BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 27 August 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun Special news

செக்ஸில் ஆண் பெண் இருவருக்கும் ஏற்படும் பிரச்சினைகள் என்ன?
http://www.satrumun.net/2014/08/male-female-problems-discuss-with.html

ஐஸ் பக்கெட் சாலஞ்சையும் படு கவர்ச்சியாக செய்த பூணம் பாண்டே
http://www.satrumun.net/2014/08/poonam-pandey-did-ice-bucket-challenge.html

ரஜினி - அஜீத் மோதல், வினாயகர் சதுர்த்தி அன்று ஜெயிக்கப்போவது யார்?
http://www.satrumun.net/2014/08/rajini-and-ajith-to-enter-into-rivalry.html

சியோமி நிறுவனத்தின் இரண்டாவது மொபைல் 5,599 ரூபாயில் விற்பனை !!
http://www.satrumun.net/2014/08/xiaomi-redmi-1s-at-5599-in-india.html

100 ரூபாய்கு டிக்கெட்களை விற்க உள்ளது ஏர் இந்தியா , புக்கிங் இன்று ஆரம்பம் !
http://www.satrumun.net/2014/08/air-india-to-sell-tickets-at-discounted-price.html

‘வரிச்சலுகை’க்கு வேட்டு? : அரசின் பரிசீலனையால் ஆடிப்போயிருக்கும் தயாரிப்பாளர்கள்!
http://www.soundcameraaction.com/hot-news/tn-government-decide-no-tax-free-offer/

விக்ரமின் 'ஐ' படத்துக்காக அர்னால்டும் ஜாக்கி சானும் வருகிறார்கள்
http://www.satrumun.net/2014/08/arnold-and-jackie-chaan-to-join-ai.html

பாஜக வில் சேர சொல்லி ரஜினிக்கு நேரடி அழைப்பு
http://www.satrumun.net/2014/08/rajnikanth-to-join-bjp.html

தன்னை வளர்த்தவர் இறந்ததால் , அவரின் கல்லறையை விட்டு வராமல் , உணவு எதுவும் அருந்தாமல் இருந்த நன்றியுள்ள நாய் !!
http://www.satrumun.net/2014/08/loyal-dog-shows-his-loyality-by-staying-near-his-owners-grave.html

மோடி 100, மாற்றமா? ஏமாற்றமா? செப்டம்பர் 5 அன்று மோடி சதமடிக்கவுள்ளார்
http://www.satrumun.net/2014/08/modi-to-hit-century.html

இறந்த மனிதர் 12 மணி நேரத்தில் உயிருடன் வந்தார்
http://www.satrumun.net/2014/08/a-man-comes-alive-after-death.html

உலகின் அதிவேகமான வீரர் முதன்முறையாக இந்தியா வருகிறார்
http://www.satrumun.net/2014/08/usain-bolt-to-come-to-india-for-first.html

மதுக்கடைகளை மூட சொல்லி சென்னையில் செப்டம்பர் 2 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்
http://www.satrumun.net/2014/08/strike-against-tasmac-in-chennai.html

தோனி இருக்கும் வரை இந்திய அணியில் விளையாட வாய்ப்பே கிடைக்காது - கங்குலியின் கீழ் விளையாடியவரின் புலம்பல்
http://www.satrumun.net/2014/08/no-chance-to-come-in-to-team.html

செக்ஸில் ஆண் பெண் இருவருக்கும் ஏற்படும் பிரச்சினைகள் என்ன?

இன்று நமது சமூகத்தில் "செக்ஸ்" பிரச்சினைகளை வெளிப்படையாக பேச இயலாத நிலையில்  மறைக்கக் கூடிய ஒரு பிரச்சனையாக, ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ளது, ஆணோ பெண்ணோ, அவர்கள் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி அடைந்தால் தான் அவர்கள் திருமண வாழ்வு மட்டுமின்றி மொத்த வாழ்வும் மகிழ்வுடன் சிறப்பாக அமைகிறது.

பல செக்ஸ் பிரச்சினைகளை கண்டறிந்து முறையான மருத்துவம் மேற்கொண்டாலே போதுமானது, பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு இல்லாததால் தான் கண்ட கண்ட லாட்ஜ் வைத்தியர்களிடம் மருந்து வாங்கி பணத்தையும் ஆரோக்கியத்தையும் இழக்கின்றனர்.

செக்ஸில் ஆண் பெண் இருவருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சினைகள் என்ன?

மனரீதியிலான பாதிப்புகள் :

பயம், கவலை, அறியாமை, வெறுப்புணர்ச்சி இவற்றால் ஏற்படக்கூடியது. செக்ஸில் ஏற்படும் முழு திருப்தியின்மையினால் கூட மனநோய்கள் உண்டாகின்றன. மனநோயும் செக்ஸ் குறைபாடும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையது.

உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள்.

உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் கூட செக்ஸ் குறைபாடுகளை உண்டாக்குகின்றன. இரத்தகுழாய்  சம்பந்தப்பட்ட நோய்கள், நாளமில்லா சுரப்பிகளின் குறைபாடுகளினால் உண்டாகும் குறைகள், தைராய்டு சுரப்பு குறைவதால் வரும் பாதிப்புகள், ஆண், பெண் ஹார்மோன் சுரப்பிகளின் குறைபாடுகள் முதலியன முக்கிய காரணங்கள். சிறுநீரக கோளாறுகள் மற்றும் இரத்தசோகை போன்ற வியாதிகளினால் செக்ஸ் குறைபாடுகள் ஏற்படுகிறது.

சர்க்கரை வியாதி

சர்க்கரை நோய் செக்ஸ் குறைபாட்டிற்க்கு முக்கிய காரணம். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்க்குள் வைத்திருக்க வேண்டும்.

ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் :

செக்ஸ் பிரச்சினைகள் என்றாலே ஆண்களுக்கு மட்டும் தான்; அதுவும் ஆண்மைக் குறைவு மட்டும்தான் என நம்பப்படுகிறது.  ஆனால் ஆண்மைக்குறைவு என்பது ஆணுக்கு செக்ஸில் உண்டாகும் குறைபாடுதான். இதில் உண்டாகும் குறைகள் 3 வகையாக உள்ளன.

Erection disorder (ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைபாடு)

பொதுவாக செக்ஸில் ஈடுபடும் பொழுது ஆணின் பிறப்புறுப்பிற்கு சராசரியாக 5 முதல் 10 நிமிடமும், பெண்ணு றுப்பில் நுழைந்தவுடன் "3 முதல் 5 நிமிடமும்" விறைப்புத்தன்மை அவசியம். இதில், விறைப்புத்தன்மை மிக எளிதில் குறைந்து ஆணுறுப்பு துவண்டு விட்டால் அது குறைபாடு மேலும் சிலருக்கு விறைப்பு தன்மையே சில நோய்களில் இருக்காது. (உ.ம்.) சர்க்கரை நோய், சிறுநீரக செயலிழப்பு. உயர் இரத்த அழுத்தம்.


Premature Ejaculation (விரைவாக விந்து வெளிப்படுதல்) :

பொதுவாக விந்து வெளியேற 3 முதல் 5 நிமிடம் ஆக வேண்டும். அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறப்பினுள் நுழையுமுன் விந்து வெளியேறினால் அது செக்ஸில் குறைபாடுதான்.  கிராமப்புரத்தில் இதனை "நரம்புத்தளர்ச்சி" என்று அழைக்கின்றனர். இது நிறைய ஆண்களை பாதித்துள்ளது.


Inhibited Orgasam (செக்ஸ் உணர்வு குறைபாடு) :

உணர்வற்ற உன்னத நிலை, செக்ஸில் ஈடுபடும்போது ஆணுறுப்பை பெண்பிறப்புறுப்பினுள் நுழைத்து உள்ளும் வெளியும் அசைக்கையில் விந்தணு வெளிப்படும்பொழுது  ஆணுக்கு ஏற்படும் செக்ஸ் உன்னத நிலையை (Orgasam) ஆணால் உணரமுடியாத நிலை. அல்லது உணர்விருந்தும் விந்து சரியாக வெளிப்படாதிருத்தல்.


Priapism (ஆணுறுப்பு விறைக்கும்போது தாங்கமுடியாத வலி) :
இந்த நிலையில் செக்ஸ் என்றாலே பயம் உண்டாகும்.


Sexual Addiction (செக்ஸ் அடிமை) :

குடிபோதை மயக்கம் மீளமுடியாமை போல் இது ஒரு செக்ஸ் அடிமைத்தனம், எந்நேரமும் அதைப்பற்றியே சிந்தித்தல். சொந்த வேலைகளைக் கூட அன்றாடம் செய்ய முடியாமல் சிரமப்படுதல். இது இருபாலருக்கும் பொதுவானது.


Sex Arousal Disorder (செக்ஸ் கிளர்ச்சி உணர்வு குறைபாடு) :

பொதுவாக செக்ஸ் உணர்வு சிலருக்கு மிகக் குறைவாகவும், இல்லாத நிலையும் இருக்கும். சிலருக்கு மிக அதிகமாக இருக்கும். ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலை Satyriasis - சட்டைரியாஸிஸ் எனப்படும். பெண்ணுக்கு அதிகமாகயிருத்தல் : "Nymphomania" - நிம்போ மேனியா, எனப்படும்.


இது தவிர, சிலருக்குபிறப்பிலேயே - Congenital ஆணுறுப்பு நீளம் மிகக் குறைவாகவும் Testis இல்லாமலும் இருக்கும் (Eg: Turner's Syndrome) இந்த குறைபாடுகளை சரி செய்வது மிக கடினம்.


பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகள் :

பொதுவாக ஆண்மைக்குறைவைப் போலவே பெண்மைக்குறைவு ஏற்படுகிறது. ஆனால் பெண்கள் அதனை வெளிப்படுத்துவதில்லை, பெரிதுபடுத்துவதில்லை. இதனால் பெண்மையில் ஏற்படும் பிரச்சனைகளை சமூகமும் பெண்களும் பெரிதுபடுத்துவதில்லை.

Dyspareunia

ஆணுறுப்பு, பெண்உறுப்பினுள் நுழைந்தவுடன் பெண்ணிற்க்கு உண்டாகும் தாங்க முடியாத வலி இது.

பொதுவாக பெண்களையும் Inhibites Orgasm (செக்ஸ் உணர்வு உன்னத நிலை, இல்லாதிருத்தல்), Sexual Addiction, Sex Arousal Disorder, Dyspareunia போன்ற பிரச்சனைகள் பாதிக்கலாம்,


நிறைய விவாகரத்துகளுக்கு (Divorce)   காரணம் செக்ஸ் பிரச்சனை தான், முதலில் தங்களுக்கு செக்ஸ் பிரச்சினை உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும், பின் இந்த பிரச்சினைகளுக்கு தகுந்த மருத்துவர்களை அணுகி மருத்துவம் செய்தால் பிரச்சினைகள் தீரும்.

சியோமி நிறுவனத்தின் இரண்டாவது மொபைல் 5,599 ரூபாயில் விற்பனை !!


இந்தியாவில் சியோமி நிறுவனம் தனது இரண்டாவது மொபைலை நேற்று வெளியிட்டது . இந்த மொபைலின் பெயர் சியோமி ரெட்மி - 1எம் ( Xiaomi Redmi - 1s ) . இந்த மொபைலை ஆன்லைனில் மட்டுமே வாங்க முடியும் . இந்த மொபைலின் விற்பனை செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது . 


இந்த மொபைல் சீனாவில் மே மாதம் விற்பனைக்கு வந்தது . இந்தியாவில் 6,999 ரூபாயில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக 5,599 ரூபாயில் விற்பனைக்கு வந்தது . மேலும் இந்த விலை உயர்த்தப்பட மாட்டாது என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது . 

மொபைலில் உள்ள அம்சங்கள் : 

கேமரா                                            -    8 MP 
தொடுதிரை                                  -    4.7 இன்ச்
ஆண்ட்ராய்ட்  வெர்சன்          -    4.3 ஜெல்லிபீன் ( அப்கிரடின் மூலம் 4.4 கிட்கட் )
ராம்                                                 -    1 ஜிபி
இண்டர்னெல் ஸ்டோரேஜ்  -    8 ஜிபி 

மேலும் சியோமி பயனாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் பிளிப் கேஸ் , ஸ்கிரின் கவர் , ரியர் பேனல் ஆகியவற்றை விற்பனை செய்ய உள்ளது . 



100 ரூபாய்கு டிக்கெட்களை விற்க உள்ளது ஏர் இந்தியா , புக்கிங் இன்று ஆரம்பம் !!

இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியா , இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்ததை கொண்டாடும் விதமாக தனது விலையை குறைத்து டிக்கெட்களை விற்பனை செய்ய உள்ளது .

ஆகஸ்ட் 27 , 2007 அன்று ஏர் இந்தியா , இந்தியன் ஏர்லைன்ஸ் உடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தது . அதனை முதன் முறையாக இன்று கொண்டாட உள்ளனர் . இதை கொண்டாடும் விதமாக " ஏர் இந்தியா ஆபர் " என்ற பெயரில் டிக்கெட்களை 100 ரூபாய்கு விற்க உள்ளனர் .

இந்த அதிரடி ஆஃபர் சில நாட்களுக்கு மட்டுமே . ஆகஸ்ட் 27 முதல் ஆகஸ்ட் 31 வரை மட்டுமே . இந்த ஆஃபர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 30 ஆகிய தேதிக்குள் பயணம் செய்பவர்களுக்கு மட்டும் .

தன்னை வளர்த்தவர் இறந்ததால் , அவரின் கல்லறையை விட்டு வராமல் , உணவு எதுவும் அருந்தாமல் இருந்த நன்றியுள்ள நாய் !!



உலகில் தன்னை வளர்த்து விட்டவர் யாராக இருந்தாலும் , அவரை உதறி தள்ளி விட்டுப் போகும் இந்த காலத்தில் தன்னை பாசமாக வளர்த்தவர் இறந்ததால் அவரை விட்டு விலக மனதில்லாமல் , அவரின் கல்லறையில் பொழுதைக் கழித்து தனது நன்றி மறவாமையை உலகுக்கு உணர்த்தியுள்ளது ஐந்து அறிவு ஜிவனான நாய் . இந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது .


18 வயதான பாஸ்கர் விபத்தில் இறந்தார் . இவர் கடந்த ஐந்து வருடங்களாக நாய் ஒன்றை வளர்த்து வந்தார் . இவரை கல்லறையில் புதைத்து விட்டு அனைவரும் வீட்டிற்கு வந்தனர் . ஆனால் இவர் 5 வருடங்களாக வளர்த்து வந்த நாய் ஒன்று இவரின் கல்லறையிலேயே இருந்து விட்டது . இரவு பகல் என்று பாராமல் , உணவு எதுவும் அருந்தாமல் கல்லறை அருகிலேயே இருந்தது . இதைப் பார்த்த ப்ளூ கிராஸ் அமைப்பினர் அந்த நாயினை வளர்க்க முடிவு எடுத்து , அந்த நாயினை எடுக்க முயன்றனர் . ஆனால் நாய் அந்த கல்லறை மணலையே தேய்த்தது . இதைப் பார்த்த அமைப்பினர் அருகில் இருந்தவரிடம் விசாரித்தனர் . அவர்கள் நடந்ததை கூறினர் .

இதனால் ப்ளூ கிராஸ் அமைப்பினர் பாஸ்கரின் அம்மாவிடம் போய் விசாரித்தனர் . அவர் அந்த நாயின் பெயர் டாமி என்றும் அதனை தன் மகன் பாசமாக வளர்த்து வந்தான் என்றும் கூறினார் . அவரும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களும் அந்த இடத்துக்குச் சென்ற போது , டாமி பாஸ்கரின் அம்மாவிடம் நன்றியோடு சென்றது .

இதைப் பார்த்து அந்த அம்மா அழுகையோடு , " என் மகன் இறந்த போது எதற்காக வாழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன் , ஆனால் இனி நான் வாழ்வதற்கு இந்த நாயும் ஒரு காரணமாக இருக்கும் " என்றார் .

செப்டம்பர் 5 அன்று மோடி சதமடிக்கவுள்ளார்




இந்திய பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்று வரும் செப்டம்பர் 5 ஆம் தேதியுடன் 100 நாட்கள் முடிகிறது. இந்த 100 நாட்களில் மோடி செய்த சாதனைகள் குறித்து மோடி விரிவாக உரையாற்றவுள்ளார். இந்த நாளில் பல புதிய திட்டங்கள் குறித்தும் மக்களிடம் எடுத்துரைக்கவுள்ளார். எனவே இந்த நாளுக்காக எல்லா இந்திய மக்களும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். மோடி விரைவில் வந்து மக்களுக்கு விருந்து தருவார் என எதிர்பார்க்கலாம்.

இறந்த மனிதர் 12 மணி நேரத்தில் உயிருடன் வந்தார்




பிரேசில் நாட்டில் ஒரு அதிசியம் நடந்துள்ளது. அந்த நாட்டை சேர்ந்த 54 வயது மிக்க நபர் ஒருவர் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர். இதனை நம்பி அவரது உறவினர்கள் அவரது இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்தனர்.

பிணவறையில் அவரை கொண்டு வந்த போது அவரது உடலில் அசைவு தெரிந்தது. உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிருடன் இருப்பதாக கூறினர். அதன் பின்பு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அதில் அவர் நலமுடன் வந்தார். ஆனால் அவரால் வாய் பேச முடியவில்லை. தனது அனுபவத்தை ஒரு பேப்பரில் எழுதி தனது உறவினர்கள் மற்றும் மருத்துவர்களிடம் காட்டினார். இதனை பார்த்த அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி. இந்த சம்பவம் பிரேசில் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி அன்று சண்டையில் இறங்க உள்ள ரஜினியும் அஜித்தும்





இந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் , தல அஜித்தும் போட்டி போடவுள்ளார். ரஜினி தற்போது நடித்து வரும் படம் லிங்கா. இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். அனுஷ்காவும், சோனாக்ஷி சின்ஹாவும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி அன்று வருகிறது. அதற்கு போட்டியாக தலயின் 'தல 55' படத்தின் முதல் லுக் போஸ்டர் வருகிறது.

அஜித் தற்போது நடிக்கும் படத்தை கௌதம் மேனன் இயக்குகிறார். இதிலும் அனுஷ்கா நாயகியாக நடிக்கிறார். இரு படங்களின் இசையும் தீபாவளிக்கு வருகிறது. லிங்கா ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி அன்று வருகிறது. தல 55 எப்போது வருகிறது எனபது குறித்த தகவல்கள் இன்னும் வரவில்லை.

இரண்டு மிகபெரிய ஹீரோக்களின் முதல் லுக் போஸ்டரும் ஒரே நாளில் வருவதால் இது அதிக எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ளது. முதல் லுக் போஸ்டரே ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உலகின் அதிவேகமான வீரர் முதன்முறையாக இந்தியா வருகிறார்




உலகின் வேகமான மனிதர் என அழைக்கப்படுபவர் ஜமைக்காவின் உசேன் போல்ட். இவர் 100 மீ மற்றும் 200 மீ ஒட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்துள்ளார். இவர் 100 மீ ஒட்டபந்தயத்தை 9.58 நொடிகளிளும், 200 மீ ஒட்டபந்தயத்தை 19.19 நொடிகளிளும் முடித்து சாதனை படைத்துள்ளார். நாம் இந்த 4 வரிகளை படித்து முடிப்பதற்குள் அவர் 100 மீட்டரை கடந்து விடுவார். அவர் முதல் முறையாக இந்தியா வரவுள்ளார்.

அவரது ஸ்பான்சர்ஷிப் பூமா நிறுவனம் . அந்த நிறுவனத்தின் அழைப்பின் பேரில் அவர் முதன்முறையாக இந்தியா வரவுள்ளார். செப்டம்பர் 2 ஆம் தேதி இந்தியா வருகிறார். இந்தியாவில் பூமா நிறுவனத்தின் ஸ்பான்சரில் விளையாடுபவர் யுவராஜ் சிங் . இவர்கள் இருவரும் ஒரு கிரிக்கெட் போட்டியில்  விளையாடவுள்ளார்கள். 

ஐஸ் பக்கெட் சாலஞ்சையும் படு கவர்ச்சியாக செய்த பூணம் பாண்டே




அடிக்கடி ஏதாவது செய்து பல சர்ச்சைகளில் சிக்கி கொள்பவர் பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. இந்திய அணி உலக கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஒடுவதாக கூறி இருந்தார். அதன் பிறகு விராத் கோலிக்காக நிர்வாணமாக போஸ் தருவதாக கூறி இருந்தார். இப்படி பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இப்போது பேஸ்புக் முழுவதும் பிரபலமாக உள்ள ஐஸ் பக்கெட் சாலஞ்சை பூணம் பாண்டே செய்துள்ளார்.

இதனையும் மிகவும் கவர்ச்சியாக செய்துள்ளார். இந்த வீடியோவை யூடியூபில் வெளியிட்டுள்ளார். இந்த சால்ஞ்சை அடுத்து செய்யுமாறு பாலிவுட் நாய்கர்கள் ஆமிர் கான், ஷாருக் கான், சல்மான கான் ஆகிய 3 பேருக்கு சவால் விடுத்துள்ளார். அவர்கள் இதனை அடுத்த 24 மணி நேரத்தில் செய்ய வேண்டும்.

அந்த வீடியோ இங்கே உள்ளது,  www.youtube.com/watch?v=4JiAJTFKFNo


மதுக்கடைகளை மூட சொல்லி சென்னையில் செப்டம்பர் 2 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்




தமிழகத்தின் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற கோரி செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னையில் பாமக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். இன்று தமிழகத்தை சீரழித்து கொண்டு இருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் அது மதுக்கடைகளாக தான் இருக்கும். தமிழகத்தை ஆண்டு வந்து கட்சிகள் அண்டை மாநிலங்களிளும் மது விற்பனை நடைபெறுகிறது என்பதை காரணம் காட்டி , தமிழகத்திலும் அதனை செய்து வந்தார்கள். இப்போது தென் மாநிலங்களுக்கு முன்மாதிரியாக கேரளா மாநிலம் மதுவிலக்கை அமல்படுத்த திட்டத்தை தொடங்கி விட்டது.

தமிழகத்தில் உள்ள 60 சதவீத மதுக்கடைகள் குடியிருப்பு பகுதிகளில் தான் உள்ளது. எனவே அவற்றை அகற்ற கோரி செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தோனி இருக்கும் வரை இந்திய அணியில் விளையாட வாய்ப்பே கிடைக்காது - கங்குலியின் கீழ் விளையாடியவரின் புலம்பல்




கங்குலி இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது இந்திய அணி ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் இல்லாமல் திணறி வந்தது. விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் சிறந்த பேட்ஸ்மனாக செயல்பட முடியவில்லை. அதனால் அவர்களால் அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க முடியவில்லை. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு பார்த்திவ் பட்டேலும், தினேஷ் கார்த்திக்கும். எனவே வேறு வழியில்லாமல் ராகுல் டிராவிட்டை கீப்பராக செயல்பட வைத்தார்கள்.

அதன் பிறகு இந்திய தோனி என்னும் சிறந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மன் கிடைத்தார். அணியில் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொண்டு அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். அதன் பிறகு சிறந்த கேப்டனாக செயல்பட்டதால் அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராகவும் மாறினார். அவர் இருக்கும் வரை அணிக்கு எந்த கீப்பரும் வர முடியாத நிலை வந்தது. இது குறித்து பார்த்திவ் பட்டேல் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்திய அணியில் தோனி இருக்கும் வரை 2 வது கீப்பர் என்னும் பேச்சுக்கே இடம் இல்லை. உலகின் சிறந்த கீப்பர் மட்டுமில்லாமல் சிறந்த கேப்டனில் அவரும் ஒருவர் என கூறினார்.

தோனி இன்னும் 4 வருடமாவுது விளையாடுவார் எனவே அடுத்து இந்திய அணிக்கு கீப்பர் ஆகும் வாய்ப்பு ஒரு இளம் வீரருக்கு தான் கிடைக்கும் . எனவே பார்த்திவ் பட்டேலும் , தினேஷ் கார்த்திக்கும் அணிக்கு திரும்புவதற்கு வாய்ப்பே இல்லை.

விக்ரமின் 'ஐ' படத்துக்காக அர்னால்டும் ஜாக்கி சானும் வருகிறார்கள்




இயக்குனர் ஷங்கரின் கடின உழைப்பால் உருவாகி வரும் படம் 'ஐ'. நீண்ட நாட்களாக ஷங்கர் இந்த படத்தை இயக்கி வருகிறார். இதில் விக்ரம் நாயகனாகவும், எமி ஜாக்சன் நாயகியாகவும் நடிக்கிறார்கள். இதனை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்க, ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்துக்காக விக்ரம் கடினமாக உழைத்துள்ளார். தனது எடையை 50 கிலோவாகவும் 130 கிலோவாகவும் மாற்றி நடித்துள்ளார். இந்த படம் தமிழ் மட்டுமில்லாமல் உலக ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்புகளுடன் உள்ளது.

எப்போது வரும் என எதிர்பார்த்துக் கொண்டு இருந்த நிலையில் படம் தீபாவளிக்கு வரும் என்பதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 15 ஆம் தேதி நடக்கிறது. இதற்காக ஹாலிவுட் படங்களின் நாயகன் அர்னால்டு ஸ்வாசனேகர் மற்றும் ஜாக்கி சானும் வர உள்ளார்கள். எனவே படத்தின் இசை மீது அதிக எதிர்பார்ப்பு வர தொடங்கி விட்டது.

பாஜக வில் சேர சொல்லி ரஜினிக்கு நேரடி அழைப்பு




சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாஜக வில் சேரப்போவதாகவும் , அவர் தான் 2016 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் என்றும் கருத்துகள் வந்து கொண்டு இருந்தன. இந்த வேலையை செய்து முடிக்குமாறு மோடி பாஜக தலைவர் அமித் ஷாவிடம் சொல்லியுள்ளார் என்றும் தகவல்கள் வந்து கொண்டு இருந்தன. இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜனிடம் செய்தியாளர்கள் ஒரு கேள்வியை கேட்டனர்.

அதற்கு அவர் அது அதிகாரபூர்வமான செய்தி அல்ல, அது ஊடகங்களால் பரவி கொண்டு இருக்கும் செய்தி. ரஜினி பாஜகவுடன் நல்ல நட்புடன் தான் இருக்கிறார். வாஜ்பாய், அத்வானி முதல் இந்திய பிரதமர் மோடி வரை அனைவரும் ரஜினிக்கு நல்ல நண்பர்கள். எனவே ரஜினியை பாஜக வுக்கு வரும்படி அன்புடன் அழைப்போம் என கூறினார். 2016 தேர்தலுக்கான உத்திகள் அமித் ஷா கையில் தான் உள்ளது என கூறிவிட்டார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media