ற எதிர்கட்சிகள் தொடர்ந்து கொடுத்து வரும் நெருக்கடியின் பேரில் இந்தியஅரசு, பாகீஸ்தான் அரசுடன் பேசியே ஆக வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது, பாகிஸ்தான் பிரதமர் தமது அறிக்கையில் தாம் இந்தியாவின் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக சொன்னாலும் அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை, இந்தியா தரப்பில் பேச இருப்பவர்கள் பேச்சை ஒரு பொது இடத்தில் வைத்து பேச வேண்டும் என்று கூறிய அறிக்கை இந்தியா பயந்து போய் உள்ளது என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளது, அதை தொடர்ந்து பாகிஸ்தான் இணையத்தளம் ஒன்று வெளியிட்ட கேலிச்சித்திரம் இந்தியாவை கேவலமாக சித்திரிப்பது போல் இருந்தது.


ஜெயலலிதாவை சந்திக்கிறார் பண்ருட்டியார்!

தே.மு.தி.க கட்சியின் மூத்த தலைவரான பண்ருட்டி ராமசந்திரன் இன்று தமிழக முதல் ஜெயலலிதாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயகாந்த் கட்சி ஆடம்பித்த பொழுது அதிமுகவில் இருந்த மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமசந்திரன் விஜயாகாந்த் கட்சியில் சேர்ந்தர்.

அவரது அனுபவம் விஜயகாந்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்தது. கட்சி ஆரம்பித்து சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் தோல்வி அடைய விஜயகாந்த் மட்டும் வெற்றியடைந்தார். அந்த தேர்தலில் தேமுதிக கட்சி வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க வில்லை என்பது குறிப்பிடதக்கது.

சென்ற தேர்தலுக்கு முன்பு வரை நாங்கள் எப்போதும் மக்கள் கூட்டணி என சொல்லி வந்த விஜயகாந்த் தேர்தல் நெருங்கும் நேரத்தில் எங்கள் கொள்கைகளுடன் உடன்படுபவர்களுடன் கூட்டணி வைத்து கொள்வோம் என அறிவித்தார். தினம் குடித்து விட்டு சட்டமன்றம் வருகிறார் என ஜெயலலிதாவாலயே விமர்சிக்கபட்ட விஜயகாந்த் சென்ற சட்டமன்ற தேர்தலில் அவருடனே கூட்டணி வைத்தார். அந்த கூட்டணிக்கு பெரிதும் பாலமாக இருந்தது பண்ருட்டி ராமசந்திரன் தான் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

29 தொகுதியில் வெற்றி பெற்ற தேமுதிக, எதிர்கட்சியாக சட்டசபைக்குள் நுழைந்தது, அடுத்து வந்த உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்று எதிர்பார்த்த விஜயகாந்த் அனைத்து இடங்களிலும் அதிமுக தனித்து நிற்கும் என அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கவில்லை. தாம் கூட்டணியில் இல்லை என்பது அப்போது தான் அவருக்கு தெளிவானது.

மேலும் அவரது கட்சியிலிருந்து ஏழு எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டுக்காக முதல்வரை சந்தித்தோம் என்று ஜெயலலிதாவை வரிசையாக சந்திக்க அவர்கள் அறிவிக்கப்படாத அதிமுக எம்.எல்.ஏ ஆகினர். சில தினங்களுக்கு முன் நடந்த மாநிலங்களவை தேர்தலில் தமது வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும் என நம்பிய விஜயகாந்த் அதிலும் ஏமாற்றப்பட்டார்.

காங்கிரஸ், திமுகாவுக்கு ஆதரவளித்தது அறிவிக்கபடாத கூட்டணியாகவே தெரிந்தது, திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பாத விஜயகாந்த் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடுவார் எனவே பலராலும் பேசப்பட்டது, இந்நிலையில் இன்று தேமுதிக வை சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது கட்சி சார்ந்த சந்திப்பா அல்லது மரியாதை நிமித்தமான சந்திப்பா என இப்பொழுது வரை எந்த அறிவிப்பும் வரவில்லை. ஒருவேளை இவரும் அறிவிக்கபடாத அதிமுக எம்.எல்.ஏ ஆகபோகிறாரா என பலர் ஆர்வத்துடம் தமிழக அரசியலை கவனித்து வருகின்றனர்.


சவுதியில் இருக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை.

திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்பது நல்ல சொலவடை தான். ஆனால் திரவியம் தேடி என்ற இடம் நமது உயிருக்கும், உடைமைக்கும் பாதுகப்பற்ற இடம் என்றால் என்ன செய்வது? அந்த மாதிரியா சூழல் தற்போது நிலவி வரும் இடம் தான் சவுதி அரேபியா. இது குறித்து நேற்றே ஒரு செய்தியை தந்திருந்தோம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சவுதியில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு எந்த வித சங்கடங்களும் இல்லாமல் தான் இருந்தது, வளர்ந்த நாடான அமெரிக்கா அவுட் சோர்சிங் முறையை கட்டுக்குள் கொண்டு வர எடுத்த சில நடவடிக்கைகள் தொடர்ந்து மற்ற நாடுகளும் அதை கையில் எடுக்க ஆரம்பித்தன. இந்தியர்கள் அதிகமாக வேலை செய்யும் சவுதி அரேபியாவும் அதில் ஒன்று.

பாதுகாப்பின்மை, கடுமையான சட்ட திருத்தங்கள், வேலை செய்யும் இடத்தில் அவமானங்கள் என தாயகத்திற்கு திரும்பும் மனநிலையில் சுமார் 27000 தமிழர்கள் அங்கே சிக்கி உள்ளனர், அவர்களை மீட்க சில சமூக அமைப்புகள் போராடி வந்தாலும் இந்தியா அதற்கு உறுதுணையாக இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

இந்நிலையில் சவுதியில் சிக்கியுள்ள சுமார் 27000 தமிழர்களை மீட்கக்கோரி சென்னை உயர்நீதி  மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் அப்துல் ரஹீம் அவர்களின் வ்ழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி நமது நாட்டின் குடிமகனுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டியது நம் நாட்டின் கடமையாகும். அவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அது குறித்து உரிய தகவல்களை மத்திய அரசும், மாநில அரசும் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்

உற்றார் உறவினர்களை பிரிந்து பொருள் ஈட்ட வெளிநாடு சென்று உயிருக்கே பாதுகாப்பில்லாமல் இருக்கும் நமது சகோதர்கள் நல்லபடியாக திரும்பி தாயகம் வரவேண்டும்  என அனைத்து நண்பர்களும் பிரார்த்திப்போம்


ஒரு லட்சம் போலிஸார் பாதுகாப்பில் சுதந்திரதினம்!

சுதந்திரம் என்றாலே நாம் பாதுகாப்பாக இருக்கிறோம், நம்மை தொந்தரவு செய்ய இங்கே யாருமில்லை என்ற அர்த்தத்தில் தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம், ஆனால் சில வருடங்களாகவே சுதந்திரதினம், குடியரசு தினம் என்றால் சோதனை என்ற பெயரில் பொதுமக்கள் பெரும் அவதிகுள்ளாவது அதிகரித்து கொண்டே இருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சம் போலிஸார் பாதுகாப்பிற்காக குவிக்கபட்டுள்ளனர், எந்த அவசர விடுப்பும் அவர்களுக்கு மறுக்கபட்டுவிட்டது, அவர்கள் மட்டுமில்லாது கமாண்டோ படைகள் மற்றும் ரயில்வே போலிஸாரும் தமிழகமெங்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னையில் மட்டும் 14000 போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள், சென்னை விமானநிலையத்தில் கமாண்டோ படையினருடன் சேர்ந்து மீனம்பாக்கம் காவல்நிலையத்தை சேர்ந்த காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எந்த வாகனமும் இரண்டு நிமிடத்திற்கு மேல் விமானநிலைய வாயிலில் நிறுத்த அனுமதிக்கபடவில்லை, பயணிகள் மட்டுமின்றி அவர்களை வழியனுப்ப வரும் உறவினர்களும் சோதனைக்கு உட்படுத்த படுகின்றனர்.

தமிழகத்தில் அனைத்து ரயில்நிலைங்களிலும் காவல்துறை மற்றும் ரயில்வே போலிஸார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், அனைத்து ரயில்நிலைங்களிலும் மோப்பநாய் உதவியுடன் தொடர் சோதனை நடந்து வருகிறது.  இங்கேயும் பயணிகளின் அனைத்து உடமைகளும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது

இந்நிலையில் காஷ்மீர் எல்லை பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற இரண்டு தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் இந்தியாவில் சதி செயல்கள் செய்ய உள்நுழைய முயற்சித்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.


நீர்மூழ்கி கப்பலில் தீ.

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சுந்துரக்‌ஷக் என்ற கப்பல் மும்பை கடற்கரை பகுதியில் பாதுகாப்பு சோதனைகளுக்காக நின்று கொண்டிருந்தது, இன்று அதிகாலை திடீரென்று பெரும் சத்தத்துடன் அது தீ பற்றி எரிந்தது.

கடற்கரையில் இருந்தவர்கள் தகவல் கொடுத்ததின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர், நீர்மூழ்கி கப்பல் மேல்தட்டில் இருந்த நான்கு பேர் கடலில் குதித்து உயிர் தப்பியுள்ளதாக தெரிகிறது, மேலும் நீர்மூழ்கி கப்பலுக்குள் 18 க்கும் மேற்பட்ட கப்பற்படை அதிகாரிகளும் வீரர்களும் இருந்ததாக அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

உயிர் சேதம், பொருட்சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை, இந்த விபத்திற்கு காரணம் நீர்மூழ்கி கப்பலின் உள்கட்டமைப்பில் ஏற்பட்டதா அல்லது நாட்டின் அமைதியை குலைக்க வேறு தீவிரவாத அமைப்புகள் செய்த சதியா என விசாரணை நடந்து வருகிறது.

இதை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு மூன்று கட்டமைப்புகளாக அதிகபடுத்த வேண்டும் என உளவுதுறை எச்சரித்துள்ளது, தமிழகமெங்கும் உள்ள ரயில்நிலைங்கள் மற்றும் பேருந்து நிலைங்களில் தொடர் சோதனை காவல்துறையால் நடந்து கொண்டிருக்கிறது, நாளை இந்தியாவின் 67 வது சுதந்திரநாள் என்பது குறிப்பிடதக்கது.


 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media