BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 27 July 2013

கொலைகாரன்பேட்டை தெருவுக்கு முதல்வர் ஜெயலலிதா பெயர்

கொலைகாரன்பேட்டை தெருவுக்கு முதல்வர் ஜெயலலிதா பெயர் வைக்க மாநகராட்சியில் தீர்மானம்

ராயப்பேட்டை பகுதியில் உள்ள கொலைகாரன் பேட்டை என்ற இடம் முன்பு கொள்ளுக்காரன்பேட்டை என்று வழங்கப்பட்டது அதுவே பின்னாளில் கொலைகாரன்பேட்டை என்று மருவியது, இந்த பெயரை மாற்றி கொலைகாரன் பேட்டை ஜெயலலிதா நகர் என பெயர் மாற்றப்பட்டது.

# இதையே பின்பற்றி தமிழ்நாட்டையும் அம்மா நாடு என்று மாற்றிவிட சட்டமன்றத்தில் தீர்மாணம் கொண்டு வந்துவிடுவார்களே!

kolaikaran pettai name changed to Jayalalitha nagar

பவர்ஸ்டாரை மிஞ்சும் கனிமொழி கருணாநிதி

பவர்ஸ்டாரை மிஞ்சும் கனிமொழி கருணாநிதி

காமெடி போஸ்டர்கள் அடிப்பதில் கருணாநிதி, ஜெயலலிதா, அழகிரி, ஸ்டாலின், விஜயகாந்த் மற்றும் பாண்டிச்சேரியில் முதல்வர் ரங்கசாமி அடிபொடிகள் தான் இது வரை பவர்ஸ்டாரை மிஞ்சிக்கொண்டிருந்தன, அந்த லிஸ்ட்டில் தற்போது கனிமொழி கருணாநிதி அவர்களும் இணைந்துள்ளார்.

# காசு பணம் துட்டு கனி கனி

வீரப்பன் கூட்டாளிகளுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்க கோரிய நால்வர் வழக்கு

வீரப்பன் கூட்டாளிகளுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்க கோரிய நால்வர் வழக்கு

கடந்த 1999 ஆம் ஆண்டு கண்ணிவெடி தாக்குதல் நடத்தியதாக வீரப்பன் மூத்த சகோதரர் உட்பட நால்வர் கைது செய்யபட்டனர் முதற்கட்ட விசாரணையில் அவர்களுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது, பின் 2004 ஆம் ஆண்டு மேல் மனுவிசாரணையில் நால்வருக்கும் தூக்கு தண்டனையாக மாற்றப்பட்டது.

மரணதண்டனை எதிர்ப்பாளர்கள் பலரின் முயற்சியில் மீண்டும் அவர்களது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என மேல்முறையீடு செய்துள்ளார்கள்.

இந்த வழக்கு ஆகஸ்ட் 26 விசாரணைக்கு வரும் என தெரிய வருகிறது!

பொதுசொத்துக்கு சேதம் விளைவித்த அதிமுக எம்.எல்.ஏக்கள், மந்திரிகளை ஜெயலலிதா நீக்குவாரா? டாக்டர் ராமதாஸ் கேள்வி

பொதுசொத்துக்கு சேதம் விளைவித்த 16 அதிமுக எம்.எல்.ஏக்கள் 2 மந்திரிகளை முதல்வர் ஜெயலலிதா நீக்குவாரா? டாக்டர் ராமதாஸ் கேள்வி

டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டவுடன் நடைபெற்ற போராட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் உடைக்கப்பட்டன, சில பேருந்துகள் முழுதாக தீவைத்து கொளுத்தப்பட்டன, இதைத்தொடர்ந்து பாமகவிடமிருந்து சேதமடைந்த பொது சொத்துக்களுக்கான பணத்தை பெறப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார், மேலும் பாமகவுக்கும் டாக்டர் ராமதாஸ்க்கும் இது தொடர்பான விசாரணைக்கு வருமாறு சரமாரியாக சம்மன்கள் அனுப்பப்பட்டன. இந்த அறிவிப்பு பொதுமக்களிடத்திலும் பாமகவுக்கு எதிர் நிலை கொண்டவர்களிடமும் பெருத்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இன்று அறிக்கை வெளியிட்ட டாக்டர் ராமதாஸ் அதிமுகவின் 16 எம்.எல்.ஏக்கள் பெயர்களை வெளியிட்டு இவர்கள் மீது பொது சொத்தை நாசம் செய்த வழக்கு உள்ளது என்றும் இதில் ஓ.பி.எஸ் உட்பட 5 பேர் அமைச்சர்களாக உள்ளனர், 2 பேர் முன்னாள் அமைச்சர்கள். இவர்கள் மீது ஜெயலலிதா அரசு நடவடிக்கை எடுத்து இவர்களை பதவி நீக்கம் செய்யுமா என்றும் "கட்சியினரை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுடன், சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கட்சித் தலைவர்களின் கடமை ஆகும்" என்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா இதற்கு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார். மேலும் பொது சொத்தை நாசம் செய்த வழக்கு உள்ளா 16 எம்.எல்.ஏக்கள் மீதும் குண்டர் சட்டம் பதிவு செய்ய வேண்டும் என்றும்  கூறியுள்ளார்.

# டாக்டர் சார், தர்மபுரி பஸ்சை கொளுத்தி 3 மாணவிகள் கொல்லப்பட்டார்களே அது பற்றி உங்க அறிக்கையில் ஒன்றுமே சொல்லலையே.

நியூஸ் பிட்ஸ்: சட்டவிரோத செயல்கள் அரவிந்தர் ஆசிரமம் புதுவை அரசு வசமாகிறது, தனித்தெலுங்கான சோனியா சம்மதம், 28 ரூபாய் பணக்காரர்கள் கபில் சிபல் விமர்சனம்

சட்டவிரோத செயல்கள் நடைபெறுவது குறித்த புகார். அரவிந்தர் ஆசிரமம் புதுவை அரசு வசமாகிறது

ஆசிரமம் என்றாலே அழிச்சாட்டியம் நடைபெறுவது எழுதப்படாத விதியாக உள்ளது, புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமம் வெளி உலகிற்கு மேன்மையானதாகவும் ஆன்மீகமானதாகவும் தெரிந்தாலும் புதுச்சேரி மக்களும் அரசியல்வாதிகளும் அரவிந்தர் ஆசிரமத்தின் மீது 30 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர், அரவிந்தர் ஆசிரமத்தின் மதில்களுக்கு பின்னால் நடப்பது எதுவும் மக்களுக்கோ அரசுக்கோ தெரிவதில்லை, அரவிந்தர் ஆசிரமத்தின் மீது அடிக்கடி செக்ஸ் குற்றச்சாட்டுகளும், கொலை குற்றச்சாட்டுகளையும் பொதுமக்களும் புதுச்சேரி ஊடகங்களும் எழுப்புவார்கள். வெள்ளுடை உடுத்தி புதுச்சேரியில் காணப்படும் ஆசிரமவாசிகளை உள்ளூர் மக்கள் ஒருவித எரிச்சலுடனே பார்ப்பார்கள்.

ஆசிரமம் தொடங்கியதிலிருந்தே வங்காளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதாலும் உள்ளூர் மக்களும் அரசியல்வாதிகளும் இங்கே நிர்வாகங்களில் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் இந்த குற்றச்சாட்டுகளை வேண்டும் என்றே இந்த குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள் என்றும் ஆசிரமம் தரப்பில் கூறப்படுகிறது.

என்றாலும் சில பிரச்சினைகளில் புதுவை போலிஸ் சில குற்றங்கள் தொடர்பாக ஆசிரமத்தில் நுழைந்த நிலையும் உண்டு, தற்போது இப்பிரச்சினை சட்டசபையில் எதிரொலித்துள்ளது புதுச்சேரி சட்டசபையில் அரவிந்தர் ஆசிரமத்தில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புகார் கூறினர். மேலும் அரசே அரவிந்தர் ஆசிரமத்தை நிர்வகிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, அரவிந்தர் ஆசிரமத்தை நிர்வாகிக்க அரசு அதிகாரிகளை நியமிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி சட்டத் துறையிடம் ஆலோசனை கேட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

# சிடி எதுவும் கிடைத்தால் ரிலீஸ் செய்வார்களா?

------------
தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க காங்கிரஸ் தலைமை சம்மதம், ஆந்திர காங்கிரஸ் அதிர்ச்சி

நேற்று நடைபெற்ற காங்கிரஸ் உயர்மட்ட தலைவர் குழு தனி தெலுங்கான மாநிலம் உருவாக்க சோனியா ஆதரவு அளித்ததாகவும் இது குறித்து ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்களிடம் விவாதித்து அவர்களை சம்மதிக்க வைக்க முயற்சி செய்ததாகவும் தெரிகிறது.

ஆந்திர காங்கிரஸ் சோனியாவின் தனி தெலுங்கான ஆதரவுக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள். ஆனால் தனி தெலுங்கான உருவாவது உறுதியாகிவிட்டது என்றும் அறிவிப்பு எப்போது என்பது மட்டுமே பாக்கி.

------------
28 ரூபாய் பணக்காரர்கள், திட்டகமிஷனை விமர்சித்த‌ அமைச்சர் கபில் சிபல்

கிராமப்புறங்களில் 28 ரூபாயும் நகரங்களில் 33 ரூபாயும் ஒரு நாளைக்கு உணவுக்கு செலவிட முடிந்தவர்கள் ஏழைகள் எல்ல என்று திட்ட கமிஷன் தெரிவித்திருந்தது கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தது, 5 பேர் கொண்ட குடும்பம் எப்படி வெறும் 5000 ரூபாயில் ஒரு மாதத்திற்கு வாழ முடியும் என்று தொலைத்தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் விமர்சித்துள்ளார்.

# நீங்களே சொல்வீங்களாம், நீங்களே திட்டுவிங்களாம் என்னா டெக்னிக் இது?
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media