BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 5 August 2013

இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தீவிரவாதியை போல கைது - லண்டனிலிருந்து நீண்ட மலையாள லாபியின் கைகள்.

இசை அமைப்பாளர், டிவி தொகுப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தீவிரவாதியை போல கைது - லண்டனிலிருந்து நீண்ட மலையாள லாபியின் கைகள்.

கண்கள் இரண்டால், கண்கள் இரண்டால் பாடலை முணு முணுக்காத ஆட்களே இருக்காது, ஜேம்ஸ் வசந்தன் இசை அமைப்பாளராக சுப்ரமணியபுரம், ஈசன், பசங்க  உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார், அது மட்டுமின்றி இயக்குனர் சசிக்குமார் உட்பட பல இளைஞர்களுக்கு சினிமா துறையில் சிறந்த வழிகாட்டியாகவும் இருந்துள்ளார், தற்போது அழகு தமிழில் வார்த்தை விளையாட்டு என்ற நிகழ்ச்சியை விஜய் டிவியில் நடத்தி வருகிறார். நீண்ட காலமாக டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இசை அமைப்பாளராகவும் உள்ள ஒரு பிரபலம் இவர்.
இவரைத்தான் ஒரு தீவிரவாதியை கைது செய்வது போல 40க்கும் மேற்பட்ட போலிஸ்காரர்கள் உள்ளே புகுந்து கைது செய்துள்ளனர், அது மட்டுமின்றி இவரை மீடியாவுடன் பேசவே அனுமதிக்கவில்லை. இவரை போன்ற பிரபலங்களுக்கே இந்த நிலை என்றால் சாதாரண மனிதர்களுக்கு என்ன தான் நிலை? அப்படி என்ன குற்றம் செய்தார் ஜேம்ஸ் வசந்தன் என்றால் ஜேம்ஸ் வசந்தன் மீது ஒரு புகாரை தந்துள்ளார் அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் ராதா வேணுபிரசாத் (65) என்ற மலையாள பெண்மணி சனிக்கிழமை தன்னை ஜேம்ஸ் வசந்தன் ஆபாச சைகை காட்டியதாகவும், ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகக் கூறி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

என்ன வழக்கு என்று கூட சொல்லாமல் தம்மை கைது செய்ததாக ஜேம்ஸ் வசந்தன் செய்தியாளர்களிடம் கூறினார், மேலும் சென்னை போலிஸ் கமிஷனருக்கு இந்த பெண்மணி வேண்டப்பட்டவர் என்பதால் எளிதாக வழக்கு பதிவு செய்து த‌ன்னை கைது செய்துள்ளதாக தெரிவித்தார். ஜேம்ஸ் வசந்தன் வசிக்கும் இடத்தை அருகில் உள்ள பெண்மணி விலைக்கு கேட்டதாகவும் தான் அதை தர மறுத்ததால் தன் அதிகாரத்தை பயன்படுத்தி கைது செய்துள்ளார்கள் என்றும் கூறியுள்ளார், இதில் முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்

ஜேம்ஸ் வசந்தன் மற்றும் அந்த பெண்மணிக்கு  இடையேயான இடம் குறித்து வழக்கு கோர்டில் 3 ஆண்டுகளாக நடைபெறுகிறது. ஜேம்ஸ் வசந்தன் தனது இடத்தில் கட்டிட வேலைகள் மேற்கொண்டதிலிருந்து தகராறு அதிகரித்துள்ளது, பில்டிங்கிலிருந்து தூசி கிளம்புகிறது என்றும் ஆஸ்த்மா பேஷண்டான தனக்கு தொந்தரவாக உள்ளது என்றும் அப்பெண்மணி புகார் அளித்துள்ளார், இது குறித்தும் போலிஸ் தலையிட்டு சமாதானம் செய்துள்ளது, ஜேம்ஸ் வசந்தனும் சில பிளாஸ்டிக் கவர்கள் கொண்டு மூடியுள்ளார்.

ஜேம்ஸ் வசந்தன் மீது புகார் அளித்த பெண்மணியின் மகன் ஒருவர் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் உயர் அதிகாரியாக உள்ளார் என்றும் இடப்பிரச்சினையில் ஜேம்ஸ் வசந்தனுக்கும் இந்த பெண்மணிக்கும் நீண்ட நாட்களாக வாக்குவாதம் இருந்ததும் தெரியவந்துள்ளது, இந்நிலையில் இலண்டனில் உள்ள அவர் தன் மலையாள தொடர்புகளை பயன்படுத்தி இங்கிருக்கும் உயர் அதிகாரியோடு பேசி இந்த மிரட்டல் கைதை செய்துள்ளார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

ஜேம்ஸ் வசந்தன் சினிமா துறையிலும் ஊடக துறையிலும் டீசண்டான ஆள் என்று பெயர் வாங்கியவர், இப்படி பட்ட ஒரு பிரபலத்தை ஆபாசமாக பேசினார் என்ற குற்றச்சாட்டில் சரியான விசாரணைகள் எதுவுமின்றி தீவிரவாதியை போல கைது செய்வதும் அவரை செய்தியாளர்களிடம் கூட பேச விடாமல் செய்ய முடியவும் ஒரு வெளிமாநில லாபியால் செய்ய முடியுமென்றால் அது தமிழகத்தில் மட்டுமே இயலும்.

முன்னாடி 10 தான் இப்போ தனித்து போட்டியிட்டு 15 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம் - அன்புமணி

முன்னாடி 10 தான் இப்போ தனித்து போட்டியிட்டு 15 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம் - அன்புமணி 

நாடாளுமன்ற தேர்தலில் பாமக 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 15 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று அக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

சென்னை மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் மேற்கு மாம்பலத்தில் நேற்று நடைபெற்றது, இதில் பேசிய டாக்டர் அன்புமணி டாக்டர் ராமதாஸ் கைதுக்கு முன்பு 10 தொகுதிகளில்தான் வெற்றிபெறுவோம் என்ற நிலைதான் இருந்தது தற்போது அது அதிகரித்துள்ளது, எனவே நிச்சயம் 15 தொகுதிகளில் வெல்வோம் என்று குறிப்பிட்டார்.

# யாருகிட்ட கேட்குற, நம்ம அண்ணன்கிட்டதானே, கேளு கேளு நல்லா நிறைய கேளு

கேரளத்தை சார்ந்த தமிழக உயர் காவல் துறை அதிகாரிகள் மூலம் என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது - ஜேம்ஸ் வசந்தன்



கேரளத்தை சார்ந்த தமிழக உயர் காவல் துறை அதிகாரிகள் மூலம் என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது - ஜேம்ஸ் வசந்தன்

கண்கள் இரண்டால், கண்கள் இரண்டால் என்ற பாடலுக்கு இசை அமைத்தவரும் தொலைக்கட்சியில் ”ஒரு வார்த்தை ஒரு லட்சம்” என்ற நல்ல தமிழ் செற்கள் நிகழ்ச்சி நடத்துனர் மற்றும் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந் தன் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒரு கேரள பெண்ணை திட்டியதாக கைது செய்யப்பட்டிருந்தார். அதுவும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜேம்ஸ் வசந்த் பேட்டிகெடுக்க விடாமல் காவல் துறை தடுத்தும் அவர் போராடி அளித்த பேட்டி பின் வருமாறு கேரள பெண் அவர் வீட்டை தனக்கு விற்க வற்புறுத்தி பல தொல்லைகள் தருவதாகவும், இதன் தொடர்ச்சியாக கேரளத்தை சார்ந்த தமிழக உயர் காவல் துறை அதிகாரிகள் மூலம் இந்த பொய் வழக்கு என்று கூறியுள்ளர்

# தமிழ்நாட்டில் மட்டும் தான் இப்படி நடக்க முடியும்.

உரிமம் இன்றி ஆசிட் விற்பனை செய்தால் 3 மாதம் சிறை தண்டனை, ரூ.50,000 அபராதம்

உரிமம் இன்றி ஆசிட் விற்பனை செய்தால் 3 மாதம் சிறை தண்டனை, ரூ.50,000 அபராதம்

தகுந்த உரிமம் இன்றி ஆசிட் விற்பனை செய்தால் 3 மாதம் சிறை தண்டனையும் 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. பெண்கள் மீதான ஆசிட் வீச்சு சம்பவங்கள் அதிகரித்ததையடுத்து ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இதைத்தொடந்து மத்திய பிரதேச அரசு ஆசிட் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.

ஆசிட் வாங்குவோர் கடைகளில் தங்கள் அடையாள அட்டையை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒக்கேனேக்கல் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நான்கு பேரில் மூன்று பேர் ஹெலிக்காப்டர் மூலம் மீட்பு, மேலும் ஒருவர் மீட்க பெரும் முயற்சி.

ஒக்கேனேக்கல் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நான்கு பேரில் மூன்று பேர் ஹெலிக்காப்டர் மூலம் மீட்பு, மேலும் ஒருவரை மரத்தை பிடித்து தத்தளிப்பு, மீட்க பெரும் முயற்சி.

ஒக்கேனேக்கல் காட்டாற்று வெள்ளத்தில் நேற்று  மாலை 3 மணி அளவில் சிக்கிய நான்கு பேரில் மூன்று பேர் ஹெலிக்காப்டர் மூலம் மீட்கப்பட்டனர், மேலும் ஒருவர் மரத்தை பிடித்து தத்தளிப்பு, மீட்க பெரும் முயற்சி எடுக்கின்றனர், நேற்று மாலை பரிசல் ஓட்டும் 4 பேர் ஒக்கேனேக்கல் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினார்கள், இவர்கள் பரிசல் ஓட்டுபவர்கள் என்பதால் மட்டுமே இவர்களால் நீண்ட நேரம் உணவு இல்லாமல் தண்ணீரில் வெள்ளத்தில் நம்பிக்கையை கைவிடாமல் மன உறுதியுடன் இருக்கிறார்கள், இதுவே சாதாரண பொது மக்களாக இருந்தால் இந்நேரம் அவர்களை உயிருடன் மீட்க முடியாமல் போயிருக்கும் என்றார்கள்.

# மீதம் உள்ள அந்த ஒரு நபரும் நல்ல படியாக உயிருடன் மீட்கப்பட வேண்டுகிறோம்.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media