BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 29 September 2014

அதிர்ச்சியளிக்கும் சீனாவின் சொர்க்கவாசல்

சீனாவின் Tianmen மலையில் Heaven's Gate அல்லது சொர்க்கவாசல் எனும் பகுதி நிலத்திலிருந்து 1518 மீற்றர்கள் உயரத்தில் காணப்படுகிறது. இந்த மர்ம வாசலுக்கு செல்வதற்கு படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மர்ம வாசலில் 131.5 உயரமும் 57 அகலமும் கொண்ட பெரிய துளை காணப்படுகிறது. இரண்டு சூப்பர் சொனிக் விமானங்கள் இதனுள் சமாந்தரமாக சென்று வரலாம். துளையின் மறுபுறம் பெரிய மலைகளும் திறந்த வெளிகளுமே காணப்படுகின்றன

தக்காளியின் பயன்கள்

ரத்த உறைவை தடுக்கவும், ரத்த ஓட்டத்தை சீரமைக்கவும் உதவும் ஆஸ்பிரின் மருந்துக்கு பதில் தக்காளியை பயன்படுத்தலாம், என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் உள்ள ரோவெட் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி ஆசிம் தத்தா ராய் இது குறித்து குறிப்பிடுகையில்,"வயதானவர்கள் தங்கள் உடலின் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி கொள்ள, தினமும் சிறிதளவு ஆஸ்பிரின் மருந்தை உட்கொண்டு வருகின்றனர்.
 

தொடர்ச்சியாக இந்த மருந்தை உட்கொள்வதால், வயிற்றில் புண் ஏற்பட்டு விடுகிறது. இதனால், சிலருக்கு வயிற்றில் ரத்தக் கசிவும் காணப்படுகிறது. நாம் தினமும் பயன்படுத்தும் தக்காளியின் விதையில் உள்ள நிறம் மற்றும் வாசனையற்ற பிசுபிசுப்பான பொருள், ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. ரத்தம் உறைவதையும் தடுக்கிறது. எனவே, ஆஸ்பிரின் மருந்துக்கு பதில் தக்காளியை பயன்படுத்தலாம்' என்றார்.

 


இந்த கண்டு பிடிப்பை தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளில், தக்காளியின் இந்த பகுதியை தனியாக எடுத்து, பசை வடிவில் தயாரித்து விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தக்காளியின் இந்த பசை பகுதி சில பானங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் இன்ஸ்டாகிராம் பிளாக் செய்யப்பட்டது ??



சீனாவின் ஹாங்காங்கில் மக்கள் போராட்டங்கள் அதிக அளவில் பரவி வருவதால் போட்டோக்களை ஷேர் செய்ய பயன்படும் பேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் பிளாக் செய்யப்பட்டதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது .

சீனாவின் டிவிட்டர் என்றழைக்கப்படும் வைபோ வில் சில குறிப்ப்பிட்ட சொற்களை தேடுவதை பிளாக் செய்துள்ளனர் . ஆக்குபை சென்ட்ரல் மற்றும் ஹாங்காங் மாணவர்கள் என்ற 2 இயக்கம் இந்த போராட்டத்தை முன்னின்று நடத்துகின்றனர் .


www.blockedinchina.net   என்ற இணையதளமும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது . இன்ஸ்டாகிராம்  சீனா முழுவதுமாகவும் மற்றும் பெய்ஜிங் ,ஷென்சென் போன்ற இடங்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது

இந்த இணையதளம் சீனாவில் தடை செய்யப்பட்டு இருந்தாலும் மற்ற நாடுகளில் இந்த தளம் எப்போதும் போல் இயங்கும்

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

செக்ஸ் உறவில் ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்
http://www.satrumun.net/2014/09/what-are-problems-of-men-in-the.html

முதல்வராக கண்ணீர் மல்க பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், கதறியழுத அமைச்சர்கள் [படங்கள்]
http://www.satrumun.net/2014/09/ops-sworn-in-as-new-cm-with-tears.html

பூனை சென்ற வழியில் நாம் ஏன் செல்ல கூடாது ?? - உண்மையான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்
http://www.satrumun.net/2014/09/why-we-should-not-go-in-way-cat-went.html

ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி நாளை திரை உலகம் உண்ணாவிரதம், கடைகள் அடைப்பு
http://www.satrumun.net/2014/09/tamil-cinema-union-and-traders-union.html

ஹேமந்த் கர்கரே மனைவி கவிதா கர்கரேஇன்று மரணமடைந்தார்
http://www.satrumun.net/2014/09/blog-post_180.html

பெண்களுக்கு பிடித்த 7 வகையான ஆண்கள்
http://www.satrumun.net/2014/09/7-types-of-men-that-men-cant-resist.html

'ஜெயலலிதா' இல்ல, 'ஜெயில்' லலிதா : ஹிந்தி நடிகரின் நக்கல் கமெண்ட்!
http://goo.gl/r56unZ

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு - 16 பேர் தற்கொலை !!
http://www.satrumun.net/2014/09/16-committed-suicide-in-shock-of-jj-verdict.html

ஜெயலலிதா வழக்கு குறித்து மோடி கூறிய ஒரு வரி
http://www.satrumun.net/2014/09/modis-view-on-jayalalitha-verdict.html

ஜெயலலிதா கைதை அடுத்து அதிமுக வன்முறை, 500 கோடி இழப்பீடு வசூலிக்க டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
http://www.satrumun.net/2014/09/drramadoss-asked-admk-must-fined-500.html

பயணிகளின் கனிவான கவனத்திற்கு..! : ரெயில்வே ஸ்டேஷன்களில் ரஜினி வாய்ஸ்?
http://goo.gl/jK8Xxy

டில்லி மெட்ரோ தான் உலகின் இரண்டாவது சிறந்த மெட்ரோ நெட்வொர்க் !!
http://www.satrumun.net/2014/09/delhi-metro-becomes-second-popular-metro-in-world.html

சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் தங்கை மரணம் !!
http://www.satrumun.net/2014/09/bhagath-singh-sister-passes-away.html

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய மொபைல் விற்பனைக்கு வர உள்ளது
http://www.satrumun.net/2014/09/micromax-canvas-4-launched.html

நமது முதல்வர் அரசியலில் கடந்து வந்த பாதையை பார்ப்போம்
http://www.satrumun.net/2014/09/biodata-of-new-cm-paneer-selvam.html

அரவிந்த் ஜெக்ரிவாலின் மகள் அரசியலுக்குள் நுழைந்தார் !!
http://www.satrumun.net/2014/09/arvind-kejriwal-daughter-enters-politics.html

விஜய்யின் அடுத்த படத்துக்கு 200 நாட்கள்
http://www.satrumun.net/2014/09/vijay-gives-200-days.html

கடலூரில் தீக்குளித்த அதிமுக தொண்டர் மரணம்
http://www.satrumun.net/2014/09/blog-post_761.html

வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கு வாழ்நாள் விசா: மோடி அறிவிப்பு
http://www.satrumun.net/2014/09/blog-post_183.html

செக்ஸ் உறவில் ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்

பெரும்பாலான ஆண்களுக்கு செக்ஸ் உறவில் ஒரு கவலை இருக்கும். அது என்னவென்றால் எல்லாவற்றையும்  நாமதான் ஆரம்பிக்கனும் நம்மாளு எதையுமே செய்வதில்லை என்ற கவலைதான் அது.

செக்ஸ் உறவின்போது பெரும்பா லான ஆண்களின் மனதில் தோன்றும் சலிப்புதான் இது. நான்தான் தொடங்க வேண்டும். அவங்க பாட்டுக்கு கம் முன்னு இருப்பாங்க என்னிக்காச்சும் அவங்க ஆரம்பிச்சு வச்சுருக்காங்களா என்ற சலிப்பும் பல ஆண்களிடம் உள்ளது.

ஏன் பெண்கள் செக்ஸ் விஷயத்தில் ‘லீட் பண்ண மாட்டார்கள் அவரே ஆரம்பிக்கட்டும் முன்னேறட்டும் என்று காத்திருக்கிறார்கள்?. இதற்கு செக்ஸ் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்கள் தரும் பதில் இது…

கிட்டத்தட்ட அத்தனை ஆண்களுக்குமே இந்தக் கேள்வி மனதில் எழுவதற்கு வாய்ப்புள்ளது. காரணம் பெரும்பாலும் ஆண்கள்தான் செக்ஸ் உறவின்போது ஆரம்பித்து வைக்கிறார்கள். அதன் பிறகுதான் பெண்கள் டேக் ஓவர் செய்து கொள்கிறார்கள்.

சில சமயங்களில் ஏன்  நமது மனைவிக்கு செக்ஸ் பிடிக்கவில்லையா? ஏன்  இப்படி அமைதியாக இருக்கிறாரே என்ற சந்தேகம் கூட சிலருக்கு எழலாம். பலருக்கு ஒரு வேளை நமது ‘மூவ்’கள் சரியாக இல்லையோ என்ற சந்தேகம் கூட எழலாம். முன் விளையாட்டுக்களில் மனைவிக்கு ஆர்வம் இருக்கிறதா இல்லையா என்பது கூட பலருக்குப் புரிபடுவதில்லை. இப்படிப்பட்ட சிந்தனைகளால் பல ஆண்கள் குழம்பிப் போவது நிஜம் தான்.

ஆனால் இதெல்லாம் இந்த அளவுக்கு குழம்பிப் போக வேண்டிய பெரிய விஷயமில்லை. சாதாரணமானவைதான்.
பெண்கள் எதையும் ஆரம்பிப்பதில் தயக்கம் காட்ட சில காரணங்கள் உள்ளன. நாமே தொடங்கினால் நம்மவருக்கு ஏதாவது ஈகோ பிரச்சினை வந்து விடுமோ என்று பல பெண்கள் முதல் அடி எடுத்து வைக்க தயக்கம் காட்டுகிறார்களாம்.

நாமே முந்திக் கொண்டு போனால் நம் மைப் பற்றித் தவறாக நினைத்து விடுவாரா என்ற சந்தேகமும் பல பெண்களுக்கு எழுகிறதாம். நாம்தான் சரியான ‘சிக்னல்’ கொடுத்தாச்சே இவர் புரிந்து கொண்டு களம் இறங்க வேண்டியதுதானே என்று பலர் நினைக்கிறார்களாம்.

நான் சரியான முறையில்தான் செக்ஸ் உறவுக்கு ரெடி என்பதை மறைமுகமாக உணர்த்துகிறேன். அவர்தான் சரியாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் என்று பல பெண்கள் புகார் பட்டியலுடன் உட் கார்ந்திருக்கிறார்கள்.

பட்டவர்த்தனமாக எப்படி பளிச்சென சொல்வது என்ற தயக்கம் ஏற்படுவதாக பல பெண்கள் சொல்கிறார்கள்.
ஆரம்பிப்பதில் அவர் தான் கில்லாடி எக்ஸ்பர்ட் அதனால்தான் நான் மெளனம் காக்கிறேன் என்பதும் பல பெண்கள் சொல்லும் வாதமாக இருக்கிறது.

எனவே செக்ஸ் உறவில் ஈகோ என்பது பார்க்கப்படக்கூடாத ஒன்று. யார் ஆரம்பித்தால் என்ன முடியும்போது அது சிறப்பாக மகிழ்ச்சியாக‌ இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.

அந்த நான்கு சுவருக்குள் தனிமையில் இருக்கும்போது இருவருக்கும் இடையே எந்தவிதமான தயக்கமோ வெட்கமோ கெளரவம் பார்ப்பதோ இருக்கக் கூடாது. ஆடைகளுடன் சேர்த்து அவற் றையும் தூரப் போட்டு விட வேண்டும். அப்போ துதான் உறவு இனிக்கும் சிறக்கும்.

மேலும் பார்ட்னரிடமிருந்து வரும் ‘சிக்னலை சரி யாக புரிந்து கொள்ள வேண்டியது இருவரின் கடமையுமாகும். சிக்னல் வந்து விட்டால் அடுத்தவர் வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான். அதை விட்டு விட்டு  இல்லை இல்லை வாயைத் திறந்து கேட்டால்தான் ஆச்சு என்று வறட்டுப் பிடி வாதமாக இருக்கக் கூடாது.

ஒரு வேளை கணவர் பிசியாக இருந்து கொண்டிருப்பார். அப்போது பார்த்து மனைவி அருகே வந்து கன்னத்தில் முத்தமிடலாம் கொஞ்சலாம். அதல்லாம்தான் உறவுக்கு அழைப்பதற்கான ‘சிக்னல்’கள். எனவே பிசியாக இருந்தாலும் கூட அந்த சிக்னல்களை சரியாக புரிந்து கொண்டு செயல்பட்டால் பிரச்சினை இல்லை.

மனைவி ஆரம்பிக்கட்டும் அவரே எல்லாவற்றையும் தொடங்கட்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை தாராளமாக அவரிடம் வெளிப் படையாக சொல்லிவிடலாம். அடுத்த முறை உங்களை அசத்த அவரும் தயாராக இருப்பார்.
மொத்தத்தில் அன்பைக் காட்டவும் அருகாமையை இனிமையாக்கவும் வெளிப்படையான மனதும் செயல்பாடுகளும் முக்கியம் என்பதைப் புரிந்து கொண்டால் ‘ஸ்டார்ட்டிங் டிரபுள்’ இருக்கவே இருக்காது.

ஹேமந்த் கர்கரே மனைவி கவிதா கர்கரேஇன்று மரணமடைந்தார்

26/11 மும்பை தீவிரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கரே மனைவி கவிதா கர்கரேஇன்று மரணமடைந்தார்

நவம்பர் 26 மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாத தடுப்பு படை தலைவர் ஹேமந்த் கர்கரே மனைவி கவிதா கர்கரே இன்று மரணமடைந்தார், இன்று மதியம் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதையடுத்து மும்பை ஹிந்துஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார், இவரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக அவரது விருப்பப்படி தரப்பட்டது.

கவிதா கர்கரே அவர்கள் கணவர் ஹேமந்த் கர்கரே சுட்டுக்கொல்லப்பட்ட பின் நவீன ஆயுதங்கள், பாதுகாப்பு உடைகள், பயிற்சிகள் காவல்துறைக்கு அளிக்கப்படவேண்டும் என்று குரல் எழுப்பினார், மேலும் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த மோடி ரூபாய் 1 கோடி அளிக்க முன்வந்த போது அதை மறுத்து வேண்டாம் என்று கூறிவிட்டார்.

மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடைய இந்துத்துவ தீவிரவாதிகளை அடையாளம் கண்டு கைது செய்ததன் பின்னணியில் நவம்பர் 26 மும்பை தீவிரவாத தாக்குதலை தடுக்கும் பணியில் இருக்கும் போது வேறு ஆட்களால் கொலை செய்யப்பட்டார் ஹேமந்த் கர்கரே என்ற ஒரு கோணமும் பலரால் முன்வைக்கப்படுகிறது

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு - 16 பேர் தற்கொலை !!



இந்த சனிக்கிழமை அதிமுக தலைவர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக வந்தது . இதனைக் கேட்டு அதிர்ச்சி மற்றும் மன வருத்தத்தில் இதுவரை 16 பேர் தற்கொலை செய்துள்ளதாக செய்திகள் வருகிறது . சிலர் தீ குளித்தும் சிலர் தூக்கு மாட்டியும் , ஒருவர் ஓடும் பஸ்ஸில் பாய்ந்தும் தங்கள் உயிரை இழந்துள்ளனர் .

அதிமுக தொண்டர் வெங்கடேசன் (65) என்பவர் தீக்குளித்து இறந்தார் . மூன்று பேர் தூக்குப் போட்டு இறந்துள்ளனர் . பத்து நபர்கள் நெஞ்சு வலியினால் இறந்துள்ளதாகவும் , ஒருவர் அதிர்ச்சியினால் இறந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது . திருப்பூரில் பூபதி என்பவர் விரக்தியில் தனது விரல் ஒன்றை வெட்டியுள்ளார் .

இதில் சில தங்களில் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காகவும் தற்கொலை செய்து இருக்கலாம் என சொல்லுகின்றனர் . 

ஜெயிலில் டிவி, பிரிட்ஜ் என சகல வசதிகளுடன் இருக்கும் ஜெயலலிதா

சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் பெங்களூரில் உள்ள அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கடந்த சனிக்கிழமை அன்று சிறையில் அடைக்கப்பட்டார். அவர் இப்போது இருப்பது விஜபி சிறை ஆகும்.

அவர் இருக்கும் அறையில் எல்.சி.டி. டிவி, பிரிட்ஜ், வாஷ் பேசின், மேற்கத்திய டாய்லெட் போன்ற சகல வசதிகளும் உள்ளன. இன்று பன்னீர்செல்வம் பதவியேற்றதை அங்கு இருந்து டிவியில் பார்த்ததாக தகவல்கள் வந்துள்ளன. அவரது அறை முற்றிலும் திரை சீலைகளால் மறைக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியில் இருந்து யாரும் அவரை பார்க்க முடியாது. அவருக்கு எப்போது 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இதில் என்ன தண்டனை இருக்கிறது என்று தெரியவில்லை. அவர் விஜபி என்பதால் அவரது உயிருக்கு ஆபத்து என்பதால் அவருக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு தருவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் எதற்காக டிவி, பிரிட்ஜ் போன்ற வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அவர் தண்டனையை அனுபவிப்பதற்காக தானே அங்கு சென்றுள்ளார் பிறகு எதற்கு சகல வசதிகளுடன் சிறை. இது ஜெயலலிதாவுக்கு மட்டும் அல்ல குற்றங்கள் செய்து விட்டு சிறைக்கு செல்லும் அரசியல்வாதிகள் ஏதோ அது ஒரு கெஸ்ட் ஹவுசை போல அங்கும் சந்தோஷமாக தான் இருக்கிறார்கள். எனவே விஜபி சிறையில் உள்ள வசதிகளில் மாற்றம் வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு உண்மையான தண்டனை வழங்கப்படும்.

டில்லி மெட்ரோ தான் உலகின் இரண்டாவது சிறந்த மெட்ரோ நெட்வொர்க் !!



பல குறைபாடுகள் அடிக்கடி கூட்ட நெரிசல்களை சந்தித்தாலும் டெல்லி மெட்ரோ தான் உலகின் இரண்டாவது சிறந்த நெட்வொர்க் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது . இந்த பட்டியலில் பாரிஸ் , மாட்ரிட் , ஹாங்காங் , சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் உள்ள மெட்ரோக்களை முந்தி இரண்டாம் இடம் பிடித்துள்ளது .

உலக  மெட்ரோக்களை தரப்படுத்தும் குழுக்கள் இணைந்து நடத்திய ஆன்லைன் சர்வேயில் லண்டன்  மெட்ரோ முதல் இடம் பிடித்தது . இதனை தொடர்ந்து டில்லி மற்றும் பாங்காக்  மெட்ரோக்கள் இடம் பிடித்தது . உலக  மெட்ரோக்களை தரப்படுத்தும் குழுக்களான நோவா மற்றும் காமெட் இணைந்து உலகமெங்கிலும் உள்ள 41,000 மக்களிடம் அவர்களின் கருத்தைக் கேட்டனர் . இந்த சர்வேயை ஏப்ரல் 28 முதல் மே 25 வரை நடத்தியுள்ளனர் .


பெண்களுக்கு பிடித்த 7 வகையான ஆண்கள்

* நன்றாக சிக்ஸ் பேக் வைத்து கொண்டு முழு உடற்கட்டுடன் இருக்கும் ஆண்கள்.


* எப்போதும் புத்திசாலித்தனத்தோடு ஷார்பாக இருக்கும் ஆண்கள்.



* எப்போதும் மன உறுதியுடன் தைரியமாக இருக்கும் ஆண்கள்



* நன்கு வரைய தெரிந்த ஆண்களையும் மிகவும் பிடிக்கும் என்று ஆய்வு கூறுகிறது.


* இந்த உலகத்தையே வேறு விதமாக பார்த்து, எப்போதும் புதிதாக செயல்படும் ஆண்கள்.



* அந்த பெண்ணிற்கான எல்லா செலவுகளையும் செய்து அவளை நன்றாக கவனித்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கிறது.



* எப்போதும் ரோமாண்டிக்காக இருக்கும் ஆண்கள்


சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் தங்கை மரணம் !!



சுதந்திர போராட்ட வீரர் மற்றும் புரட்சியாளரான பகத் சிங்கின் இளம் தங்கை பார்காஷ் கவுர் இறந்து விட்டார் என அவரது குடும்பத்தில் ஒருவர் தெரிவித்தார் .

இவரின் வயது 96 . இவர் கனடாவின் டோரண்டோவில் வசித்து வந்தார் . இவர் இறந்த செய்தியை ப்ஞ்சாபில் வசிக்கும் இவரின் மருமகன் ஹர்பஜன் தின் தத் கூறினார் .

சுதந்திர உணர்வை மக்களுக்கு ஊட்டியவர்களில் பகத் சிங்கிற்கு முக்கிய பங்குண்டு . இவரின் 107 வது பிறந்த நாளை செப்டம்பர் 28 ஆம் தேதி கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய மொபைல் விற்பனைக்கு வர உள்ளது




இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மொபைலில் முதல் இடத்தில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் உள்ளது. சமீபத்தில் தான் சாம்சங் நிறுவனத்தை முந்தி மைக்ரோமேக்ஸ் நிறுவனம் முதல் இடம் பிடித்தது. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய மொபைல் விற்பனைக்கு வர உள்ளது. அது மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 4 பிளஸ் ஆகும்.

இது 5 இன்ச் ஸ்கிரீன் கொண்டது ஆகும். இதில் 13 மெகா பிக்ஸல் கேமரா வசதி உள்ளது. 1 ஜிபி ரேம் வசதி கொண்டது. இதன் விலை ரூ.16,750 என தகவல் வந்து உள்ளது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் இல்லை.

ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி நாளை திரை உலகம் உண்ணாவிரதம், கடைகள் அடைப்பு

18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டு செல்வி ஜெயலலிதா அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், இந்நிலையில் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி தமிழ் திரை உலகினர் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நாளை (30/09/2014) அன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை உண்ணாவிரதம் இருக்கின்றனர், இதனால் படப்பிடிப்புகள் தியேட்டர்கள் எதுவும் இயங்காது.

அதே போன்று ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி நாளை கடை அடைப்பு நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பும் அறிவித்துள்ளது

நமது முதல்வர் அரசியலில் கடந்து வந்த பாதையை பார்ப்போம்




தமிழகத்தின் புதிய முதல்வராக பன்னீர்செல்வம் இன்று பதவியேற்று கொண்டார்.இவர் 2 வது முறையாக தமிழகத்தின் முதல்வராகியுள்ளார்.இதற்கு முன் அவரது அரசியல் வாழ்க்கை எப்படி இருந்தது என்று பார்ப்போம்.

* இவர் 1951 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்தார்.

* தனது 31 வது வயதில் அரசியலில் அடியெடுத்து வைத்தார். ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளர், இணை செயலாளர், செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.

* இவர்  1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரியகுளம் நகர் மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு 2001 ஆம் ஆண்டு வரை அந்த பதவியில் இருந்தார்.

* 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

* அப்போதே வருவாய் துறை அமைச்சராகவும் பதவியேற்று  கொண்டார்.

* ஜெயலலிதா மீது டான்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்ததால் அவர் தனது முதல்வர் பதவியை இழந்தார். அதனால் முதல்வர் பதவி பன்னீர்செல்வத்தின் கைகளுக்கு சென்றது.

* 2001 செப்டம்பர் முதல் மார்ச் 2002 ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் முதல்வராக இருந்தார்.

* அதன் பிறகு ஜெயலலிதா முதல்வரானதால், இவர் பொதுபணித்துறை அமைச்சராக பதவியேற்று கொண்டார்.

* 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்  மீண்டும் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த காலத்தில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக இருந்தார்.

* 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போடினாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது நிதித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவியேற்று கொண்டார்.

* சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்ததால், இன்று தமிழகத்தின் முதல்வராக மீண்டும் பதவியேற்று கொண்டார்.

ஜெயலலிதா வழக்கு குறித்து மோடி கூறிய ஒரு வரி




சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெறுவதற்கு சுப்ரமணியன் சுவாமி முக்கிய காரணம் என்று கூறலாம் . ஏனென்றால் இந்த வழக்கை தொடர்ந்தது அவர் தான். இது தொடர்பாக ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். வழக்கின் ஆரம்ப காலத்திலயே முக்கியமான ஆதரங்களை வைத்து தான் வழக்கை தொடங்கினேன். வழக்கில் கட்டாயம் வெற்றி பெறுவேன் என முன்பே தெரியும்.

எதிர்பார்த்தபடி சரியான தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் அது கொஞ்சம் கால தாமதமாக வந்துள்ளது. தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர் என்பதால் அவரை நீதிமன்றத்துக்கு அழைப்பதே பெரிய போராட்டமாக இருந்தது. அதிலும் அவருக்கு எதிரான ஆதரங்களை திரட்டியதற்கு பெரும்பாடு பட்டதாக கூறியுள்ளார், 

இந்த வழக்கில் மோடியின் பங்கு குறித்து கேட்டதற்கு, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மோடி செயல்படுவார் என நினைத்தேன் . ஆனால் அவர் தான் இந்த வழக்கில் தலையிடுவது இல்லை, எல்லாம் சட்டபடி நடக்கட்டும் என கூறிவிட்டார். நாட்டில் இப்போது ஊழலுக்கு எதிராக மிக பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

ஜெயலலிதா கைதை அடுத்து அதிமுக வன்முறை, 500 கோடி இழப்பீடு வசூலிக்க டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


சென்ற ஆண்டு மாமல்லபுரம் சித்திரை விழாவிற்கு சென்ற பாமகவினருக்கும் இன்னொரு தலித் சமூகத்தினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது, மரக்காணத்தில் மாநாட்டிற்கு சென்ற இரண்டு பாமகவினர் வெட்டிக்கொல்லப்பட்டனர், இதையடுத்து போராட்டம் நடத்திய டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், இதையடுத்து வடமாவட்டங்களில் பாமக வினர் நடத்திய போராட்டங்களில் பஸ்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

இதை கடுமையாக கண்டித்து சட்டப்பேரவையில் பேசிய அப்போதைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பொது சொத்தை நாசம் விளைவித்தமைக்காக பாமக தலைமை 100 கோடி ரூபாய் அபாரதம் கட்ட வேண்டும் என்றும் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் வருமான இழப்பீடாக 20 கோடி வழங்கவேண்டும் என்று பேரவையில் பேசினார், மேலும் இதற்காக தனி அதிகாரிகள் நியமித்தார்.

27ம் தேதி செல்வி ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார், அதையடுத்து தமிழகத்தில் அதிமுகவினர் நடத்திய வன்முறையில் பல பேருந்துகள் எரிக்கப்பட்டன, மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன, இது குறித்து இன்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையின் முக்கிய கருத்துகளாவன:

1) அ.தி.மு.க.வினரின் வன்முறையால் அரசு மதுக்கடைகள் மூன்று நாட்களாக மூடப்பட்டிருப்பதால் குறைந்தது ரூ.210 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட இழப்பீட்டையும் துல்லியமாக கணக்கிட்டு அ.தி.மு.க. தலைமையிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2) அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகளையும், வணிகம் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பீட்டையும் கணக்கிட்டு, அதற்குக் காரணமான அக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் மீது வழக்குத் தொடர்ந்து வசூலிக்க வேண்டும்.

3) பேரூந்து எரிப்பு, உடைப்பு, கடைகள் சூறை உள்ளிட்ட வன்முறை களில் ஈடுபட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளை தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

4) கடந்த ஆண்டில் ‪ஜெயலலிதாவே‬ கூறியவாறு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும், சட்டம்-ஒழுங்கை சீரழிக்கும் வண்ணமும், வன்முறை செயல்களிலும் ஈடுபட்ட அ.தி.மு.க.வை தடை செய்யவும் அரசு தயங்கக்கூடாது.

அரவிந்த் ஜெக்ரிவாலின் மகள் அரசியலுக்குள் நுழைந்தார் !!



பல நாட்களாக ஆம் ஆத்மி கட்சி பற்றிய செய்திகள் எதுவும் இல்லை . நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பலத்த அடி வாங்கிய பின்னரும் , கட்சியின் சில தலைவர்கள் ஆம் ஆத்மி கட்சியின் அனுகுமுறை சரி இல்லை என்றும் குறை கூறிக் கொண்டு இருந்தனர் . இப்போது இந்த கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் மகள் அரசியலில் நுழைய உள்ளார் .

அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் பெயர் ஹர்சிதா கெஜ்ரிவால் . இவர் ஐஐடி டில்லியில் பயின்று வருகிறார் . இவர் ஆம் ஆத்மி கட்சியின் சாத்ரா யுவ சங்கார்ஷா என்னும் மாணவர் பிரிவின் மூலம் அரசியலில் நுழைய உள்ளார் . ஐஐடி கல்லூரியில் இந்த பிரிவு ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கப்பட்டது . டில்லியில் மட்டும் இந்த பிரிவு 50 கல்லூரிகளில் தொடங்கப்பட உள்ளது .

ஹர்சிதா போர்ட் தேர்வுகளில் 96 சதவீதம் பெற்று , ஜெஇஇ தேர்வில் அமோக வெற்றி பெற்று ஐஐடிக்குள் நுழைந்தார் .

முதல்வராக கண்ணீர் மல்க பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், கதறியழுத அமைச்சர்கள் [படங்கள்]




சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சனிக்கிழமை அன்று நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா. அவருக்கு 4 வருட சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் அவர் தனது முதல்வர் பதவி மற்றும் எம்.எல்.ஏ பதவியையும் இழந்தார். எனவே தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி இருந்தது.

நேற்று கூடிய அதிமுக எம்.எல்.ஏ க்கள் ஓ. பன்னீர் செல்வத்தை முதல்வராக ஒருமனதாக தேர்ந்தெடுத்தார்கள். அவர் இன்று தமிழகத்தின் முதல்வராக பதவியேற்று கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்று கொண்டார்கள். அக்ரி கிருஷ்ணமூர்த்தி மட்டும் புதிய அமைச்சர் ஆவார். இந்த பதவியேற்பு ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் நடந்தது. இதற்கு முக்கிய பிரமுகர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. முதல்வராக பதவியேற்ற பன்னீர்செல்வம் , அப்போது அழுது கொண்டு பதவியற்றார்.

கதறியழுத அமைச்சர் முக்கூர் சுப்ரமணியம்


கண்கலங்கிய அமைச்சர் கோகுல இந்திரா




விஜய்யின் அடுத்த படத்துக்கு 200 நாட்கள்





விஜய் நடித்த கத்தி படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளது. இந்த படத்துக்கு அடுத்து விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் ஒரு சரித்திர படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கிறார். அது அப்பா மகன் கதாபாத்திரம் ஆகும். இதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக ஸ்ரீதேவியும் இன்னொரு விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்கள்.நான் ஈ படத்தில் வில்லனாக நடித்த சுதீப் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பட்ஜெட் 100 கோடி ஆகும். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்தபடத்துக்காக விஜய் 200 நாட்கள் ஒதுக்கியுள்ளார். 

பூனை சென்ற வழியில் நாம் ஏன் செல்ல கூடாது ?? - உண்மையான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்




நாம் செல்லும் வழியில் பூனைகள் சென்றால் அந்த வழியை நாம் பயன்படுத்த மாட்டோம் . ஏனென்றால் அது நல்ல சகுணம் இல்லை. அது நம் முன்னோர்கள் பின்பற்றி வந்ததால் நாமும் அதற்கான காரணம் தெரியாமல் பின்பற்றி வருகிறோம். அதற்கான உண்மையான காரணத்தை தெரிந்து கொள்வோம்.

இந்த வழக்கம் மன்னர்கள் காலத்தில் இருந்து இருக்கிறது. பூனைகள் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளில் தான் இருக்கும். அந்த குடியிருப்புகளில் இருக்கும் ஆண்கள் போருக்கு சென்று இருப்பார்கள், பெண்கள் , குழந்தைகள், சிறுவர், சிறுமியர் மட்டுமே அப்போது அங்கு இருப்பார்கள். போருக்கு சென்று கொண்டு இருக்கும் எதிரி நாட்டு மன்னர்கள் போருக்கு செல்லும் வழியில் பூனைகள் தென்பட்டால் அந்த வழியாக குடியிருப்புகள் உள்ளது என்பதை புரிந்து கொள்வர்கள். அங்கு இருக்கும் ஆண்மகன்கள் போருக்கு சென்று இருப்பார்கள். அதனால் அந்த வீட்டின் பெண் மட்டுமே இருப்பால், எனவே அந்த வழியாக செல்லாமல் வேறு வழியாக போர்களத்திற்கு செல்வார்கள். இதனால் தான் பூனைகள் சென்ற வழியில் செல்லாமல் இருந்தால்.

ஆனால் இது தெரியாமலே நாம் இதனை பின்பற்றி வந்தோம். இன்றைய காலகட்டத்தில் இந்த வழக்கம் தேவையில்லாத ஒன்றாகும்.

கடலூரில் தீக்குளித்த அதிமுக தொண்டர் மரணம்

செல்வி.ஜெயலலிதாவிற்கு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து மனம் உடைந்த அதிமுக தொண்டர் பாலகிருஷ்ணன் தீக்குளித்தார், இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

காத்திருக்கும் சிறைகள்..

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்குப் போயுள்ள நிலையில் நாடு முழுவதும் பல முக்கியத் தலைவர்களும் இதேபோல சிறை செல்லக் காத்திருக்கிறார்கள். இவர்கள் மீதும் கடுமையான புகார்கள் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளன. இதில் இவர்களும் தண்டிக்கப்பட்டால் கடுமையான விளைவுகளையும், பாதிப்புகளையும் சந்திக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டன என்பது நாடு முழுவதும் ஊழல் செய்த, ஊழல் செய்ய நினைக்கும் அரசியல்வாதிகள் அத்தனை பேருக்கும் நடு மண்டையில் நச்சென்று சுத்தியலால் அடித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்திய வம்சாவளியினருக்கு வாழ்நாள் விசா: மோடி

""வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினருக்கு வாழ்நாள் விசா வசதி வழங்கப்படும்'' என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும், ""இந்தியா வந்தடைந்தவுடன், அமெரிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு உடனடி விசா வழங்கப்படும்'' என்றும் அவர் கூறினார்.மன்ஹாட்டன் நகரின் மேடிசன் பூங்கா சதுக்கத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். 30க்கும் மேற்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுமார் 20,000 அமெரிக்க வாழ் இந்தியர்கள் இதில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பிரதமராகப் பதவியேற்ற நாளில் இருந்து தொடர்ச்சியாகப் பதினைந்து நிமிடங்களுக்குக் கூட ஓய்வு, ஒழிச்சல் இல்லாமல் பணியாற்றி வருகிறேன்.
எல்லா குடும்பங்களுக்கும் வீடு: எனது அரசு, 100 சதவீத மக்கள் நல அரசாக செயல்படும். எனது அரசு மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வீணடிக்க மாட்டேன். 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும், சொந்தமாக ஒரு வீடு இருக்கும் நிலைமையை உருவாக்குவதே எனது கனவாகும். 21ஆம் நூற்றாண்டில் உலக நாடுகளையெல்லாம் முன்னெடுத்துச் செல்லும் நாடாக நம் தேசத்தை உருவாக்குவோம். விசா சலுகைகள்: வெளிநாடு வாழ் இந்தியர்களை எந்தக் காரணத்துக்காகவும் கைவிட மாட்டேன். தற்போது நடைமுறையில் உள்ள இந்தியா வம்சாவளியினர் அடையாள அட்டை (பி.ஓ.எஸ்.) திட்டத்துடன், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (ஓ.சி.ஐ) திட்டம் ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம், பி.ஓ.எஸ். அடையாள அட்டைதாரர்கள் இந்தியா வருவதற்கான வாழ்நாள் விசா, இனி வழங்கப்படும்.

அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்கு நீண்ட நாள் விசா வழங்கப்படும். இந்த விசாவில் தங்கியிருப்போர் இனி தங்களைப் பற்றிய விவரங்களை காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டியதில்லை. இந்தியா வந்தடையும் அமெரிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு உடனடியாக விசா வழங்குவதுடன் நீண்ட நாள் சுற்றுலா விசா வசதியும் அளிக்கப்படும். என்.ஆர்.ஐ.களுக்கு அழைப்பு: கங்கை நதி தூய்மைப்படுத்தும் திட்டத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கெடுக்க முன் வரவேண்டும் என்றார் மோடி.

ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இன்று பதவியேற்பு

தமிழகத்தின் 24-வது முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பிறந்த ஓ.பன்னீர்செல்வம், பி.யூ.சி., வரை படித்துள்ளார். 1996 வரை பெரியகுளம் நகராட்சி தலைவர் பொறுப்பை வகித்தார். அதன்பிறகு, 2001-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

அப்போது, முதல்வர் பதவியில் இருந்து ஜெயலலிதா விலக வேண்டிய சூழ்நிலையில், 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். 2002-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். பின்பு, பொதுப்பணித் துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்தார். 

கடந்த 2006-ஆம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் இருந்து மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், எதிர்க்கட்சி துணைத் தலைவராகச் செயல்பட்டார். கட்சியின் பொருளாளராகவும் இருந்தார். 2011-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர் தமிழக நிதியமைச்சராகவும், அவை முன்னவராகவும் நியமிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் பொதுப்பணித் துறை அமைச்சர் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தின் முதல்வராக அவர் பொறுப்பேற்கவுள்ளார்.

சமையல் எரிவாயு ஆயுட்காலம் தெரிந்து கொள்ளுங்கள்

எதற்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுட்காலம், காலாவதியாகும் காலம் என்று உண்டல்லவா? அதுபோலத்தான் நாம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு கலனின் ஆயுட்காலமும் அதில் குறிக்கப்பட்டே நமக்கு கிடைக்கும். அது மேலிருக்கும் மூன்று வட்டவடிவ கைப்பிடியை தாங்கி நிற்கும் மூன்று பட்டையான கம்பிகள் இருக்கிறதல்லவா? அதில் உட்பக்கம் பார்த்தால் கொள்கலனின் ஆயுட்காலம், காலவதியாகும் தேதி போட்டிருக்கும்.

அதை கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.. அதில் ஒரு வருடத்தை நான்காக பிரித்து ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு எழுத்தை கொடுத்திருப்பார்கள். அதாவது முதல் காலாண்டிற்கு A எனவும், இரண்டாம் காலாண்டிற்கு B எனவும், மூன்றாம் காலாண்டுக்கு C… இப்படி மொத்தம் நான்காக A,B,C,D எனப்பிரித்து காலாவதியாகும் ஆண்டையும் குறிப்பிட்டிருப்பார்கள். மேற்கண்ட படத்தில் B.21 என்று போட்டிருக்கிறது. இதில் B என்பது இரண்டாம் காலாண்டையும், 21 என்பது இரண்டாயிரத்து இருப்பத்தொன்றாவது வருடத்தையும் குறிக்கிறது.

ஜனவரி, பிப்ரவரி,மார்ச் முதல் காலாண்டு A, ஏப்ரல்,மே,ஜூன் இரண்டாம் காலாண்டு B, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மூன்றாம் காலாண்டு C அக்டோபர், நவம்பர், டிசம்பர் நான்காம் காலாண்டு D, உதராணமாக B-12 என்று போட்டிருந்தால், இரண்டாம் காலாண்டு ஜூன் முடிய 2012 என்று பொருள்படும். அதுபோலவே தங்களுடைய சமையல் எரிவாயு கலனில் இருப்பதையும் ஒரு முறை பார்வையிட்டு சரியானதுதானா என்பதை சோதித்துக்கொள்ளுங்கள். ஒருவேளை முந்தைய வருடங்களாக இருந்தாலோ முந்தைய மாதங்களாக குறிக்கப்பட்டிருந்தாலோ அந்த சமையல் எரிவாயு கொள்கலனை திருப்பி தந்துவிட்டு நடப்பு தேதியிட்ட, நடப்பாண்டிலிருக்கும் கொள்கலனைப் பெற்றுக்கொள்ளுங்கள்
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media