BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 17 June 2014

ஈராக்கில் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இந்திய செவிலியர் !!!




ஈராக்கில் சில முக்கிய நகரங்களை கைப்பற்ற ஐ.எஸ்.எல் என்னும் தீவிரவாத அமைப்பு ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர் . இவர்களின் தாக்குதல் தாங்க முடியாமல் பல இடங்களில் ராணுவத்தினர் திணறி வருகின்றனர் .



இந்த தீவிரவாதிகளிடம் பல இந்திய செவிலியர்கள் சீக்கி உள்ளதாக தெரிகிறது . திக்ரிக் என்னும் நகரில் 46 செவிலியர்கள் செம்பிறை அமைப்பின் உதவியோடு இந்திய அரசின் உதவி கோரி உள்ளனர் . இந்த இந்திய செவிலியர்களை காப்பாற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது .

இந்த தீவிரவாதிகளின் தாக்குதலில் 6 தமிழக செவிலியர்களும் சிக்கிக் கொண்டுள்ளனர் . இந்த ஆறு பேரும் நிலகீரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் .  

21 வருட சாதனையை முறியடித்த பின்னி !!!


இன்று நடந்த போட்டியில் இந்தியாவின் ஆல் ரவுண்டர் ஸ்டுவர்ட் பின்னி 6 விக்கெட்களை வீழ்த்தினார் . அதுவும் வெறும் 4 ரன்களை கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியுள்ளார் . இதன் மூலம் இந்தியாவின் சிறந்த பௌலிங் குறியீட்டைப் பெற்றார் . இதற்கு முன் அணில் கும்ளே எடுத்த 12 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் எடுத்ததே சிறந்த பந்து வீச்சாக இருந்தது .

இந்தியாவில் இதுவரை 6 பேர் 6 விக்கெட் எடுத்துள்ளனர் . இவர்கள் வரிசையில் பின்னியும் இணைந்துள்ளார் . இதற்கு முன்னர் அணில் கும்ளே , அஜித் அகார்கர் , அமித் மிஸ்ரா , ஸ்ரீசாந்த் , ஆஷிஷ் நேஹ்ரா ஆகியோர் ஓரே போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தியுள்ளனர் . 

இதுவரை சமிந்தா வாஸ் ஒரு போட்டியில் 19 ரன்கள் கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக உள்ளது .

நாட்டில் உள்ள நதிகளை பாதுகாக்க புதிய திட்டம் அறிவித்தார் உமா பாரதி !!

புதிய அரசில் மத்திய நீர் வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் உமா பாரதி . நாட்டில் உள்ள அனைத்து நதிகளை பாதுகாக்கவும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒராண்டுக்கு முன் நடந்த இயற்கை பேரழிவைப் போன்று இன்னொரு அழிவு நடக்காமல் இருக்க மத்திய நீர் வளத்துறை அமைச்சர் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார் .

அந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் மரங்களை நடும் பணிகள் தொடங்க உள்ளதாக தெரிவித்தார் . மேலும் மத்திய நீர் ஆணையம் நீர் நிலைகளின் நீர் மட்டங்களை கவனமாக ஆராய்ந்து மாநில அரசுக்கு அறிக்கை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் .

மேலும் அந்த பேரழிவின் போது நடந்த அழிவுகளை சரி செய்ய போவதாகவும் தெரிவித்தார் .

பவுல் ஆக்டோபஸ் ஞாபகம் இருக்கிறதா ??

உலக கோப்பை கால்பந்து போட்டி ஆரம்பித்து இன்று 7வது நாள் .இன்று கூகுள் டூட்லில் கால்பந்து உலக கோப்பை பற்றியதாகும் .கடந்த உலக கோப்பை நாயகனாக திகழ்ந்த ஆக்டோபஸ் " பால் " பற்றியதாகும் . 2010 உலக கோப்பை போட்டிகளின் அனைத்து ஆட்டங்களையும் சரியான முடிவுடன் கணித்தே இதன் சிறப்பு ஆகும் .இது ஜெர்மனி நாட்டை சார்ந்தது ஆகும் .கடந்த உலக கோப்பையில் இதனை பார்பதற்கு என்றே தனி கூட்டம் வரும் .இந்த பால் 2010 அக்டோபர் அன்று இறந்தது .இதனை சிறப்பிக்கும் விதமாக கூகுள் டூடுல் என்று வெளியிட்டு உள்ளது .ஆக்டோபஸ் போன்று இந்த முறை எந்த விலங்கு இருக்கும் என்று தெரியவில்லை .

பகலில் கால்பந்து போட்டி, இரவில் செக்ஸ் போட்டி !!


உலக கோப்பை கால்பந்து போட்டியையொட்டி பிரேசிலில் விபச்சாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது .சிவப்பு விளக்கு பெண்கள் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து உள்ளார்கள் .

சுமார் நாலாயிரம் பெண்கள் இந்த "சேவையில்" ஈடுபட்டு உள்ளார்கள் .இங்கிலாந்து நாட்டில் இருந்து அதிக வாடிக்கையாளர்கள் வருகிறார்கள் .அரை மணி நேரத்திற்கு நம் இந்திய மதிப்பில் 1594 ரூபாய் மட்டுமே .ஒரு மணி நேரம் என்றால் 2655 ரூபாய் மட்டுமே .இது உலக கோப்பையை முன்னிட்டு சிறப்பு சலுகையாம் .

10 இலட்சம் செக்ஸ் தொழிலாளிகள் ஸ்பெசல் கோர்ஸ், கிரெடிட் கார்டு என உலககோப்பை கால்பந்து போட்டிக்கு ரெடியானதை இந்த லிங்கில் கிளிக்கி படிக்கலாம்

இலங்கையில் முஸ்லிம்கள் மீது சிங்கள்வர்கள் தாக்குதல் !!


இலங்கையில் அலுத்காமா , பெருவாலா ஆகிய இரண்டு நகரங்களில் முஸ்லிம்கள் கணிசமான மக்கள் உள்ளனர் . இரண்டு நாட்களுக்கு முன் அங்குள்ள முஸ்லிம் இளைஞர்களுக்கும் , புத்த துறவினர்களின் டிரைவருக்கும் தகராறு நடந்தது .

இந்த பிரச்சனை பெரிதாகி , பவுத்த பயங்கரவாத அமைப்பான பொது பல சேனாவினர் இப்பகுதியில் முஸ்லிம்கள் வாழும் தர்கா டவுன் எனும் இடத்தில் நுழைந்து பேரணி நடத்தினர் . அப்போது இருதரப்புக்கும் சண்டை ஏற்பட்டது . இதனால் முஸ்லிம்களின் கடைகளுக்கும் வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டது . இந்த மோதலில் மூன்று முஃஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர் . 80க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் . ஒன்பது கடைகள் மற்றும் 40 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளதாக தகவ்ல்கள் வந்துள்ளது . இந்த இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . ஆயிரத்துக்கு மேற்பட்ட ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் . 

ஆனாலும் இந்த ஊரடங்கு உத்தரவை மீறி வெலிப்பன்ன என்னும் இடத்தில் 100க்கணக்கான சிங்களவர்கள் திரண்டு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர் 

கருணாநிதி தேவை இல்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறார் , காங்கிரஸ் குற்றச்சாட்டு !!

நாடாளுமன்றத்தில் விகிதாச்சார பிரதிநித்துவம் என்ற விவகாரத்தின் மூலம் கருணாநிதி புதிய குழப்பத்தை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது . 

காங்கிரஸ் தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில் , இந்த விகிதாச்சார பிரதிநித்துவம் மத்தியில் நிலையற்ற அரசு அமைய வழிவகுக்கும் . இது மற்ற நாடுகளுக்கு பொருந்தும் ஆனால் இந்தியா போன்ற பன்முகம் கொண்ட நாட்டிற்கு சரிப்பட்டு வராது . மேலும் கருணாநிதி புது குழப்பத்தை ஏற்படுத்துகிறார்  என்றார் .

இந்தியாவில் மண்ணெண்ணெய் இல்லாத முதல் நகரம் !!

இந்தியாவில் மண்ணெண்ணெய்  ஒரு காலத்தில் முக்கிய பங்காக ஒரு காலத்தில் இருந்தது . ஆனால் இன்று மண்ணெண்ணெய் உபயோகம் குறைந்து கொண்டே இருக்கிறது . ஆனால் இந்தியாவிலேயே முதல் மண்ணெண்ணெய் இல்லா நகரமாக டில்லி மாறியுள்ளது . 2012 ஆம் ஆண்டு மண்ணெண்ணெய்  இல்லா நகரம் என்னும் திட்டத்தை தொடங்கி அந்த திட்டத்தில் வெற்றி பெற்றனர் . 

மாநிய விலையில் மண்ணெண்ணெய் கொடுப்பதை நிறுத்தியதால் அரசுக்கு 200 கோடி ரூபாய் சேமிக்கப்படுகிறது என ஒரு அதிகாரி கூறினார் .

2012 ஆம் ஆண்டில் மூன்று எண்ணெய் நிறுவனங்களுடன் ஒப்புதல் போடப்பட்டு அரசு இந்த திட்டத்தை ஆரம்பித்தது . ரேஷன் கார்டு மூலம் மண்ணெண்ணெய்  வாங்கும் வீடுகளுக்கு இந்த திட்டம் மூலம் இலவச எரிவாயு இணைப்பும் , சிலிண்டர்களும் வழங்கப்பட்டது . இந்த திட்டம் மூலம் 2 லட்சம் குடும்பம் எரிவாயுவிற்கு மாறியுள்ளனர் . 


ஆந்திராவில் வெற்றிபெற போகும் தமிழக அமைச்சர் !!

மக்களவை தேர்தலில் போட்டியிடாத தமிழக பாஜக வை சேர்ந்த நிர்மலா சீதாராமன் நேரடியாக அமைச்சர் ஆனார் .இவர் 6 மாதத்திற்குள் ஏதாவது ஒரு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெல்ல வேண்டும் அல்லது மாநிலங்களவை உறுப்பினர் ஆக வேண்டும் .தமிழகத்தில் பாஜக விற்கு பலம் இல்லாதாதால் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கலாம் என்று டெல்லி பாஜக எண்ணியது .ஆனால் அங்கு அதற்கு எதிர்ப்பு இருந்தது .எனவே இப்போது ஆந்திரா மூலம் மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் .ஆந்திராவின் முன்னாள் முதல்வர் நேதரமல்லி ஜனார்த்தன ரெட்டி இறந்ததால் இவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இடைதேர்தல் வருகிறது .அங்கு தான் நிர்மலா சீதாராமன் நிற்கிறார். இவர்களது கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் ஆட்சியில் உள்ளதால் இவர் வெற்றி பெறுவது உறுதி என்கிறார்கள் .

புதிய ஆளுநர்கள் நியமிக்க திட்டம் !!!

நரேந்திர மோடி அவர்களின் அரசு காங்கிரஸ் ஆட்சியில் நியமித்த ஆளுநர்களை மாற்ற யோசித்துக் கொண்டு இருக்கிறது என அறிக்கை கூறுகிறது .

இந்த அறிக்கையின் படி கேரளா , உத்தர பிரதேசம் , பஞ்சாப் , மேற்கு வங்களம் ஆகிய மாநிலங்களின் ஆளுநர்களை மாற்ற திட்டமிட்டுள்ளனர் . இப்போது அந்த மாநிலங்களின் ஆளுநர்களை கீழ்க் காணலாம் .

கேரளா                                         -     ஷீலா தீட்சித்

உத்தர பிரதேசம்                       -      பி.எல்.ஜோஷி

பஞ்சாப்                                         -     சிவ்ராஜ் பாட்டில்

மேற்கு வங்களம்                      -    எம்.கே நாராயணன்

பிரதமரின் பி.எம்.ஓ (PMO) இந்த வருடத்தில் ஓய்வு பெறும் ஆளுநர்களின் பட்டியலை ஆராய்ந்து வருகிறது .

இந்த ஆளுநர் பதவிகளில் அமைச்சரவை பதவி கிடைக்காத முக்கிய தலைவர்களுக்கு கொடுக்க முடிவு செய்து இருக்கின்றனர் .

முரளி மனோகர் ஜோஷிக்கு மஹாரஷ்ட்ரா ஆளுநர் பதவியும் , ஜஸ்வந்த் சிங்கிற்கு தமிழக ஆளுநர் பதவியையும் கொடுக்க இருப்பதாக தெரிகிறது .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media