சென்ற ஆண்டு தேவர் ஜெயந்திக்கு சென்றவர்களை பெட்ரோல் குண்டு வீசி கொன்றவர்கள் மீது குண்டு வீச்சு, ஒருவர் கொலை, நால்வர் படு காயம்.
சென்ற ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவுக்கு சென்ற வேனை மதுரை சிந்தாமணி அருகே ரிங் ரோட்டில் நிறுத்தி அதனுள் பெட்ரோல் குண்டுகளை சிலர் வீசியதில் 7 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் படுகாயமடைந்தனர், அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷ், சோனையா, முனீஷ்குமார், அர்ஜுனன், முத்துவிஜயன் ஆகியோர் கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இன்று காலை மதுரையில் நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டு விட்டு டாடா சுமோ காரிலும், இரண்டு பைக்குகளிலும் திரும்பிக் கொண்டிருந்தவர்களை வழிமறித்த 20க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று அவர்கள் மீது வெடிகுண்டை வீசி தாக்கியது. அவர்கள் வந்த வாகனங்களை தீ வைத்து கொளுத்தியது. இதில் முத்துவிஜயன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர்.
கொல்லப்பட்ட முத்துவிஜயன் குடும்பத்துக்கு ரூபாய் 5 இலட்சம் நிதி உதவி வழங்க்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
# இவர் தான் அந்த அகிம்சா மூர்த்தி காந்தியோ?