BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 23 July 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

செக்ஸ் உறவு கொள்ளும் நேரத்தில் நம்ம ஊர் பெண்கள் என்ன நினைக்கிறார்கள்.
http://www.satrumun.net/2014/07/blog-post_36.html

9 வயதில் 5 குழந்தைகளுக்கு அப்பாவான சிறுவன், என்ன கொடுமை சார் இது?
http://www.satrumun.net/2014/07/9-62-2-5.html

தைவானில் விமான விபத்து, 51 பேர் பலி!!
http://www.satrumun.net/2014/07/blog-post_63.html

கேலி செய்த ஷேன் வார்னேவுக்கு பதிலடி கொடுத்த தோனி
http://www.satrumun.net/2014/07/blog-post_2138.html

இதுதான் ‘விருது’ கொடுக்கிற லட்சணமா..? : கிழி கிழியென்று கிழித்த சீமான்!
http://goo.gl/Wg6YO2

சச்சின் - ஷரபோவா விவகாரம் , மௌனம் கலைத்தார், என்ன சொன்னார் சச்சின்?
http://www.satrumun.net/2014/07/blog-post_23.html

சிவகுமாரின் பெயரை சூர்யா கெடுத்து விடுவார்
http://www.satrumun.net/2014/07/blog-post_7020.html

பேஸ்புக்கிற்கு வந்தார் பவர்ஸ்டார் சீனிவாசன்
http://www.satrumun.net/2014/07/blog-post_41.html

சுதந்திர தினத்தின் போது தேசிய கொடி தயாரிப்போர் விற்போர் மீது நடவடிக்கை
http://www.satrumun.net/2014/07/blog-post_3018.html

சில்லறை பாக்கி தராமல் சில்லறைத்தனம் செய்கிறாரா பஸ் கண்டக்டர், ஒரு கால் செய்தால் போதும்
http://www.satrumun.net/2014/07/blog-post_8292.html

3 நாளில் 85 படமா? பாரதிராஜாவுக்கு கேரள நீதிமன்றம் நோட்டீஸ்
http://www.satrumun.net/2014/07/3-85.html

இன்று காமன்வெல்த் போட்டிகள் தொடக்கம் !! காமன்வெல்த் போட்டிகள் குறித்து நீங்கள் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் !!
http://www.satrumun.net/2014/07/blog-post_8906.html

செக்ஸ் உறவு கொள்ளும் நேரத்தில் நம்ம ஊர் பெண்கள் என்ன நினைக்கிறார்கள்.


இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் சமீபத்தில் ஒரு சர்வே எடுத்தனர், அதில் "இந்தியாவில் திருமணமான பெண்களின் செக்ஸ் ஆர்வம், அவர்களது செக்ஸ் விருப்பு வெறுப்புகள், செக்சில்  அவர்களது எதிர்பார்ப்புகள்" போன்றவைகளைப் பற்றி புதிய சர்வே ஒன்றினை எடுத்துள்ளனர்.

இந்த சர்வே அடிப்படையில் வந்துள்ள முடிவுகள் பெண்கள் ஆர்வத்துடன் உடலுறவில் ஈடுபடுவது குறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தை செக்ஸாலஜிஸ்ட்டு சுட்டிக்காட்டுகிறார். “தற்போதைய இயந்திரமய வாழ்க்கையால் பெண்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவது குறைந்து வருகிறது. குழந்தைகள் பற்றியோ, பண நெருக்கடி பற்றியோ, வேலைபார்க்கும் இடங்களில் உள்ள சிக்கல் பற்றியோ, கணவரால் ஏற்படும் பொதுவான குறைபாடுகள் பற்றிய சிந்தனையிலோ பெண்கள் சிக்கிக்கொள்வதால் அவர்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவதில்லை. அதனால் தம்பதிகள் இருவருக்குமே அதில் திருப்தி ஏற்படாமல் போய்விடுகிறது. திருப்தியின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். திருப்தியடையாத பெண்கள் கணவரிடம் எரிச்சல்படுகிறார்கள். அது கோபமாகவும், சில நேரங்களில் பகையாகவும் மாறுகிறது…”- என்கிறார்.

சரி.. பெண்கள் கணவரோடு உறவில் இருக்கும்போதும் எதைப் பற்றி நினைப்பார்கள்?

- `நாளை என்ன சமையல் செய்வது?’ என்று பெரும்பாலான பெண்கள் அந்த நேரத்திலும் யோசனையில் ஆழ்கிறார்கள்.

- `இந்த நேரம் பார்த்து குழந்தை விழித்துவிட்டால் என்ன செய்வது?’ என்ற கவலையும் தங்களை வாட்டும் என்று சொல்கிறார்கள்.

- `இவர் எப்போது முடிப்பார்.. நாம் தூங்கி, காலையில் எழுந்து அத்தனை வேலையையும் பார்க்க வேண்டுமே..!’ என்று உறவு நேரத்தில் பெண்கள் கவலைப்படுவதும் உண்டு என்கிறது இந்த ஆய்வு.

கணவரோடு செக்ஸ் வைத்துக்கொள்வது, அவரோடு தூர இடங்களுக்கு சுற்றுலா செல்வது, நடனம் மற்றும் நல்ல உணவு உண்பது ஆகிய மூன்றில் எதற்கு நீங்கள் முன்னுரிமை கொடுப்பீர்கள்? என்ற கேள்விக்கு கிடைத்திருக்கும் பதில் சுவாரஸ்யமானது.

51 சதவீத பெண்கள் `கணவரோடு சற்று தூரமான பகுதிக்கு இன்பச் சுற்றுலா செல்வதைத்தான் விரும்புவோம்’ என்று கூறியிருக்கிறார்கள். 38 சதவீத பெண்கள் `கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு கணவரோடு ஜோடியாக நடனம் ஆட வேண்டும். பின்பு நன்றாக சாப்பிட வேண்டும். அதுவே எங்களுக்கு பிடித்தமானவை’ என்று கூறியிருக்கிறார்கள். மீதமுள்ளவர்களே `அவரோடு தனிமையில் உட்கார்ந்து சிரித்து மகிழ்ந்து பேசிவிட்டு, உறவினைத் தொடர்வோம்’ என்கிறார்கள்.

தாம்பத்ய உறவு திருப்தியாக நடந்துமுடிந்த பின்பு அதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன? -என்ற கேள்விக்கு …..

- `எங்களுக்கு இடையே அதுவரை இருந்த மனக் கசப்புகள் எல்லாம் அடியோடு நீங்கி, புதிதாய் இணைந்த ஜோடிபோல் குதூகலமாய் வாழ்க் கையை நகர்த்தி, அடுத்த முறை இணைவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்’ என்று 37 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள்.

- அவ்வப்போது ஏற்படும் உடல்வலியும், தலைவலியும் அதன் பின்பு சில நாட்கள் காணாமல் போனது என்று 21 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.

- உடல் முழுவதும் நெகிழ்ச்சியாகி, வழக்கத்தைவிட அதிக சுறுசுறுப்பாக இருக்கிறேன். என்னுடைய அன்றாட வேலைகளை வேகமாக பார்க்கிறேன் என்று 19 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.

- பல நாட்களாக சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டேன். திருப்தியான உறவு கொண்ட பின்பு சில நாட்களாக நன்றாகத் தூங்குகிறேன் என்று 14 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

- மனதுக்குள் விவரிக்க முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. எனக்காக அவரும், அவருக்காக நானும் வாழ்கிறோம் என்ற திருப்தியையும், நம்பிக்கையையும் திருப்தியான தாம்பத்ய உறவு ஏற்படுத்தியிருக்கிறது என்று 9 சதவீதம் பேரும் தெரிவித்திருக்கிறார்கள்.

Thanks to http://inimaiyanaillaram.blogspot.com/

தைவானில் விமான விபத்து - என்ன நடந்தது !!



தைவானில் விமானம் ஒன்று கடுமையான காற்றில் விமான நிலையத்தில் தரையில் இறக்கம் செய்யும் போது விபத்தில் சிக்கியது  .  பயணம் செய்த 47 பேர் இறந்தனர் .

தைவான ட்ரான்ஸ்ஏசியா நிறுவனத்தின் ஜிஇ - 2222 விமானம் , கயோசிங்குவில் இருந்து பெங்கு தீவை நோக்கி சென்று கொண்டு இருக்கும் போது இந்த விபத்து நடந்துள்ளது .

கடும் மழை மற்றும் புயல் காரணமாக முதல் முறை தரை இறக்கம் செய்ய முயற்சித்த போது , தோல்வி அடைந்தது . பின்னர் இரண்டாம் முறை முயற்சி செய்கையில் இந்த விபத்து நடந்துள்ளது .

பேஸ்புக்கிற்கு வந்தார் பவர்ஸ்டார் சீனிவாசன்




ஆந்திராவில் பவர்ஸ்டார் பவண் கல்யான் என்றால் மாஸ் ஹீரோ. ஆனால் அதுவே தமிழகத்தில் பவர்ஸ்டார் என்றால் அது காமெடி ஹீரோ தான். அது வேறு யாரும் இல்ல நமது பவர்ஸ்டார் சீனிவாசன். இவர் ஒரு அக்குபஞ்சர் டாக்டர். இவர் எதற்காக நடிக்க வந்தார் என்று பலருக்கும் தெரியவில்லை. இவர் நடிக்கும் படங்களை இவர் மட்டும் தான் பார்ப்பார், அந்த அளவுக்கு இருக்கும் . இவர் நடித்த லத்திகா திரைபடத்தை இவரது திரையரங்கில் 300 நாட்கள் ஒடவிட்டார்.


சந்தானத்துடன் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் அதிக பேருக்கு தெரிய வந்தார். இப்போது இவர் பேஸ்புக்கிற்கு வந்து விட்டார். இன்று தான் வந்தார். அது குறித்து வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டு உள்ளார். ஏற்கனவே டிவிட்டரில் ஆட்டம் காட்டி கொண்டு இருந்த பவர்ஸ்டார் இப்போது பேஸ்புக் வந்து விட்டதால் இனி பேஸ்புக் நண்பர்களுக்கு ஜாலி தான்.

சுதந்திர தினத்தின் போது தேசிய கொடி தயாரிப்போர் விற்போர் மீது நடவடிக்கை




சுதந்திர தினத்தின் போது நாம் அனைவரும் பயபக்தியுடன் நமது தேசிய கொடிக்கு மரியாதை கொடுத்து அதனை நமது நெஞ்சில் தாங்குவோம். ஆனால் அதற்கு அடுத்த நாளே அது குப்பையில் இருக்கும். இது தான் நமது மரியாதையா ? அதிலும் பிளாஸ்டிக்கில் செய்யப்படும் தேசிய கொடிகள் மக்காமல் நமக்கு தீங்கு ஏற்படுத்துகிறது. இதனை தடுப்பதற்கு மஹாராஷ்டிர அரசு முயற்சி செய்து உள்ளது.

அதாவது இந்த முறை சுதந்திர தினத்தின் போது பிளாஸ்டிக் தேசிய கொடி தயாரிப்போர் மற்றும் விற்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது. மேலும் தேசிய கொடியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி  விழிப்புணர்வும் நடத்த உள்ளார்கள். இது ஒரு நல்ல திட்டம் ஆகும். எல்லா மாநில அரசுகளும் இதனை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.


சுதந்திர தினம் அன்று தேசிய கொடியை தனது நெஞ்சில் தாங்குபவன் உண்மையான இந்தியன் அல்ல, மறுநாள் அந்த கொடி குப்பைக்கு செல்லாமல் பார்த்து கொள்பவனே உண்மையான இந்தியன். இந்த சுதந்திர தினத்தில் இருந்து உண்மையான இந்தியனாக இருக்க முயற்சிப்போம்.

3 வயது சிறுமியை படுக்கையறையில் வைத்து கொடூரமாக தாக்கிய டியூசன் டீச்சர்





கொல்கத்தாவில் பலரையும் கோபப்பட வைக்கும் சம்பவம் நடந்து உள்ளது. கொல்கத்தாவை சேர்ந்தவர் பூஜா சிங் , இவர் ஒரு டியூசன் ஆசிரியர். இவர் மூன்று குழந்தைகளின் வீட்டுக்கு சென்று டியூசன் எடுத்து வருகிறார். ஒரு குழந்தையை அவரது படுக்கையறையில் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளார். இது நடந்த போது அந்த குழந்தையின் தாயார் அங்கு இல்லை. ஆனால் இவை அனைத்தும் அங்கு இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி விட்டது.


இதனை பார்த்த குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து உள்ளார்கள். அந்த ஆசிரியை இவர்கள் தாக்கி உள்ளார்கள். அப்போது அவர் மன்னிப்பு கேட்டு உள்ளார். பின்பு அவர்கள் போலீஸிடம் புகார் கொடுத்தனர். அவர் எதற்காக அந்த குழந்தையை அடித்தார் என்று தெரியவில்லை. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


குழந்தை என்ன தான் தவறு செய்தால் அதனை இப்படி அடிப்பதற்கு எப்படி தான் மனம் வந்ததோ .

நடத்துனர் மீதி சில்லரை தரவில்லை என்றால் , ஒரு கால் செய்தால் போதும்




எல்லா ஊரிலும் பேருந்துகளில் ஒரு பிரச்சனை இருக்கிறது என்றால் அது சில்லரை பிரச்சனையாக தான் இருக்கும். அனைவரும் ரூபாய் நோட்டுகளை தருவதால் நடத்துனரிடம் சில்லரை தீர்ந்து விடுகிறது. சில சமயங்களில் நடத்துனர் போதிய சில்லரை வைத்து கொண்டும் தர மாட்டார். சிலர் கேட்டு திரும்பி வாங்கிவிடுவார்கள். சிலர் ஏன் வீண் விவாதம் என கேட்காமல் விட்டுவிடுவார்கள்.


நீங்கள் இனி அவ்வாறு விட்டு விடாதீர்கள், அப்படிப்பட்ட நடத்துனர்களின் மீது நடவடிக்ககை எடுக்கலாம். அதற்கு நாம் 9383337639 என்னும் நம்பருக்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம். அது மட்டுமில்லாமல் குடித்து விட்டு பேருந்து ஒட்டுவது, செல்போன் பேசி கொண்டு பேருந்து ஒட்டுவது பற்றியும் புகார் செய்யலாம்.


ஆனால் நம்மால் முடிந்த அளவு பேருந்துகளில் செல்லும் போது சில்லரையை எடுத்து செல்ல முயற்சிப்போம். ஏனென்றால் நடத்துனர் பேருந்தில் உள்ள அனைவருக்கும் சில்லரை தருவது என்பது முடியாத காரியம் ஆகும்.

சிவகுமாரின் பெயரை சூர்யா கெடுத்து விடுவார் என பிறந்த நாள் வாழ்த்து கூறிய பார்த்திபன்




நடிகர் சூர்யாவுக்கு இன்று பிறந்த நாள். அவர் தற்போது நடித்து வெளிவர இருக்கும் படம் அஞ்சான். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் சூர்யாவின் பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு நடிகர் பார்த்திபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில் அவர் ஸ்டைலில் பேசினார்.


சூர்யா வளர வளர அவரது அப்பா சிவகுமாரின் பெயரை கெடுத்து விடுவார் போல என கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார். பின்பு அவர் அதற்கு விளக்கம் கொடுத்தார். சினிமாவில் அடக்கம், அமைதி, பணிவுக்கு பெயர் போனவர் சிவகுமார். அந்த விஷயத்தில் சிவகுமாரை சூர்யா முந்தி விடுவார் என்பதால் சிவகுமாரின் பெயரை சூர்யா கெடுத்து விடுவார் என கூறினார்.


சூர்யாவிற்கு நமது பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!

9 வயதில் 62 வயது பெண்ணை 2வது திருமணம் செய்து , 5 குழந்தைகளுக்கு அப்பாவான சிறுவன்




தென் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த சிறுவன் சானியே மசிலேலா . இவனுக்கு இப்போது தான் 9 வயது ஆகிறது. ஆனால் அதற்குள் 2 திருமணங்கள் ஆகி விட்டது , அதுவும் 62 வயது பெண்ணுடன் நடந்து உள்ளது. அந்த பெண்ணின் பெயர் ஷெலன் ஷபாங் .இந்த சிறுவனை விட அந்த பெண் 9 வயது பெரியவர். இந்த திருமணம் அவரது விருப்பத்தின் பேரில் நடக்கவில்லை . அந்த சிறுவனின் மத வழக்கப்படியும், முன்னேர்களின் பழக்கத்தின் படியும் நடந்தது.



கடந்த ஆண்டு அந்த சிறுவனுக்கு 61 வயது பெண்ணுடன் நடந்தது. இப்போது ஷெலனுக்கு 5 குழந்தைகள் உள்ளன. அந்த சிறுவன் திருமணத்திற்கு பிறகு தனது மனைவியை முத்தமிட்டார். திருமண பரிசாக ரூபாய் 5 ஆயிரம் கொடுத்தார். இந்த திருமண சடங்குகள் அனைத்தும் யூடியூப் இணையதளத்தில் ஒளிபரப்பபட்டது.


அடுத்த ஆண்டு யாருடன் திருமணம் நடக்குமோ ??

தன்னை கேலி செய்த ஷேன் வார்னேவுக்கு பதில் தந்தார் தோனி






இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று வரலாற்றை மாற்றி அமைத்தது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் இஷாந்த் சர்மா . ஆனால் அவர் தனது பந்துவீகச்சுக்கு உறுதுணையாக இருந்து உதவியது கேப்டன் தோனி தான் என்றார். போட்டியின் போது ஜடேஜா பந்து வீசிய போது தோனி சற்று பின்னால் தள்ளி நின்றார். இது பலரால் விமர்சனம் செய்யப்பட்டது. குறிப்பாக ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே கேலி செய்தார். சுழற்பந்து வீச்சின் போது விக்கெட் கீப்பர் பின்னால் நின்றால் அது பேட்ஸ்மேன் இறங்கி வந்து ஆடுவதற்கு சுலபமாக இருக்கும் என்றார்.



அவரின் இந்த விமர்சனத்திற்கு தோனி இன்று பதிலளித்தார். லெக் திசையில் 3 பீல்டர்களை நிறுத்த நினைத்தார், ஆனால் விதிமுறையில் அதற்கு இடம் இல்லை. அதனால் லெக் ஸ்லிப்பில் நின்ற தோனியை சற்று தள்ளி நிற்க சொன்னார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே பந்து சென்று கொண்டு இருந்தது. அதனை தடுத்து நிறுத்தி கேட்சு வாய்ப்பை அதிகப்படுத்தி கொள்வதற்காக சற்று பின்னால் தள்ளி நின்றதாக கூறினார்.


பேட்ஸ்மேன்கள் இறங்கி வந்து ஆடாததால் தோனி இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார். ஆனால் எந்த கேட்சும் வரவில்லை என்பதை  ஒத்து கொண்டார். இப்போது உள்ள கிரிக்கெட்டில் புதிய உத்திகளை கையாள வேண்டும் என்றார்.

3 நாட்களில் 85 மலையாள படங்களை பார்த்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு நோட்டீஸ்





தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா என்றாலே தனி மரியாதை இருக்கும். எப்படி நடிக்க வேண்டும் என பலருக்கு கத்து கொடுத்தவர். கிராமப்புற கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். நம் ஊரில் இப்படி மரியாதை கொடுத்தால் கேரள நீதிமன்றம் இவர் தவறு செய்ததாக கூறி இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2013-ம் ஆண்டுக்கான கேரள திரைப்பட விருதுகள் கடந்த ஏப்ரல் 18-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த படமாக 2013-ம் ஆண்டில் வெளியான சுதேவன் இயக்கத்தில் வெளிவந்த  "சி.ஆர்.நம்பர் 89" சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகர்களாக 2 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


இந்த விருதுகளை தேர்வு செய்த தேர்வு குழுவின் தலைவராக இயக்குனர் பாரதிராஜா இருந்தார். இதற்காக அவர் திருவனந்தபுரத்தில் 3 நாட்கள் மட்டும் தங்கி இருந்தார். இந்த தேர்வு குறித்த தகவல்களை கேரளாவை சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றார். அந்த தகவல்களை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்து உள்ளார். ஏனென்றால் இந்த விருதுக்கான தேர்வில் 85 படங்கள் இருந்தன. விருது கொடுக்கும் ஒருவர் இந்த 85 படங்களையும் முழுமையாக பார்த்து ஆராய்ந்து விட்டு தான் தர வேண்டும். ஆனால் அதற்கு எடுத்த கொண்ட நாட்கள் வெறும் 3 நாட்கள் தான் .


எனவே அவர்கள் படங்களை முழுமையாக பார்க்காமல் விருது கொடுத்து உள்ளார்கள். இந்த விருதுகளை ரத்து செய்ய வேண்டும் என அவர் கோர்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை ஏற்று கொண்ட நீதிபதி அந்த தேர்வு குழுவில் இருந்த அனைவருக்கும் 10 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.









மோடி அரசின் 100 வது நாளில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு 17 அம்ச திட்டங்கள்




மோடி ஆட்சி வருவதற்கு முக்கிய காரணம் அவர் இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வார் என்னும் நம்பிக்கையில் தான். அதனை செயலபடுத்துவதற்காக மோடி அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அவர்கள் தீவிர ஆலோசனைக்கு பிறகு இந்தியாவை முன்னேற்ற பாதக்கு செலுத்துவதற்கு 17 அம்ச திட்டங்களை வகுத்துள்ளார்கள். இந்த திட்டங்களை மோடி அரசு பதவி ஏற்று 100 நாளாவது அன்று தெரிவிக்க உள்ளார்கள்.


இது கடலோர விரைவு போக்குவரத்து, தொழிலாளர் பணிகளில் சீர்திருத்தம் என மக்கள் நல திட்டங்களை முன்னிலை படுத்தி உள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் இந்த மாதம் 10 ஆம் தேதி அன்று இறுதி செய்யப்பட்டு அனைத்து அமைச்சகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் இது பற்றி விவாதித்து அவர்கள் கருத்துகளை தெரிவிப்பார்கள். அதன் பிறகு இதில் சில மாற்றங்கள் இருக்கலாம்.


மோடி அரசின் 100 வது நாள் செப்டம்பர் முதல் வாரம் வருகிறது, அப்போது இது பற்றி மோடி அறிவிப்பார்.

இன்று காமன்வெல்த் போட்டிகள் தொடக்கம் !! காமன்வெல்த் போட்டிகள் குறித்து நீங்கள் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் !!



1 ) காமன்வெல்த் இன்று ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் தொடங்க உள்ளது . 12 நாட்கள் நடக்க உள்ள இந்த போட்டிகள் ஆகஸ்ட் - 3 ஆம் தேதி நிறைவு பெறுகிறது .



2 ) இந்த போட்டிகளில் 4,100 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர் . 2010 ஆம் ஆண்டு டில்லியில் நடந்த போட்டிகளில் 6,081 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர் .

3 ) காமன்வெல்த் போட்டி தான் ஸ்காட்லாந்தின் நடைபெற உள்ள முதல் பெரிய விளையாட்டு போட்டி .

4 ) இந்த காமன்வெல்த் போட்டியின் மோட்டோ , " மக்கள் , இடம் , உணர்வு "

5 ) காமன்வெல்த்தில் மொத்தம் 17 விளையாட்டுகள் உள்ளன . அதில் 261 போட்டிகள் நடைபெறும் .

6 ) இன்று கிளாஸ்கோவின் செல்டிக் பார்க் என்னும் இடத்தில் துவக்க விழா நடைபெற உள்ளது . துவக்க விழாவில் இந்தியக் கொடியை ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற விஜய் குமார் ஏந்திச் செல்ல உள்ளார் .

7 ) இந்த   காமன்வெல்த் போட்டிகளின் லோகோவின் பெயர் கிளைட் . இந்த லோகோவினை ஒரு 12 வயது சிறுவன் வடிவமைத்துள்ளான் .

திருட்டு விசிடியில் படம் பார்க்க வேண்டாம் என ரசிகர்கள் கால்களை தொட்டு கேட்டு கொண்ட நடிகர்




சூர்யா தற்போது நடித்து வெளிவர இருக்கும் படம் அஞ்சான் . சூர்யா இந்த படத்தில் 2 வேடங்களில் நடித்து உள்ளார். இந்த படத்தின் டீஸர் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் நடந்தது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நெற்று நடைபெற்றது. இது சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளிவந்தது.


இந்த விழாவின் போது பேசிய சூர்யா சற்று உருக்கமாக பேசினார். தயவு செய்து யாரும் திருட்டு விசிடியில் படம் பார்க்க வேண்டாம் என கேட்டு கொண்டார் . இதற்காக ரசிகர்களின் கால்களை தொட்டு கேட்டு கொள்வதாக தெரிவித்தார். நேற்று சூர்யாவின் பிறந்த நாள் என்பதால் அந்த கொண்டாட்டமும் ந்டைபெற்றது. தனது பிறந்த நாள் அன்று சுவரொட்டிகள் ஒட்டி பணத்தை விரயம் செய்ய வேண்டாம் என கேட்டு கொண்டார். அதற்கு பதிலாக பிற மனிதர்களுக்கு உதவலாம்.


இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வெளிவர இருக்கிறது.

சச்சின் - ஷரபோவா விவகாரம் , மௌனம் கலைத்து , தன் பெருந்தன்மை காத்தார் சச்சின் !!



விம்பிள்டன் போட்டிகள் நடந்து கொண்டு இருக்கும் போது , இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் கால்பந்து நட்சத்திரம் பெக்காமுடன் போட்டியைக் காண வந்திருந்தார் . பின்னர் ஷரபோவாவிடம் சச்சின் யார் என்று தெரியுமா , என்று கேட்டதற்கு தெரியாது என்றார் . இதனால் பொறுமை இழந்த ரசிகர்கள் அனைவரும் ஷரபோவாவின் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் அவரை தரக் குறைவாக எழுதினர் .

இந்த பிரச்சனைக் குறித்து இது நாள் வரை மௌனம் காத்து வந்த சச்சின் நேற்று தனது மௌனத்தைக் கலைத்தார் . அவர் கூறுகையில் , " ஷரபோவா என்னை தெரியாது என்று கூறியது மரியாதைக் குறைவாக இல்லை , ஒருவேளை அவர் கிரிக்கெட் தொடர்ந்து பார்க்காமல் இருப்பார் " என்றார் .

இவ்வாறு கூறி தனது பெருந்தன்மையை தக்க வைத்து கொண்டார் சச்சின் .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media