BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 1 August 2013

நான்காவது ஒரு நாள் போட்டியிலும் ஜிம்பாப்வேயை வென்றது இந்தியா.

நான்காவது ஒரு நாள் போட்டியிலும் ஜிம்பாப்வேயை வென்றது இந்தியா.

முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே (42.4 ஓவர்களில்) அனைத்து விக்கெட்களையும் இழந்து 144 ரன்கள் எடுத்தது, அடுத்து ஆடிய இந்தியா வெறும் 30.5 ஓவர்களில் ஒரு விக்கட்டை மட்டும் இழந்து 145 ரன்கள் எடுத்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த தொடரில் அனைத்து போட்டிகளையும் வென்று 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது, இன்னும் ஒரு ஆட்டம் மட்டுமே பாக்கியுள்ளது.

# ஆல் தி பெஸ்ட்

ஸ்நோடன்க்கு தற்காலிக அடைக்கலம் அளித்தது ரஷ்யா

ஸ்நோடன்க்கு தற்காலிக அடைக்கலம் அளித்தது ரஷ்யா, மாஸ்கோவிற்கு சென்றார் ஸ்நோடன்.

ஃபேஸ்புக் உட்பட்ட சமூக வலைப்பின்னல் இணைய தளங்கள், மின்னஞ்சல்கள், டெலிபோன் பேச்சுகளை அமெரிக்க ஏஜென்சிகள் உளவு பார்க்கின்றன என்ற தகவல்களை வெளியிட்ட ஸ்நோடன் ஜூன் 23ம் தேதி காங்காங்கிலிருந்து மாஸ்கோவுக்கு தப்பி ஓடினார், அங்கே அவருக்கு ரஷ்யாவினுள் நுழைய அனுமதி கிடைக்காததால் இத்தனை நாட்களாக ட்ரான்சிட் பகுதியிலேயே இருந்தார், இந்நிலையில் அவருக்கு ரஷ்யாவில் தற்காலிக அடைக்கலம் கிடைத்துள்ளதால் ட்ரான்சிட் பகுதியிலிருந்து மாஸ்கோவினுள் சென்றுள்ளார், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் தங்கியிருக்கும் இடம் வெளியிடப்படவில்லை. தற்போது அமெரிக்கா வெறி கொண்டு தேடி வரும் நபர்களில் முதன்மையானவர் ஸ்நோடன், இவருக்கு ஏற்கனவே ஈக்வடார் நாடு அரசியல் தஞ்சம் அளிக்க முன்வந்துள்ளது, ஈக்வடாரில் நுழைந்து விட்டால் அவருக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

RTI சட்டத்தின் கீழ் வராமல் அரசியல் கட்சிகளுக்கு விலக்கு - கேபினட் முடிவு

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராமல் அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் முடிவை எடுத்தது மத்திய அரசின் கேபினட்.


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உட்பட ஆறு தேசிய கட்சிகள் தங்களுக்கு கிடைக்கும் நிதி வரும் வழி, வேட்பாளார்களை தேர்ந்தெடுக்கும் முறை ஆகியவற்றை ஆர்டிஐ என்னும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கட்சிகளிடம் கேட்டுப்பெறலாம் என சில மாதங்களூக்கு முன் அறிவிக்கப்பட்டது, அதை கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்த்தன, இதனால் இன்று கூடிய கேபினேட் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராமல் அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் சட்ட திருத்த முடிவை எடுத்தது.

‪#‎RTI‬ அரசியல் கட்சிகள் என்ன வானத்திலிருந்து குதித்தவைகளா? இவைகளுக்கு மட்டும் ஏன் விலக்கு? இது குறித்து உங்கள் கருத்தை கூறுங்கள்


Cabinet makes crucial changes in RTI Act

தெரிந்து செய்கிறார்களா, தெரியாமல் செய்கிறார்களா? மத்திய அரசுக்கு கருணாநிதி காட்டமான கேள்வி




தெரிந்து செய்கிறார்களா, தெரியாமல் செய்கிறார்களா? மத்திய அரசுக்கு கருணாநிதி காட்டமான கேள்வி

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள "தானே கேள்வி தானே பதில்" அறிக்கையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை மீண்டும் உயர்த்தியிருக்கிறார்களே? என்ற கேள்விக்கு

மத்திய ஆட்சியிலே இருப்பவர்களுக்கு இவ்வாறு அடிக்கடி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது, சங்கிலித் தொடர்போல எத்தகைய பாதிப்பைத் தொடர்ச்சியாக ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்து செய்கிறார்களா, தெரியாமல் செய்கிறார்களா என்று புரியவில்லை. என்றும் எட்டு வாரங்களில் ஐந்தாவது முறையாகச் செய்யப்பட்டுள்ள விலை உயர்வாகும் என்றும் கடுப்பை காட்டியுள்ளார்.

# தலைவரே தெலுங்கானா மாநில பிரிப்புக்கு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பில் ஆதரவு கோரி வருவாங்க, அப்போ காண்பியுங்கள் உங்களின் இந்த கடுப்பை, இல்லைன்னா அதுக்கும் சிபிஐ வச்சி இருக்காங்களா காங்கிரஸ்?



DMK chief karunanithi condemns petrol price hike 

படுகொலை செய்யப்பட்ட பாஜக செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் குடும்பத்திற்கு அத்வானி இன்று நேரில் ஆறுதல்

படுகொலை செய்யப்பட்ட பாஜக செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் குடும்பத்திற்கு அத்வானி இன்று நேரில் ஆறுதல் 

சேலத்தில் படுகொலை செய்யப்பட்ட பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் குடும்பத்தினரை, அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி இன்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அங்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது அதில், அத்வானி தற்போது கலந்து கொண்டுள்ளார்.

# ஆறுதல் மட்டும் தெரிவித்து விட்டு போங்க சார், இங்கே ஒரு மதக்கலவரத்தை உண்டு பண்ணிடாதிங்க, ஏற்கனவே சாதிக்கலவரத்தில் தமிழகம் நொந்து நூடுல்ஸ் ஆகி கிடக்கிறது.


Advani condolence Auditor Ramesh family in Salem

இந்திய சினிமாவுக்கு 100- வயது ஆவதையொட்டி சென்னையில் விழா


இந்திய சினிமாவுக்கு 100- வயது ஆவதையொட்டி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தனது 75-ம் ஆண்டில் இந்தியத் திரைப்பட உலகின் 100-வது ஆண்டு விழாவை சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடத்துகிறது.

இதில் தென்னிந்தியாவின் 4 மாநில முதல்வர்கள், தமிழக ஆளுநர்மற்றும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது என தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் கைது

மதுவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் கைது 
மதுவிலக்கை அமல்படுத்த கோரி மதுரையில் உண்ணாவிரதம் இருந்த நந்தினி, ஜோ பிரிட்டோ உட்பட 5 மாணவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு அவர்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள்...

# மது விற்பனையால் தான் பட்ஜெட்டே போடுபவர்கள் மதுவை ஒழிக்கவா விடுவார்கள்?
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media