நக்கீரன், இந்தியா டுடேவை தொடர்ந்து இன்று புதிய தலைமுறையில் ஃபேஸ்புக் வன்முறை என்று அலறும் சமூக ஊடகங்களை தாக்கும் பத்திரிக்கையாளர்கள். மனுஷ்யபுத்திரன், கவின்மலர் போன்ற பத்திரிக்கையாளர்களின் அதிகார ஆட்டம்.
சமூக வலைதளங்களான வலைப்பதிவுகள், ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்றவை சாமானியர்களுக்குமான ஊடகங்கள் ஆன பொழுதில் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் என்ற பீடங்கள் மற்றும் தலையை சுற்றி இருந்த கிரீடங்கள் உடைக்கப்பட்டுவிட்டன, பெரிய எழுத்தாளார்கள் என்று பெயர்பெற்ற ஊடகவியலார்கள் மட்டுமல்ல, ஒரு சாதாரணன் கூட ஃபேஸ்புக்கிலோ டிவிட்டரிலோ அதிக ஃபாலோயர்கள் பெற்று இந்த கிரீட எழுத்தாளர்களுக்கு கருத்தியல் ரீதியாக பிரபல ரீதியாக சவால் விட முடிகிறது. இம்மாதிரியான ஒரு சூழல் தான் ராஜன்லீக்ஸ் என்பவர் சின்மயி என்ற பிரபல பாடகியை இணையத்தில் துன்புறுத்தினார் என்று பொய் புகார் கொடுத்து சிறைக்குள் தள்ளினார்கள்.
அன்று சின்மயியை எதிர்த்து குரல் கொடுத்த மனுஷ்யபுத்திரன் போன்றோர்கள் சின்மயி அதிகார துஷ்பிரயோகம், தன் பிரபலத்தை பழிவாங்க பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள், இன்று அதே மனுஷ்ய புத்திரன் மற்றும் கவின்மலர் போன்ற ஊடகவியலார்கள் தங்களுக்கு பத்திரிக்கைகளில் உள்ள செல்வாக்கு அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை எதிர்க்கும் ஒரு சிலரை ஃபேஸ்புக் வன்முறையாளர்கள் என்று குற்றம் சாட்டி பத்திரிக்கைகளில் அவர்களின் எதிர்ப்பாளர்களை கேவலப்படுத்தும் செயலைசெய்கிறார்கள். கிஷோர் கே சுவாமி என்பவரை பற்றியும், மனுஷ்யபுத்திரனை விமர்சிக்கும் சவுக்கு சங்கர் பற்றியும் நக்கீரனில் எழுதினார்கள், பின் ஹிந்துவில் எழுதினார்கள் தற்போதோ புதியதலைமுறை தொலைக்காட்சியில் ஒரு மணி நேரம் விவாதிக்கும் அளவுக்கு கொண்டு வந்துள்ளார்கள். அரசியல்வாதிகள் உட்பட யாரை வேண்டுமானாலும் கடுமையாக விமர்சித்து பத்திரிக்கைகளில் எழுதும் கவின்மலர் தர்மபுரி இளவரசன் தற்கொலை முயற்சி மேற்கொண்டதை இவர் அறிந்திருந்தும் ஒரு பத்திரிக்கையாளருக்கான தர்மத்தை கடைபிடிக்காமல் இளவரசன் மரணத்தை கொலையே என்று குறிப்பிட்டு சமூக பதற்றத்தை உண்டாக்கும் வகையில் இந்தியா டுடேவில் கட்டுரை எழுதியவர் ஆனால் அவர் மீதான விமர்சனம் என்று வரும்போது பெண் என்று பதுங்கி கொள்வதும், கேரக்டர் அசாசினேஷன் செய்கிறார்கள் என்று புலம்புகிறார்.
கிஷோர் மீது கவின்மலர் காவல்துறையில் புகார் கொடுத்தார், அது மட்டுமின்றி காவல்துறையில் நடவடிக்கை எடுக்க வற்புறுத்தும் தொனியில் பத்திரிக்கைகளில் தன் பத்திரிக்கை தொடர்புகளை பயன்படுத்தி கட்டுரைகள் வெளிவர செய்தார்.
காவல்துறையில் கேஸ்கொடுப்பதும் அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க பத்திரிக்கை தொடர்புகளை பயன்படுத்துவதுமாக அப்பட்டமாக அதிகார துஷ்பிரயோகங்களை மேற்கொள்கிறார்கள்
தங்களுடைய எதிரியை அடக்க போலிஸ், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் பலர் அதிகாரத்தை பயன்படுத்தினார்கள் என்றால் பிரபல பாடகர்கள் தங்களுடைய பிரபலத்தை பயன்படுத்தினால் மனுஷ்யபுத்திரன் கவின்மலர் போன்றோர்கள் தங்கள் பத்திரிக்கை துறையை பயன்படுத்துக்கிறார்கள் என்றால் இவர்களுக்கு போலிஸ், அரசியல் தலைவர்களின் அதிகாரதுஷ்பிரயோகம் உட்பட எந்த செயலையும் விமர்சிக்கும் அருகதை அற்றவர்கள் ஆகிறார்கள்.
மற்ற இடங்களை போலவே நல்லதும் கெட்டதும் சமூக வலைதளங்களில் கலந்து இருந்தாலும் அச்சு பத்திரிக்கைகள், காட்சி ஊடகங்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களை பற்றிய தவறான பிம்பத்தை மட்டுமே பொதுமக்களிடம் தோற்றுவிக்கும் வகையில் நடந்து கொள்ள அவர்களின் சுயநலமும் காரணம், சமூக வலைதளங்களின் பிரபலம் அதிகரிக்க அதிகரிக்க அச்சு ஊடகங்களின் விற்பனை வெகுவாக குறைந்து வருகிறது, சமூக ஊடகங்கள் தவிர்க்க முடியாத மாற்று ஊடகமாகியுள்ள நிலையில் ஃபேஸ்புக் அக்கவுண்ட்டோ ப்லாக்கோ டிவிட்டர் அக்கவுண்ட்டோ வைத்திருக்கும் ஒவ்வொருவரும் செல்ஃப் ஊடகவியலாராக மாறி கருத்து தெரிவிப்பது மெயின்ஸ்ட்ரீம் ஊடகங்களின் அதிகாரத்தை, வியாபாரத்தை உடைப்பதால் சமூக வலைபின்னல்கள் பற்றிய தவறான பிம்பத்தை உருவாக்க மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்கள் உதவுகின்றன.
# இது தொடர்பாக உங்கள் கருத்துகளை கமெண்ட்டில் பகிருங்கள், சமூக வலைதளங்கள் மீதான தவறான பிம்பம் பரப்புவதை தடுக்க இதை ஷேர் செய்யுங்கள்.
இன்றிரவு 9 - 10 மணிக்கு கலைஞர் டிவியில் சமூக வலைதள வன்முறை என்று மனுஷ்யபுத்திரன் மற்றும் பலர் பங்கேற்கும் விவாத காட்சி உள்ளது இது குறித்து மனுஷ்ய புத்திரனின் நிலைத்தகவலில் "நைட்டு 9 மணிக்கு ஷோ இருக்கு,,பார்த்துட்டு இன்னும் கொஞ்சம் பாயை பிரண்டுங்க" என்று கூறியுள்ளார். இது என்ன மிரட்டல் தொனி? இது தான் சமூக அக்கறையுள்ள எழுத்தாளரின் பாஷையா?