BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 25 June 2014

பா.ஜ.க. விற்கு அடுத்த தலைவர் ரெடி !!


பா.ஜ.க, தலைவராக உள்ள ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளதால், அக்கட்சி விதிப்படி, புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். 

புதிய தலைவர் போட்டியில் அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் இருந்தனர். இந்நிலையில், பா.ஜ., தலைவராதற்கான வாய்ப்பு அமித் ஷாவிற்கு அதிகமாக உள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முறைப்படியான அறிவிப்பு வரும் 28ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.



மாயமான MH 370 விமானத்தை கண்டுபிடிப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் !!






மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் சென்றது மலேசியன் ஏர்லைன்சை சேர்ந்த MH 370 என்னும் விமானம். இது பயணம் செய்து கொண்டு இருக்கும் போது அதிகாலை 3.30 மணி போல் மாயமாகிவிட்டது. உடனடியாக அதனை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணி இன்னும் நிறைவடைய வில்லை. இன்னும் அதனை தேடி வருகிறார்கள். அது மாயமான பிறகும்  இந்திய பெருங்கடலுக்கு மேல் பறந்து இருக்கலாம் என்று இப்போதைய தகவல்கள் கூறுகின்றன. இன்று மலேசியன் ஏர்லைன்ஸ் புதிய தகவலை கூறி உள்ளது. அதாவது அந்த விமானத்தை தேடி கண்டுபிடிப்பதற்கு இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம்  என்று அதிர்ச்சிகுரிய தகவலை தெரிவித்து உள்ளது.


நோன்பு கஞ்சி குடிக்க அரிசி தரும் “அம்மா” : முஸ்லிம் ஒட்டுகளை கவரவோ ??



             ரமலான் நோன்பு இருக்கும் ஒரு மாதத்திற்கு பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி தருவதற்கு தேவையான அரிசியை அரசு இலவசமாக தர போவதாக தமிழக அரசு கூறியுள்ளது. இதற்கு 4500 டன் அரிசி தேவைப்படும் என்று தெரிவிக்கபட்டு உள்ளது. அந்தந்த மாவட்டங்களிள் உள்ள கலெக்டர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார். இதன் மூலம் 3000 மேற்பட்ட பள்ளிவாசல்கள் பயன் பெறும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

            இது ஒரு நல்ல திட்டம் தான் , ஆனால் இது தேர்தல் நோக்கத்துடன் முஸ்லிம் கவருவதற்காக இருக்க கூடாது.


வெள்ளை மாளிகையை பின்னுக்கு தள்ளி முன்னேறிய மோடி, டிவிட்டரில் தொடர்ந்து முன்னேற்றம்

வெள்ளை மாளிகையை பின்னுக்கு தள்ளி முன்னேறிய மோடி, டிவிட்டரில் தொடர்ந்து முன்னேற்றம்

டிவிட்டர் இணையதளத்தை இப்போது உள்ள தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவிப்பதற்கு பயன்படுத்தி வருகிறார்கள் . இதில் இந்தியாவில் அதிகம் பேர் பின் தொடரும் நபர் நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். இவரை இது வரை 4.9 மில்லியன் மக்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். இது அமெரிக்காவின் கோட்டையான வெள்ளை மாளிகையை பின் தொடருபவர்களை விட அதிகம் . இது ஒரு சாதனையாக பார்க்கபடுகிறது. 

உலகில் உள்ள தலைவர்களில் அதிகம் பேர் பின் தொடரும் நபர் அமெரிக்காவின் அதிபர் ஒபாமா ஆவார். இவரை 43 மில்லியன் நபர்கள் பின் தொடருகிறார்கள் . இவருக்கு அடுத்த படியாக போப் பிரான்சிஸ் இருக்கிறார் , அடுத்த இடத்தில் இந்தோனேசியா பிரதமர் உள்ளார். இதில் மோடி 4 வது இடத்தில் இருக்கிறார். பிரதமராவதற்கு முன் 6 வது இடத்தில் இருந்தார்.


டிவிட்டரில் யார் முன்னிலை வகிக்கிறார் என்பதை ஒரு தேசத்தின் பெருமையாகவே பார்க்கிறார்கள்.

சுயமரியாதையும், தன்மானமும் தலைமைக்கு மட்டும் தானா? ஸ்டாலின் மீது குற்றம் சாட்டிய கே.பி. ராமலிங்கம்



ஜெயலலிதா கட்சியிலிருந்தும் அமைச்சர் பதவியிலிருந்தும் யாரையாவது சஸ்பெண்ட் செய்தால் அவர்கள் அம்மாவே சரணம் என்று கூறி பத்திரிக்கையினரிடம் எதுவும் பேசமாட்டார்கள், ஒரு முனுமுனுப்பு கூட வராது, ஆனால் திமுகவில் யார் மீதாவது நடவடிக்கை எடுத்தால் தலைமையை கடுமையாக விமர்சித்து பத்திரிக்கையில் பேட்டி கொடுப்பார்கள்



கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் மீது பல குற்றச்சாட்டுகளை கூறி திமுக‌ தலைவர் கருணாநிதிக்கு சஸ்பென்ட் செய்யப்பட்ட கே.பி. ராமலிங்கம் கடிதம் அனுப்பியுள்ளார்.கடந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை முன்னிட்டு தி.மு.க.வில் இருந்து விவசாய பிரிவு அணி செயலாளர் கே.பி. ராமலிங்கம் எம்.பி. உள்பட 33 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். கருணாநிதிக்கு எழுதிய விளக்க கடிதத்தை கே.பி. ராமலிங்கம் வெளியிட்டார்.அதில் ஸ்டாலின் மீது குற்றப்பத்திரிக்கை வாசித்துள்ளார். அதில் உள்ள விவரங்கள்

1990 ஆம் ஆண்டு இப்போது போன்று நாடாளுமன்ற தேர்தலில் நமது இயக்கம் தோற்ற நிலையில் தங்களிடம் என் அரசியல் வாழ்வை ஒப்படைத்து தி.மு.க.வில் இணைந்தேன். தாங்களும் இந்த 24 ஆண்டுகளில் என்னை உங்கள் பிள்ளையாக கருதி 3 முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவும், ஒருமுறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதித்தும் நாடாளுமன்ற மக்களவையில் பணியாற்றுவதற்கும் தற்போது 2010 முதல் மாநிலளங்களவையில் பணியாற்றுவதற்கும் வாய்ப்பளித்தீர்கள்.அது மட்டுமல்லாமல் என் குழந்தைகளுக்கு சிந்தாமணி, அதியமான் என்று பெயர் சூட்டியும் என் குடும்பத்தின் பாதுகாவலராக இருக்கின்றீர்கள்.என் வாழ்நாளில் தங்களை நன்றிக்குரியவராகத்தான் பார்க்கிறேன். என் தந்தை இல்லாத நிலையில் தங்களை என் தந்தை இடத்தில் வைத்துதான் வணங்குகிறேன்.

தங்கள் குடும்பத்தைச் சார்ந்த அனைவரிடமும் பாசத்துடன்தான்-தலைவர் குடும்பம் என்ற பக்தியுடன்தான் பழகி வருகிறேன்.அவமானப்படுத்துவதா?ஆனால் அதில் உங்களது பிள்ளைகளில் ஒருவருக்கு என்னை பிடிக்கவில்லை என்பதற்காக கட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தி என்னை அவமானப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?கடந்த 10 ஆண்டு காலமாக எனக்கு நமது கட்சியில் அரசியலில் அதிகாரம் படைத்த அந்த பிள்ளையால் ஏற்பட்ட அவமானங்களை நீங்கள் ஏன் சரிபடுத்தவில்லை?.

அவர் சுற்றுப்பயணம் வரும்போது 2 மணி நேரம் 3 மணி நேரம் ரயிலடியிலும் சாலை ஓரங்களிலும் கால்கடுக்க சால்வையை தூக்கிக்கொண்டு நின்றால் காரில் அமர்ந்து கொண்டு கூட்டத்திற்குள் சிக்கி தவிக்கும் எங்களைப் பார்த்து ஒரு புன்முறுவல்கூட இல்லாமல் ஏதோ அடிமை ஒருவன் தங்களுக்கு சேவை செய்ய நிற்கிறான் என்பது போல பார்ப்பது; முக்கிய நிகழ்வுகளில் எங்கள் பெயரை போட வேண்டாம் என்பது-நாங்கள் வகிக்கும் பொறுப்பை கேலி பேசுவது-தான் நிர்வகிக்கும் அணிதான் சிறந்தது என தனக்குத்தானே மார்தட்டி எங்களை தோழர்கள் முன்பே மட்டமாக பேசியது தாங்கள் அறியாததா?ஏன் புறக்கணிப்பு?வீரபாண்டியார் சேலம் மாவட்ட செயலாளராக இருந்த காலம் வரை சேலத்தில் நடந்த அத்தனை போராட்டங்கள்-தாங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் அது அரசு நிகழ்ச்சிகளாக இருந்தாலும் கழக நிகழ்ச்சியாக இருந்தாலும் எனக்கு உரிய பங்கு அளிக்கப்பட்டிருந்ததை தாங்களால் மறுக்க முடியாது.ஆனால் தற்போது ஏற்காடு இடைத்தேர்தலுக்கு ஏன் தேர்தல் பணிக்குழுவில் என் பெயர் சேர்க்கப்படவில்லை என்று அந்த அரசியல் அதிகாரம் படைத்த பிள்ளையிடம் தாங்கள் ஏன் கேட்கவில்லை? நாடாளுமன்ற தேர்தலில் நியமிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலில் கிரிமினல் குற்றவாளிகளுக்கு கூட இடம் அளிக்கப்பட்டிருந்த நிலையில் எனக்கு ஏன் இடம் அளிக்கப்படவில்லை என்று தேர்தலை முன்னின்று நடத்திய அந்த பிள்ளையிடம் தாங்கள் ஏன் கேட்கவில்லை?

நான் கட்சியில் சேர்ந்த காலத்திலேயே திருச்சியில் நடைபெற்ற 6வது மாநில மாநாட்டில் என்னை பேச அனுமதித்த தாங்கள் தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் என்னை பேச அனுமதிக்காதது ஏன் என்று அந்த மாநாட்டின் சூத்திரதாரியாக இருந்த தங்கள் பிள்ளையை கேட்காதது ஏன்?என்ன குற்றம் செய்தேன்?இப்படி இன்னும் நூற்றுக்கணக்கான ஆதங்கங்கள் என் உள்ளத்தில் இருக்கின்ற நிலையில்தான் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் தவறு செய்தவர்கள் என்று ஒரு பட்டியல் போட்டு என்ன தவறு செய்தாய் என்று கூட என்னை கேட்காமல் நான் வகித்த பொறுப்புகளை நீக்கியும் ;கழகத்தைவிட்டு தற்காலிகமாக நீக்கியும் அறிவிப்பு வெளியிட்டு தலைமை கழகத்தின் பெயரில் என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு 1 வார காலத்திற்குள் பதிலும் கேட்டுள்ளார்கள்.

என் மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டுள்ளது? யார் சுமத்தினார்கள்? கழக வேட்பாளர்களுக்கு எதிராக எந்த பகுதியில் நான் ஓட்டு கேட்டேன்? எந்த கூட்டத்தில் கழகத்திற்கு எதிராக பேசினேன்? என்ற விவரங்கள் இல்லாமல் சட்டதிட்ட விதி 37 பிரிவு 4-ன் படி ஒழுங்கு நடவடிக்கையென்றால் அதுவும் ஊடகங்கள்-பத்திரிக்கைகள் மூலம் நடவடிக்கையென்றால்-இது கழகத்திற்கு 24 ஆண்டுகள் உழைத்த உங்கள் தொண்டனுக்கு அவமானமாக இருக்காதா?
இந்த அவமானத்தை சுமந்துகொண்டு எந்த முகத்தை வைத்துக் கொண்டு எதிர்கட்சிகளின் அவலங்களை மேடையில் நான் முழங்க முடியும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

சுயமரியாதை உணர்வும்-தன்மான உணர்வும் தி.மு.க.வின் உயிர் மூச்சு யென்றால் அது நமது தலைமைக்கு மட்டும்தானா? என்னை போன்ற உங்கள் தொண்டனுக்கு இருக்க கூடாதா?தலைவர் கலைஞரின் செல்வாக்கு- தியாகம்-உழைப்பு இவைகளை கேடயமாக பயன்படுத்தி தலைமைக்கு வர துடிக்கும் தங்கள் பிள்ளை-தலைவர் கலைஞருக்கு தொண்டு செய்ய நினைப்பவர்களை அடிமைகளாக நடத்த தாங்கள் அனுமதிக்கலாமா?இவைகள் என் இதயத்தை நொறுங்கச் செய்யும் கேள்விகள்.

இந்த நிலையில் தலைமை கழகத்திற்கு, என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்களுக்கு ஆதாரம் வழங்கப்படாத நிலையில் என்ன பதில் சொல்வது?ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் அவைகள் என்பது மட்டுமே என்னுடைய பதிலாக ஏற்றுக்கொள்ள பணிவன்புடன் வேண்டுகிறேன்..

இவ்வாறு கே.பி. ராமலிங்கம் கூறியுள்ளார்

எதிரணி வீரரை நாய் மாதிரி கடித்து வைத்த ஸ்வாரசு, எதுக்குடா இந்த மானம்கெட்ட பொழப்பு !!


உருகுவே அணியின் நட்சத்திர வீரர் என்று அனைவராலும் பாராட்டப்படுபவர் ஸ்வாரஸ் . இவர் கோல் அடிப்பதில் சிறந்த வீரர் தான் ஆனால் நேர்மையாகவும் , ஒழுக்கமாகவும் விளையாடிகிறாறா என்றால் உறுதியாக கூறலாம் இல்லை என்று. நேற்று நடந்த இத்தாலிக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் பின்கள வீரர்  சேலானி என்பவரை கடித்து வைத்து விட்டார். 

அவர் வேறு ஒரு வீரரை கடித்து வைப்பது இது முதல் முறை அல்ல ,இது மூன்றாவது முறையாகும். இவர் இது போல பல சர்ச்சைகளில்  சிக்கி உள்ளார். 2010 உலக கோப்பையின் போது கானா வீரர் அடித்த பந்தை இவர் கையால் தடுத்து விட்டார். இதனால் அது கோல் ஆக வில்லை என்பதால் கானா அணி சோகத்துடன் வெளியேறும் நிலை ஏற்பட்டது. அதனால் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. பிறகு 2011 இல் ஆட்டத்தின் போது இனவெறியை தூண்டியதற்காக 8 ஆட்டங்களுக்கு தடை செய்யப்பட்டார். பிறகு 2013 இல் செல்சீ அணி வீரர் இவானோவிக்கை கடித்ததிற்காக 10 ஆட்டங்களுக்கு தடை செய்யப்பட்டார். இப்போது மீண்டும் ஒரு கேவலமான செயல் .  இவருக்கு வாழ்நாள் தடை விதிப்பதே இதற்கு சிறந்த முடிவாகும்.

யாரும் ஸ்வாரசின் ரசிகர்கள் என்று கூற வேண்டாம், ஏனென்றால் அதுவும் ஒரு கேவலமான செயல் தான். ரோனால்டோ , மெஸ்ஸி ஆகியோர் இன்னும் சிறந்த வீரர்களாக இருப்பதற்கு முக்கிய  காரணம் அவர்கள் சிறப்பாக ஆடுவதால்  மட்டும் இல்லை நேர்மையும் ஒழுக்கமும் தெரிந்தவர்கள். சச்சின் ,டிராவிட், தோனி என நேர்மையான வீரர்களை ஆதரித்த நாம் இவனை போன்ற கேவலமானவனை ஆதரிக்க கூடாது.

காண்டமும் சிறந்தது தான் : மோடி அமைச்சர் பேச்சு

நாம் எய்ட்ஸ் நோயை காண்டத்தினால் ஒழிக்க கூடாது, கணவன் மனைவி இருவருக்கும் உள்ள நேர்மை அதிகரிக்க வேண்டும் . எய்ட்ஸ் நோயை அழிக்க நாம் காண்டம் பயன்படுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க கூடாது . இது காண்டம் பயன்படுத்தி தவறான உற்வுகளில் ஈடுபடலாம் என்ற தவறான கருத்தை மக்களிடம் சேர்க்கிறது என்று கூறி இருந்தார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் .

எய்ட்ஸ் நோயை ஒழிக்க காண்டம் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை இது அழித்துவிடும் என்று அவரது இந்த கருத்திற்க்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது,

அவரிடம் இன்று செய்தியாளர்கள் இது குறித்து கேட்ட போது தான் கூறியது அனைவரும் தவறாக புரிந்து கொண்டதாக கூறினார். அவர் சொன்னது என்னவென்றால் காண்டமும் பாதுகாப்பானது தான் ஆனால் அதை விட கணவன் மனைவி இடையே உள்ள நேர்மை தான் அதை விட சிறந்த பாதுகாப்பு ஆகும் . அதுவே இதனை அழிப்பதற்கான நிரந்திர தீர்வு ஆகும் என்றார் .

என்ன சரி தானே மக்களே . இவர் அந்த விஷயத்திற்கு சரிபட்டு வரமாட்டார் என்று உள்மனதில் நினைகிறீர்களா ??

ரஜினி பிறந்த நாளில் லிங்கா திரைப்படம் வெளியாகிறது !!




கே.ஸ்.ரவிகுமார் நடிப்பில் ரஜினி நடிக்கும் திரைப்படம் லிங்கா . இதில் அனுஷ்கா ,சோனாக்க்ஷி சின்ஹா, சந்தானம் என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது .இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரஜினி உடல் நிலை சரியான பிறகு ரஜினி நேரடியாக நடிக்கும் திரைபடம் இது.இதனால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ரஜினி இந்த படத்தில் இரு வேடங்களில்  நடிப்பதாக கூறப்படுகிறது. கோச்சடையன் ரஜினிக்கு பெரிய வெற்றியை தராததால் அவரது ரசிகர்கள் பெரிய வெற்றி படத்தை எதிர்ப்பார்த்து காத்து கொண்டு இருக்கிறார்கள் .இந்த படத்தை ரஜினியின் பிறந்த நாளன டிசம்பர் 12 ஆம் தேதி அன்று ரிலீஸ் செய்யபோவதாக தயாரிப்பு வட்டங்கள் கூறுகின்றன.

இன்று முதல் புதிய ரயில் கட்டணம் !!


உயர்த்தப்பட்ட ரயில் கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

எனவே மக்கள் பழைய டிக்கெட் தொகையை எடுத்து செல்லாமல் புதிய கட்டணத்திற்காண தொகையை எடுத்து செல்லவும் . சென்னை புறநகர் கட்டணங்களிளும் மாற்றங்கள் வந்து உள்ளன. முன்பு மாதாந்திர சீசன் டிக்கெட்டிற்கு ஒரு நேர பயண கட்டணத்தை 15  ஆல் பெருக்குவார்கள் ஆனால் இப்போது அதனை 30 ஆல் பெருக்குவார்கள். அதனால் அவர்களது கட்டணங்கள் இருமடங்கு ஆகிறது. 


சக்கரை விலை உயர்ந்ததால் , அடுத்து டீ , காபி விலையை உயர்த்த திட்டம் !!!



தமிழகத்தில் இப்போது பல பேர் சிறிய டீக்கடைகளில் டீ குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் . அந்த கடைகளி டீ ரூபாய் 6 க்கும் , காபி ரூபாய் 8 க்கும் விற்கப்பட்டு வருகிறது .

கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசு சர்க்கரை விலையை உயர்த்த அறிவிப்பு வழங்கியது . கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவை தொகை 11 ஆயிரம் கோடியாக உள்ளது . இந்த நிலுவை தொகையை செலுத்தி அந்த தொழிலாளர்களின் வளத்தை உயர்த்த சர்க்கரையின் விலையை உயர்த்த திட்டமிட்டனர் .

இந்த விலை உயர்வால் கிலோ ரூபாய் 33  என்று விற்க்கப்பட்ட அரிசி 35 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது .

இதனால் சிறிய டீக்கடை வியாபாரிகள் , அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் டீ , காபி விலையை ரூபாய் 1 உயர்த்த திட்டமிட்டுள்ளனர் !!!

மேலும் 30 சிறுவர்களை கடத்திச் சென்றது போக்கோ ஹாரம் தீவிரவாத அமைப்பு !!!



நைஜீரியாவில் மேற்கத்திய கல்வி முறைகளை எதிர்த்து போக்கோ ஹாரம் என்னும் அமைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் . ஏப்ரல் மாதத்தில் 200 சிறுமிகளை கடத்தி சென்றனர் . அந்த சிறுமிகளை ராணுவம் இன்னும் மீட்கவில்லை .

இந்நிலையில் , கும்மாப்ஜா என்னும் கிராமத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடுதலில் ஈடுபட்டனர் . இந்த தாக்குதலில் 30 க்கும் மேற்பட்டோர் பலியாயினர் . மேலும் 60 பெண்களைக் கடத்தியும் சென்று உள்ளனர் . அந்த தாக்குதலில் இருந்து தப்பி ஓடி அருகில் உள்ள கிராமங்களில் தஞ்சம் புகுந்த மக்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர் .

ஆனால் இந்த சம்பவத்தை அந்நாட்டின் அரசு முடிவு செய்யவில்லை !!!

காபி வித் டிடி யில் : இந்த வாரம் டிடி யின் கல்யானம் !!

டிடி என்றாலே தமிழர்கள் அனைவருக்கும் தெரிந்தது விஜய் டிவி தொகுப்பளர் திவ்யதர்ஷினி தான் .அந்த அளவிற்கு தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து உள்ளார். 

அவரது திருமணம் எப்போது என பலர் எதிர்பார்த்து கொண்டு இருந்த நிலையில் அவரது திருமணம் இந்த மாதம் 29 ஆம் தேதி நடைபெறுகிறது. அவரது நண்பன் ஆன ஸ்ரீகாந்த் ரவிசந்திரன் என்பவரை கரம் பிடிக்க உள்ளார் . ஒரு சாதரண ஆளின் திருமணம் என்றாலே விஜய் டிவி யில் சும்மா விட மாட்டர்கள் . 

இதில் அவர்களது வீட்டு பிள்ளையான டிடி யின் திருமணம் என்றால் அது அவர்களுக்கு திருவிழா தான். இந்த வாரம் 7 மணிக்கு எப்போதும் போல காபி வித் டிடி நிகழ்ச்சியில் வருகிறார் டிடி ஆனால் அவர் வருவது தொகுப்பாளராக அல்ல் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக




எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்க புதிய யோசனை சொல்லும் மத்திய அமைச்சர் !!!!!




இந்தியாவில் 2 லட்சத்திற்கு மேற்பட்டோர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் .

இதை தடுக்க மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் புதிய யோசனை ஒன்றை சொன்னார் . அந்த யோசனையின் படி நாம் எய்ட்ஸ் நோயை இந்தியாவின் பண்பாட்டினால் எதிர்க்க வேண்டும் காண்டமினால் எதிர்க்க கூடாது .

தொலைபேசி உரையாடல் ஒன்றில் பேசிய ஹர்ஷா வர்தன் , " கணவன் மனைவி இருவருக்கும் உள்ள நேர்மை அதிகரிக்க வேண்டும் . எய்ட்ஸ் நோயை அழிக்க நாம் காண்டம் பயன்படுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க கூடாது . இது காண்டம் பயன்படுத்தி தவறான உற்வுகளில் ஈடுபடலாம் என்ற தவறான கருத்தை மக்களிடம் சேர்க்கிறது " என்றார் .

அம்மா மருந்தகங்களை தொடங்குகிறார் தமிழக முதல்வர் !!!


அம்மா குடிநீர் , அம்மா உணவகம் , அம்மா உப்பு இந்த வரிசையில் அம்மா மருந்தகங்க்ளை நாளை 100 இடங்களில் துவங்க உள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா ..

தமிழகத்தில் கூட்டுறவு மருந்தகங்கள் 10 சதவீதம் தள்ளுபடியில் மருந்துகளை விற்பனை செய்து வருகின்றனர் . தமிழகத்தில் 210 கூட்டுறவு மருந்தகங்கள் உள்ளன . இந்நிலையொல் மேலும் 100 அம்மா மருந்தகங்களை துவக்க உள்ளார் முதல்வர் .சென்னையில் 20 மருந்தகங்களும் , பிற மாவட்டத்தில் 80 மருந்தகங்களும் துவங்க முடிவு செய்துள்ளனர் .

இதற்கென 20 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது . இதற்கான அறிவிப்பை பிப்ரவரி மாதம் வெளியிட்ட தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் இடம் பெற்று இருந்தது .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media