மலேசியன் ஏர்லைன்ஸை சேர்ந்த போயிங் 777 என்னும் விமானம் நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டெர்டம் என்னும் ஊரில் இருந்து மலேசியாவில் உள்ள கோலாலம்பூரை நோக்கி சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாரதவிதமாக இந்த விமானத்தில் விபத்து நடந்து உள்ளது. இதில் 280 பயணிகள் மற்றும் விமானத்தில் பணிபுரிபவர்கள் 15 பேர் உள்ளார்கள். இந்த விபத்து உக்ரைனில் நடந்து உள்ளது.
இது ரஷிய எல்லைக்கு 50 கிமீ முன்னாள் நடந்து உள்ளது. நன்றாக சென்று கொண்டு இருந்த விமானம் இங்கு வந்ததும் தாழ்வாக பறந்தது, பின்பு தீப்பிடித்து வெடித்து சிதறியது. இந்த விமானம் ஏதோ ஒரு படையால் சுட்டு தாக்கப்பட்டு உள்ளதை உக்ரைன் அரசு உறுதிபடுத்தி உள்ளது. எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்த எந்த தகவலும் இன்னும் வரவில்லை.