BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 22 October 2014

உடம்பை குறைக்க உடலை வருத்திக்காதிங்க



சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலனவர்கள் இன்றைக்கு உடலை குறைப்பதற்காக கூறும் வார்த்தை டயட்டில் இருக்கிறேன் என்பதுதான். டயட் என்றவார்த்தை இப்பொழுது ஒரு பேஷனாகிவிட்டது. ஆனால் டயட் என்ற பெயரில் உடலைபோட்டு வருத்தக்கூடாது என்பதுதான் உணவியல் வல்லுநர்களின் ஆலோசனை. தொப்பை அதிகமாவிட்டதா? குண்டு உடலை குறைக்கவேண்டுமா? நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். உடல் எடை குறைய விரும்புபவர்கள் இரவில் பால் அருந்திவிட்டு உறங்குவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், உணவில் தேங்காய் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது.

குறைந்த கலோரி உணவுகள் : கண்டதையும் சாப்பிட்டு உடலின் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்வதை விட குறைந்த கலோரி உள்ள உணவுகளையே உட்கொள்ளவேண்டும். அதேசமயம் பட்டினி கிடந்து உடலை வருத்த வேண்டாம். இதனால் உடல் பலகீனமடைந்துவிடும். எக்காரணத்தைக் கொண்டும் உணவுகளை தவிர்க்க வேண்டாம் என்பது உணவியல் நிபுணர்களின் அறிவுரை.

பருவநிலை பழங்கள் : தினமும் ஐந்து கப் காய்கறி அல்லது பழம் சாப்பிட வேண்டும். கீரை வகைகள், பீன்ஸ், அவரை போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. அந்தந்த கால நிலைகளில் கிடைக்கும் பழங்கள் காய்கறிகளை தவறாமல் உட்கொள்ளவேண்டும். ஆனால், மாம்பழம், பலாப்பழம், கிழங்கு வகைகளை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.

இஞ்சி சாறு : இஞ்சியை இடித்து சாறு எடுத்து அடுப்பில் ஏற்றி, சாறு சற்று சுண்டியதும் அதில் தேன் விட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும். வாழைத் தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இம்மூன்றில், ஏதாவது ஒன்றை குடித்து வர உடல் எடை குறையும். உடல் அழகு பெறும்.

பலன் தரும் பப்பாளி : முள்ளங்கியை சாம்பார், கூட்டு செய்து உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும். பப்பாளிக் காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பப்பாளிக் காயை கூட்டு, சாம்பார் செய்தும் சாப்பிடலாம்.

உடல் பருமனை தடுக்க : மூன்று நேரமும் அதிக அளவில் உணவை எடுத்துக்கொள்வதை விட ஆறுவேளை குறைந்த அளவு உணவுகளை எடுத்துக்கொள்ளவும். சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தவும். இது அதிக அளவு உணவு எடுத்துக்கொள்வதை தவிர்க்க உதவும். உங்களுக்கு பிடித்த உணவு என்பதற்காக அதிக அளவில் சாப்பிட வேண்டாம். இதுவே உடலை குண்டாக்கும். நாவை கட்டுப்படுத்தினால் உடல் ஆரோக்கியத்தை பேணலாம் என்பதே உணவியல் நிபுணர்களின் அறிவுரையாகும்.

ஆவாரம் பூவின் மருத்துவ குணங்கள்



“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..” என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது.


இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மண்கலயத்தில் போட்டு அரைப்படி நீர் விட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் இரு வேளை 1.5 அவுன்ஸ் வீதம் கொடுத்துவர மேக ஓட்டம் , ரத்த மூத்திரம், பெரும் தாகம் ஆகியவை குணமாகும். பூச்சூரண்த்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன்படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.


மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான். நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம். இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும். இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்



1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு.

தமிழுக்கு உலகம் அளிக்கும் மரியாதையை பாருங்கள்.


தமிழுக்கு உலகம் அளிக்கும் மரியாதையை பாருங்கள். தென் கொரிய தலைகர் சியோலில் உள்ள தொடர் வண்டி நிலையத்தில் 'நன்றி' என உலகத்தின் தொன்மையான மொழிகளில் என அறியப்படும் அனைத்து மொழிகளிலும் எழுத பட்டுள்ளது.அதில் தமிழ் உள்ளதை பாருங்கள்.

கொரியர்களுக்கு நன்கு தெரியும் கொரிய மொழியில் 40 % சொற்கள் தமிழிலிருந்து வந்தவை என்று தமிழ் தான் கொரிய மொழிக்கும் வேர். கொரியர்களின் நாகரீகம் வளர்த்து அவர்களின் முதல் மன்னனாக திகழ்ந்தவன் தமிழத்திலுருந்து வந்தான் என கொரிய வரலாறு கூறுகிறது. ஆதாரம். செம்மொழி மாநாட்டில் கொரிய மொழியியல் மற்றும் வரலாற்று பேராசிரியர் ஒருவர் பேட்டி யூடியுப்பில் உள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வு



வரும் 2015 முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்துக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள 47 நாடுகளில் இந்தியாவும் உறுப்பு நாடாக இருந்தது. இந்நிலையில், இந்தியா உள்பட ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 4 நாடுகளின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனையொட்டி, அந்த 4 இடங்களுக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், இந்தியா, வங்கதேசம், கத்தார், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய 5 நாடுகள் போட்டியிட்டன.

இதில் இந்தியா அதிக வாக்குகள் பெற்று மீண்டும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டது. இதேபோல், தாய்லாந்து தவிர மற்ற 3 நாடுகளும் உறுப்பு நாடுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த ஆணையத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பு நாடுகளின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். உலக அளவில்பினர்களி நடைபெறும் மனித உரிமை தொடர்பான அனைத்து விவகாரங்களையும் எழுப்பவும், விவாதிக்கவும் அந்த உறுப்பினர்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, சீனா, சவூதி அரேபியா, ரஷியா உள்பட 14 நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

ரிசர்வ் வங்கி அறிவிப்பு : புதிய 10 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியீடு



புதிய 10 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் நீதி ராகவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதிய 10 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளது. 2005-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மகாத்மா காந்தியின் படம் கொண்ட அதே வகை பத்து ரூபாய் நோட்டுகளில், இரு பக்க வரிசை எண்களிலும் உள்பொதிந்து அச்சடிக்கப்படும் "ஆ' என்ற எழுத்து சேர்க்கப்பட்டு புதியதாக இது வெளியிடப்படும்.

இந்தப் புதிய பத்து ரூபாய் நோட்டில் ஒருபுறம் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ஜி ராஜனின் கையொப்பமும், மறுபுறம் நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டும் இருக்கும். ஏற்கெனவே புழக்கத்திலிருக்கும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அனைத்து வகை பத்து ரூபாய் நோட்டுகளும் செல்லத்தக்கவையே என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media