BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 10 March 2014

கருணாநிதி வெளியிட்ட திமுக வேட்பாளர்கள் 35 பேர் பட்டியல்

திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியன உள்ளன. மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 35 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் கருணாநிதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

வேட்பாளர்கள் விவ‌ரம்:

தென் சென்னை: டி.கே.எஸ். இளங்கோவன்

மத்திய சென்னை: தயாநிதி மாறன்

வட சென்னை: இரா. கிரி ராஜன்

ஸ்ரீபெரும்புதூர்: எஸ்.ஜெகத் ரட்சகன்

காஞ்சிபுரம் (தனி)- ஜி.செல்வம்

அரக்கோணம்- என்.ஆர்.இளங்கோ

கிருஷ்ணகிரி- பி. சின்ன பில்லப்பா

தர்மபுரி- இரா. தாமரைச் செல்வம்

திருவண்ணாமலை- சி.என்.அண்ணா துரை

ஆரணி- ஆர்.சிவானந்தம்

விழுப்புரம் (தனி)- கோ.முத்தையன்

கள்ளக்குறிச்சி- இரா. மணிமாறன்

சேலம்- செ.உமாராணி

நாமக்கல்- செ.காந்தி செல்வம்

திருநெல்வேலி- சி.தேவதாஸ சுந்தரம்

தூத்துக்குடி- பெ.ஜெகன்

கன்னியாகுமரி- எப்.எம்.ராஜரத்தினம்

ஈரோடு- பவித்திரவள்ளி

திருப்பூர்- செந்தில்நாதன்

நீலகிரி (தனி)- ஆ.ராசா

கோவை- கி.கணேஷ்குமார்

பொள்ளாச்சி- பொங்கலூர் நா. பழனிச்சாமி

திண்டுக்கல் - எஸ்.காந்திராஜன்

கரூர்- ம. சின்னசாமி

திருச்சி- என்.எம்.யூ. அன்பழகன்

பெரம்பலூர்- ச.பிரபு என்கிற சீமானூர் பிரபு

கடலூர்- கொ. நந்தகோபால கிருஷ்ணன்

நாகப்பட்டினம் (தனி)- ஏ.கே.எஸ்.விஜயன்

தஞ்சாவூர்- டி.ஆர்.பாலு

சிவகங்கை- சுப துரைராஜ்

மதுரை- வ.வேலுச்சாமி

தேனி- பொன். முத்துராமலிங்கம்

விருதுநகர்- எஸ்.ரத்தினவேல்

ராமநாதபுரம்- எஸ்.முகமது ஜலீல்

புதுச்சேரி - ஏ.எம்.எஹ்.நாஜிம்

மயிலாடுதுறை- மனித நேய மக்கள் கட்சி

வேலூர்- இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

சிதம்பரம்- விடுதலை சிறுத்தைகள்

திருவள்ளூர் (தனி) - விடுதலை சிறுத்தைகள்

தென்காசி- புதிய தமிழகம்

திமுகவின் தேர்தல் அறிக்கை நாளை (செவ்வாய் கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

40 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து நின்று, தன் சாதனைகளை கூறி ஓட்டு கேட்கும்-ப.சிதம்பரம்


தமிழகத்தில், காங்கிரஸ் கட்சி, திமுகவுடன் கூட்டணி அமைக்க பல‌ முயற்சிகள் எடுத்தும், அதற்கு பலன் இல்லாமல் போனதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க எந்த கட்சியும் முன்வரவில்லை என்றாலும், காங்கிரஸ் தனித்தே மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் மேலும் கூறும்போது, "காங்கிரஸ் கூட்டணி அமைத்தோ அல்லது தனித்தோ மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும். ஒருவேளை கூட்டணி எதுவும் அமையவில்லை என்றாலும், அனைத்து (40 இடங்கள்) தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துவோம். கட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்போம்" என்று கூறினார் ப.சிதம்பரம்.

எந்தெந்த‌ சாதனைகளை கூறி ஒரு வேளை காங்கிரஸ் தமிழகத்தில் வாக்கு கேட்கலாம் என்று உங்கள் யூகங்களை, கமென்ட் செய்யுங்கள்!

தமிழகத்தில், கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டி


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடந்தது. அப்பொழுது, நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில தொகுதிகளில் திமுகவுடன் அக்கட்சி இணைந்து போட்டியிடும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைவரான தா.பாண்டியன் தெரிவித்தார். தாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக செயல்படும் கட்சிக்கு வாக்களிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

மலேசிய விமானத்தில் பயணித்தவரின் செல்போன் பயன்பாட்டில் இருக்கிறது


மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி 239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், நேற்று முன்தினம் அதிகாலையில் காணாமல் போனது.

வியட்நாம் அருகே உள்ள தோ சூ தீவுக்கு தென்மேற்கு பகுதியில் விமானத்தின் வால் பகுதி மற்றும் கதவு பகுதிகள் உடைந்து கிடந்ததை அந்நாட்டு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அது, காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. காணாமல் போன விமானத்தில் பயணம் செய்த ஒரு சீன பயணியின் செல்போன் இன்னும் பயன்பாட்டில் உள்ளதாக அவரது உறவினர்கள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர். அவரது செல்போன் நம்பரை தொடர்பு கொண்டபோது, மணி ஒலித்துக்கொண்டே இருப்பதாகவும், யாரும் அதை எடுத்து பேசவில்லை என்றும் தெரிவித்தனர். செல்போன் சிக்னல்களை வைத்து விமானத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றும், இதற்காக செயற்கைக் கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பயணிகளின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

நன்றிக்கடனுக்காக, சோனியா, ராகுலுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த மாட்டோம்: அகிலேஷ்


சமாஜ்வாதி கட்சி தலைவர் மற்றும் உத்தரபிரதேச மாநில முதல்வருமான அகிலேஷ் யாதவ், தன் மனைவி டிம்பிள், கன்னோஜ் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டபோது அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை என்பதனால், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக தற்போது சோனியா மற்றும் ராகுலை எதிர்த்து தங்கள் கட்சி சார்பாக எந்த‌ வேட்பாளரையும் நிறுத்தப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

இதன் மூலம் ஒரு வேளை பாராளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காமல் போனால் மூன்றாவது அணி சார்பில் முலாயம் சிங்கை பிரதமராக்கும் வாய்ப்பு கிட்டும் என்று சமாஜ்வாதி கருதுவது குறிப்பிடத்தக்கது.

கலைஞரிடம், எங்களுக்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும் என வாதாடி பார்த்தேன். போராடி பார்த்ததேன்-திரு.மா


திண்டிவனத்தில் மகளிர் தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:

தி.மு.க. கூட்டணியில் 6-ந்தேதி நடத்திய பேச்சுவார்த்தையில் ஒரு தொகுதிதான் என உடன்பாடு ஆனது.  கலைஞரிடம், எங்களுக்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும் என வாதாடி பார்த்தேன். போராடி பார்த்ததேன். அன்றைக்கு இயலாத நிலை இருந்தது. ஆனால், மறுநாள் கலைஞர் அறிவாலயத்திற்கு என்னை வரவழைத்து, நீங்கள் விரும்பியபடி 2 தொகுதிகள் வழங்கப்படுகிறது. ஒரு தொகுதி சிதம்பரம், மற்றொரு தொகுதி திருவள்ளூர் என்று சொன்னார்.

நான் விழுப்புரம் தொகுதியை கேட்டபோது, போன முறை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் தொகுதி கொடுத்தோம். ஆனால் நீங்கள் வெற்றிபெறவில்லை. 2 ஆயிரத்து 791 ஓட்டு வித்தியாசத்தில் தோற்று போனீர்கள். அதனால் இந்த முறை வேண்டாம் என்று சொன்னார்.

நமது உணர்வுகளை மதித்து, அன்போடு அழைத்து தொகுதி ஒதுக்கீடு தந்த கலைஞருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன். 2 பாராளுமன்ற தொகுதி என்றால், 12 சட்டமன்ற தொகுதி. இந்த வலிமையை நாம் பெற்றிருக்கிறோம்.

இவ்வாறு திருமாவளவன் பேசியிருந்தார்.

விவரம் அறியாமல் பேசி விவகாரத்தில் மாட்டினார், உயிரோடு இருப்பவருக்கு குஜராத்தில் அஞ்சலி செலுத்திய கேஜ்ரிவால்


 குஜராத்தில் 4 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 8-ம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். குஜராத்தில் ஊழலை எதிர்த்து போராடி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அவற்றை அம்பலப்படுத்த முயன்ற பலர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறிய அவர், உதாரணத்துக்கு 4 பெயர்களை குறிப்பிட்டார். மேலும், அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அந்த நால்வரின் ஆன்மாக்களும் சாந்தியடைய வேண்டிக் கொள்வதாக கூறினார்.

கெஜ்ரிவால் குறிப்பிட்ட 4 பெயர் கொண்ட பட்டியலில் ஒருவர் மட்டும் கடந்த 2010-ம் ஆண்டு குஜராத் உயர் நீதிமன்ற‌ வாசலில் கொல்லப்பட்டார். மீதி 3 பேரும் தாக்குதல்களுக்கு பிறகு சிகிச்சை பெற்று உயிருடன் வாழ்ந்து வருகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

விவரங்களை முழுதாக அறியாமல் பேசியதனால், பாஜகவினரின் கேலிக்கு உள்ளாகி இருக்கிறார், கேஜ்ரிவால்.

சென்னை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 4000 புகார்கள் குவிந்துள்ளது, ஒரு நாளுக்கு 500 புகார்கள்


நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகளை தேர்தல் துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியை கண்காணிக்க‌ 3 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்திலும் மத்திய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 1-ம் தேதியில் இருந்து இதுவரை 4 ஆயிரம் புகார்கள் குவிந்துள்ளன என்றும்,  ஒரு நாளுக்கு குறைந்தது 500 புகார்கள் வருகின்றன என்றும் தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள்னர். 

வெளி மாவட்ட புகார்கள் வந்தால் அந்த மாவட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்க உத்தர விடப்படுகிறது. இதுபோன்ற புகார்களைத் தொடர்ந்தும், வாகனச் சோதனையின்போதும், ஞாயிற்றுக்கிழமை மாலை வரை சுமார் ரூ.1 கோடி பிடிபட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சிகளின் துணை இல்லாமல், அதிமுகவால் வெற்றி பெற முடியாது-பிரகாஷ் காரத்


நாகை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் உள்ள வெண்மணி தியாகிகள் நினைவிடம் புதுப்பிக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டது.  இந்த நினைவிடத்தைத் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலர் பிரகாஷ் காரத் திறந்து வைத்தார். தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் அதிருப்தி காரணமாக, அதிமுக கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியேறியது. இது தொடர்பாக பேசிய அவர், தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லாமல் அதிமுகவால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று கூறினார்.

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மக்களவைத் தேர்தலைச் சந்திக்கும் என்ற அவர், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆட்சிக்கு வராமல் தடுப்பதே இவ்விரு கட்சிகளின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.

பிரகாஷ் காரத் கூறியிருப்பது பற்றி தங்களுடைய கருத்தை கமென்ட் செய்யுங்கள்.

திமுக வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு

ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க.வின் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளனர். தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும் 35 வேட்பாளர்கள் பட்டியலையும், புத்தகமாக அச்சிடப்பட்டுள்ளா திமுக தேர்தல் அறிக்கையையும், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் 12 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி பத்திரிக்கையாளார்கள் முன்னிலையில் வெளியிடுகிறார்.

பாராளுமன்ற தேர்தலில், தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி மட்டும் வேட்பாளரை அறிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியே தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளரும் இன்று அறிவிக்கப்பட உள்ளனர்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media