BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 15 November 2014

உணவே மருந்து : வயிற்று கொழுப்பை குறைக்கும் புளுபெர்ரி


நீலநிறத்தில் காணப்படும் புளுபெர்ரி பழமானது எடை குறைப்புக்கு பெரிதும் உதவுகிறது. உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் புளுபெர்ரி பழங்களை சாப்பிடலாம். இப்பழத்தை உட்கொள்வதால் வயிற்றில் உள்ள கொழுப்புகளை அகற்றி உடலை பாதுகாக்கிது. சிலர் தொப்பையை குறைக்க முடிவதில்லை என கவலைப்படுவது உண்டு. அவர்கள் உலர்ந்த புளுபெர்ரியை சாப்பிட்டு தொப்பைக்கு டாடா காட்டிவிடலாம். ஏனெனில் இப்பழத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் இரத்ததில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்றி சிக்கென்று உடலை வைத்துக்கொள்ள உதவி புரிகிறது. 

உயர் இரத்த அழுத்தம் தடுக்க : நீல மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும் பழங்கள் அனைத்திலும் அந்தோசியனின்கள் உள்ளது. உயர் இரத்த அழுத்தத்திற்கு எதிராக இந்த நிறமிகள் போராடி உடல் நலத்தை பாதுகாக்கிறது. புளுபெர்ரியை வைத்து மேற்கொண்ட ஒரு ஆய்வில் 134000 பெண்கள் மற்றும் 23000 ஆண்கள் சோதனைக்கு உட்படுத்தபட்டனர். அவர்களுக்கு வாரத்திற்கு 1/2 கப் பழங்கள் கொடுக்கப்பட்டது. அதில் அவுரிநெல்லி பழங்களை சாப்பிட்டவர்களுக்கு இரத்த அழுத்தமானது, பழங்களை உட்கொள்ளாதவர்களை விட குறைவாக உள்ளது கண்டறியப்பட்டது.

தீவிரவாதிகள் ஊடுருவலை கட்டுப்படுத்த இந்தியா- மியான்மர் உறுதி



இந்தியா - மியான்மர் எல்லையில் அதிகரித்து வரும் பயங்கரவாதிகளின் ஊடுருவல்கள், ஆயுதக் கடத்தல் உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்துதில் இணைந்து செயல்பட இரு தரப்பு அதிகாரிகளும் முடிவெடுத்துள்ளனர். இதுதொடர்பாக, இரு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளிடையே மியான்மரில் நான்யான் பகுதியில் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் அருணாசலப் பிரதேசத்தின் சங்லாங் மாவட்ட காவல்துறை துணை ஆணையர் சாஞ்சல் யாதவ் தலைமையிலான அதிகாரிகள் பங்கேற்றனர். இந்திய-மியான்மர் எல்லையில் பயங்கரவாதக் குழுக்களின் நடவடிக்கைகள், ஆயுதக் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் ஆகியவை குறித்து உளவுத் தகவல்களை பரிமாறிக் கொள்ள இரு நாட்டு அதிகாரிகளும் ஒப்புக்கொண்டனர்.

எல்லைப் பகுதிகளில் செயல்பட்டு வரும் நாகலாந்து தேசியவாத சோஷலிஷ குழுக்கள் அதிக பலம் பெற்று வருவதாகவும், உல்ஃபா பயங்கரவாத அமைப்பின் உதவியுடன் அவற்றின் நடவடிக்கைகள் பெருகி வருவதாகவும் மியான்மர் அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அமைப்புகளைக் கட்டுப்படுத்த இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பின் அவசியம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மியான்மரிலிருந்து பயங்கரவாதிகள் ஊடுருவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்நாட்டு அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும், இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஏற்படும் தொய்வினைத் தடுக்கும் வகையில் சாலைப் போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

தமிழரின் அறியியல் : எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!



தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!

அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம்
சாதித்து விட்டோம்..!

ஆஸ்திரேலியாவில் மோடி : ஜி-20 மாநாட்டில் உரையாற்றுகிறார்


பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாள் பயணமாக ஆஸ்திரேலியா வந்து சேர்ந்தார். சனிக்கிழமை தொடங்கவுள்ள ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கருப்புப் பணம், வரி ஏய்ப்பு ஆகியவற்றை எதிர்க்க உலகளாவிய ஒத்துழைப்பை அதிகரிக்குமாறு அவர் வலியுறுத்த உள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1986ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் பின், பிரதமர் மோடி தற்போது அந்நாட்டுக்கு 5 நாள் பயணமாக வந்துள்ளார். முன்னதாக மியான்மர் தலைநகர் நேப்பிடாவில் ஆசியான் மற்றும் கிழக்காசிய அமைப்பு ஆகியவற்றின் உச்சி மாநாடுகளில் அவர் கலந்து கொண்டார். அதன் பின், அவர் ஏர் இந்திய சிறப்பு விமானம் மூலம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு வெள்ளிக்கிழமை காலை வந்து சேர்ந்தார். அவரை குயின்ஸ்லாந்து மாகாணப் பிரதமர் கேம்பெல் நியூமேன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அப்போது ஆஸ்திரேலியாவுக்கான இந்தியத் தூதர் பீரேன் நந்தா உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் மோடி கூறியதாவது: கருப்புப் பணத்துக்கு எதிராக சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே எனக்கு முக்கிய விஷயமாகும். அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ஜி-20 உச்சி மாநாடு எவ்வாறு ஊக்கமளிக்க முடியும் என்பது குறித்தும் தூய்மையான எரிசக்தியை உறுதிப்படுத்துவது குறித்தும் விவாதிக்க நான் விரும்புகிறேன் என்றார் மோடி. ஜி-20 அமைப்பில் ஆர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 19 தனி நாடுகளும் ஐரோப்பிய யூனியனும் இடம்பெற்றுள்ளன.

உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதம் ஜி-20 நாடுகளில் நடைபெறுகிறது. உலக வர்த்தகத்தில் இந்த நாடுகளின் பங்கு, 80 சதவீதமாகும். உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் ஜி-20 நாடுகளில் வசிக்கின்றனர். இந்நிலையில், இந்த அமைப்பின் உச்சி மாநாடு, பிரிஸ்பேனில் சனிக்கிழமை தொடங்க உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தாத பொருளாதார வளர்ச்சி குறித்த இந்தியாவின் கவலைகளை பிரதமர் பகிர்ந்து கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தவிர, ஆஸ்திரேலியாவின் முன்னணி தொழிலதிபர்களையும் அவர் சந்தித்து உரையாட உள்ளார். பின்னர் அந்நாட்டின் தலைநகர் கான்பெர்ரா நகருக்குச் செல்ல உள்ள அவர், அங்கு ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட்டுடன் இருதரப்புச் சந்திப்பை நடத்த உள்ளார். இந்திய வரைபடத்தில் மாயமான காஷ்மீர்: இதனிடையே, பிரிஸ்பேனில் உள்ள குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கு மோடி சென்றபோது அங்கு வைக்கப்பட்டிருந்த இந்திய வரைபடத்தில் காஷ்மீர் இடம்பெற்றிருக்கவில்லை. இதற்கு இந்திய வெளியுறவுச் செயலாளர் சுஜாதா சிங் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இந்தத் தவறுக்காக மோடி சந்திப்பு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள், அவரிடம் மன்னிப்புக் கோரியதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் தெரிவித்தார்.

மோடிக்கு விருந்தளித்த ஜப்பான் பிரதமர்: பிரிஸ்பேனில் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், ஐரோப்பிய யூனியன் தலைவர் ஹெர்மன் வான் ராம்பய் ஆகியோருடன் மோடி இரு தரப்புச் சந்திப்புகளை நடத்தினார். கேமரூனை மோடி சந்தித்தது இதுவே முதல் முறையாகும். உணவுப் பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்ட முட்டுக்கட்டை நிலை நீங்கியதற்கு மேற்கண்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மோடிக்கு ஜப்பான் பிரதமர் அபே விருந்தளித்து கௌரவித்தார். இந்த இரு தலைவர்களும் கடந்த 3 மாதங்களில் சந்திப்பது இது இரண்டாவது முறையாகும். நேருவுக்குப் புகழஞ்சலி: இதனிடையே, நாட்டின் முதல் பிரதமர் நேருவின் 125ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு மோடி புகழஞ்சலி செலுத்தினார். பிரிஸ்பேன் நகரில் இருந்தபடி மோடி, டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்ட பதிவில், ""நேருவின் 125ஆவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகிறோம். இத்தருணத்தில், சுதந்திரப் போராட்ட காலத்தில் அவரது முயற்சிகளையும், நாட்டின் முதல் பிரதமராக அவர் ஆற்றிய பணியையும் நினைவுகூர்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அலைபேசி (மொபைல்) பயன்படுத்துவது எப்படி ?



1. முதலில் நீங்கள் மொபைல் பேசாமல் இருந்தால் அலுவலகத்தில் இருக்கும் போது தங்கள் உடலுடன் ஒட்டிய படி இல்லாமல் சற்று தள்ளி அதாவது மேஜை மீது வைப்பது நல்லது. போன் பேசும்போது ஸ்பீக்கர் போன் ஆன் செய்தோ அல்லது ஹெட்செட் மூலமோ பேசிக்கொள்வது நல்லது. லேண்ட்லைன் போனாக இருந்தாலும் இது பொருந்தும்

2.நீண்டநேர அழைப்பை தவிர்ப்பதுடன் இதற்கு பதில் எஸ்.எம்.எஸ்., பகிர்ந்து கொள்ளவும். நீங்கள் மூக்கு கண்ணாடி அணிபவராக இருந்தால் அதில் மெட்டல் பிரேம் இல்லாமல் பார்த்து கொள்ளவும். பேசும் போது இதனை தவிர்ப்பது நல்லது.


3.குளித்த நிலையில் ஈரத்தலையுடன் போன் பேசுவதை தவிர்க்கவும், காரணம் மெட்டல் மற்றும் தண்ணீர் இரண்டுக்கும் ரேடியேஷன் சக்தியை இழுக்கும் அதிகம் சக்தி கொண்டது. இதனை தவிர்ப்பதன் மூலம கெடுதலில் இருந்து தப்பிக்கலாம்.

4.பேசாமல் இருக்கும்போது போன் உபகரணத்தை தனது உடலின்மீது படும்படியே அல்லது பேண்ட் பாக்கெட்டிலே வைப்பதை தவிர்க்கலாம். காரணம் இந்த போன் ஒன்று அல்லது 2 நிமிடத்திற்கொருமுறை இது தனக்கான சமிக்ஞைகளை பெறுவதில் கூடுதல் சக்தியை வெளிப்படுத்தி கொண்டேயிருக்கும்.

5.போன் பேசும் போது ரேடியோ சிக்னல் வீக்காக இருந்தால் பேசாமல் இருப்பது நல்லது, காரணம் இந்நேரத்தில் இந்த போன்கள் தனது சிக்னலை பெறுவதற்கும் ஒளிபரப்பு தன்மையை அதிகரிக்கவும் கூடுதல் செயல்பாட்டில் இருக்கும். மொத்தத்தில் போன் பேசுவதை குறைத்து எச்சரிக்கையாக வாழ்வது நல்லது

140 அடியைத் தாண்டியது முல்லைப் பெரியாறு அணை : கேரளத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 140 அடியாக உயர்ந்தது. இதையடுத்து, கேரள தலைமைச் செயலருக்கும், இடுக்கி மாவட்ட ஆட்சியருக்கும் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை குறித்த தகவலை தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள் அனுப்பி உள்ளனர். முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க உச்ச நீதிமன்றம் கடந்த மே 7-இல் உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்பின்படி அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்கும் வகையில், கடந்த ஜூலை 17-இல், பெரியாறு அணையை மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் நாதன் தலைமையில் பார்வையிட்ட மூவர் கண்காணிப்புக் குழுவினர், அணையின் 13 கதவணைகளை இறக்கினர். இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்குப் பருவ மழையாலும், தற்போது பெய்து வரும் வடகிழக்குப் பருவ மழையாலும் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், அணையிலிருந்து கடந்த வாரம் அதிக அளவு தண்ணீர் வெளியேறுவதை நிறுத்தி 142 அடி தண்ணீரைத் தேக்கி உச்ச நீதிமன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்த வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினர். அணையிலிருந்து தமிழகத்துக்கு நீர் வெளியேற்றும் அளவு குறைக்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியது. வெள்ளிக்கிழமை காலை அணையின் நீர்மட்டம் 140 அடியானது.

இதையடுத்து, தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள், தேனி மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி உள்ளிட்டோர் கேரள தலைமைச் செயலர், கேரள நீர்ப்பாசனத் துறையினர், இடுக்கி மாவட்ட ஆட்சியர் அஜித்குமார் பாட்டீல் பகவத்ராவ் ஆகியோருக்கு முறையாக தகவல் அனுப்பினர். அத்துடன், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி அணை வரை வசிப்பவர்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுவது குறித்த தகவலையும் அனுப்பினர். 

வெள்ளிக்கிழமை மாலை நிலவரம்: 152 அடியுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம் 140.30 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 1,916 கன அடியிலிருந்து 2,500 கன அடியாக உயர்ந்துள்ளது. மேலும், அணையிலிருந்து காலை வரை நொடிக்கு 456 கன அடி தண்ணீர் மட்டுமே தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. இந்த நிலையில், மாலையில் தண்ணீர் திறப்பு 900 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையில் மொத்த நீர் இருப்பு 7,126 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. மத்திய நீர்வள ஆணையத்தின் உத்தரவின் பேரில், 1979-ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையில் மராமத்துப் பணிகள் தொடங்கிய பிறகே, கடந்த 35 ஆண்டுகளில் 12 முறை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி வரை உயர்ந்துள்ளது.

கடந்த 13.11.1979 அன்று அணையின் நீர்மட்டம் 143.70 அடியாக உயர்ந்தது. தற்போது 36 ஆண்டுகளுக்குப் பிறகு அணையின் நீர்மட்டம் 140 அடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து இருக்கும் பட்சத்தில் இன்னும் ஓரிரு நாள்களில் தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பான 142 அடியை எட்டிவிடும் எனத் தெரிகிறது.

இந்திய திரைப்படக் கலைஞருக்கான நூற்றாண்டு விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு

இந்திய திரைப்படங்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த் சிறந்த இந்திய திரைப்படக் கலைஞருக்கான நூற்றாண்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரதோர் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவாவில் வரும் 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. தொடக்க விழாவில் தலைமை விருந்தினராக நடிகர் அமிதாப் பச்சன் கலந்து கொள்கிறார்.

இந்திய திரைப்படங்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த்துக்கு நிகழாண்டுக்கான சிறந்த இந்திய திரைப்பட கலைஞருக்கான நூற்றாண்டு விருது வழங்கப்படும். சீன திரைப்பட இயக்குநர் வாங் கர்வய்க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும். ஈரான் திரைப்படமான "தி பிரசிடென்ட்' விழாவின் தொடக்கத்திலும், சீனத் திரைப்படமான "தி கிராண்ட் மாஸ்டர்' விழாவின் இறுதியிலும் திரையிடப்படும். 75 நாடுகளின் 179 திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்படுகின்றன என்று கூறினார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media