சச்சின் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை காண அங்கு சென்று இருந்தார். கால்பந்து வீரர் டேவிட் பெக்காமுடன் சேர்ந்து ஆட்டத்தை கண்டு ரசித்தார். மரியா ஷரபோவாவின் ஆட்டம் முடிந்த பிறகு அந்த இருக்கையில் அமர்ந்து ஆட்டத்தை ரசித்தவர்கள் யார் என்று தெரியுமா என்று பத்திரிக்கையாளர்கள் கேட்க அவர் பெக்காம் என்றார். சச்சினை பற்றி கேட்ட போது ,சச்சின் யார் என்றே தெரியாது என்றார். இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. சின்ன பிள்ளைகளுக்கு கூட தெரியும் சச்சினை ,ஷரபோவாவிற்கு எப்படி தெரியாமல் இருக்கும் என அவரது ரசிகர்கள் கோபத்தில் இறங்கினார்கள்.
இதை அடுத்து மரிய ஷரபோவாவின் பேஸ்புக் பக்கத்திற்கு சென்று அவரை கேவலமாக திட்டினார்கள். பேஸ்புக் டிவிட்டர்களில் அவரை கலாய்த்து பல ட்ரோல்கள் வந்த வண்ணம் உள்ளன.ஒரு ரஷிய நாட்டு வீரங்கனைக்கு சச்சினை பற்றி தெரியாததில் ஒன்றும் தப்பு இல்லை. அவர்கள் கிரிக்கெட் பற்றி அதிகம் தெரியாதவர்கள். நமக்கு கிரிக்கெட் தவிர வேறு எதுவும் தெரியாது. நமது நாட்டு ஹாக்கி,கால்பந்து அணிகளின் கேப்டன்கள் கூட தெரியாது.
9 முறை தேசிய சாம்பியனாகவும் 2 முறை உலக சாம்பியனாகவும் கேரம் விளையாட்டில் இருந்தவர் தமிழரான மரிய இருதயம். இவருக்கு இந்திய அரசின் அர்ஜூனா விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளனது, ஆனால் இவரை எத்தனை பேருக்கு தெரியும்?
சென்னையில் பெரியமேடு பகுதியில் வசிக்கும் இருந்த உலக சாம்பியன் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் துணை மேலாளராகப் பணியாற்றுகிறார். இவரது மனைவி பிலோமினா 2012ல் ஒரு சாலைவிபத்தில் மரணமடைந்தார், மரிய இருதயமும் அதே விபத்தில் கடும் காயமுற்று உயிர் பிழைத்துள்ளார். இரண்டு முறை உலகசாம்பியனான மரிய இருந்தயத்தை பிழைப்புக்காக வேலைக்கு அனுப்பியுள்ளா நாம் ஒரே ஒரு சீசனில் கிரிக்கெட் போட்டியில் விளையாடினாலும் போதும், அவர்களுக்கு பெரிய அளவில் புகழ் பணம் அனைத்தையும் கொடுக்கிறோம், ஆனால் நாம் தான் கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத நாட்டின் ஒரு வீராங்கனை சச்சினை தெரியாது என்று கூறியதற்கு இவ்வளவு கோபம் கொள்கிறோம்.
மரிய இருதயம் இது பற்றி ஒரு முறை தனது ஆதங்கத்தை பகிர்ந்துள்ளார், உலக சாம்பியன் ஆன உடன் பத்திரிக்கைகள் தனது சாதனையை எழுதும் என்று எதிர்பார்த்ததாகவும் ஆனால் மிகச்சிறிய அளவில் சில பத்திரிக்கைகளில் மட்டுமே வெளியானதாகவும் வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
சாதித்த தடகள வீராங்கனை சாந்தியை சாணி தட்ட அனுப்பிவிட்டோம், உலக சாம்பியனை உதவி மேலாளராக்கி ஃபைல்கள் பார்க்க அனுப்பிவிட்டோம், சாதனையாளர் குற்றாலீஸ்வரனை நீச்சலே வேண்டாம் என்று அமெரிக்காவில் சாஃப்ட்வேருக்கு அனுப்பிவிட்டோம். ஆனால் கிரிக்கெட்டில் 12 வது வீரராக ஒரு மேட்சில் பந்து பொறுக்கி போட்டாலும் அவர்களை கொண்டாடுவோம்.
மரிய இருதயத்தின் பேஸ்புக் பக்கமோ வெறும் 91 ஃபேன்களுடன் உள்ளது
https://www.facebook.com/pages/Maria-Irudayam/249489478439948