ப்ளிப்கார்ட் நிறுவனம் தனது புதிய சேவையாக ப்ளிப்கார்ட் முதலாவது (Flipkart First) என்னும் சேவையை இன்று முதல் தொடங்கி உள்ளது . இந்த சேவையை பெறுவதற்கு வருடத்திற்கு ரூ.500 செலுத்த வேண்டும் . இதில் புதிதாக என்னது உள்ளது என்றால் நாம் ஆர்டர் செய்த பொருள் ஒரு நாளில் நம்மை வந்தடையும் என்பதே இதன் சிறப்பு . அதுமட்டுமல்லாமல் அதில் ஏதும் குறை இருந்தால் அதனை மாற்றுவதற்கான கால அவகாசத்தை 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக மாற்றி உள்ளது . இந்த சேவையை முதலில் பதிவு செய்த 75,000 வாடிக்கையாளருக்கு இதனை செப்டம்பர் 10 வரை இலவசமாக அளிக்கிறது என்பது மேலும் சிறப்பு .
Wednesday, 11 June 2014
ஒரு நாளில் டெலிவரி ! புதிய சேவை தொடக்கம் !
ப்ளிப்கார்ட் நிறுவனம் தனது புதிய சேவையாக ப்ளிப்கார்ட் முதலாவது (Flipkart First) என்னும் சேவையை இன்று முதல் தொடங்கி உள்ளது . இந்த சேவையை பெறுவதற்கு வருடத்திற்கு ரூ.500 செலுத்த வேண்டும் . இதில் புதிதாக என்னது உள்ளது என்றால் நாம் ஆர்டர் செய்த பொருள் ஒரு நாளில் நம்மை வந்தடையும் என்பதே இதன் சிறப்பு . அதுமட்டுமல்லாமல் அதில் ஏதும் குறை இருந்தால் அதனை மாற்றுவதற்கான கால அவகாசத்தை 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக மாற்றி உள்ளது . இந்த சேவையை முதலில் பதிவு செய்த 75,000 வாடிக்கையாளருக்கு இதனை செப்டம்பர் 10 வரை இலவசமாக அளிக்கிறது என்பது மேலும் சிறப்பு .
ரூ.120 இல் கால்பந்து உலக கோப்பையை கண்டு களிக்கலாம் !!
உங்கள் வீட்டில் டிவி இல்லையா அல்லது கால்பந்து போட்டியின் போது வெளியே சென்று விட்டீர்களா ,இனி கவலைப்பட தேவை இல்லை .அவற்றை நீங்கள் கணினி மூலமாகவோ அல்லது போன் மூலமாகவோ நேரலையாக பார்க்கலாம் .நீங்கள் சோனி லிவ் என்கிற இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்துகொண்டு , ரூ.120 செலுத்தி உலக கோப்பை போட்டிகள் அனைத்தையும் காணலாம் .உங்களுக்கு பிடித்தமான அணியின் ஆட்டங்களை மட்டும் பார்ப்பதற்கு ரூ.60 செலுத்தினால் போதும் .
இதனை நீங்கள் போனில் பார்ப்பதற்கு Liv Sports appஐ பதிவிறக்கம் செய்துகொண்டு அதில் லைவ் ஆக காணலாம் .நீங்கள் சில ஆட்டங்களை தவறி விட்டால் www.youtube.com என்கிற இணையதளத்தில் காணலாம் . நீங்கள் டாடா ஸ்கை சந்தா தாரர் என்றால் Tata Sky Everywhere Tv app ஐ உங்கள் போனில் பதிவிறக்கம் செய்துகொண்டு அனைத்து சேனல் களையும் முதல் மாதத்திற்கு இலவசமாகவும் அடுத்த மாதம் ரூ.60 கட்டியும் காணலாம் .
பெற்றோர்களே உஷார் : பொறியியல் மட்டும் படிப்பல்ல !!
அண்ணா பல்கலைகழகம் 506 பொறியியல் கல்லூரிகளுக்கான தேர்ச்சி விகித பட்டியலை வெளியிட்டது . இதனை பார்த்த நமக்கு பெரும் அதிர்ச்சி . விழுப்புரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 140 பேர் எழுதிய தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை .5 கல்லூரிகள் ஒற்றை இலக்கத்தில் தான் தேர்ச்சி பெற்று உள்ளது . சென்னையில் உள்ள பிரபல கல்லூரிகளிலும் தேர்ச்சி விகிதம் சொல்லி கொள்ளும் படியாக இல்லை .
இதனால் நானும் மற்றவர்களை போல அந்த கல்லூரிகளை குறை சொல்ல போவதில்லை . பொறியியல் படிப்பு என்பது வெறும் மதிபெண்ணும் தேர்ச்சி விகிதமும் அடங்கியது அல்ல . அது ஒரு ஆக்கபூர்வமான படிப்பு . அதனை நாம் 100 சதவீத ஈடுபாடு இருந்தால் தான் சாதிக்க முடியும் . இதனை பெற்றோர்களும் பொறியியல் படிப்பில் சேருவதற்கு முன் மாணவர்களும் உணர வேண்டும் . எல்லாரும் பொறியியல் படிப்பில் சேருகிறார்கள் என்று சேர்ந்து விடாதீர்கள் ,ஒரு நிமிடம் யோசித்து விட்டு சேருங்கள் .மாணவர்களே மதிபெண்ணுக்கும் பொறியியல் படிப்பிற்கும் சம்மதம் இல்லை . ஆர்வம் இருந்தால் யார் வேண்டுமானால் சாதிக்கலாம் . சிந்திப்பீர் !!செயல்படுவீர் !!
ராஜஸ்தான் '108' ஊழல் : கார்த்தி சிதம்பரம் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் !!
கடந்த 2013 ஆம் ஆண்டு ஜிகுட்ஜா ஹெல்த் கேர் என்ற ரவி கிருஷ்ணாவின் நிறுவனத்திற்கு '108 அவசர ஊர்திகளை ' ராஜஸ்தான் ,பீகார் மற்றும் பஞ்சாபில் இயக்கும் டெண்டர் தரப்பட்டது . ஆனால் இதில் 14 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்து உள்ளதாக சுகாதார துறையின் தகவல் தெரிவிக்கிறது. அந்த நிறுவனத்திற்கு இந்த டெண்டரை கொடுத்ததிற்காக காங்கிரஸ் மீது பா.ஜ.க குற்றம் சுமத்தி உள்ளது .அதுமட்டும் இல்லாமல் முன்னாள் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம் மற்றும் சச்சின் பைலட் அந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக இருந்து உள்ளனர் . நேற்று ராஜஸ்தான் போலீஸ், இவர்கள் மட்டும்மல்லாமல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் கெலாட் , கிருஷ்ணா மீதும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது . இந்த வழக்கு இப்போது சிபி - சிஐடி போலீஸ் கைக்கு மாற்றப்பட்டு உள்ளது . இந்த வழக்கில் மேலும் வயலார் ரவி மற்றும் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கும் தொடர்பு இருப்பதாக கூறபடுகிறது .
காங்கிரஸ் ஆட்சியை விட்டு சென்று விட்டாலும் ஊழல் குற்றசாட்டுகள் அவர்களை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது . அவர்கள் தேர்தலில் தோற்று காயப்பட்டு இருக்கும் நிலையில் அவர்களின் 'அவசர ஊர்தி' ஊழல் வெளிவந்ததை போல ,வரும் காலங்களில் அவர்கள் சாகும் நிலையில் 'அமரர் ஊர்தி ' ஊழல் என்று ஒன்று வெளிவரலாம் என்று எதிர்பாக்கலாம் .
தமிழக பா.ஜ.க. விற்கு அடுத்த தலைவர் யார் ??
தமிழக பா.ஜ.க. விற்கு அடுத்த தலைவர் யார் ?? இதுவே இப்போதைய பா.ஜ.க வின் பரபரப்பு பேச்சு . மாநில தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன் இப்போது மத்திய அமைச்சர் ஆகி விட்டதால் அப்பதவிக்கு போட்டி ஏற்பட்டு உள்ளது . இந்த பதவியை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என எச்.ராஜா தீவரமாக இருக்கிறார் . அவருக்கு மூத்த தலைவர் இல.கணேசனின் ஆதரவு இவருக்கு உள்ளது . இவருக்கு போட்டியாக இருப்பது கோயம்புத்தூர் பா.ஜ.க வேட்பாளாராக களமிறக்கப்பட சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகும் .
டெல்லி தலைவர்களின் எண்ணம் என்னவென்றால் பெண் ஒருவரை தலைவராக்குவது . அப்படியானால் அவர்களின் தேர்வு தமிழிசை சௌந்தர்ராஜனாக தான் இருக்கும் .தமிழக பா.ஜ.க தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு பதவியை பிடிக்க தீவரம் காட்டி வருகின்றனர் .
நாடு முழுவதும் இருந்த மோடி அலை தமிழகத்தில் எடுபடவில்லை . எனவே கட்சி நல்ல தலைமையை அறிவித்து கட்சியை பலபடுத்த வேண்டும் .
நீளமான கட்டிடங்கள் !! அண்ணாந்து பார்க்க வைக்கும் அதிசயங்கள் !!
பழங்காலத்தில் ஒரு நாட்டின் பெருமையை நிலை நிறுத்தும் வண்ணமாக அந்நாட்டில் கட்டப்படும் கட்டிடங்கள் இருந்தன . இன்றைய காலக் கட்டத்திலும் வானுயர்ந்த கட்டிடங்கள் கட்டி ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர் . இந்த வானுயரந்த கட்டிடங்களுக்கு ஸ்கை ஸ்கரப்பர்கள் என்று பெயர் .. இந்த உலகின் வானுயர்ந்த கட்டிடங்களின் வரிசையக் கீழ்க் காணலாம் .....
10 ) கிங் கி 100
இடம் : சீனா
உயரம் : 441.8 மீட்டர்
9) வில்லிஸ் கோபுரம்
இடம் : அமெரிக்கா
உயரம் : 442 மீட்ட்ர்
8) ஜைபெங் கோபுரம்
இடம் : சீனா
உயரம் : 450 மீட்டர்
7) பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம்
இடம் : மலேசியா
உயரம் : 452 மீட்டர்
6) ஷாங்காய் உலக வணிக மையம்
இடம் : சீனா
உயரம் : 492 மீட்டர்
5) டைபாய் 101
இடம் : தைவான்
உயரம் : 508 மீட்டர்
4) ஒன் உலக வணிக மையம்
இடம் : அமெரிக்கா
உயரம் : 541 மீட்டர்
3) மக்கா ராயல் மணிக் கோபுரம்
இடம் : சவுதி அரேபியா
உயரம் : 601 மீட்டர்
2)ஷாங்காய் கோபுரம்
இடம் : சீனா
உயரம் : 632 மீட்டர்
1) பூர்ஜ் கலிபா
இடம் : துபாய்
உயரம் : 829.8 மீட்டர்
10 ) கிங் கி 100
இடம் : சீனா
உயரம் : 441.8 மீட்டர்
9) வில்லிஸ் கோபுரம்
இடம் : அமெரிக்கா
8) ஜைபெங் கோபுரம்
இடம் : சீனா
உயரம் : 450 மீட்டர்
7) பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம்
இடம் : மலேசியா
உயரம் : 452 மீட்டர்
6) ஷாங்காய் உலக வணிக மையம்
இடம் : சீனா
உயரம் : 492 மீட்டர்
5) டைபாய் 101
இடம் : தைவான்
உயரம் : 508 மீட்டர்
4) ஒன் உலக வணிக மையம்
இடம் : அமெரிக்கா
உயரம் : 541 மீட்டர்
3) மக்கா ராயல் மணிக் கோபுரம்
இடம் : சவுதி அரேபியா
உயரம் : 601 மீட்டர்
2)ஷாங்காய் கோபுரம்
இடம் : சீனா
உயரம் : 632 மீட்டர்
1) பூர்ஜ் கலிபா
இடம் : துபாய்
உயரம் : 829.8 மீட்டர்
அரசியல்வாதியான நடிகை 'குத்து' ரம்யா ஆன்மீகத்திற்கு மாறினார் !!
நடிகையாக இருந்து அரசியலுக்கு மாறியவர் நடிகை ரம்யா . தற்போது நடந்து முடிந்த தேர்தலில் தோல்வி அடைந்த பின் தன் பாதயை ஆன்மிகத்தின் பக்கம் திருப்பியுள்ளார் .
தனது ஆன்மிக பயணமாக பத்து நாட்களுக்கு மும்பையின் விப்பாசனா தியான மையத்திற்கு சென்றுள்ளார் . இந்த மையத்தில் ஒருவர் மற்றொருவருடன் பேசுவதற்கு அனுமதி இல்லை . எனவே இதைப் பற்றி திவ்யா எந்த கருத்தும் தெரிவிக்க இயலவில்லை .
தனது ஆன்மிக பயணமாக பத்து நாட்களுக்கு மும்பையின் விப்பாசனா தியான மையத்திற்கு சென்றுள்ளார் . இந்த மையத்தில் ஒருவர் மற்றொருவருடன் பேசுவதற்கு அனுமதி இல்லை . எனவே இதைப் பற்றி திவ்யா எந்த கருத்தும் தெரிவிக்க இயலவில்லை .
விஜய் சேதுபதியால் நஷ்டம் !!
ஒரு சாதா ஹீரோ முன்னணி ஹீரோ ஆகிவிட்ட பிறகு செலக்டிவான படங்களில் நடிப்பதே அழகு . பெரிய எதிர்காலத்தை கொண்டுள்ள விஜய் சேதுபதி இதனை திருத்தி கொள்ள வேண்டும் என அவரது ரசிகராக கேட்டு கொள்கிறோம் .
இன்று ரேண்டம் எண் வெளியீடு !!
அரசு ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் சேர சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர் . அவர்களுக்கு கணினி மூலம் எண் ஒதுக்கும் பணி இன்று காலை 9.45 மணிக்கு நடக்கிறது . இந்த பணி முடிந்த அடுத்த வினாடியே மாணவமணிகள் www.annauniv.edu என்கிற இணையதளத்தில் விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டு தங்களின் ரேண்டம் எண்ணை தெரிந்து கொள்ளலாம் .
பாண்டவர்களை 100 கௌரவர்களால் ஒன்றும் செய்ய முடியாது - காங்கிரஸ் பதிலடி !!!
பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து விவாதம் நடந்தது . இந்த தீர்மானத்தை முக்தர் அப்பாஸ் நக்வி முன்மொழிந்தார் .
அப்போது பேசிய ராஜிவ் பிரதாப் ரூடி , காங்கிரஸ் மோசமான தோல்வியைச் சந்தித்து மாநில கட்சி அளவுக்கு சுருங்கு விட்டது . ஆனால் நம் பிரதமர் பரந்த மனம் கொண்டவராக இருப்பதால் அந்த அமைச்சர்களின் கருத்துக்கும் செவி கொடுத்து முடிவுகளை எடுப்பார் என்று கூறினார் .
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய மல்லிகார்ஜுன் கார்கே , நாங்கள் 44 பேர் இருந்தாலும் பாண்டவர்கள் போன்றவர்கள் . பாண்டவர்களை 100 கௌரவர்களால் ஒன்றும் செய்து விட முடியாது என்று கூறினார் .
அப்போது பேசிய ராஜிவ் பிரதாப் ரூடி , காங்கிரஸ் மோசமான தோல்வியைச் சந்தித்து மாநில கட்சி அளவுக்கு சுருங்கு விட்டது . ஆனால் நம் பிரதமர் பரந்த மனம் கொண்டவராக இருப்பதால் அந்த அமைச்சர்களின் கருத்துக்கும் செவி கொடுத்து முடிவுகளை எடுப்பார் என்று கூறினார் .
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய மல்லிகார்ஜுன் கார்கே , நாங்கள் 44 பேர் இருந்தாலும் பாண்டவர்கள் போன்றவர்கள் . பாண்டவர்களை 100 கௌரவர்களால் ஒன்றும் செய்து விட முடியாது என்று கூறினார் .
உலக கோப்பை கால்பந்தின் சாதனைகள் !!
உலக கோப்பையில் இறுதி போட்டிகளில் அதிக முறை விளையாடிய நாடுகள் , பிரேசில் மற்றும் ஜெர்மனி தலா 7 முறை விளையாடி உள்ளன .
உலக கோப்பை எல்லாவற்றிலும் விளையாடிய ஒரே அணி பிரேசில் . அதிக கோப்பையை வென்ற அணியும் இது தான் . ஆனால் சொந்த மண்ணில் வென்றதில்லை .
கோப்பை வென்ற அணியில் அதிக முறை இடம் பெற்ற வீரர்கள் பீலே (பிரேசில்) - 3 முறை (1958,1962,1970).
உலக கோப்பையில் அதிக முறை விளையாடிய வீரர்கள் அன்டோனியோ கர்பையால் -மெக்ஸிகோ (1950-1966),லோதர் மாட்டஸ் - ஜெர்மனி (1982-1988), கியான்லுகி - இத்தாலி ( 1998-2014).
உலக கோப்பை போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர் ரொனால்டோ(15) - பிரேசில் (1998-2006).
மேலும் 4 அமைச்சரவைக் குழுக்களை நீக்கினார் பிரதமர் மோடி !!!
பிரதமர் மோடி அவர்கள் செவ்வாய்க் கிழமை மாலையில் காங்கிரஸ் ஆட்கியில் அமைக்கப்பட்ட மேலும் 4 அமைச்சரவைக் குழுக்களை நீக்கினார் . விலை நிர்ணயம் செய்யும் குழு , உலக வணிகக் குழு , இந்திய தனிநபர் அடையாள அட்டை ஆணையம் ,இயற்கை பேரழிவு ஆணையம் ஆகிய குழுக்களை நீக்கினார் .
இந்த நடவடிக்கை போடி அரசின் தாரக மந்திரமான "குறைந்தபட்ச அரசாங்கம் , அதிகபட்ச ஆட்சி " என்பதை ஒத்து இருக்கிறது . மேலும் இது காங்கிர்ஸ் பின்பற்றிய அமைச்சரவைக் குழுக்களை நம்பிய ஆட்சியை மாற்றும் வண்ணம் உள்ளது .
கடந்த காங்கிரஸ் நிறைய அமைச்சரவைக் குழுக்கள் இருந்ததால் அவர்களால் ஒரு முடிவை சீக்கிரம் எடுக்க இயலவில்லை . மேலும் அவர்கள் கூட்டணியில் உள்ளவர்களுக்கும் இடம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் . இதனால் தான் நாடளுமன்ற செயல்களை கவனிக்கும் அமைச்சரவைக் குழுவில் 9 நபர்களும் , 3 சிறப்பு நபர்களும் இருந்தனர் . ஆனால் மோடி அரசில் இதுபோன்ற கூட்டணி பங்கீடு அவசியம் இல்லை என்பதால் அனைத்து அமைச்சரவைக் குழுக்களும் சிறியதாக இருக்கும் . மேலும் அனைத்து முடிவுகளும் பிரதமர் அவர்களே எடுக்கலாம் . மன்மோகன் சிங் போன்று மூத்த தலைவர்களுக்கு விட்டுக் கொடுக்க தேவையில்லை .
ஓரே பவுலர் 4 பந்தில் 4 விக்கெட்டுகள் எடுத்து சாதனை !!!
ஐ.பி.எல். போட்டிகளில் புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடியவர் அல்போன்ஸா தாமஸ் .இவர் தென் ஆப்ரிக்கா அணியைச் சார்ந்தவர் .
இவர் தற்போது கவுண்டி போட்டிகளில் சோமர்செட் அணிக்காக விளையாடி வருகிறார் . அல்போன்ஸா தாமஸ் ஓரே போட்டியில் 4 பந்தில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார் .
சோமர்செட் அணி டவுண்டான் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது . இந்த போட்டியின் மூன்றாவது நாளில் தனது ஓவரின் 5 மற்றும் 6 ஆம் பந்தில் விக்கெட் வீழ்த்தினார் . இவர் தான் வீசிய அடுத்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட் வீழ்த்தினார் . கவுண்டி போட்டிகளில் 14 வருடங்களுக்குப் பின் இந்த சாதனை நிகழ்கிறது .
முதல் தரப் போட்டிகளில் இந்த சாதனை நடைபெறுவது இது 18வது முறையாகும்
நன்றி மறக்காமல் இருக்க உப்பு கொடுக்கும் "அம்மா" !!
இன்று தலைமை செயலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் மலிவு விலை உப்பு விற்பனையை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார் . இரும்பு மற்றும் அயோடின் சத்து கலந்த உப்பு ,சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு ,குறைந்து அளவு சோடியும் கலந்த உப்பு என 3 வகையான உப்பு விற்பனைக்கு வருகிறது. இவை முறையே ரூ.14,ரூ.10,ரூ.21 விலைக்கு
விற்கப்பட உள்ளது . இதனை தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான உப்பு நிறுவனம் தயாரிக்கிறது . இவை தமிழக அரசால் நடத்தப்படும் கூட்டுறவு சிறப்பு அங்காடி ,சிந்தாமணி கூட்டுறவு அங்காடி மற்றும் ரேஷன் கடைகளில் கிடைக்கும் .
அரிசி, பருப்பு, எண்ணெய் என மலிவு விலை பொருட்களுக்கு கிடைத்த ஆதரவை போல இதற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும். உப்பை வாங்கினவர்கள் நன்றி மறக்காமல் 2016 தேர்தலில் வாக்களிப்பார்கள் என அம்மாவின் எண்ணமாக இருக்கும் என கருதுகிறோம் .
Subscribe to:
Posts
(
Atom
)