BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 19 February 2014

நாட்டின் முன்னாள் பிரதமரை கொன்றவர்கள் விடுதலையாவதா?!, ஜெ. முடிவுக்கு ராகுல் அதிருப்தி


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், அவர்கள் இருபத்து மூன்று வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்ததால், அவர்களது விடுதலை குறித்து மாநில அரசு முடிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், அவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு எடுத்தது. இந்த முடிவுக்கு ஒப்புதல் தெரிவிக்க மூன்று நாள் கெடுவை மத்திய அரசுக்கும் தமிழக அரசு விதித்துள்ளது.

இது குறித்து பேசிய ராகுல் காந்தி, "என் தந்தை இந்த நாட்டுக்காக உயிரையே தியாகம் செய்தவர். ஒரு முன்னாள் பிரதமரை கொன்றவர்களே விடுதலையானால் இந்த நாட்டில் சாமானியருக்கு எப்படி நீதி கிடைக்கும்? " என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

குழந்தைக்கு காது குத்தும் போது அது அடையும் வேதனையைப் போன்றது என் வேதனை- அழகிரி


மதுரையில் சமீபத்தில் திருமண விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய மு.க.அழகிரி, "தி.மு.க. தொண்டர்கள் கட்சியை நேசிப்பதுபோல் என்னையும் நேசிக்கின்றனர். யாரோ போஸ்டர் ஒட்டினார்கள் என்பதற்காக கட்சியில் இருந்து நிர்வாகிகளை நீக்கியது வருத்தம் அளிக்கும் செயலாகும்.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சி நிர்வாகிகளை நீக்குவது வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. இப்படி கட்சி நிர்வாகிகளை நீக்கி விட்டு நாடாளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பார்கள்? என கேட்டிருந்தார்.

திருமண விழாவைத் தொடர்ந்து வில்லாபுரத்தில் நடந்த விழாவில் ஒன்றில் கலந்து கொண்ட அழகிரி, அங்கு பேசியபோது, "குழந்தைக்கு காது குத்துவது எப்படி வேதனையை தருமோ, அதே போல் கட்சியில் இருந்து நீக்கியது நெஞ்சில் வேதனையை ஏற்படுத்தியது. ஒரு ஒன்றியத்தில் குறைகளை கூறி நியாயம் கேட்டேன். உடனடியாக நிர்வாகிகள் நீக்கப்பட்டனர். இது தலைவருக்கு தெரிந்து நடக்கிறதா? இல்லையா?" என்பது எனக்கு தெரியவில்லை என்று தன் வேதனையை தெரிவித்து இருந்தார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media