கடந்த சனிக்கிழமை நிருபர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்,"வெங்காய விலை உயர்வு என் வீட்டையும் பாதித்துள்ளது.நான் வெங்காயம் சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டன" என்று கூறினார்.இந்நிலையில் இன்று ஷீலாவை சந்தித்த பிஜேபி தலைவர் விஜய் ஜாலி ஷீலாவுக்கு ஒரு கூடை வெங்காயத்தை பரிசத்தளித்தார்.பின் நிருபர்களிடம் பேசிய விஜய் ஜாலி,"முதல்வர் வெங்காயம் வாங்க முடியாத அளவுக்கு மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதை அறிந்து வருத்தமடைந்தேன்,அதனால் அவருக்கு ஒரு கூடை வெங்காயத்தை தீபாவளி பரிசாக கொடுக்க வந்தேன்" என கிண்டலடித்தார்.
வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய காங்கிரஸ் அரசை குத்தி காண்பிப்தற்காகவே இப்படி நடந்து கொண்டதாக பிஜேபியினர் தெரிவித்தனர்.
# பாஸ் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்........