நம்பர் நடிகை மீது தென்னிந்திய திரை உலகத்திற்கு எப்போதுமே ஒரு கிரேஸ் உண்டு, விரல் நடிகருடனான காதல் முறிந்து ரப்பர் டான்சர் கம் இயக்குனருடன் காதலில் மூழ்கி திளைத்து திருமணம் செய்து கொள்ள திரையுலகையே விட்டு விலகினார். டான்சர் நடிகரோ டாட்டா காண்பித்து விட மீண்டும் திரைக்கு வந்த நடிகைக்கு வாய்ப்புகள் குவிந்தன. நடிகை வம்பு நடிகரையும், ரப்பர் டான்சரையும் சீரியசாக தான் காதலித்தார், ஆனால் அவர்கள் தான் நம்பர் நடிகையை கைவிட்டுவிட்டார்கள்.
அரசியல் வாரிசு நடிகர் ஒரு அப்பாவி, பயங்கர சென்ட்டி பார்ட்டி, சின்னப்புள்ள மனசு, மூன்று ஷா நடிகையிடம் காதலில் மூழ்கி திளைத்த போது வீட்டில் கடுமையான எதிர்ப்பு வந்தது, அப்போதும் கோவித்துக்கொண்டு வீட்டுக்கு போகாமால் ஆபிசிலே உண்ணாவிரதம் இருந்து பார்த்தார், அப்போதும் தற்கொலை முயற்சி டகால்ட்டி எல்லாம் செய்து பார்த்தார். இந்த பஞ்சாயத்தை செட்டில் செய்வதற்கே வாரிசின் அப்பாவுக்கு பெரிய வேலை ஆகிப்போனது.
நம்பர் நடிகையுடன் ஒரு படம் நடிக்க ஆரம்பித்த போதே குடும்பத்தினர் பயந்தனர், அடுத்த படமும் நம்பர் நடிகையுடன் என அறிவிப்பு வந்த நேரத்தில் தான் அரசியல் வாரிசு நடிகர் நம்பர் நடிகையுடன் காதலில் மூழ்கி திளைப்பது தெரிய வந்தது. இம்முறை நம்பர் நடிகை உஷாராக தன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு வாரிசை கழற்றிவிட குழந்தை மனசு வாரிசோ தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
குமுதம் ரிப்போர்ட்டரில் நேற்று அட்டை செய்தியாக இதை வெளியிட்டுவிட கமுக்கமாக ஆஸ்பத்திரியில் வைத்து வைத்தியம் பார்த்த செய்தி எப்படி வெளியே போனது என்று நேற்றிலிருந்து விசாரணை நடக்கிறதாம். ஆஸ்பத்திரி ரிப்போர்ட்டை வைத்து உறுதி செய்தே செய்தி வெளியிட்டுள்ளோம் என பத்திரிக்கை தரப்பு கூறுகின்றது, ஆஸ்பத்திரியா? அல்லது உடனிருந்த நான்கு நண்பர்களில் ஒருவரா? யார் இந்த செய்தியை லீக் செய்தது என்று விசாரணை நடத்திக்கொண்டுள்ளார்களாம் குடும்பத்தினர்.