BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 9 September 2013

வாடகைகாரில் சொந்த கதை பேசியதால் ஏற்பட்ட அபாயம், மதுரவாயல் இரட்டை பெண்கள் கொலை துப்பு துலங்கியது

விமலாதேவி(47) மற்றும் அவரது மகள் பவித்ரா(22) என்ற இருவரும் நாகேந்திரா தெருவில் அவர்கள் வீட்டில் சில நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டு கிடந்தனர், அவர்களின் 15 பவுன் நகையும் காணவில்லை, 

தமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும் - காங்கிரஸ் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் அதிரடி

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தமிழர்களுக்கு சொந்தமான பூமி இலங்கை என்றும் தமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். தமிழீழக் கனவை நாம் நனவாக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்றும் குறிப்பிட்டார்.

லியாண்டர் பயஸ் - ரடெக் ஸ்டாபெனக் ஜோடி அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் இரட்டையர் பட்டத்தை வென்றனர்.


முசாஃபர் நகர் கலவரம், 4 பாஜக எம்.எல்.ஏ மற்றும் ஒரு காங்கிரஸ் தலைவர் உட்பட 40 பேர் மீது வழக்கு

முசாஃபர் நகர் மாவட்டத்தில் கலவரத்தை தூண்டியதாக 4 பாஜக எம்.எல்.ஏ மற்றும் ஒரு காங்கிரஸ் தலைவர் உட்பட 40 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது, இந்த கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக உத்திர பிரதேச மாநில அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார் மாநில கவர்னர்.

ஒலிம்பிக்கில் மீண்டும் மல்யுத்தம்

ஏழு மாதங்களுக்கு முன்னர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து மல்யுத்தம், ஸ்குவாஷ் மற்றும் பேஸ்பால் விளையாட்டுகள் நீக்கப்பட பரிந்துரைக்கப்பட்டன.

நேற்று அர்ஜெண்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்சில் நேற்று நடந்த கூட்டத்தில் மல்யுத்தம், பேஸ்பால்,சாப்ட் பால் மற்றும் ஸ்குவாஷ் போன்ற விளையாட்டுகளுக்கான ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், மல்யுத்ததிற்கு ஆதரவாக 49 வோட்டுகளும், பேஸ்பாலுக்கு 24 வோட்டுகளும், ஸ்குவாஷ் விளையாட்டிற்கு ஆதரவாக 22 வோட்டுகளும் கிடைத்தன. இதன் மூலம் மல்யுத்த போட்டி மீண்டும் ஒலிம்பிக்கில் நடப்பது உறுதியாகியுள்ளது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media